கிறிஸ்துவை அனுபவிக்கும் அனுபவ மகிழ்ச்சியும் முதிர்ச்சிக்கென்று ஜீவனில் நம் வளர்ச்சியும்
செய்தி 2
மூவொரு தேவனின் மகிழ்ச்சி நம் மகிழ்ச்சியாகுதல்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பிலுள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்
ரோ. 15:13 பரிசுத்த ஆவியின் வல்லமையில் நீங்கள் நம்பிக்கையில் பெருகும்படி நம்பிக்கையின் தேவன், விசுவாசிப்பதினால் உண்டாகும் எல்லா மகிழ்ச்சியினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.
யோவா. 15:11 என் மகிழ்ச்சி உங்களில் இருக்கும்படியும், உங்கள் மகிழ்ச்சி நிறைவாகும்படியும் நான் இந்தக் காரியங்களை உங்களிடம் பேசியிருக்கிறேன்.
ரோ. 14:17 ஏனெனில் தேவனுடைய இராஜ்ஜியம் புசிப்பும் குடிப்பும் அல்ல. மாறாக நீதியும், சமாதானமும் பரிசுத்த ஆவியில் சந்தோஷமுமாகும்.
பசிதூண்டும் வார்த்தை
எவ்வாறு மூவொரு தேவனின் மகிழ்ச்சி நம் மகிழ்ச்சியாகிறது?
ஒரு கிறிஸ்தவன் ஒரு மகிழ்ச்சியான நபராக ஆவியானவரில் மகிழ்ச்சியான நபராக இருக்க வேண்டும். நாம் கர்த்தரில் இருக்கும்போது அவரே நம் மகிழ்ச்சியாக இருக்கிறார். நாம் கர்த்தரில் வசிக்கும்போது, நம்மிடம் என்ன பிரச்சினை இருந்தாலும்சரி, நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எந்தச் சிரமமும் கர்த்தரில் நம் மகிழ்ச்சியை ஆழமாக்குகிறது.
நாம் மகிழ்ச்சியாக இருந்தால், நம்மிலுள்ள பரிசுத்த ஆவியும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. புறம்பான சுற்றுச்சூழலில் நம்மை மகிழ்ச்சியாக்க எதுவும் இல்லாதிருக்கக்கூடும். ஆனால் நம்மில் வாழ்கிற கர்த்தரே நம் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
ஆவிக்குரிய பாரம்
கர்த்தரை அனுபவித்துமகிழ்வதில், கர்த்தருடைய பிரசன்னத்தின் மகிழ்ச்சி, தெய்வீகக் காதலில் வாழும் மகிழ்ச்சி, தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பின் மகிழ்ச்சி, தேவனுடைய பேரின்ப நதியைப் பருகுகிற மகிழ்ச்சி, தேவனுடைய அன்பை அறிந்துகொள்ளும் மகிழ்ச்சி, தேவனுடைய சித்தத்தைச் செய்யும் மகிழ்ச்சி, எல்லாச் சூழ்நிலைகளிலும் மனநிறைவாக இருக்கும் மகிழ்ச்சி, இராஜ்ஜியத்தில் கர்த்தருடைய மகிழ்ச்சிக்குள் பிரவேசித்தல் போன்ற பல அம்சங்கள் இருக்கின்றன.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
மூவொரு தேவன் மகிழ்ச்சியின் தேவன். ரோமர் 15:13, நம்பிக்கையின் தேவன் எல்லா மகிழ்ச்சியினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக” என்று கூறுகிறது. தேவன் அனுபவமகிழ்ச்சியின் தேவன்.
மூவொரு தேவனின் மகிழ்ச்சி நம் மகிழ்ச்சியாக ஆக்குதல். தம் நபரில் கிறிஸ்துவே நம் மகிழ்ச்சியாக இருக்கிறார். தேவனுடைய அன்பின் குமாரனுடைய இராஜ்ஜியமாகிய சபையில், நாம் கிறிஸ்துவை அவரது சகலத்தையும் உள்ளடக்கியத்தன்மையில் அனுபவமாக்கி, அனுபவித்துமகிழ்கிறோம். ஒரு கிறிஸ்தவன் ஒரு மகிழ்ச்சியான நபராக, ஆவியானவரில் மகிழ்ச்சியான நபராக இருக்க வேண்டும்
ஜீவனின் அனுபவம்
நாம் தெய்வீகத் திராட்சைச் செடியின் கிளைகளாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு காரியம் —அது மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை. இந்த மகிழ்ச்சி கிறிஸ்துவே; அவர் நம்மில் வசிக்கும்போது. நம் மகிழ்ச்சி பெருகி, நிறைவாகுமாறும், நாம் நம் நாட்களை மகிழ்ச்சியுடன் வாழுமாறும், நம் மகிழ்ச்சியின் ஊற்றாக இருக்கும்படி அவருடைய மகிழ்ச்சி நம்மில் வசிக்கிறது.
நாம் கர்த்தரில் வசித்து, அவருடைய அன்பில் வசிப்பதன்மூலம் அவரில் தொடர்ந்து வசித்தால், நாம் மகிழ்ச்சியால் நிரப்பப்படுவோம். கிறிஸ்தவ வாழ்க்கை, தினந்தோறும் கர்த்தரைப் புசித்து, குடித்து, அனுபவித்துமகிழும் ஒரு வாழ்க்கையாகும்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
கிறிஸ்தவ வாழ்க்கைக்கான இரகசியம், நாம் அவருக்காக எவ்வளவு அதிகம் வேலைசெய்கிறோம் என்பதல்ல. மாறாக நாம் எவ்வளவு அதிகமாக அவரை உறிஞ்சிக்கொள்கிறோம், அவரை அனுபவித்துமகிழ்கிறோம் என்பதாகும். நாம் நம்பகமான, இயல்பான, நேர்த்தியான கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு, நாம் கவனித்துக்கொள்ள வேண்டிய முதன்மையான காரியம் கர்த்தரை அனுபவித்துமகிழ்வதாகும்; இது நமக்கு ஒரு தரிசனமாக இருக்க வேண்டும்.
கர்த்தரை அனுபவித்துமகிழ்வதில் நம் ஆவி முன்னணி எடுக்கவேண்டும். நாம் நம் ஆவியை நேரடியாகப் பயன்படுத்தவும் ஆத்துமாவானது ஆவியைப் பின்பற்றுகிற ஒன்றாக இருக்கவைக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் கர்த்தரில் வசிக்கும்போது, நம்மிடம் என்ன பிரச்சினை இருந்தாலும்சரி, நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம், எந்தச் சிரமமும் கர்த்தரில் நம் மகிழ்ச்சியை ஆழமாக்குகிறது.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்—ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 மகிழ்ச்சி, தேவனுடைய குணாம்சங்களுள் ஒன்று (ரோமர் 15:13, யோவான் 15:11)
(தம் நபரில் கிறிஸ்து விசுவாசிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 நாம் கர்த்தரில் களிகூர்ந்திட வேண்டும் (பிலி. 3:1; 4:4)
(கர்த்தரில் களிகூர்வது, ஒரு பாதுகாப்பு, ஒரு பாதுகாவல் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சி தேவை (கலா. 5:22; 1 தெச. 1:6)
(நாம் ஆவியானவரில் இருந்தால், நாம் தேவனோடு மகிழ்ச்சியாக இருப்போம். அவரை துதிப்போம் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கர்த்தரே நாம் களிகூருதலுக்கான காரணம் (மத். 5:12; ரோ. 14:17)
(இன்று நாம் சபையில் வாழ்கிற ஜெயங்கொள்ளும் வாழ்க்கை, நீதி மற்றும் சமாதானத்துடன் பரிசுத்த ஆவியின் மகிழ்ச்சியால் கட்டியமைக்கப்பட்ட இராஜ்ஜிய வாழ்க்கையாகும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 கர்த்தர் மனிதனை படைத்த பிறகு, அவனை ஜீவ மரத்திற்கு முன்பாக வைத்தார் (ஆதி. 2:9)
(தேவன் மனிதனுடைய அனுபவ மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார் என்பதை, எவ்வாறு நாம் அறிந்து கொள்ள முடியும்)
த2 நித்திய ஜீவனில் நிலைத்திருக்கும் உணவு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே (யோவான் 1:16-17)
(கர்த்தராகிய இயேசு, மனிதன் புசித்து அனுபவித்துமகிழ்வதற்கான உணவு என்பதை அவர் திரும்பத் திரும்ப வெளிப்படுத்தினார் என்பதை எடுத்துக்காட்டுகளோடு எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 கர்த்தரை நாம் நினைவுகூர்வதின் குவிமையம், நாம் அவரைப் புசிப்பதும், பருகுவதும் ஆகும். (1 கொரி. 11:24-25) (கர்த்தரின் உண்மையான நினைவு கூறுதல் எப்படி இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 எவ்வளவு அவருக்காக வேலை செய்கிறோம் என்பதல்ல, மாறாக எவ்வளவு அவரை அனுபவித்து மகிழ்கிறோம் என்பதே (யோவான் 6:57; 1 கொரி. 1:4)
(நாம் அவருக்காக எதையும் செய்வதை தேவன் உத்தேசிக்கவில்லை. மேலும் நம் அனுபவமகிழ்ச்சியாக இருக்கும்படி தம்மையே நமக்குத் தருவதே தேவனின் ஒரே வாஞ்சை என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 கர்த்தரை அனுபவித்துமகிழ்வதில் நம் ஆவி முன்னணி எடுக்கவேண்டும் (லூக்கா 1:46-47)
(கர்த்தரை அனுபவித்துமகிழ்வதில், நம் ஆவியே முன்னின்று நடத்த வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 அவன் கர்த்தரைப் பெற்றுக் கொண்ட பிறகு, கர்த்தரை அனுபவித்து மகிழ்வதன்மூலம் அவன் தன் கிறிஸ்துவ வாழ்க்கையை தொடர வேண்டும் (கொலோ. 1:12)
(கிறிஸ்துவை அனுபவித்து மகிழ்வதை பற்றிய காரியம் நம் இயற்கையான கருத்தின்படி ஆனதல்ல என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 கர்த்தருக்குள் விசுவாசித்து, அவரிடம் அன்புகூருவதன் மூலம், நாம் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுகிறோம். (1 பேது. 1:8)
(விசுவாசத்தின் காரணமாக நாம் கண்டிராதவரை நாம் நேசிக்கிறோம். இது விசுவாசத்தினாலே என்பதை எடுத்துரையுங்கள்)
த2 நம் சுற்றுப்புறங்களும் சூழ்நிலைகளும் பரிதாபகரமாக இருக்கக்கூடும் ஆனால் நாம்தானே மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் (பிலி. 4:11)
(ஒரு கிறிஸ்தவன் மகிழ்ச்சியான நபராக இருக்க வேண்டும். நம் சூழ்நிலைகள் அற்புதமாக இருக்கும் என்பது இதன் அர்த்தம் அல்ல என்பதை எடுத்துரையுங்கள்)