Tamil – Prophesying Outline TGC24 Week 01

கிறிஸ்துவை அனுபவிக்கும் அனுபவ மகிழ்ச்சியும் முதிர்ச்சிக்கென்று ஜீவனில் நம் வளர்ச்சியும்

செய்தி 1

சபையிலுள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒப்பற்ற தீர்வாக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அனுபவிக்கும் அனுபவமகிழ்ச்சி

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை

அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்

வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்

1 கொரி. 1:2 நம்முடையவரும் தங்களுடையவருமாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எவ்விடத்திலும் நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் சேர்த்து, கிறிஸ்து இயேசுவில் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறவர்களாகிய அழைக்கப்பட்ட பரிசுத்தவான்களுக்கு

1 கொரி. 1:9 தேவன் நம்பகமானவர், அவர்மூலமே நீங்கள் அவருடைய குமாரனாகிய நம் கர்த்தாகிய இயேசு கிறிஸ்துவின் ஐக்கியத்திற்குள்ளாக அழைக்கப்பட்டீர்கள்.

 

பசிதூண்டும் வார்த்தை

ஒன்று கொரிந்தியரில், அப்போஸ்தலனாகிய பவுலின் நோக்கம், கொரிந்துவிலுள்ள பரிசுத்தவான்கள் மத்தியிலுள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதே; எல்லாப் பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வு என்ன?

ஒன்று கொரிந்தியர், சபையிலுள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒப்பற்றத் தீர்வாக, சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அனுபவிக்கும் அனுபவமகிழ்ச்சியைப் பற்றிய ஒரு புத்தகமாகும்; தேவனுடைய மீட்டுத்திருப்புதலில் அவரது நோக்கம், தேவனுடைய பொருளாட்சியின் ஒப்பற்ற மையமாகவும், நம் அனுபவமகிழ்ச்சிக்கான நம் பங்காக, நமக்கு எல்லாமுமாகவும், கிறிஸ்துவை மீட்டுத்திருப்புவதே ஆகும். எல்லாப் பிரச்சனைகளுக்கும், விசேஷமாக, பிரிவினை என்ற காரியத்திற்கு, ஒரே தீர்வு சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அனுபவிக்கும் அனுபவமகிழ்ச்சியே. கிறிஸ்துவைத் தவிர வேறு எந்த நபர்கள்மீதோ, பொருட்கள்மீதோ, காரியங்கள்மீதோ நாம் குவிமையங்கொள்ளாமல், கிறிஸ்துவின்மீதே குவிமையங்கொள்ள வேண்டும்; விசுவாசிகள் மத்தியிலுள்ள எல்லாப் பிரச்சனைகளும் தீர்க்கப்படுமாறு, தேவனால் நியமிக்கப்பட்ட நம் ஒப்பற்ற மையமாகிய கிறிஸ்துவின்மீதே நாம் குவிமையங்கொள்ள வேண்டும்.

 

ஆவிக்குரிய பாரம்.

கிறிஸ்துவைத் தவிர வேறு எந்த நபர்கள்மீதோ, பொருட்கள்மீதோ, காரியங்கள்மீதோ நாம் குவிமையங்கொள்ளாமல் தேவனால் நியமிக்கப்பட்ட ஒப்பற்ற மையமாகிய கிறிஸ்துவின்மீது கவனஞ்செலுத்த வேண்டும். எல்லாப் பிரச்சனைகளுக்கும், விசேஷமாக, பிரிவினை என்ற காரியத்திற்கு. ஒரே தீர்வு சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அனுபவிக்கும் அனுபவமகிழ்ச்சியே.

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

ஒன்று கொரிந்தியர், சபையிலுள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒப்பற்ற தீர்வாக, சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அனுபவிக்கும் அனுபவமகிழ்ச்சியைப் பற்றிய ஒரு புத்தகமாகும்; தேவனுடைய மீட்டுத்திருப்புதலில் அவரது நோக்கம், தேவனுடைய பொருளாட்சியின் ஒப்பற்ற மையமாகவும், நம் அனுபவமகிழ்ச்சிக்கான நம் பங்காக, நமக்கு எல்லாமுமாகவும், கிறிஸ்துவை மீட்டுத்திருப்புவதே ஆகும்.

நாம் ஒன்றையே சிந்திப்பதே தேவனின் பொருளாட்சி; சபை வாழ்க்கையில் பரிசுத்தவான்கள் அனைவரும் ஒன்றையே சிந்திக்க நாம் உதவ வேண்டும்; நம் எண்ணங்கள் சபை வாழ்க்கைக்காக, சரீர வாழ்க்கைக்காக கிறிஸ்துவை அனுபவிக்கும் அனுபவமகிழ்ச்சிமீது குவிமையங்கொள்ளவும் அதைக்கொண்டு நிரப்பப்படவும் வேண்டும்.

நம்முடைய அனுபவமகிழ்ச்சிக்காக நம் பங்காக தேவன், குறைந்தபட்சம் இருபது காரியங்களின் ஐசுவரியத்தோடுகூட, சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை நமக்குத் தந்திருக்கிறார். சபை வாழ்க்கை மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் ரகசியம் நாம் கிறிஸ்துவை அனுபவித்துமகிழ வேண்டும் என்பதே.

ஜீவனின் அனுபவம்

தேவன், தம் குமாரனின் ஐக்கியத்திற்குள், அனுபவமகிழ்ச்சிக்குள் நம்மை அழைப்பதில் நம்பகமானவர், ஆனால் பல வேளைகளில் தம் நோக்கத்திற்குள் நம்மை அழைக்கிற அவருடைய அழைப்புக்கு நாம் நம்பகமற்றவர்களாக இருக்கிறோம்.

நம் சுற்றுச்சூழலிலுள்ள புறம்பான சமாதானமும், நம் தனிப்பட்ட சௌகரியமும் சுகமும், நம் உடைமைகளும் நம்மைத் தவறாக வழிநடத்த நமக்கு விக்கிரகங்களாக ஆகிவிடக்கூடும். ஆனால் நாம் தேவனை ஜீவிக்கும் தண்ணீர்களின் ஊற்றாகப் பருகுமாறு. இந்தக் காரியங்களை எடுத்துப்போட தேவன் நம்பகமானவர். நாம் நம்மில் நம்பிக்கை வைக்காமல் தேவனில் நம்பிக்கை வைக்கக் கற்றுக்கொள்ளுமாறும், தம் பொருளாட்சியை முழுநிறைவாக்க தேவன் நம்மில் அதிகரிக்கும்படி நாம் கிறிஸ்துவை அனுபவித்துமகிழவும் கிறிஸ்துவை உறிஞ்சிக்கொள்ளவும் கிறிஸ்துவைப் பருகவும் கிறிஸ்துவைப் புசிக்கவும் கிறிஸ்துவைத் தன்மயமாக்கவும் தேவன் தம் பொருளாட்சிக்குள் நம்மை நடத்துமாறும் நமக்குப் பிரச்சனைகளை அனுமதிப்பதில் தேவன் நம்பகமானவர்.

பயிற்சி மற்றும் பிரயோகம்

தேவனை ஜீவிக்கும் தண்ணீர்களின் ஊற்றாக எடுத்துக்கொள்வதற்கான ஒரே வழி, நாள்தோறும் அவரைப் பருகுவதும், அவரைப் பாய்ந்தோடச் செய்வதுமாகும்; இதற்கு (பாடல்பாடுதல், நன்றிசெலுத்துதல், களிகூருதல், ஜெபித்தல், துதித்தல், தேவனின் இரட்சிக்கும் செயல்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்ச்சியாகக் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவது தேவைப்படுகிறது. இந்த நபரைப் பிரயோகிப்பதற்கும் அனுபவித்துமகிழ்வதற்குமான ஒரே வழி முதல் அன்பைக்கொண்டு அவரை அன்புகூருவதே. நம் ஜீவனாகிய கர்த்தராகிய இயேசு ஒரு நபர் என்பதால், இந்தக் கணத்திலும் ஒவ்வொரு நாளும் அவருடைய தற்போதைய பிரசன்னத்தை அனுபவித்துமகிழ நாம் அவரைப் புதிதாகத் தொடர்புகொள்வது தேவை.

கர்த்தரை முற்றும்முடிய அன்புகூருவதற்கு, நாம் அவருடைய அழகை (அருமை, இனிமை, பிரியத்தன்மையை) காணவும். தேவனுடைய ஆலயத்தில் அவரிடம் விசாரிக்கவும், நம் வாழ்நாள் முழுவதும் தேவனின் வீட்டில் குடியிருக்க வாஞ்சிக்கிற, நாடித்தேடுகிற நபர்களாக இருக்க வேண்டும்; தேவனிடம் விசாரிப்பதென்றால் நம் தினசரி வாழ்க்கையிலுள்ள ஒவ்வொன்றைக் குறித்தும் தேவனிடம் கேட்டு சரிபார்த்துக்கொள்வதாகு.

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்—ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1
த1 விசுவாசிகளுக்கான ஒப்பற்ற மையமாக கிறிஸ்து இருக்கிறார் (1 கொரி. 1:2)

(1 கொரிந்தியரில், குறைந்தபட்சம் இருபது காரியங்களின் ஐசுவரியங்களைக்கொண்ட சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை தேவன் நமக்குத் தந்திருக்கிறார் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 கிறிஸ்துவை அனுபவிப்பதற்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் (1 கொரி. 1:2, 9)

(அனைத்து பரிசுத்தவான்களும் தங்கள் ஒப்பற்றப் பங்காக கிறிஸ்துவை பெற்றிருப்பதற்கான காரணத்தை எடுத்துரையுங்கள்)

நாள் 2

த1 கிறிஸ்து, கிறிஸ்து மட்டுமே நம் முழு ஆள்தத்துவத்தின் மையத்துவமாகவும், சர்வத்துவமாகவும் இருக்க வேண்டும் (பிலி. 2:2)

(பிலிப்பியர்கள் பவுலின் மகிழ்ச்சியை நிறைவாக்கக் கூடிய வழி என்ன என்பதை எடுத்துரையுங்கள்)

த2 பவுல் பரிசுக்காக இலக்கை நோக்கி ஆவலாய் பின்தொடர்ந்தான் (பிலி. 3:14)

(“பரிசு” மற்றும் “இலக்கு” என்பதின் அர்த்தத்தை எடுத்துரையுங்கள்)

நாள் 3

த1 தேவனுடைய பொருள் ஆட்சியின் குறிக்கோள் (எரே. 2:13; யோவா. 3:30)

(தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் பருகுவதற்காக ஜீவிக்கும் தண்ணீர்களின் ஊற்றாக இருக்க விரும்புவதில் தேவனுடைய குறிக்கோள், அவர் அதிகரிக்கப்பட்டு, பெரிதாக்கப்படுவார் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 தேவனுடைய உண்மைத்தன்மை நம்முடைய இயற்கையான புரிந்துக்கொள்ளுதலின்படியானது அல்ல
(புலம். 3:23; 1 கொரி. 1:9)

(தேவனுடைய உண்மைத்தன்மையைப் பற்றி நாம் ஓர் இயற்கையான விதத்திலோ ஓர் ஆவிக்குரிய விதத்திலோ புரிந்துகொள்ளலாம் என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 4

த1 தம் பொருளாட்சியை நிறைவேற்றுவதில் தேவன் நம்பகமானவர் (எரே. 2:13)

(நாம் அவரைப் பருகுமாறு, தம் நம்பகத்தன்மையில் அவர் நம் விக்கிரகங்களோடு இடைபடுகிறார் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 நாம் நிர்மூலமாகாமல் இருப்பது யெகோவாவின் அன்பின் தயவு (புல. 3:22-24)

(“நம் தோல்வியானது, கிறிஸ்து உள்ளே வருவதற்கான வழியைத் திறக்கிறது” என்பதின் அர்த்தம் என்ன எடுத்துரையுங்கள்)

நாள் 5

த1 தேவனுக்குப் பயப்படுவது, தேவனை ஆராதிப்பது, தேவனில் விசுவாசிப்பது ஆகியவையெல்லாம் போதாது; அவரிடம் அன்புகூருவது இன்றியமையாத கோரிக்கை
(மாற். 12:30)

(“தேவனை நேசி” என்பது அர்த்தம் என்ன?)

த2 தேவனுடைய அன்பினால் நெருங்கிய ஏவப்படுதல் மற்றும் கர்த்தருக்கு வாழ்தல் (2 கொரி.. 5:14-15)

(அவர்களுக்குப் பல தெரிந்தெடுப்புகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் கிறிஸ்துவின் அன்பு எனும் வெள்ளத்தால் நிரப்பப்பட்டவுடன், அவர்கள் எல்லாத் தெரிந்தெடுப்புகளையும் இழந்துவிடுகிறார்கள் என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 6

த1 அன்பே மிகவும் மேன்மையான வழி
(1 கொரி. 13:4; 2 தீமோ. 1:7)

(நாம் மிக வல்லமையாகவும் மனத்தெளிவாகவும் இருக்கிறோம் என்று நினைக்கக்கூடும், ஆனால், நம் ஆவி அன்பானது அல்ல என்பதை எடுத்துரையுங்கள்)

த2 நாம் எந்தவொரு நபரையும் அன்புகூர வேண்டும் (1 கொரி. 12:31; 13:4)

(நாம் கெட்டவர்களை அன்புகூரவில்லையென்றால் இறுதியில் நமக்குச் செய்வதற்கு ஒன்றும் இருக்காது என்பதை எடுத்துரையுங்கள்)