Tamil – Prophesying Outline TGC Week 5

தெய்வீகப் பொருளாட்சிக்காக தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளித்தல்

செய்தி 5

எபேசியர் புத்தகத்தில் வெளிப்படுத்தப்படும் தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பு

 

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை


அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்தி குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்

வசனங்களை ஜெபவாசிப்பு செய்தல்;

எபே. 3 : 16-17 அவர் தம் மகிமையின் ஐஸ்வரியங்களின்படியே தம் ஆவியானவர் மூலம் வல்லமையினால் நீங்கள் உள்ளான மனிதனுக்குள்ளாக பலப்படுத்தப்பட அருளும்படியும் விசுவாசத்தின் மூலம் கிறிஸ்து உங்கள் இருதயங்களில் தம் வீட்டை அமைக்கும்படியும் அன்பில் வேரூன்றி நிலையூன்றுகிறவர்களாய் நீங்கள்,

4:4-6 ஒரே சரீரமும் ஒரே ஆவியானவரும் உண்டு இது, உங்களுக்கு உண்டான அழைப்பின் ஒரே நம்பிக்கையில் நீங்கள் அழைக்கப்பட்டது போன்றதே; ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம்; எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு, அவர் எல்லார் மேலும் எல்லாரூடாகவும், எல்லாரிலும் இருக்கிறார்.

 

பசிதூண்டும் வார்த்தை

வேதாகமத்தின் 66 புத்தகங்கள் தெய்வீக திரியேகத்துவத்தின்மீது அவற்றின் ஆதரவாகவும் புறச் சட்டமாகவும் கட்டப்பட்டுள்ளன என்று ஏன் கூறப்படுகிறது அல்லது தேவத்துவத்தின் திரியேகத்துவ தெய்வீக வெளிப்பாட்டின் நோக்கம் என்ன?

பரிசுத்த வார்த்தையில் உள்ள மூவொரு தேவனைப் பற்றிய வெளிப்பாடு, உபதேசரீதியான புரிந்துகொள்ளுதலுக்காக அல்ல, மாறாக தம் திரியேகத்துவத்தில் தேவனை அவரது தெரிந்துகொள்ளப்பட்டு, மீட்கப்பட்ட மக்களுக்குள் பகிர்ந்தளிப்பதற்காக இருக்கிறது

மூவொரு தேவன் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டு, மீட்கப்பட்ட மக்களுக்குள் அவர்களது ஜீவனாகவும், ஜீவ-நிரப்பீடாகவும் தம்மையே அடித்துருவாக்குகின்றார் என்ற ஆளுகைசெய்யும் கோட்பாட்டின்படிதான் வேதாகமம் எழுதப்பட்டது.

 

ஆவிக்குரிய பாரம்

வேதாகமத்தின் அறுபத்து ஆறு புத்தகங்களின் முழு வெளிப்பாட்டின்படி பிதா, குமாரன், ஆவியானவராகிய தெய்வீகத் திரியேகத்துவம் தேவனின் பகிர்ந்தளிப்புக்காகவே, அதாவது தம் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்குள் தேவன் விநியோகிக்கப்படுவதற்காகவே இருக்கிறது; நம் கர்த்தரே என்றும் என்றென்றும் ஆளுகை செய்வதற்காக உலகத்தின் இராஜ்ஜியம் நம்முடைய கர்த்தருக்கும் அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய இராஜ்ஜியமாக ஆகும் நேரமாகிய கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக நாம் கிறிஸ்துவின் சரீரமாக இருக்கும்படி கட்டியெழுப்பப்படவும் கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்கும்படி ஆயத்தமாக்கப்படவும் கூடுமாறு அவரையே நாம் அனுபவித்துமகிழ்வதற்காக தம்மையே நமக்குள் பகிர்ந்தளிக்கவும் தம்மையே நமக்குள் அடித்துருவாக்கவுமே தேவன் மூவொருவராக இருக்கிறார்.

 

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

பரிசுத்த வார்த்தையில் உள்ள மூவொரு தேவனைப் பற்றிய வெளிப்பாடு, உபதேசரீதியான புரிந்துகொள்ளுதலுக்காக அல்ல, மாறாக தம் திரியேகத்துவத்தில் தேவனை அவரது தெரிந்துகொள்ளப்பட்டு, மீட்கப்பட்ட மக்களுக்குள் பகிர்ந்தளிப்பதற்காக இருக்கிறது

தெய்வீகத் திரியேகத்துவமே முழு வேதாகமத்தின் புறச்சட்டமாகும்; முழு வேதமும், குறிப்பாக எபேசியர் புத்தகம், தெய்வீகத் திரியேகத்துவத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் உற்பத்தி, இருத்தல், வளர்ச்சி, கட்டியெழுப்புதல், யுத்தம்செய்தல் ஆகியவற்றைக் குறித்து எபேசியரில் உள்ள முழு வெளிப்பாடும் தெய்வீகப் பொருளாட்சி மற்றும் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அவயவங்களுக்குள் பகிர்ந்தளிக்கப்பட்ட தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பைக்கொண்டு தொகுக்கப்படுகிறது. எனவே, எபேசியரின் மிகமுக்கியமான குவிமையம் விசுவாசிகளுக்குள் பகிர்ந்தளிக்கப்படும் தெய்வீக திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பாகும்.


ஜீவனின் அனுபவம்
இரண்டாம் அதிகாரம், தெய்வீகத் திரியேகத்துவத்தில், யூத மற்றும் புறவின விசுவாசிகள் அனைவரும் பிதாவாகிய தேவனிடம் பிரவேசிக்கும் சிலாக்கியத்தைக் குமாரனாகிய தேவன்மூலம் ஆவியாகிய தேவனில் பெற்றிருக்கின்றனர் என்று காட்டுகிறது. இந்த மூவரும் மாம்சமாகுதல், மனித வாழ்க்கை, சிலுவைமரணம், உயிர்த்தெழுதல் ஆகிய எல்லா வழிமுறைகளுக்கும் பின்னர்கூட ஒரேநேரத்தில் உடனிருக்கின்றனர், ஒருவருள் ஒருவர் இருக்கின்றனர் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. வழிவகையான, நிறைவேற்றுபவரான குமாரனாகிய தேவன்மூலமும், பிரயோகமான, செயல்படுத்துபவரான ஆவியாகிய தேவனிலும், நம் அனுபவமகிழ்ச்சியின் ஊற்றான, பிறப்பிடமான பிதாவாகிய தேவனிடம் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம்.

மூன்றாம் அதிகாரத்தில், பிதாவாகிய தேவன் ஆவியாகிய தேவனின் மூலம் வல்லமையினால் விசுவாசிகளை அவர்களுடைய உள்ளான மனிதனுக்குள் பலப்படுத்தப்படும்படி அருளும்படியும், இதனால் குமாரனாகிய தேவனாகிய கிறிஸ்து, அவர்களுடைய இருதயங்களில் தம் வீட்டை அமைக்கும்படியும், அதாவது, அவர்களது முழு ஆள்தத்துவத்தையும் ஆட்கொள்ளும்படியும், அதனால் அவர்கள் தேவனுடைய சகல நிறைவுக்கென்று நிரப்பப்படும்படியும் அப்போஸ்தலன் ஜெபிக்கிறான்; இதுவே தேவனில், அவருடைய தெய்வீகத் திரியேகத்துவத்தில் உள்ள விசுவாசிகளின் அனுபவம் மற்றும் பங்குபெறுதலின் உச்சகட்டமாகும்.

 

பயிற்சி மற்றும் பிரயோகம்

ஐந்தாம் அதிகாரம், விசுவாசிகள் ஆவியாகிய தேவனின் பாடல்களைக்கொண்டு குமாரனாகிய தேவனான கர்த்தருக்குத் துதிசெலுத்தவும், குமாரனாகிய தேவனான நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தவும் அறிவுறுத்துகிறது.


ஆறாம் அதிகாரம், குமாரனாகிய தேவனான, கர்த்தரில் வல்லமையூட்டப்பட்டு, பிதாவாகிய தேவனின் ஆயுதவர்க்கத்தையும் தரித்துக்கொண்டு, ஆவியானவரின் பட்டயத்தைத் திறம்படக் கையாளுவதன்மூலம், ஆவிக்குரிய யுத்தத்தைச் செய்யும்படி நமக்கு அறிவுறுத்துகிறது. குமாரனாகிய தேவன் நமக்குள் வல்லமையாக இருக்கிறார், குமாரனில் உணர்ந்தறியப்படும் பிதாவாகிய தேவன் நம்மீது ஆயுதவர்க்கமாக இருக்கிறார், ஆவியானவர் தேவனுடைய வார்த்தையாகிய, பட்டயமாக இருக்கிறார். இது ஆவிக்குரிய யுத்தத்தில்கூட, விசுவாசிகள் மூவொரு தேவனை அனுபவிக்கும் அனுபவமும், அனுபவமகிழ்ச்சியுமாகும்.

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்

ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1
த1 திரியேகத்துவம் எப்போதும் அவரது தெரிந்துகொள்ளப்பட்டு, மீட்கப்பட்ட மக்களுடன் தேவனுடைய உறவின் தொடர்பில் வெளிப்படுத்தப்படுகிறது அல்லது குறிப்பிடப்படுகிறது (2 கொரி.13:14)

(தெய்வீக வெளிப்பாட்டினுடைய தேவத்துவத்தின் திரியேகத்துவம் இறையியல் ஆய்வுக்காக அல்ல என்பதை எடுத்துரையுங்கள்)

த2 ஆளுகைசெய்யும் கோட்பாட்டின்படியின்கீழ் வேதாகமம் எழுதப்பட்டது (சங். 38:8-9)

(வேதத்தில் எந்தப் பகுதியையும் நாம் எவ்வாறு விளக்குகிறோம் என்பதை ஆளுகைச் செய்யும் மற்றும் வழிகாட்டும் தரிசனம் எது என்பதை விளக்குவதற்கு சங்கீதம் 36:8-9ஐ எடுத்துக்காட்டாக எடுத்துரைக்கவும்)

 

நாள் 2

த1 தெய்வீகத் திரியேகத்துவமே முழு வேதாகமத்தின் புறச்சட்டமாகும். (எபே.1:4-5, 7, 13)
(எபேசியரில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சபை மூவொரு தேவனால் தொகுக்கப்பட்டு வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 எபேசியர் புத்தகம், தெய்வீகத் திரியேகத்துவத்தைக்கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது (எபே. 4:4-6)

(எபேசியர் புத்தகத்தில் உள்ள முழு தெய்வீக வெளிப்பாடும் சபை கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களுக்குள் மூவொரு தேவனை பகிர்ந்தளிப்பதில் தொகுக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 3

த1 தேவன் நம்மை மும்மடங்கு பகிர்ந்தளிப்புடன் ஆசீர்வதித்திருக்கிறார் என்று எபேசியர் 1 காட்டுகிறது (எபே. 1:4-5, 22-23)(எபேசியர் 1இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள பதனிடப்பட்ட திரியேகத்துவத்தின் பகிர்ந்தளித்தல் மற்றும் விஞ்சுகின்ற கிறிஸ்துவின் கடத்துதல் ஆகியவற்றின் விளைவை எடுத்துரையுங்கள்)

த2 தேவனின் தெரிந்தெடுத்தல், குமாரனின் மீட்பு, ஆவியானவரின் பகிர்ந்தளித்தல் (எபே.1:4-5, 22-23)

(மூவொரு தேவனின் பகிர்ந்தளிப்பு மற்றும் விளைவிக்கப்பட்ட விஞ்சுகின்ற கிறிஸ்துவின் கடத்துதல் என்ன என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 4
த1 இரட்சிப்பு, தலைசிறந்த படைப்பை உற்பத்திசெய்கிறது என்று எபேசியர் 2:10 சுட்டிக்காட்டுகிறது (எபே.2:10).

(மூவொரு கடவுளின் மும்மடங்கு ஜீவப் பகிர்ந்தளிப்பினால் நாம் அவரது தலை சிறந்த படைப்பாக இருக்கிறோம்)
த2 கிறிஸ்து தம் சகலத்தையும் உள்ளடக்கிய மரணத்தை நிறைவேற்றிய பிறகு அவர் சுவிசேஷத்தை அறிவிக்க வந்தார் (எபே. 2:15-17).

(அவர் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட பிறகு கிறிஸ்துவால் எப்படி நமக்கு சுவிசேஷத்தை அறிவிக்க முடியும் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 5

த1 நம்மில் தம் ஆழமான வேலையை செய்வதில் தெய்வீக திரியேகத்துவத்தை பற்றிய ஒரு அழகான சித்திரம் (எபே.3:14, 16-17)

(எபேசியர் 3இல் முன்வைக்கப்பட்ட சித்திரம் மூவொரு தேவனின் மிக அழகான, மென்மையான, மற்றும் ஆழமான ஒருங்கிணைப்பைக் காட்டுகிறது )

த2 நாம் நம் உள்ளான மனிதனுக்குள் பலப்படுத்தப்படுகிறோம் (எபே. 3:16-17)

(தேவனுடைய மகிமையின் ஐசுவரியங்களின்படி ஆவியானவர் மூலம் வல்லமையால் நம் உள்ளான மனிதனுக்குள்ளாக பலப்படுத்தப்படுவதன் பொருள் என்ன என்பதை அனுபவங்களுடன் எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

த1 பிதாவாகிய தேவன் எல்லார்மேலும், எல்லாரூடாகவும், எல்லாரிலும் இருக்கிறார் (எபே.4:6)

(எபேசியர் 4 சரீரத்துடனான மூவொரு தேவனின் கலந்திணைதலை நமக்கு காட்டுகிறது)

த2 ஒரே நம்பிக்கை, ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம் (எபே. 4:4-5)

(ஞானஸ்நானத்தின் இரண்டு அம்சங்கள் என்ன? என்பதை எடுத்துரையுங்கள்)