தெய்வீகப் பொருளாட்சிக்காக தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளித்தல்
செய்தி 4
ஆவியானவரை சுவாசிப்பதன் மூலமும், ஜீவத்தண்ணீரைக் குடிப்பதன் மூலமும், தேவனுடைய அப்பத்தைப் புசிப்பதன் மூலமும் தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பை அனுபவமாக்குதல்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெபவாசிப்பு செய்தல் ;
யோவான் 20:22 “அவர் இதைக் கூறிய பிறகு அவர்களுக்குள் சுவாசித்து ஊதி, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கூறினார்”
1 கொரி. 10:3-4 “எல்லாரும் ஒரே ஆவிக்குரிய உணவைப் புசித்தார்கள், எல்லாரும் ஒரே ஆவிக்குரிய பானத்தை குடித்தார்கள்; ஏனெனில் அவர்களைப் பின்தொடர்ந்த ஆவிக்குரிய கற்பாறையிலிருந்து அவர்கள் குடித்தார்கள், அந்தக் கற்பாறை கிறிஸ்துவே”
யோவான் 6:57 “ஜீவிக்கிற பிதா என்னை அனுப்பியிருக்கிறார், நான் பிதாவின் நிமித்தம் ஜீவிக்கிறேன், அதுபோலவே என்னைப் புசிக்கிறவனும் என் நிமித்தம் ஜீவிப்பான்.”
பசிதூண்டும் வார்த்தை
அவரைக் கொண்டு கட்டியமைக்கப்படுவதற்கு நாம் தெய்வீக திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பை எவ்வாறு அனுபவிக்கிறோம்?
பரிசுத்த சுவாசமாகிய ஆவியானவரை சுவாசித்தல், சகலத்தையும் உள்ளடக்கிய ஜீவன் தரும் ஆவியாகிய கிறிஸ்துவாகிய ஒரே ஆவிக்குரிய பானத்தைப் பருகுதல் மற்றும் நிஜமான அப்பம் பரலோக அப்பம், ஜீவ அப்பம் மற்றும் ஜீவிக்கும் அப்பம் ஆகிய தேவனுடைய அப்பமாகிய கிறிஸ்துவை புசிப்பதன்மூலம் நாம் அனைவரும் தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பை அனுபவிக்கவும் மற்றும் அவரை வெளிப்படுத்தவும் பிரதிநிதிப்படுத்துமாறும் அவரை கட்டியமைக்கப்பட முடியும்.
ஆவிக்குரிய பாரம்
பரிசுத்த சுவாசமாகிய ஆவியானவரை சுவாசித்தல், சகலத்தையும் உள்ளடக்கிய ஜீவன் தரும் ஆவியாகிய கிறிஸ்துவாகிய ஒரே ஆவிக்குரிய பானத்தைப் பருகுதல் மற்றும் நிஜமான அப்பம் பரலோக அப்பம், ஜீவ அப்பம் மற்றும் ஜீவிக்கும் அப்பம் ஆகிய தேவனுடைய அப்பமாகிய கிறிஸ்துவைப் புசிப்பதன் மூலம் நாம் அனைவரும் தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பை அனுபவிக்கவும் மற்றும் அவரை வெளிப்படுத்தவும் பிரதிநிதிப்படுத்துமாறும் அவரை கட்டியமைக்கப்பட முடியும்.
முழுநிறைவடைந்த ஆவியானவர் சுவாசமாக, கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதில் நமக்கு எல்லாமாக இருக்கிறார்; இந்த சுவாசம் மட்டுமே ஒரு கிறிஸ்தவனாக இருக்க முடியும், ஆவியானவராகிய இந்த சுவாசம் மட்டுமே ஒரு ஜெயங்கொள்பவனாகவும் இருக்க முடியும்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
முழுநிறைவடைந்த ஆவியானவர், உயிர்த்தெழுதலில் குமாரனால் சீஷர்களுக்குள் பரிசுத்த சுவாசமாக சுவாசித்து ஊதப்பட்டார்.
தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பை நாம் அனுபவமாக்க வேண்டுமானால், நாமனைவரும் சகலத்தையும் உள்ளடக்கிய ஜீவன்-தரும் ஆவியாகிய கிறிஸ்து என்ற ஒரே ஆவிக்குரிய பானத்தைக் குடிக்க வேண்டும்
கிறிஸ்துவை வெளிக்காட்டவும், அவரைப் பிரதிநிதிப்படுத்தவும், நாம் கிறிஸ்துவை தேவனுடைய அப்பமாக புசித்து அவரைக் கொண்டு கட்டியமைக்கப்படுவதே தேவனுடைய பொருளாட்சி.
ஜீவனின் அனுபவம்
தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பை நாம் அனுபவமாக்க வேண்டுமானால், நாமனைவரும் சகலத்தையும் உள்ளடக்கிய ஜீவன்-தரும் ஆவியாகிய கிறிஸ்து என்ற ஒரே ஆவிக்குரிய பானத்தைக் குடிக்க வேண்டும். ஜீவிக்கும் தண்ணீராகிய, ஆவிக்குரிய பானம் உயிர்த்தெழுதலிலுள்ள ஜீவத் தண்ணீராகும்; உயிர்த்தெழுதலிலுள்ள ஜீவத் தண்ணீரை நாம் குடிக்கும்போது நாம் உயிர்த்தெழுதலிலுள்ள நபர்களாகவும் உயிர்த்தெழுதலாலான நபர்களாகவும் ஆகிறோம். ஜீவன்-தரும் ஆவியாகிய கிறிஸ்துவை நாம் குடிப்பதன்மூலம் தேவன் தம்மையே நமக்குள் அடித்துருவாக்குகிறார், ஏனென்றால் குடிப்பதன் மூலம் நாம் கர்த்தரை உள்ளெடுத்துக்கொள்கிறோம் அவர் நம் ஜீவனாகவும் ஆக்கக்கூறாகவும் இருக்க ஜீவாதாரரீதியில் நம்முடன் ஒன்றாகிறார்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
கிறிஸ்துவை வெளிக்காட்டவும், அவரை பிரதிநிதிப்படுத்தவும், நாம் கிறிஸ்துவை தேவனுடைய அப்பமாகப் புசித்து அவரைக் கொண்டு கட்டியமைக்கப்படுவதே தேவனுடைய பொருளாட்சி
இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் என்ற பவுலின் கட்டளை இடைவிடாத ஜெபம் சுவாசத்தைப் போன்றது. சுவாசிப்பது என்பது கர்த்தருடைய நாமத்தை நோக்கி கூப்பிடுவதும் ஜெபிப்பதுமாகும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை நோக்கிக் கூப்பிடுவதன்மூலம் நாம் ஆவியானவரை சுவாசிக்கிறோம். இந்த சுவாசம் மட்டுமே ஒரு கிறிஸ்தவனாக இருக்க முடியும் இந்த சுவாசம் மட்டுமே ஒரு ஜெயங்கொள்பவனாகவும் இருக்க முடியும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்.
ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 உயிர்த்தெழுதலின் நாளில், கர்த்தராகிய இயேசு தம்மையே பரிசுத்த சுவாசமாக தம் சீஷர்களுக்குள் சுவாசித்து ஊதினார் (யோவான் 20:22)
(ஆவியானவரை சீஷர்களுக்குள் சுவாசித்து ஊதுவதன்மூலம் கர்த்தராகிய இயேசு தம்மையே ஜீவனாகவும் எல்லாமுமாகவும் அவர்களுக்குள் உட்பகிர்ந்தார்.)
த2 கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கு ஆவியானவரே நமக்கு எல்லாமுமாய் இருக்கிறார்
(யோவான் 7:39, 20:22)
(ஒரு கிறிஸ்தவனாக இருப்பது கடினம் மட்டுமல்ல — அது அசாத்தியமானது)
நாள் 2
த1 யோவான் சுவிசேஷம் வார்த்தையானவருடன் ஆரம்பித்து செம்மறிக்குட்டியானவர் திராட்சைச்செடி மற்றும் பரிசுத்த சுவாசம் என்று தொடர்ந்து பேசுகிறது (யோவான் 1:1, 29; 15:1; 20:22)
(வார்த்தையானவர் வெளியாக்கத்திற்காக இருக்கிறார், செம்மறிக்குட்டியானவர் மீட்பிற்காக இருக்கிறார், விருட்சம் ஜீவனின் உட்பகிர்தலுக்காக இருக்கிறது, சுவாசம் நம் வாழ்க்கைக்காக இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 இடைவிடா ஜெபம் சுவாசத்தைப் போன்றது (1 தெசலோ. 5:17)
(நமது ஜெபம் எவ்வாறு ஆவிக்குரிய சுவாசமாக மாறும் என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்.)
நாள் 3
த1 பாறையிலிருந்து வெளிவந்த தண்ணீர் உயிர்த்தெழுதலிலுள்ள ஜீவத்தண்ணீராகும். (யாத். 17:6)
(யாத்திராகமம் 17:6 கிறிஸ்துவின் மாம்சமாகுதல், மனித வாழ்க்கை, மரணம் இவற்றை மறைவாகக் குறிக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 இன்று நாம் அனுபவிக்கின்ற ஜீவ தண்ணீர் உயிர்த்தெழுதலில் உள்ளது (2 கொரி. 1:9)
(இந்த ஜீவத் தண்ணீரை ஒரு நேர்த்தியான விதத்தில் நாம் பருகும்போதெல்லாம் அது தண்ணீரில் உள்ள மூலக்கூறுகள், உட்பொருட்கள் அனைத்தையும் கொண்டு நமக்கு நிரப்பிடளிக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 ஆவிக்குரிய பானம் பிளக்கப்பட்ட கற்பாறையிலிருந்து பாய்ந்தோடிய ஜீவிக்கும் தண்ணீரை குறிக்கிறது(1 கொரி. 1:3-4)
(அடிக்கப்பட்ட கற்பாறையிலிருந்து வெளிப்பாய்ந்த தண்ணீர் ஆவியானவரை அடையாளப்படுத்துகிறது)
த2 வேதத்திலுள்ள தேவனுடைய வெளிப்பாட்டின் மையக்கரு (1 கொரி. 1:4; Col. 3:4)
(தேவனின் நோக்கம் நமக்குள் தம்மையே அடித்துருவாக்குவதே என்பதை அநேகக் கிறிஸ்தவர்கள் பார்த்திருக்கவில்லை என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 நித்திய உணவு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே (யோவான் 6:27)
கர்த்தராகிய இயேசு நம் அன்றாட உணவாக இருப்பது நமக்கு எவ்வளவாய் தேவை என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்)
த2 வேதாகமம் வெறும் போதனைக்காக மட்டுமல்ல–அது ஜீவன் மற்றும் ஜீவ நிரப்பீட்டிற்காகவும் இருக்கிறது (யோவான் 6:35, 51)
(வார்த்தையின் மூலம் ஜீவிக்கும் அப்பமாகிய கிறிஸ்துவை நாம் உண்ண வேண்டும்)
நாள் 6
த1 கர்த்தராகிய இயேசு வந்தபோது, அவர் தம்மை மனிதனுக்கு உபதேசமாக வழங்காமல் ஜீவ அப்பமாக வழங்கினார் (யோவான் 6:35; 48)
“கர்த்தரை உண்ணுதல்” என்பதன் அர்த்தம் என்ன?
த2 நாம் கர்த்தரைப் புசிப்பதை அவர் மீட்டுத்திருப்ப விரும்புகிறார் (வெளி. 2:17; 3:20)
(உபதேசப் போதனைகளுக்கு அக்கறை செலுத்துவதற்கு பதிலாக, நாம் கர்த்தரை நம் ஆவிக்குரிய உணவாக உண்ண வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)