Tamil – Prophesying Outline TGC Week 2

தெய்வீகப் பொருளாட்சிக்காக தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளித்தல்

செய்தி 2

தேவனின் தெய்வீகப் பொருளாட்சியின் நிறைவேற்றத்திற்காக நமக்குள் தெய்வீக திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பின் மூலம் மூவொரு தேவனின் நித்திய ஆசீர்வாதம்

 

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை

அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்தி குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்

வசனங்களை ஜெப வாசிப்பு செய்தல்


யோவா. 3:29 மணவாட்டியை உடையவனே மணவாளன்.

வெளி. 19:7 – “களிகூர்ந்துமகிழ்வோம், அவருக்கே மகிமைசெலுத்துவோம்; ஏனெனில் செம்மறி ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணம் வந்துவிட்டது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தப்படுத்திவிட்டாள்.”
உன்னதப்பாட்டு 6:4 – “என் பிரியமே நீ திர்சாவைபோல் சௌந்தர்யமும், எருசலேமைப்போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைபோல் கெடியுமானவள்.”

 

பசி தூண்டும் வார்த்தை
தெய்வீக காதலில் வாழ்வதன்மூலம் தெய்வீக திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பை எவ்வாறு நாம் அனுபவமாக்க முடியும்?

உன்னதப்பாட்டில் நாம் தெய்வீக பகிர்ந்தளிப்பின் அனுபவத்திற்கும் தெய்வீகக் காதலில் வாழ்வதற்கும் இடையிலான உறவைக் காண்கிறோம்; உன்னதப்பாட்டில் உள்ள தேடுபவள் தம் பிரியமானவரை மிகவும் அன்புகூர்வதால், அவள் தெய்வீகப் பகிர்ந்தளிப்பை அனுபவிக்கிறாள். எனவே ஜீவனில் அவளது வளர்ச்சியில் ஒரு தொடர்ச்சியான மாற்றம் ஏற்படுகிறது. ஒருவன் எதை நேசித்தாலும், அவனுடைய முழு இருதயம், அவனுடைய முழு ஆள்தத்துவம்கூட அதன்மீது பொருத்தப்படுகிறது அதனைக்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டு கைப்பற்றப்படுகிறது. அதாவது, அவர் நமக்கு எல்லாமாய் ஆகுமாறும், நம் தினசரி வாழ்க்கையில் நடைமுறைரீதியில் நாம் அவருடன் ஒன்றாய் இருக்குமாறும் நம் முழு ஆள்தத்துவமும் அவரால் ஆக்கிரமிக்கப்படவும், அவரில் தொலைந்துபோகவும் விடுவது என்று அர்த்தம்.

 

ஆவிக்குரிய பாரம்
கிறிஸ்துவின் ஜீவனின் முயற்சியில், கிறிஸ்துவின் காதலி சூலமித்தியாளாக ஆவது, அவள் கிறிஸ்துவுடனான திருமணத்திற்காக கிறிஸ்துவுக்குப் பொருந்த கிறிஸ்துவின் மறு உற்பத்தியாகவும் நகலாகவும் ஆகிவிட்டாள் என்பதை அடையாளப்படுத்துகிறது

ஜீவனிலும் சுபாவத்திலும் மனிதனை தேவனாக்க தேவன் மனிதனானார் என்ற தெய்வீக வெளிப்பாட்டின் உன்னத சிகரத்தை எவ்வாறு அடைவது என்று நாம் சிந்திக்கும்போது நாம் நம்மில் நம்பிக்கை வைக்கக்கூடாது, மாறாக நம் இரக்கம், கனம் மற்றும் மகிமையின் பாத்திரங்களாய் ஆகும்படி அன்பு, வல்லமை, இரக்கமாகக் கர்த்தரைச் சார்ந்துகொள்ள வேண்டும்.

 

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு
வேதாகமம், அதிதூய்மையான, அதிபரிசுத்தமான அர்த்தத்தில், மணவாளனாகக் கிறிஸ்துவில் தேவனும், மணவாட்டியாக தேவனின் மீட்கப்பட்ட மக்களுமாகிய ஒரு பிரபஞ்சமளாவிய தம்பதியின் ஒரு காதலாகும்.

உன்னதப்பாட்டில் நாம் தெய்வீகப் பகிர்ந்தளிப்பின் அனுபவத்திற்கும் தெய்வீகக் காதலில் வாழ்வதற்கும் இடையிலான உறவைக் காண்கிறோம்.

திர்சாவும் எருசலேமும் அதன் பாதுகாப்பிற்காக அதனைச் சுற்றியுள்ள தேவனுடைய பரிசுத்த நகரத்துடன் கூடிய தேவனின் தூயகத்தை, தேவனின் குடியிருப்பை அடையாளப்படுத்துகின்றன.

கிறிஸ்துவின் ஜீவனின் முயற்சியில், கிறிஸ்துவின் காதலி சூலமித்தியாளாக ஆவது, அவள் கிறிஸ்துவுடனான திருமணத்திற்காக கிறிஸ்துவுக்குப் பொருந்த கிறிஸ்துவின் மறுஉற்பத்தியாகவும் நகலாகவும் ஆகிவிட்டாள் என்பதை அடையாளப்படுத்துகிறது

 

ஜீவனின் அனுபவம்
1 கொரி. 2:9 ” கண் கண்டிராத, காது கேட்டிராத, மனிதனுடைய இருதயத்தில் எழும்பியிராத காரியங்களை; தம்மிடம் அன்பு கூர்கிறவர்களுக்காக தேவன் ஆயத்தம் பண்ணிய காரியங்களை”

தேவனிடம் அன்புகூருவதென்றால் நம் முழு ஆள்தத்துவத்தையும்–இருதயம், ஆத்துமா, மனம், பலம் ஆகியவற்றுடன் ஆவி, ஆத்துமா, சரீரத்தை (மாற்கு. 12:30)– முற்றிலும் அவர்மீது பொருத்துவதாகும். அதாவது அவர் நமக்கு எல்லாமுமாக ஆகுமாறும் நடைமுறையில் நம் தினசரி வாழ்க்கையில் நாம் அவருடன் ஒன்றாக இருக்குமாறும், நம் முழு ஆள்தத்தத்துவமும் அவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அவரின் தொலைந்துபோகும்படி அனுமதிப்பதாகும். இவ்விதத்தில் நாம் தேவனுடன் அதிநெருக்கமான அதிஅந்நியோன்யமாக ஐக்கியங்கொள்கிறோம், அதோடு, நாம் அவரது இருதயத்திற்குள் நுழையவும், அதன் இரகசியங்கள் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளவும் முடியும் .

 

பயிற்சி மற்றும் பிரயோகம்

நாம் தேவனுடைய காதலாடும் வார்த்தையைக் கைகொள்ள வேண்டுமானால், அவருக்கான மாறுதரமளிக்கக்கூடிய, பாசமுள்ள அன்பு நமக்கு தேவை; நமக்கும், கர்த்தராகிய இயேசுவுக்கும் இடையே காதல் இல்லை என்றால், நாம் மதரீதியான கிறிஸ்தவர்கள், காதல்நயமிக்க கிறிஸ்தவர்கள் அல்ல.

ஜீவனிலும் சுபாவத்திலும் மனிதனை தேவனாக்க தேவன் மனிதனானார் என்ற தெய்வீக வெளிப்பாட்டின் உன்னதச் சிகரத்தை நாம் அடைய வேண்டும். நாம் நம்மில் நம்பிக்கை வைக்கக் கூடாது, மாறாக நம்மை இரக்கம், கனம், மற்றும் மகிமையின் பாத்திரங்களாய் ஆக்கும்படி அன்பு, வல்லமை, இரக்கமாகக் கர்த்தரைச் சார்ந்துகொள்ள வேண்டும்.

கர்த்தராகிய இயேசுவை அன்புகூர்வதென்றால், அவரைப் பாராட்டுவதும் அவரை நோக்கி நம் ஆள்தத்துவத்தைத் திருப்புவதும், அவருக்குத் திறப்பதும், அவரை அனுபவித்துமகிழ்வதும், அவருக்கு முதலிடம் கொடுப்பதும், அவருடன் ஒன்றாக இருப்பதும், அவரை வாழ்வதும் அவராகவே ஆவதுமாகும்.

 

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்

ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1
த1 வேதம் பிரபஞ்சமளாவிய தம்பதியின் காதலாக இருக்கிறது (யோவா. 3:29)
(இந்த தம்பதியில் ஆண், தேவனே; இந்த தம்பதியில் பெண் பழைய ஏற்பாட்டு மற்றும் புதிய ஏற்பாட்டில் எல்லா பரிசுத்தவான்கள் உட்பட தேவனின் மீட்கப்பட்ட மக்கள் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 தேவனுடைய சிருஷ்டிப்பின் பதிவுக்குப்பின், நாம் ஒரு திருமணக் கதையை காண்கிறோம் (ஆதி. 2:21-25)

(ஆதாம் மற்றும் ஏவாளின் மாதிரியியலின் முக்கியத்துவத்தை எடுத்துரையுங்கள்)

 

நாள் 2

த1 தேவன் மனிதனை இணைப்பாதியாக வைத்திருக்கும் நோக்கத்துடன் படைத்தார் (ஆதி. 1:26)
(இவ்விதத்தில் தேவனுக்கும் அவரது இணைப்பாதியாக இருக்க சிருஷ்டிக்கப்பட்டவர்களான மனுக்குலத்துக்கும் இடையே ஒரு பரஸ்பர அன்பின் உறவு இருக்கும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 முழு வேதாகமம் ஒரு தெய்வீகக் காதலாகும்
(முழுப் புதிய ஏற்பாடும் காதல் மற்றும் காதலாடும் விதத்தில் எழுதப்பட்டது.)

 

நாள் 3
த1 [உன்னதப்பாட்டின் முதல் மூன்று அதிகாரங்களில்] தம் தேடுபவளை வருணிக்க கர்த்தர் குறைந்தபட்சம் எட்டு உருவகங்களைப் பயன்படுத்தினார் (உன்னதப்பாட்டு. 2:2, 14; 3:6)

(ஜீவனில் வளர்ச்சியையும் ஜீவனின் மறுசாயலாக்குதலையும் சுட்டிக்காட்டுகின்ற உருவகங்களை எடுத்துரையுங்கள்)

த2 கிறிஸ்துவை ஜீவனாக அனுபவித்து மகிழ்வதற்கான வழி ஓர் அற்புதமான நபராக அவரை நேசிப்பதாகும் (உன்னதப்பாட்டு. 1:4)

(கிறிஸ்துவை ஜீவனாக அனுபவித்து மகிழ்வதற்கும் அனுபவமாக்குவதற்குமான உன்னதப் பாட்டிலுள்ள வழி என்ன? என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 4
த1 தேவனின் ஆழமான மறைவான காரியங்களை உணர்ந்தறிந்து அதில் பங்குபெறுவதற்கு நாம் அவரில் அன்பு கூறவேண்டும். (1 கொரி. 2:9)

( தேவனை அன்புகூருவதின் அர்த்தம் என்ன என்பதை எடுத்துரையுங்கள்)

த2 சூலமித்தியாள் கிறிஸ்துவின் மறுஉற்பத்தியாக இருக்கும் நமக்கு ஒரு உருமாதிரியாக இருக்கிறாள்.
(புதிய எருசலேம் முழு நிறைவேற்றமடைந்த சூலமித்தியாளாக இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 5
த1 கிறிஸ்துவின் காதலி பரமேறுதலில் வாழ்ந்த பிறகு, அவள் தன் அதிஉயர்ந்த நிலையை அடைந்துவிட்டாள். (உன்னதப்பாட்டு 6:4)

(எந்த நான்கு காரியங்களில், அவள் தன் அடைதலில் தன் மறு சாயலாக்குதலில் முழுநிறைவேற்றமாக, ஆகிறாள் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 கிறிஸ்துவின் காதலி, கிறிஸ்துவுக்கு ஒரு தோட்டமாக மட்டுமல்லாமல் தேவனின் தூயகமாகவும் ஆகக்கூடுமாறு, கிறிஸ்துவினுடைய ஜீவனின் ஐசுவரியங்களில் முதிர்ச்சி அடைகிறாள்.

(கிறிஸ்துவின் ஜீவனின் முதிர்ச்சியடைவது ஒரு மாபெரும் காரியம் என்று ஏன் கூறப்பட்டது)

 

நாள் 6
த1 ஆவிக்குரிய தன்மை ஒரு கூட்டு நகரத்தை கட்டியெழுப்புவதற்காக இருக்கிறது. (எபே. 4:15-16)
(நம்முடைய எல்லா ஆவிக்குரிய தன்மையும் கட்டியெழுப்பதற்காக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 ஜீவனில் காதலியின் முதிர்ச்சி அவருடைய கட்டிடத்திற்காக இருக்கிறது.(உன்னதப்பாட்டு 6:4)

(தேவனின் கட்டிடத்திற்காக ஜீவனில் முதிர்ச்சி அடைய காதலி மேற்கொள்ளும் அந்த வழிமுறையை எடுத்துரையுங்கள்)