தெய்வீகப் பொருளாட்சிக்காக தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளித்தல்
செய்தி 1
தேவனின் தெய்வீகப் பொருளாட்சியின் நிறைவேற்றத்திற்காக நமக்குள் தெய்வீக திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பின் மூலம் மூவொரு தேவனின் நித்திய ஆசீர்வாதம்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்தி குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெப வாசிப்பு செய்தல்
எண். 6:23-26 நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்ல வேண்டியது என்னவென்றால் : நீங்கள் இஸ்ரயேல் புத்திரரை ஆசீர்வதிக்கும் போது, அவர்களைப் பார்த்துச் சொல்ல வேண்டியதாவது : கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்க பண்ணி, உன் மேல் கிருபையாய் இருக்கக் கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.
2 கொரி. 13:14 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் தேவனின் அன்பும் பரிசுத்த ஆவியின் ஐக்கியமும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
பசிதூண்டும் வார்த்தை
எண்ணாகமம் 6ல் உள்ள ஆசீர்வாதம் என்ன?
இந்த ஆசீர்வாதம் தம் நபரில் பிதாவாகவும் குமாரனாகவும் ஆவியானவராகவும் இருக்கும் மூவொரு தேவனே. பிதாவில் நாம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டு, மூவொரு தேவனில் காக்கப்படுகிறோம். குமாரனில் நாம் தேவனுடைய பிரசன்னத்தைப் பெற்றுக்கொண்டு, அவரைக் கிருபையாக அனுபவித்து மகிழ்கிறோம். பரிசுத்த ஆவியில் தேவனுடைய முகபாவனை நம்மேல் உள்ளது, நாம் இரவும் பகலும் சமாதானத்தை அனுபவித்து மகிழ்கிறோம்.
எண்ணாகமம் 6:23-26, 2 கொரிந்தியர் 13:14 ஆகிய இரண்டிலும் உள்ள ஆசீர்வாதம் புறம்பானதும் பொருள்ரீதியானதும் அல்ல. இங்கு உள்ள ஆசீர்வாதம் ஒரு மேன்மையான வேலை, ஓர் அருமையான வீடு, ஓர் உயர் கல்வி, ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய ஒரு காரியமல்ல. மேலும் இந்த ஆசீர்வாதம், சபையில் எந்த விதமான பதவியை பெறுவதோடும் தொடர்புடையது அல்ல
எண்ணாகமம் 6:22-27இல் நாம் ஆசாரியர்கள் ஆசீர்வதித்த ஆசீர்வாதத்தின் வடிவமைப்பைப் பார்க்கிறோம்; இந்த ஆசீர்வாதம் பழைய ஏற்பாட்டு ஆசீர்வாதமுமல்ல, புதிய ஏற்பாட்டு ஆசீர்வாதமுமல்ல, இது மூவொரு தேவனின் நித்திய ஆசீர்வாதம், இது மூவொரு தேவன் நம் அனுபவமகிழ்ச்சிக்காக தம் தெய்வீகத் திரியேகத்துவத்தில் நமக்குள் தம்மையே பகிர்ந்தளிப்பதாகும்.
ஆவிக்குரிய பாரம்
தம் நித்தியப் பொருளாட்சியின் இலக்காகிய புதிய எருசலேமை நிறைவேற்றும்படி தேவத்துவத்திலல்ல, மாறாக ஜீவன், சுபாவம், மற்றும் வெளியாக்கத்தில் நம்மை தேவனாக்கும் இலக்கோடு, கிறிஸ்துவின் சரீரத்தின் கட்டியெழுப்புதலுக்காக, உள்வசிக்கும் தன்னிச்சையான ஜீவ ஆவியின் பிரமாணத்தை அனுபவிக்கும் நம் அனுபவமகிழ்ச்சியின் மூலம் மூவொரு தேவன் தம்மையே தம் தெய்வீகத் திரியேகத்துவத்தில் நமக்குள்ளாகப் பகிர்ந்தளிப்பதே முழுப் பிரபஞ்சத்திலும் ஒப்பற்றதும் நித்தியமுமான ஆசீர்வாதம்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
முழுப் பிரபஞ்சத்திலும் ஒப்பற்ற ஆசீர்வாதம் மூவொரு தேவனே, இந்த ஆசீர்வாதம் அவருடைய தெய்வீகப் பொருளாட்சியை நிறைவேற்றுவதற்கு நம் அனுபவமகிழ்ச்சிக்காக நமக்குள் தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பின்மூலம் நம்மிடம் வருகிறது
எண்ணாகமம் 6:22-27இல் நாம் ஆசாரியர்கள் ஆசீர்வதித்த ஆசீர்வாதத்தின் வடிவமைப்பைப் பார்க்கிறோம்; இந்த ஆசீர்வாதம் பழைய ஏற்பாட்டு ஆசீர்வாதமுமல்ல, புதிய ஏற்பாட்டு ஆசீர்வாதமுமல்ல, இது மூவொரு தேவனின் நித்திய ஆசீர்வாதம், இது மூவொரு தேவன் நம் அனுபவமகிழ்ச்சிக்காக தம் தெய்வீகத் திரியேகத்துவத்தில் நமக்குள் தம்மையே பகிர்ந்தளிப்பதாகும்
இரண்டு கொரிந்தியர் 13:14இலுள்ள ஆசீர்வாதம், எண்ணாகமம் 6:22-27இலுள்ள அதே ஆசீர்வாதமாகும், இது மூவொரு தேவன் நம் அனுபவமகிழ்ச்சிக்காக தம் தெய்வீகத் திரியேகத்துவத்தில் நமக்குள் தம்மையே பகிர்ந்தளிப்பதாகும் – ” கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் தேவனுடைய அன்பும் பரிசுத்த ஆவியின் ஐக்கியமும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.”
ஜீவனின் அனுபவம்
கர்த்தருடைய கிருபை, நம் அனுபவ மகிழ்ச்சிக்காக நமக்கு ஜீவனாகவுள்ள கர்த்தரே, தேவனுடைய அன்பு, கர்த்தருடைய கிருபையின் ஊற்றாகிய தேவனே, ஆவியானவரின் ஐக்கியம், நம் பங்குப்பெறுதலுக்காக தேவனுடைய அன்புடன் கர்த்தருடைய கிருபையின் உட்கடத்துதலாக ஆவியானவரே.
பிதா தம் அன்பில் எல்லா விதத்திலும், எல்லா அம்சத்திலும் நம்மை ஆசீர்வதிக்கிறார், அவர் தம் வல்லமையில் எல்லா விதத்திலும், எல்லா அம்சத்திலும் நம்மைப் பாதுகாக்கிறார்.
இயேசு தேவனின் முகமாக வந்தார், பரிசுத்த ஆவி தேவனின் முகபாவனையாக வருகிறார் ; நாம் அவரைத் துக்கப்படுத்தினால் அவரது முகபாவனை வாடிவிடும் ( எபே.4:30), ஆனால் நாம் அவருக்குக் கீழ்ப்படிந்தால் அவர் நம்மிடம் சந்தோஷமாக இருப்பார், அவர் நம்மை உறுதிப்படுத்த, நமக்கு உறுதிகூற, நமக்கு உத்திரவாதமளிக்க, வாக்குறுதியளிக்க, அனைத்தையும் நமக்குக் கொடுக்க தம் முகபாவபாவனையை உயர்த்துவார்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
மூவொரு தேவனின் பகிர்ந்தளித்ததில் முற்றும்முடிய காக்கப்படுதல் மற்றும் முற்றும்முடிய தீயவனுக்கு வெளியே இருத்தல் என்ற ஆசீர்வாதத்திற்காக நாம் ஜெபிக்க வேண்டும்; என்னே ஆசீர்வாதம் இது! இயேசுவின் கூட்டான வெளியாக்கமாகிய இயேசுவின் சாட்சியை பெறுவதற்கான தேவனின் இருதய வாஞ்சையை நிறைவேற்றுவதற்காக, பிரபஞ்சத்தின் ஒப்பற்ற ஆசீர்வாதமாக நாம் அவரை மற்றவர்களுக்குள் பகிர்ந்தளிக்குமாறு பதனிடப்பட்ட, உள்ளாக சுற்றியோடும் மூவொரு தேவனை நாம் நாள்தோறும் அனுபவித்துமகிழ வேண்டும், அவரைக் கொண்டு ஆசீர்வதிக்கப்பட வேண்டும்.
சில சமயங்களில் நாம் நம் சூழ்நிலையை கருதும் போது, நாம் சோர்வடையக்கூடும், நம்மிடம் எதுவும் இல்லை என்று நமக்குத் தோன்றக்கூடும். சூரியனுக்கு கீழுள்ள அனைத்தும், ஆவிக்குரிய களத்தில் உள்ள அனைத்தும்கூட , மாயையிலும் மாயை என்று நமக்குத் தோன்றக்கூடும், எதுவும் நிஜமல்ல, சபை வாழ்க்கையில்கூட எதுவும் நிஜமல்ல என்று நமக்குத் தோன்றக்கூடும், நமக்கு இவ்விதமாகத் தோன்றும் போது நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் மூவொரு தேவனிடம் திரும்ப வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள் – ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 பிதா, குமாரன், ஆவியானவராகிய தெய்வீகத் திரியேகத்துவம் தேவனின் பகிர்ந்தளிப்புக்காகவே (எரே. 2:13, யோவா. 4:14; வெளி. 22.1)
( தேவனின் பகிர்ந்தளிப்பை நிறைவேற்ற தேவன் ஏன் மூவொருவராக இருக்க வேண்டும்? )
த2 முழுப் பிரபஞ்சத்திலும் உள்ள ஒப்பற்ற ஆசீர்வாதம் தேவனே ( எபே.1:3-4, 7, 13)
( இந்த ஆசீர்வாதம், தம் தெய்வீகத் திரியேகத்துவத்தில், தெய்வீக ஆள்த்தத்துவத்தை நமக்குள் பகிர்ந்தளிப்பதன் மூலமாக நம்மிடம் வருகிறது)
நாள் 2
த 1 எண்ணாகமம் 6இல் உள்ள ஆசீர்வாதத்தில் மூவொரு தேவன் நம்முடைய நித்திய ஆசீர்வாதமாக இருக்கிறார்( எண். 6:23-26)
(எண்ணாகமம் 6இல் உள்ள ஆசீர்வாதங்கள் மூவொரு தேவனுடன் எவ்வாறு தொடர்புடையவை என்பதை எடுத்துரையுங்கள் )
த2 பகிர்ந்தளிக்கும் மூவொரு தேவனில் முற்றிலும் காக்கப்படுதல் ( எண். 6:24, யோவா. 17:1)
நாள்3
த1 மூவொரு தேவன் ஒவ்வொரு நாளும் நமக்கு கிருபையாக மாறுகிறார் மற்றும் நமக்கு சமாதானம் இருக்கிறது ( எண். 6:25-27)
( எண்ணாகமம் 6ல் உள்ள ஆசீர்வாதத்தில் நமக்கு முகம், முகபாவனை ஆகிய இரண்டும் உள்ளன, இவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன?)
த2 எண்ணாகமம் 6:23-26இல் உள்ள ஆசீர்வாதம் பொருள் ரீதியானது அல்ல ( எண். 6:23-26, 2 கொரி. 13:14)
( எண்ணாகமம் 6இல் உள்ள ஆசீர்வாதங்கள் என்னென்ன? என்பதை எடுத்துரையுங்கள் )
நாள் 4
த1 எண்ணாகமம் 6 மற்றும் 2 கொரிந்தியர் 13இல் உள்ள ஆசீர்வாதங்களின் ஒப்பிடுதல் (2 கொரி.13:14; எண். 6:24-26)
( எண்ணாகமம் 6 மற்றும் 2 கொரிந்தியர் 13 இல் உள்ள ஆசீர்வாதங்களுக்கிடையே உள்ள வித்தியாசம் என்ன என்பதை எடுத்துரையுங்கள்)
த2 புதிய ஏற்பாட்டில் நிஜமான ஆசீர்வாதம் என்பது மூவொரு தேவனே (2 கொரி. 13:14)
( ஒரு நடைமுறைக்குரிய வழியில் நாள் முழுவதும் மூவொரு தேவனை நம்மால் அனுபவித்து மகிழ முடியும். இதுவே நம் ஒப்பற்ற புதிய ஏற்பாட்டு ஆசீர்வாதம் )
நாள் 5
த1 தெய்வீகத் திரியேகத்துவம் இறையியல் ஆய்வுக்காக அல்ல, மாறாக நமது அனுபவம் மற்றும் அனுபவமகிழ்ச்சிக்காக இருக்கிறது (2 கொரி.13:14)
(தெய்வீக திரியேகத்துவத்தை அனுபவிப்பது என்பது, தேவனின் அன்பு கிறிஸ்துவின் கிருபை பரிசுத்த ஆவியின் ஐக்கியம் ஆகியவற்றில் பங்கு பெறுவதாகும்.)
த2 நம்மில் இருக்கும் தேவனின் கிரியைச் செய்தல், மின்சாரத்தின் கிரியைச் செய்தலைப் போலவே மிகவும் தீவிரமானது மற்றும் ஆற்றல் மிக்கது (பிலி. 2:13; 2 கொரி. 13:14)
( இந்த மின்னோட்டமே தெய்வீக திரியேகத்துவத்தின் சுழற்சி ஆகும் )
நாள் 6
த1 மீட்கும் செம்மறிகுட்டியானவரே புதிய எருசலேமிலுள்ள விளக்கு (வெளி. 21:23; 22:1)
( நாம் கர்த்தருடைய அதிகாரத்தின்கீழ் கொண்டு வரப்படுவதே ஒளியையும் மீட்கும் இரத்தத்தையும் பற்றிய நம் அனுபவத்தின் இலக்கும் விளைவும் ஆகும் )
த2 கிறிஸ்துவானவர் சிங்காசனத்தில் இருக்கும்போது நம்மிடம் ஜீவ தண்ணீருள்ள நதியின் பாய்ந்தோடுதல் இருக்கிறது (வெளி. 22:1)
( நம்மிடம் பாய்ந்தோடுதல் இருக்கும்போது, ஜீவனின் ஐசுவரியமான மற்றும் பசுமையான நிரப்பீடாக கிறிஸ்து நமக்கு இருக்கிறார் என்பதை அனுபவங்களுடன் எடுத்துரையுங்கள்)