மெய்யான சபை வாழ்க்கைக்காக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அறிதலும், அனுபவமாக்குதலும், வாழ்தலும்
செய்தி 7
பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவில் உழைத்தலும், கிறிஸ்துவைக் கண்காட்சியாக்குவதற்காகவும், தேவனுடைய கூட்டு ஆராதனைக்காகவும் கிறிஸ்துவின் ஐசுவரியங்களின் அபரிமிதத்தை சபை கூடுகைகளுக்குக் கொண்டுவருதலும்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
யாத். 3:8 அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.
யோவா. 4:23-24 ஆனால் வேளை வருகிறது, அது இப்பொழுதே இருக்கிறது, சத்தியமாய்த் தொழுதுகொள்கிறவர்கள் பிதாவை ஆவியிலும், சத்தியத்தன்மையிலும் தொழுதுகொள்வார்கள், ஏனெனில் பிதாவும் அப்படிப்பட்டவர்கள் தம்மைத் தொழுதுகொள்வதை நாடுகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்கிறவர்கள் ஆவியிலும் சத்தியத்தன்மையிலும் தொழுதுகொள்ள வேண்டும் என்றார்.
பசிதூண்டும் வார்த்தை
சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவின் மாதிரியாக, கானான் தேசம் “பாலும் தேனும் ஓடுகிற தேசமாகும்.” பால் மற்றும் தேன் ஆகியவற்றின் அடையாளங்கள் என்ன?
மிருக ஜீவன் மற்றும் தாவர ஜீவன் ஆகிய இரண்டினுடைய கலந்திணைதலாகிய பாலும் தேனும், மீட்கும் அம்சம் மற்றும் ஜெநிப்பிக்கும் அம்சம் ஆகிய கிறிஸ்துவினுடைய ஜீவனின் இரண்டு அம்சங்களை அடையாளப்படுத்துகின்றன. தாவர ஜீவன் ஜெநிப்பிக்கிற, பெருகுகின்ற ஜீவன்; இந்த ஜீவன் கிறிஸ்துவின் ஜெநிப்பிக்கிற பெருகுகின்ற ஜீவனை அடையாளப்படுத்துகிறது. மிருக ஜீவன் கிறிஸ்துவின் மீட்கும் ஜீவனை அடையாளப்படுத்துகிறது.
கிறிஸ்துவினுடைய ஜீவனின் மீட்கும் அம்சம் நம் சட்டரீதியான மீட்பிற்காகவும், கிறிஸ்துவினுடைய ஜீவனின் ஜெநிப்பிக்கும் அம்சம் நம் ஜீவாதார இரட்சிப்பிற்காகவும் உள்ளது. கர்த்தருடைய பந்தியிலுள்ள சின்னங்கள் தேவனுடைய முழுமையான இரட்சிப்புக்காகக் கிறிஸ்துவினுடைய ஜீவனின் மீட்கிற மற்றும் ஜெநிப்பிக்கிற அம்சங்களை அடையாளப்படுத்துகின்றன.
ஆவிக்குரிய பாரம்
நம் ஆவியைப் பயிற்சிசெய்வதே, கிறிஸ்துவின்மீது உழைப்பதற்கும், கிறிஸ்துவை அனுபவமாக்குவதற்கும், கிறிஸ்துவை விளைவிப்பதற்குமான திறவுகோல். கர்த்தரில் விசுவாசம் வைக்கவும் கர்த்தரிடம் அன்புகூரவும் நம் இருதயத்தை பயிற்சிசெய்வதன் மூலமாகவும், கர்த்தரைத் தொடர்புகொள்ளவும் நல்ல தேசமாகிய கிறிஸ்துவின் நிஜமான, சகலத்தையும் உள்ளடக்கிய ஜீவன் தரும் ஆவியானவரின் பகிர்ந்தளிப்பைப் பெற்றுக்கொள்ளவும் நம் ஆவியைப் பயிற்சிசெய்வதன் மூலமாகவும் நாம் நல்ல தேசமான கிறிஸ்துவின்மீது உழைக்கிறோம்.
தினமும், நாம் பிதாவாகிய தேவனின் கூட்டு ஆராதனைக்காக சபை கூடுகைகளுக்குக் கொண்டுவரும்படி, ஒரு அபரிமிதத்தை, ஒரு அறுவடையைப் பெறும்படி கிறிஸ்துவின்மீது உழைக்க வேண்டும். நாம் கிறிஸ்துவில் உழைக்க, நம் கரங்கள் கிறிஸ்துவால் நிறைந்திருக்க நாம் சிரத்தையாயிருப்போமாக; அதன்பின் தேவனுடைய பிள்ளைகளோடும் தேவனோடும்கூட இந்த ஐசுவரியமான மகிமையான கிறிஸ்துவை அனுபவித்துமகிழும்படி சபை கூடுகைகளுக்கு வருவோமாக.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
கானான் தேசத்தால் மாதிரியாகக் காட்டப்படும் நல்ல தேசமான கிறிஸ்துவுக்குள் அவரால் வழிநடத்தப்பட்டிருக்கிற கிறிஸ்துவிலுள்ள விசுவாசிகளான நாம், கிறிஸ்துவின்மீது உழைக்க வேண்டும்.
சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவின் மாதிரியாக, கானான் தேசம் “பாலும் தேனும் ஓடுகிற தேசமாகும்.”
தினமும், நாம் பிதாவாகிய தேவனின் கூட்டு ஆராதனைக்காக சபை கூடுகைகளுக்குக் கொண்டு வரும்படி ஒரு அபரிமிதத்தை, ஒரு அறுவடையைப் பெறும்படி கிறிஸ்துவின்மீது உழைக்க வேண்டும்.
ஜீவனின் அனுபவம்
நாம் கிறிஸ்துவைத் தாவர ஜீவனாகவும் மிருக ஜீவனாகவும் அனுபவமாக்கி, அனுபவித்துமகிழ்கிற அதே சமயத்தில், கர்த்தர் நமக்கு எவ்வளவு நல்லவராகவும் இனிமையாகவும் ஐசுவரியமாகவும் இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்தறிகிறோம். நாம் கிறிஸ்துவின் ஐசுவரியத்தையும், இனிமையையும் உணருகிறோம், அதாவது, பாலின் நன்மையையும் தேனின் இனிமையையும் நாம் உணருகிறோம்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
கர்த்தர்மீது உழைத்து அவரை அனுபவமாக்கி அனுபவித்துமகிழும் குறிக்கோளுக்காக, அந்த நாளுக்குரிய கிருபையின் பங்கை அவரிடம் கேட்டு, நம்மைக் கர்த்தரிடம் அர்ப்பணித்து, ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் ஜெபிக்க வேண்டும். நாள் முழுவதும் கர்த்தரோடுள்ள நம் ஐக்கியத்தைப் பராமரித்து, இவ்வாறு, அவரைத் தொடர்புகொள்ளவும், அவர்மீது உழைக்கவும் அவரைப் பிரயோகிக்கவும், அவரை அனுபவமாக்கவும், அவரை அனுபவித்துமகிழவும் வேண்டும்
நாம் கர்த்தரை நினைவுகூரவும் பிதாவைத் தொழுதுகொள்ளவும் கர்த்தருடைய பந்திக் கூடுகைக்கு வரும்போது, ஒருபோதும் நாம் வெறுங்கையோடு வரக்கூடாது; நாம் கிறிஸ்துவின் விளைபொருட்களால் நம் கரங்களை நிரப்பியவர்களாக வர வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 தேவன் நம்மைக் கிறிஸ்துவுக்குள் வைத்திருக்கிறார். இஸ்ரயேல் புத்திரர் கானான் தேசத்திற்குள் நுழைந்தனர், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தேசத்தின் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டது. (கொலோ. 1:12)
(எவ்வாறு கிறிஸ்துவை அனுபவித்துமகிழ்வது, அனுபவமாக்குவது என்பதைக் கற்றுக்கொள்வதே நமது தேவை என்பதை எடுத்துரையுங்கள்)
த2 நல்ல தேசத்தைச் சுதந்தரித்தபின் வாழும் வாழ்க்கை கிறிஸ்துவில் பிரயாசப்படும் வாழ்க்கையாகும். (கொலோ. 1:12; 2:7)
(கிறிஸ்துவின் சகலத்தையும் உள்ளடக்கிய ஐசுவரியங்களை நாம் அனுபவித்துமகிழும்படி, எவ்வாறு நாம் கிறிஸ்துவில் ஜாக்கிரதையாக உழைக்க வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 நீங்கள் கிறிஸ்துவை விளைவிக்கக்கூடுமாறு நீங்கள் தேசமாக கிறிஸ்துவில் உழைக்க வேண்டும் (பிலி. 2:13; எபே. 3:17)
(எவ்வளவு கிறிஸ்துவை நீங்கள் கூடுகைக்குக் கொண்டுவருகிறீகள் என்பது எவ்வளவு கிறிஸ்துவை நீங்கள் விளைவிக்கிறீர்கள், எவ்வளவு கிறிஸ்துவை நீங்கள் வளர்த்திருக்கிறீர்கள் என்பதை சார்ந்திருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 நேர்த்தியான சபை வாழ்க்கை கூடுகையின் வாழ்க்கையாக இருக்க வேண்டும் (கொலோ. 3:16)
(நாம் எவ்வாறு நடைமுறையில் கர்த்தருக்குள் வாழ வேண்டும், அவர்மீது பிரயாசப்பட்டு உழைக்க வேண்டும், அவரை பிரயோகிக்க வேண்டும், அவரை அனுபவித்துமகிழ வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 மற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு, நம் ஆவியிலுள்ள உணர்வுக்கு கவனம்செலுத்துவதே நம் ஆவியைப் பயிற்சிசெய்வதாகும். (யோவா. 4:24)
(இன்று தேவனுக்கு ஏறெடுக்கும் உண்மையான ஆராதனை ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆராதிப்பதைப் பற்றிய காரியமல்ல, மாறாக நம் ஆவியில் தேவனைத் தொடர்புகொள்வதைப் பற்றிய ஒரு காரியமாகும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 நம் ஆத்துமாவில் உள்ள உணர்வைக் காட்டிலும், நம் ஆவியில் உள்ள உணர்வை கவனித்துக்கொள்வதன் மூலம் நம் ஆவியைப் பயிற்சிசெய்தல் (எபி. 4:12)
(நாம் நம் ஆவியைப் பயிற்சிசெய்யும்போது, நம் சுற்றுச்சூழல், நம் குடும்பம், நம் வெற்றிகள், நம் தோல்விகள் ஆகியவற்றை மறந்துவிட்டு, பரலோகங்களுக்குள் கொண்டுவரப்படுகிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 நல்ல தேசம் பாலும், தேனும் ஓடுகிற தேசம். (யாத். 3:8)
(தேனின் பெரும்பாகம் தாவர ஜீவனைச் சார்ந்தது. பாலின் பெரும் பகுதி மிருக ஜீவனைச் சார்ந்தது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கூடுகைக்காக நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளுதல் (எபே. 3:8)
(நாம் கூடுகைக்குள் வந்தபிறகு, நாம் அகத்தூண்டுதலுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை, காத்திருக்கவும் கூடாது; கர்த்தருடைய மகிமை மற்றும் திருப்திக்காக, நாம் ஆயத்தம் செய்திருப்பதை வழங்கி செயல்பட நாம் நம் ஆவியைப் பயிற்சிசெய்யவும், நம் பயிற்றுவிக்கப்பட்ட மனதைப் பயன்படுத்தவும் வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள் )
நாள் 5
த1 பால் மற்றும் தேன் இரண்டும். இரண்டு வகையான ஜீவன்களின் மிருக ஜீவன் மற்றும் தாவர ஜீவன்-சேர்க்கையால் உற்பத்திசெய்யப்படுகின்றன. (யோவா. 1:19; 12:24)
(கிறிஸ்துவே இந்த இரண்டு வகையான ஜீவன்களின் விளைவாக இருக்கிறார் என்பதை பால் மற்றும் தேன் அடையாளப்படுத்துகிறது. இதனை எடுத்துரையுங்கள்)
த2 பாலும் தேனும் கிறிஸ்துவின் ஐசுவரியங்களை, அதாவது கிறிஸ்துவின் ஜீவனின் இரண்டு அம்சங்களிலிருந்து வருகிற ஐசுவரியங்களை அடையாளப்படுத்துகின்றன.
(யோவா.1:19; 12:24)
(கிறிஸ்து ஒரு நபராக இருக்கிறார், அவருக்கு மிருக ஜீவனால் மாதிரியாகக் காட்டப்படுகிற மீட்கும் ஜீவனும், தாவர ஜீவனால் மாதிரியாகக் காட்டப்படுகிற முளைப்பிக்கும் ஜீவனும் இருக்கின்றன என்பதை எடுத்துரைங்கள்)
நாள் 6
த1 நல்ல தேசத்தின் ஐசுவரியமான உற்பத்தியாகிய, குமாரனின் ஐசுவரியங்களை அனுபவித்துமகிழ்வதன் மூலமே நாம் நிஜமாகிய குமாரனில் பிதாவை ஆராதிக்கிறோம் (உபா. 8:7; யோவான் 4:23-24)
(இன்று நம் ஆவியே தேவனுடைய குடியிருப்பு இருக்கும் நிஜமான எருசலேமாகும். மேலும், நல்ல தேசத்தின் விளைபொருட்களின் அபரிமிதம், கிறிஸ்துவின் ஐசுவரியங்களின் ஒரு மாதிரியாகும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 நாம் கர்த்தரைத் தொழுதுகொள்ள வரும்போதெல்லாம் கிறிஸ்துவின் விளைபொருட்களை நம் கைகள் நிறையக் கொண்டுவர வேண்டும்.(யோவா. 4:23-24)
(நல்ல தேசத்தை உடைமையாக்கிய பின்பு நாம் எந்த வகையான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)