மெய்யான சபை வாழ்க்கைக்காக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அறிதலும், அனுபவமாக்குதலும், வாழ்தலும்
செய்தி 5
மெய்யான சபை வாழ்க்கைக்காக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அறிதலும், அனுபவமாக்குதலும், வாழ்தலும்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
பிலி. 2-9-10. ஆகையால்தான் தேவன் அவரை மிகவும் உயர்த்தி, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்; பரலோகத்திலும் பூமியிலும் பூமியின் கீழும் இருக்கிறவர்களின் முழங்கால் யாவும் இயேசுவின் நாமத்தில் முடங்கும்படியும்
கொலோ.3:17. வார்த்தையிலோ செயலிலோ நீங்கள் எதைச் செய்தாலும், பிதாவாகிய தேவனுக்குக் கர்த்தராகிய இயேசுவின்மூலம் நன்றிசெலுத்தி, அவருடைய நாமத்திலேயே எல்லாவற்றையும் செய்யுங்கள்.
கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலேயே எல்லாவற்றையும் செய்தல்.
பசிதூண்டும் வார்த்தை
” கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில்” என்பதன் அர்த்தம் என்ன?
கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இருப்பதென்றால், நாம் அவருடைய நாமத்தில் பங்குபெறும்படி, தேவன் தம்முடைய குமாரனை தம்மிடம் ஒப்படைத்திருக்கிறார் என்றும், கர்த்தர் தம்மையே நமக்குக் கொடுத்திருக்கிறார் என்றும், மேலும் நாம் அவருடைய நாமத்தில் செய்யும் யாவற்றையும் அங்கீகரிக்க சித்தமாயிருக்கிறார் என்றும் அர்த்தம். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இருப்பதென்றால், நாம் அவருடன் ஒன்றாக இருக்கிறோம் என்றும், நாம் அவரில் இருக்கிறோம். அவர் நம்மில் இருக்கிறார் என்றும் பார்ப்பது நமக்கு மிக முக்கியமானதாகும். கர்த்தருடைய நாமத்தில் இருப்பதென்றால், அவருடைய நபரில், அதாவது அவரிலேயே இருப்பதும் அவர் என்னவாக இருக்கிறாரோ அவை எல்லாவற்றினுடைய மண்டலத்திலும் மூலக்கூறிலும் இருப்பதுமாகும்.கர்த்தரின் நாமத்தில் இருப்பதென்றால் கர்த்தரால் வாழ்வதும், நம்மில் வாழக் கர்த்தரை அனுமதிப்பதும் ஆகும்.
ஆவிக்குரிய பாரம்
நம் அன்றாட வாழ்க்கையிலும், சபையில் நம் சேவையிலும், கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலேயே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நாமம் என்பது ஒரு நபரைக் குறிப்பதால், இயேசுவின் நாமத்தில் காரியங்களைச் செய்வது என்பதற்கு அவருடைய நபரில் எல்லாவற்றையும் செய்வது என்று பொருள். சபையில் நம் சேவைக்கு நாம் எல்லாவற்றையும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலேயே செய்வது தேவைப்படுகிறது. நம்முடைய சேவை கர்த்தரால் துவங்கப்பட்டு, அவருடைய வாஞ்சையின்படி இருக்க வேண்டும்.
நம் பேசுதல் நம் வார்த்தைகள் எல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலேயே இருக்க வேண்டும் .
நாம் கர்த்தருடைய நாமத்தில் ஜெபிக்க வேண்டும். கர்த்தருடைய நாமத்தில் ஜெபித்தல் என்பதற்கு நாம் கர்த்தருடனான சேர்க்கையில் வாழ்ந்துவருகிறோம் என்றும், நம்மூலம் வெளியரங்கமாக தேவனை நாம் அனுமதிக்கிறோம் என்றும் அர்த்தம்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
இயேசு என்ற நாமமே பிரபஞ்சத்திலுள்ள அதிஉயர்ந்த நாமம், மகாபெரிய நாமம்.
கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலேயே என்றால், உண்மையில் “கர்த்தரிலேயே” என்று அர்த்தம், ஏனென்றால் அந்த நாமம் அந்த நபரைக் குறிக்கிறது.
நம் அன்றாட வாழ்க்கையிலும், சபையில் நம் சேவையிலும், நாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலேயே எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.
நம் பேசுதல் நம் வார்த்தைகள் எல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலேயே இருக்க வேண்டும்.
ஜீவனின் அனுபவம்
நாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இருக்கும்போது, நாம் கிறிஸ்துவில் இருக்கிறோம், கிறிஸ்து நம்மில் இருக்கிறார் மற்றும் நாம் கிறிஸ்துவோடு ஒன்றாய் இருக்கிறோம். கர்த்தருடைய நாமத்தில் இருப்பது என்றால், கர்த்தரால் வாழ்வதும் மற்றும் கர்த்தரை நம்மில் வாழவிடுவதும் ஆகும்.
நாம் கர்த்தருடைய நாமத்தை எல்லாவற்றையும் செய்தால் நாம் வெற்றி பெற்றவர்கள். நாம் கர்த்தருடைய நாமத்தில் எதுவும் செய்யாவிட்டால் நான் தோல்வியுற்றவர்கள்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
நம் அன்றாட வாழ்க்கையிலும், சபையில் நம் சேவையிலும், கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலேயே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நாமம் என்பது ஒரு நபரைக் குறிப்பதால், இயேசுவின் நாமத்தில் காரியங்களைச் செய்வது என்பதற்கு அவருடைய நபரில் எல்லாவற்றையும் செய்வது என்று பொருள். சபையில் நம் சேவைக்கு நாம் எல்லாவற்றையும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலேயே செய்வது தேவைப்படுகிறது.
நம் பேசுதல் நம் வார்த்தைகள் எல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலேயே இருக்க வேண்டும். கெட்ட வார்த்தை ஒன்றும் நம் வாயிலிருந்து புறப்படக்கூடாது. மாறாக, சத்தியமுள்ளவையும், கேட்கிறவர்களுக்கு கிருபை அளிப்பவையும் மட்டுமே வெளிவர வேண்டும்
நாம் கர்த்தருடைய நாமத்தில் ஜெபிக்க வேண்டும். கர்த்தருடைய நாமத்தில் ஜெபித்தல் என்பதற்கு நாம் கர்த்தருடனான சேர்க்கையில் வாழ்ந்துவருகிறோம் என்றும், நம் மூலம் வெளியரங்கமாக தேவனை நாம் அனுமதிக்கிறோம் என்றும் அர்த்தம்
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 இயேசுவின் நாமத்தில் என்ற வார்த்தைக்கு, கர்த்தர் என்னவாக இருக்கிறாரோ அவை அனைத்தின் மண்டலத்திலும் மூலக்கூறிலும் என்று அர்த்தம் (பிலி. 2:9-10)
(இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அதிஉயர்ந்த நாமம் மிகப் பெரிய நாமம், இயேசுவின் நாமமே என்பதை எடுத்துரையுங்கள்)
த2 சபையை கட்டியெழுப்புவதற்கு, பரலோகங்களில் கிறிஸ்துவுடன் ஒன்றாக அமர்த்தப்பட்டிருக்க வேண்டும் (எபே. 2:5-6)
(நாம் ஏன் பூமிக்குரியவர்களாக இருக்கிறோம் நாம் பூமியில் இருக்கும்போது சபையாக ஏன் கட்டியெழுப்பப்பட முடியாது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 கர்த்தருடைய நாமத்தில் காரியங்களைச் செய்வதென்றால், ஆவியானவரில் செயல்படுவதாகும் (யோவான் 14:13-14; கொலோ. 3:17)
(கர்த்தருடைய நாமத்தில் இருப்பது என்பதன் அர்த்தத்தை எடுத்துரையுங்கள்)
த2 கர்த்தருடைய நாமத்தில் இருப்பது என்றால் உண்மையில் அவரோடு ஒன்றாக இருப்பதாகும் (யோவான் 14:12)
(கர்த்தருடைய நாமத்தில் இருப்பதென்றால், கர்த்தரால் வாழவும் கர்த்தரை நம்மில் வாழவிடவும் கர்த்தருடன் ஒன்றாயிருத்தல் என்று பொருள் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 பிதா, குமாரன், ஆவியானவர் மூவர், ஆயினும் அவர்கள் ஒன்று அவர்கள் மூன்று – ஒன்று (யோவான் 14:26; 15:26)
(பிதா மற்றும் குமாரன் ஆகிய இருவரும் ஆவியானவரை அனுப்புகிறார்கள். இது குமாரனும் பிதாவும் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 குமாரனின் நாமத்தில் பிதாவிடம் ஜெபிப்பதின் அர்த்தம் என்ன என்பதை புரிந்துகொள்ளுதல் (யோவான் 15:16; 16:23-24)
(இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பது தகுதியாக இருப்பதைப் பற்றிய காரியமல்ல; மாறாக, இது கிறிஸ்துவுடன் ஒன்றாயிருப்பதைப் பற்றிய காரியம் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 நம் கிறிஸ்துவ வாழ்க்கையின் இரண்டு அம்சங்கள் (கொலோ. 3:17; எபே. 4:15)
(நாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் காரியங்களைச் செய்ய வேண்டியது மட்டுமல்லாமல், தேவனுடைய சித்தத்தால், தேவனுடைய வார்த்தை மூலம் நாம் ஒழுங்குபடுத்தப்படவும் வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 எல்லாவற்றிலும் நாம் அவருக்குள்ளாக, அதாவது, தலையாகிய கிறிஸ்துவுக்குள்ளாக வளருதல் (எபே. 4:15)
(விசுவாசிகள் தலையாகிய கிறிஸ்துவுக்குள் வளர்வதென்றால், கிறிஸ்துவைத் தலையாகப் பற்றிக்கொண்டு, சுயத்திலிருந்து விடுவிக்கப்படுவதன் மூலம், கிறிஸ்து அவர்களில் அதிகரிப்பதே ஆகும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 நம் வார்த்தை இத்தகைய கிருபையை மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் (எபே. 4:25, 29)
(மற்றவர்களைக் கட்டியெழுப்புகிற வார்த்தை எப்போதும் கேட்கிறவருக்குக் கிறிஸ்துவைக் கிருபையாக ஊழியஞ்செய்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 வீண் வார்த்தைகள் ஜீவனை கசிந்துபோகச்செய்யும். (மத். 12:34-36)
(வீண் வார்த்தையுடன் இடைப்பட்ட முதலில் நாம் நம் இருதயத்துடன் இடைபட வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 கர்த்தருடைய நாமத்தில் நாம் ஜெபிக்க வேண்டும் (யோவான் 14:13; 16:24)
(கர்த்தருடைய நாமத்தில் ஜெபிப்பது என்றால் நாம் கர்த்தருடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளோம் அதோடு நம் மூலமாக வெளியரங்கமாக்கப்படும்படி தேவனை நாம் அனுமதிக்கிறோம் என்று அர்த்தம் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கர்த்தருடைய நாமத்தில் உள்ள நிஜமான ஜெபங்கள் அனைத்தும் நிச்சயமாகவே தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப உள்ளன. (யோவான் 16:24, 26)
(நாம் ஜெபிக்க விரும்பும் பத்து காரியங்களில் பாடம் கற்கும்படி, இரண்டு காரியங்களுக்காக மட்டுமே நம்மால் ஜெபிக்க இயலுகின்றது என்பதை நாம் ஏன் கண்டுபிடிக்கிறோம்?)