மெய்யான சபை வாழ்க்கைக்காக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அறிதலும், அனுபவமாக்குதலும், வாழ்தலும்
செய்தி 1
மெய்யான சபை வாழ்க்கைக்காக கிறிஸ்துவிடம் திரும்பக் கொண்டுவரப்படுதல்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
பிலி. 3:7-8 ஆனால் எனக்கு இலாபமாய் இருந்தவை எவையோ அவற்றை கிறிஸ்துவின் பொருட்டு நஷ்டமென்று கணக்கிட்டிருக்கிறேன்… என்னுடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மையின் பொருட்டு எல்லாவற்றையும்கூட நஷ்டமென்று கணக்கிடுகிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயம்பண்ணும்படியும்…
எபே 3:16-19. அவர் தம் ஆவியானவர் மூலம் வல்லமையினால் நீங்கள் உள்ளான மனிதனுக்குள்ளாக பலப்படுத்தப்பட அருளும்படியும், விசுவாசத்தின்மூலம் கிறிஸ்து உங்கள் இருதயங்களில் தம் வீட்டை அமைக்கும்படியும்
பசிதூண்டும் வார்த்தை
கிறிஸ்துவில் விசுவாசிகளும் தேவனுடைய பிள்ளைகளுமாகிய நாம், எப்படி எல்லாத் திசைத்திருப்பங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுக் கிறிஸ்துவிடம் திரும்பக் கொண்டுவரப்பட முடியும்?
உபதேசங்கள், நன்னெறிகள், ஒழுக்கநெறி, போதனைகள், கலாச்சாரம் போன்ற அநேக நல்ல விஷயங்கள் கிறிஸ்துவிடமிருந்து விலக்குகின்ற திசைத்திருப்பங்கள் என்பதைப் பவுல் தெளிவாக அறிந்திருந்ததால் அவன் தனது நிருபங்களை எழுதினான். இந்தக் காரியங்கள் கிறிஸ்து அல்ல என்று அப்போஸ்தலனாகிய பவுல் நமக்குக் காட்டுகிறான். அதோடு, அவை கிறிஸ்துவிடமிருந்து நம்மைத் திசைத்திருப்பினால், அவை கிறிஸ்துவுக்கு எதிரானவை என்றும் அவன் சுட்டிக்காட்டுகிறான். நாம் எல்லாத் திசைத்திருப்பங்களிலிருந்தும் விலகி கிறிஸ்துவிடம் திரும்பும்போது, நாம் கிறிஸ்துவை அறியவும், கிறிஸ்துவை அனுபவமாக்கவும், கிறிஸ்துவை அனுபவித்துமகிழவும், கிறிஸ்துவை வெளிக்காட்டவும், கிறிஸ்துவைக் கொண்டு கட்டியமைக்கப்படவும்படியாக நாம் கிறிஸ்துவிடம் திரும்பக் கொண்டுவரப்படுவோம்.
ஆவிக்குரிய பாரம்
கிறிஸ்து எல்லாவற்றின் மையமாக இருக்கவும், எல்லாவற்றிலும் முதல் இடத்தைப் பெறவும் அதாவது, கிறிஸ்து எல்லாராகவும், எல்லாரிலும் இருக்க தேவன் விரும்புகிறார். பிரபஞ்சத்தில் தேவனுடைய நித்தியக் குறிக்கோளும் வாஞ்சையுமான அவரது சித்தம், கிறிஸ்து நமக்கு எல்லாமுமாக இருப்பதும், நம் ஜீவனும் எல்லாமுமாக நமக்குள் அடித்துருவாக்கப்படுவதுமே ஆகும்.
எல்லாப் பரிசுத்தவான்களும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் கிறிஸ்துவின் ஏதோவொன்றை அனுபவமாக்க வேண்டும், அதோடு, தாங்கள் அனுபவமாக்கியிருக்கிற கிறிஸ்துவைக் காட்சியாக்க இந்தக் கிறிஸ்துவைக் கூடுகைக்குக் கொண்டுவந்து, கிறிஸ்துவை ஒருவருக்கொருவர் பகிர்ந்தளிக்கவும், பிதாவாகிய தேவனின் மகிழ்ச்சிக்காக அவருடன் கிறிஸ்துவை அனுபவித்துமகிழவும் வேண்டும்; இதுவே மெய்யான சபை வாழ்க்கை.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
கிறிஸ்துவில் விசுவாசிகளும் தேவனுடைய பிள்ளைகளுமாகிய நாம், எல்லாத் திசைத்திருப்பங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுக் கிறிஸ்துவிடம் திரும்பக் கொண்டுவரப்பட வேண்டும்.
நாம் கிறிஸ்துவிடம் திரும்பக் கொண்டுவரப்படுவதின் விளைவு, மெய்யான சபை வாழ்க்கை. மெய்யான சபை வாழ்க்கை என்பது கிறிஸ்து ஒரு கூட்டான வழியில் எல்லாப் பரிசுத்தவான்களாலும் உணர்ந்தறியப்பட்டு, அனுபவமாக்கப்பட்டு, வெளிக்காட்டப்படுவதாகும். மெய்யான சபை வாழ்க்கை என்பது கிறிஸ்துவின் வாழ்க்கையே, கிறிஸ்து தாமே.
ஜீவனின் அனுபவம்
நாம் எல்லாத் திசைத்திருப்பங்களிலிருந்தும் விலகி கிறிஸ்துவிடம் திரும்பும்போது, நாம் கிறிஸ்துவை அறியவும், கிறிஸ்துவை அனுபவமாக்கவும், கிறிஸ்துவை அனுபவித்துமகிழவும், கிறிஸ்துவை வெளிக்காட்டவும், கிறிஸ்துவைக்கொண்டு கட்டியமைக்கப்படவும்படியாக நாம் கிறிஸ்துவிடம் திரும்பக் கொண்டுவரப்படுவோம்.
மெய்யான சபை வாழ்க்கை என்பது ஒரு நிறுவனம் அல்ல; அது நாம் தேவனுடைய சகல நிறைவுக்கென்று நிரப்பப்படும்வரை கிறிஸ்துவின் ஐசுவரியத்தால் போஷிக்கப்படும் நம் ஆவியில் இருக்கிறது. உள்வசிக்கும் கிறிஸ்துவின் உள்ளான அனுபவத்தின்மூலம்தான், கிறிஸ்துவின் வரம்பற்ற அளவை நாம் எல்லாப்பரிசுத்தவான்களோடுகூட கிரகித்துக்கொண்டு, கிறிஸ்துவின் சரீரத்தின் கட்டியெழுப்புதலுக்காக மெய்யான சபை வாழ்க்கையைப் பெறுகிறோம்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
நம் அன்றாட வாழ்வில் கிறிஸ்து நமக்கு எல்லாமுமாக இருக்கும்படி நாம் ஜெபிக்க வேண்டும். நாம் பல்வேறு காரியங்களைச் செய்கையில், நாம் அவற்றில் கிறிஸ்துவைப் பிரயோகிக்க வேண்டும். நம் ஜீவனாகவும் எல்லாமுமாகவும் இருக்கும்படி நம்மில் வசிக்கிறவரான கிறிஸ்துவின் புதிய அனுபவங்களுக்காக நாம் ஒவ்வொருநாளும் ஜெபிக்க வேண்டும்; இதுவே இன்று நம் மாபெரும் தேவை.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 தேவன், தம்மை நம் உள்ளடக்கமாக உள்ளடக்கிக்கொள்வதற்கான தம் சாயலில் உள்ள பாத்திரங்களாக நம்மை சிருஷ்டித்தார் (ஆதி. 1:26; எபே. 3:8)
(சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை நம் எல்லாமுமாக நமக்குள் வேலைசெய்வதை தேவனின் நோக்கம் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கிறிஸ்து ஜீவனாகவும், நம் அன்றாட வாழ்வில் நமக்கு எல்லாமாகவும் இருப்பதைப் பற்றிய தரிசனத்தை பார்த்தல் (பிலி. 3:7-8, 13)
(நாம் எல்லா நல்ல காரியங்களையும் அதிசிறந்த காரியங்களையும்கூட கைவிடவும், கிறிஸ்துவையே பற்றிப் பிடிக்க முன்னோக்கிச் செல்லவும் முடியுமாறு நாம் கர்த்தரிடமிருந்து புதிய இரக்கத்தையும், கிருபையையும் பெறவேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 கிறிஸ்துவில் காணப்படுதல் (பிலி. 3:9-10)
(கிறிஸ்துவில் காணப்படுவதைப் பற்றிய ஓர் உபதேசரீதியான புரிந்துகொள்ளுதலைப் பெறுவது என்பது ஒரு காரியம்; நம் அன்றாட வாழ்க்கையில் கிறிஸ்துவில் காணப்படுவது முற்றிலும் வேறொரு காரியம் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கிறிஸ்துவை ஆதாயப்படுத்துவது என்றால் அவருடைய நபரை ஆதாயப்படுத்துவதும், அவரது ஆராய்ந்தறிய முடியாத ஐசுவரியங்கள் அனைத்தையும் அனுபவமாக்கி, அனுபவித்துமகிழ்ந்து, அவற்றை உடைமையாக்குவதாகும் (எபே. 3:8; பிலி. 3:8-10)
(நாம் கிறிஸ்துவை ஆதாயப்படுத்துகையில், நாம் அவரில் வாழவும், அனுபவத்தில் அவரில் இருக்கிறவர்களாக ஆகவும் வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 கிறிஸ்துவை நமக்கு எல்லாமாக ஆக்குவதற்கான தேவனுடைய நோக்கத்தைப் பார்த்தல் (மத். 17:4-5)
( அப்படிப்பட்ட ஒரு தரிசனத்தை நாம் பெறும்போது கிறிஸ்துவுக்கு அப்பாற்பட்ட பல நல்ல காரியங்களுக்காகவும் நாம் மனந்திரும்புவோம் என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்)
த2 நம் அன்றாட வாழ்க்கையில் கிறிஸ்துவை பிரயோகித்தல் (பிலி. 3:13-15)
(கிறிஸ்து நம்மில் இருந்தாலும், நாம் நம் அன்றாட வாழ்க்கையில் கிறிஸ்துவை பிரயோகிப்பதில்லை என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 ஆராய்ந்தறிய முடியாத கிறிஸ்துவின் ஐசுவரியங்கள் சபைக்காக இருக்கின்றன (எபே. 3:8)
(ஒரு மெய்யான சபை வாழ்க்கையைப் பெறுவதற்கு, நாம் கிறிஸ்துவின் ஐசுவரியங்களை அனுபவமாக்க வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கிறிஸ்துவின் ஐசுவரியங்களுக்கும், கிறிஸ்துவின் நிறைவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ளுதல் (எபே. 1:22-23; 3:8)
(கிறிஸ்துவின் ஐசுவரியங்களுக்கும் கிறிஸ்துவின் நிறைவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எடுத்துரைங்கள்)
நாள் 5
த1 சுயமும், ஆத்தும ஜீவனும், இயற்கை ஜீவனும் சபை வாழ்க்கைக்கு முரணானவை (மத்.16:24-25; கலா. 5:24)
(சிலுவையை சுமப்பதென்றால், கிறிஸ்துவின் மரணத்தை நம் சுயத்திற்குப் பிரயோகிப்பது என்று பொருள் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 மெய்யான சபை உணர்ந்தறிவதற்கான வழி (ரோ . 6:5)
(மெய்யான சபை வாழ்க்கை என்பது கிறிஸ்துவின் வாழ்க்கையே என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 கிறிஸ்து நம் ஆவியில் இருந்து நம் முழு இருதயத்திற்குள்ளும் தம்மையே பரப்புமாறு, நாம் நம் ஆவிக்குள் பலப்படுத்தப்படுதல் (எபே. 3:16-17)
(நம் ஆவி பலப்படுத்தப்படும்போது, இது, கிறிஸ்து நம் இருதயத்தில் தம் வீட்டை அமைக்கும்படி நம் முழு ஆள்தத்துவத்தையும் அவர் ஆட்கொண்டு பூரிதமாக்கி, ஊடுருவி வியாபிக்குமாறு, கிறிஸ்துவுக்கு வழியையும் தளத்தையும் கொடுக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கிறிஸ்துவின் சகல ஐசுவரியங்களையும் அனுபவித்து மகிழ்வதற்கான இரகசியம் மற்றும் திறவுகோல் (எபே. 6:17-18)
(நாம் வார்த்தையை ஜெப-வாசிப்பு செய்வதன்மூலம் வார்த்தையை வாசிப்பதன் மூலம் கிறிஸ்துவை அனுபவிக்கும் அனுபவமகிழ்ச்சியிலிருந்து மெய்யான சபை வாழ்க்கை வெளிவருகிறது என்பதை எடுத்துரையுங்கள்)