சபையைக் குறித்த தேவனுடைய பொருளாட்சியின்படி வாழ்தலும் சேவித்தலும்
செய்தி 5
எவ்வாறு தேவனுடைய வீட்டில் நம்மை நடத்திக்கொள்வது—தேவத்தன்மைக்கென்று நம்மைப் பயிற்சிசெய்தல்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்
1 தீமோ. 3:15 ஆனால் தாமதிப்பேனாகில், ஒருவன் தேவனுடைய வீட்டில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று நீ அறியும்படி எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவிக்கும் தேவனுடைய சபை, அது சத்தியத் தூணும் அடித்தளமுமாயிருக்கிறது.
1 தீமோ. 4:7-8 தேவத்தன்மைக்கேதுவாக உன்னையே பயிற்றுவி. ஏனெனில் உடற்பயிற்சி ஓரளவுக்கு இலாபகரமானது, ஆனால் தற்போதைய வாழ்க்கைக்கும் வருகிற வாழ்க்கைக்குமுரிய வாக்குத்தத்தமுடைய தேவத்தன்மை எல்லாவற்றிற்கும் இலாபகரமானது.
பசிதூண்டும் வார்த்தை
சபை வாழ்க்கையில் எவ்வாறு நாம் நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறியும்படி நாம் பின்பற்ற வேண்டிய இரண்டு ஆளுகைசெய்யும் கோட்பாடுகள் என்ன?
முதலாவது, நாம் கிறிஸ்துவின் தலைமைத்துவத்தை மதிக்க வேண்டும். நாம் என்னவாகவெல்லாம் இருக்கிறோமோ, என்னவெல்லாம் செய்கிறோமோ, சொல்கிறோமோ அது கிறிஸ்துவின் தலைமைத்துவத்தை மதிக்கும் ஓர் ஆவியில் இருக்க வேண்டும். கிறிஸ்துவின் தலைமைத்துவத்தை மதிப்பது சபை வாழ்க்கையிலுள்ள பல வகையான தவறுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. இன்று கிறிஸ்தவத்துடனான முக்கியப் பிரச்சினை என்னவெனில், அது கிறிஸ்துவின் தலைமைத்துவத்தை அவமதிக்கிறது என்பதாகும். முழு சபையும் சத்தியத் தூணும் அடித்தளமுமாயிருக்கிறது என்பதே இரண்டாவது காரியம் (1 தீமோ 3:15) வழிநடத்துகிறவர்கள் மட்டுமல்ல, சபையிலுள்ள ஒவ்வொரு அவயவமும் சத்தியத்தை அறிய பயிற்சிசெய்ய வேண்டும். இதனால் இந்த இருண்ட யுகத்தில் நாம் தேவனுடைய சத்தியத்தை ஏந்தும் ஒரு தூணாக இருக்க முடியும். கிறிஸ்துவின் தலைமைத்துவத்தை மதிப்பதும், சத்தியத்தை ஏந்துவதுமே சபை வாழ்க்கையில் நம்மை எவ்வாறு நடத்திக்கொள்வது என்பதை அறிய நாம் பின்பற்ற வேண்டிய இரண்டு ஆளுகைசெய்யும் கோட்பாடுகள் ஆகும்.
ஆவிக்குரிய பாரம்
கிறிஸ்துவின் தலைமைத்துவத்தை மதிப்பதும், சத்தியத்தை ஏந்துவதுமே சபை வாழ்க்கையில் நம்மை எவ்வாறு நடத்திக்கொள்வது என்பதை அறிய நாம் பின்பற்ற வேண்டிய இரண்டு ஆளுகைசெய்யும் கோட்பாடுகளாகும்.
கிறிஸ்துவிலுள்ள விசுவாசிகளாக, நாம் தேவத்தன்மையை ஆவலாய்ப் பின்தொடர வேண்டும், தேவத்தன்மையை ஆவலாய்ப் பின்தொடர்வதென்றால், தேவனை வெளியரங்கமாக்கும் ஓர் அனுதின வாழ்க்கை வாழ்வதாகும். தேவன் மாம்சத்தில் வெளியரங்கமாக்கப்படுவதற்கு, தேவத்தன்மை நம் முழு வாழ்க்கையிலும் வெளிக்காட்டப்பட வேண்டும்.
சபை வாழ்க்கையில் நம்மையே நடத்திக்கொள்வதற்கான வழி. தேவபக்திக்கென்று நம்மையே பயிற்சிசெய்வதாகும். தெய்வத்தன்மைக்கென்று நம்மைப் பயிற்சிசெய்வதென்றால், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைக் கட்டியெழுப்புவற்காக நம் அனுதின வாழ்க்கையில் கிறிஸ்துவை வாழ நம் ஆவியைப் பயிற்சிசெய்வதாகும்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
“ஒருவன் தேவனுடைய வீட்டில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று நீ அறியும்படி எழுதுகிறேன்”
”மேலும், ஒத்துக்கொள்ளப்படுகிறபடியே, தேவத்தன்மையின் பரமஇரகசியம் மகா பெரியது”
“தேவத்தன்மைக்கேதுவாக உன்னையே பயிற்றுவி”
ஜீவனின் அனுபவம்
தேவனுடைய பொருளாட்சி என்பது தேவன் நமக்குள் வருவதாகும், தேவத்தன்மை என்பது தேவன் நமக்குள்ளிருந்து செல்வதாகும். தேவன் உள்ளே வருவதும், தேவன் வெளியே செல்வதுமே கிறிஸ்தவ வாழ்க்கை. நம் சபை வாழ்க்கையும், நம் அனுதின வாழ்க்கையும், நம் குடும்ப வாழ்க்கையும், வெறுமனே நாள்முழுவதும் தேவன் உள்ளே வருவதும், தேவன் வெளியே செல்வதும் ஆகும்.
சபை நேர்த்தியாகக் கூடிவரும்போதெல்லாம், அங்கு தேவனின் பிரசன்னம் இருக்கிறது—தேவன் மாம்சத்தில் வெளியரங்கமாக்கப்படுகிறார். நாம் கூறுவதெல்லாம், வெளிப்படுத்துதெல்லாம். செய்வதெல்லாம், அணிவதெல்லாம், தேவன் நம்மில் வெளியரங்கமாக்கப்படுவதைப் பற்றிய ஒரு கருத்துப்பதிவைத் தர வேண்டும்.
நாம் நம் மனதை ஆவியின்மீது பொருத்தும்போது, நம்மிடம் ஜீவன் மற்றும் சமாதானத்தின் உள்ளான உணர்வு, அதாவது பலம், திருப்தி, இளைப்பாறுதல், விடுவித்தல், உயிரோட்டம், நீர்ப்பாய்ச்சுதல், பிரகாசம், ஆறுதல் ஆகியவற்றின் உணர்வு இருக்கிறது.
பயிற்சி மற்றும் பிரயோகம்
தேவனுடைய பரம இரகசியம் நம் ஆவியுடன் இருப்பதால் நாம் அனைவரும் நம் ஆவியைப் பயிற்சிசெய்ய வேண்டும். நம் ஆவியைப் பயிற்சிசெய்யும் பழக்கத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
நம் ஆவியைப் பயிற்சிசெய்வதென்றால், நம் ஆத்துமாவிலிருந்து நம் ஆவியைப் பகுத்துணர்வதாகும். ஆவிக்குரியதானது அல்லாமல், மாறாக ஆத்துமாவுக்குரியதான, அதாவது சுயத்திற்குரியதான எதையும் பகுத்துணரவும், மறுதலிக்கவும் நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தேவத்தன்மைக்கென்று நம்மைப் பயிற்சிசெய்வதென்றால், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைக் கட்டியெழுப்புவதற்காக நம் அனுதின வாழ்க்கையில் கிறிஸ்துவை வாழ நம் ஆவியைப் பயிற்சிசெய்வதாகும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்—ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 கிறிஸ்துவின் தலைமைத்துவத்தை மதிப்பதும் சத்தியத்தை ஏந்துவதுமே இரண்டு ஆளுகைசெய்யும் கோட்பாடுகள் ஆகும் (1 தீமோ. 3:15)
(சபை வாழ்க்கையில் எவ்வாறு நாம் நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறியும்படி நாம் எந்த இரண்டு ஆளுகைசெய்யும் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 நேர்த்தியான போதனை என்பது நம் சுவையைப் பற்றிய ஒரு காரியம் அல்ல, மாறாக ஆரோக்கியமானதைப் பற்றிய ஒரு காரியம் (2 தீமோ.4:3-4)
(ஆரோக்கியமான போதனைக்கு மட்டுமே செவிகொடுப்பது, சபை வாழ்க்கையில் நம் நடத்தைக்கான மற்றொரு ஆளுகைசெய்யும் கோட்பாடாகும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 தேவத்தன்மை என்ற வார்த்தையின் நேர்த்தியான வரையறை தேவன் மாம்சத்தில் வெளியரங்கமாக்கப்பட்டார் என்பதாகும். (1 தீமோ. 3:16; 1 கொரி. 14:24-25)
(தேவன் மாம்சத்தில் வெளியரங்கமாக்கப்படுதல் என்பது கிறிஸ்துவை மட்டுமல்லாமல், அவரது சபையையும் குறிக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தேவனுடைய பொருளாட்சி என்பது தேவன் நமக்குள் வருவதாகும். தேவத்தன்மை என்பது தேவன் நம்மிலிருந்து செல்வதாகும் (1 தீமோ. 3:16; 6:11)
(தேவத்தன்மையை விளைவிக்கும் தேவனுடைய பொருளாட்சியே, நம் ஐக்கியத்தின் ஒப்பற்றத் தலைப்பாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 நாம் கூறுவதெல்லாம், வெளிப்படுத்துதெல்லாம், செய்வதெல்லாம், அணிவதெல்லாம், தேவன் நம்மில் வெளியரங்கமாக்கப்படுவதைப் பற்றிய ஒரு கருத்துப்பதிவைத் தர வேண்டும் (1 தீமோ.2:2)
(தேவத்தன்மை என்பது ஒரு புறம்பான ஒழுங்குமுறை அல்ல, மாறாக ஓர் உள்ளான நிஜம் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரையுங்கள்.)
த2 தேவன் மாம்சத்தில் வெளியரங்கமாக்கப்படுவதற்கு, தேவத்தன்மை நம் முழு வாழ்க்கையிலும் வெளிக்காட்டப்பட வேண்டும். (1 தீமோ. 3:16; 1 யோவான் 3:2)
(நாம் கூறுவதெல்லாம், வெளிப்படுத்துவதெல்லாம், செய்வதெல்லாம், அணிவதெல்லாம், தேவன் நம்மில் வெளியரங்கமாக்கப்படுவதைப் பற்றிய ஒரு கருத்துப்பதிவைத் தர வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 “தேவத்தன்மைக்கேதுவாக உன்னையே பயிற்றுவி” (1 தீமோ. 4:7-8)
(சபை வாழ்க்கையில் நம்மை நடத்திக்கொள்வதற்கான வழி என்ன என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தேவனுடைய பகிர்ந்தளித்தல் தேவத்தன்மையான ஒரு வாழ்க்கையை உற்பத்திசெய்கிறது. (1 தீமோ. 4:8)
(தேவனுடைய பகிர்ந்தளித்தலிலிருந்து வெளிவருகிற தேவத்தன்மையான வாழ்க்கை, நம் ஆவியைப் பயிற்சிசெய்வதைச் சார்ந்திருக்கிறது என்று ஏன் கூறப்படுகிறது?)
நாள் 5
த1 நம் மனதை ஆவியின் மீது பொருத்த கற்றுக்கொள்ளுதல் (ரோம. 8:6)
(இந்தப் பழக்கம் ஏன் நமக்குள்ளாக கட்டியெழுப்பப்பட்டாக வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 இருதயத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் பகுத்தறிவது ஆத்துமாவை ஆவியிலிருந்து பிரிப்பதற்குச் சமம் (எபி. 4:12)
(ஆத்துமாவிலிருந்து நம் ஆவியை நாம் ஏன் பகுத்தறிய வேண்டும்?)
நாள் 6
த1 தேவத்தன்மைக்கேதுவாக நம்மை பயிற்சிசெய்தல் (1 தீமோ. 4:7-8)
(“தேவத்தன்மைக்கேதுவாக நம்மை பயிற்றுவித்தல்” என்பதன் ஆவிக்குரிய அர்த்தத்தை எடுத்துரையுங்கள்)
த2 தேவனுடைய கொடையை அனல்மூட்டுவது (2 தீமோ. 1:6-7)
(நாம் நம் ஆவியை அனல்மூட்டி எழுப்பிவிட விரும்பினால். நாம் நம் வாயைத் திறக்க வேண்டும், நம் இருதயத்தைத் திறக்க வேண்டும், நம் ஆவியைத் திறக்க வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)