சபையைக் குறித்த தேவனுடைய பொருளாட்சியின்படி வாழ்தலும் சேவித்தலும்
செய்தி 3
சத்தியத்தை அறிகிற பூரண அறிவு
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்
1 தீமோ. 2:3 எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற பூரண அறிவை வந்தடையவும் வாஞ்சிக்கிற…
2 தீமோ. 2.2 அநேக சாட்சியாளர்கள்மூலம் என்னிடமிருந்து நீ கேள்விப்பட்டிருக்கிறவற்றை மற்றவர்களுக்கும் போதிக்கத் திறனுள்ள நம்பகமான மனிதர்களிடம் ஒப்புவி.
15 சத்தியத்தின் வார்த்தையை நேராய் வெட்டுகிற வெட்கப்படாத வேலைக்காரனாக, உன்னை அங்கீகரிக்கப்பட்டவனாக தேவனுக்கு வழங்க சிரத்தையாயிரு.
பசிதூண்டும் வார்த்தை
சபையின் சீரழிவு சத்தியத்தைப் புறக்கணிப்பதிலிருந்து விளைவுறுகிறது. தேவனுடைய பொருளாட்சியின் இலக்கு என்ன?
வேத வாக்கியங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியங்கள் காலங்காலமாக தவறவிடப்பட்டும், தொலைக்கப்பட்டும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டும், தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டும், தவறாகப் பிரயோகிக்கப்பட்டும் இருக்கின்றன. கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் இலக்கு, வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள காரியங்களின் நிஜம், ஜீவன், உயிரோட்டம், பலம், வல்லமை, மற்றும் தாக்கத்தை மீட்டுத்திருப்புவதாகும். கர்த்தருடைய மீட்டுத்திருப்புதல் சத்தியத்தின் ஒளியின் மீட்டுத்திருப்புதலாகும்.
ஆவிக்குரிய பாரம்
கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் இலக்கு, வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள காரியங்களின் நிஜம், ஜீவன், உயிரோட்டம், பலம், வல்லமை, மற்றும் தாக்கத்தை மீட்டுத்திருப்புவதாகும். சத்தியம் நமக்குள் அடித்துருவாக்கப்பட்டு, நம் ஆள்தத்துவத்திற்குள் கட்டியமைக்கப்பட வேண்டும். சபையை உற்பத்திசெய்ய, சபை நிலைநிற்கும்படி உதவ சபையைக் கட்டியெழுப்ப ஜீவிக்கும் சத்தியத்திற்கான அவசரத் தேவை இருக்கிறது.
கர்த்தருடைய மீட்டுத்திருப்புதல், சத்தியத்தை அறிகிற பூரண அறிவின் மீட்டுத்திருப்புதலாகும். எல்லா விசுவாசிகளும் சத்தியத்தை அறிகிற பூரண அறிவை வந்தடையவும் அதிலே இருக்கவும் வேண்டும். எல்லா விசுவாசிகளும் அகம்சார்ந்த சத்தியங்களை அறியவும், அனுபவமாக்கவும், அதற்கு முற்றுமுழுதாக இருக்கவும் வேண்டும்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
கர்த்தருடைய மீட்டுத்திருப்புதல் சத்தியத்தின் ஒளியின் மீட்டுத்திருப்புதலாகும்.
நாம் “எல்லாரும்.. சத்தியத்தை அறிகிற பூரண அறிவை வந்தடைய” தேவன் வாஞ்சிக்கிறார். கர்த்தருடைய மீட்டுத்திருப்புதல், சத்தியத்தை அறிகிற பூரண அறிவின் மீட்டுத்திருப்புதலாகும். எல்லா விசுவாசிகளும் சத்தியத்தை அறிகிற பூரண அறிவை வந்தடையவும் அதிலே இருக்கவும் வேண்டும். எல்லா விசுவாசிகளும் அகம்சார்ந்த சத்தியங்களை அறியவும், அனுபவமாக்கவும், அதற்கு முற்றும்முழுதாக இருக்கவும் வேண்டும்.
ஜீவனின் அனுபவம்
சத்தியத்தைக்கொண்டு கட்டியமைக்கப்படுவதென்றால், தெய்வீக வெளிப்பாட்டின் உள்ளார்ந்த மூலக்கூறு, நம் ஆக்கக்கூறாக நம் உள்ளார்ந்த ஆள்தத்துவமாக, நம் ஜீவாதார கட்டமைப்பாக ஆகும்படி நமக்குள் அது அடித்துருவாக்கப்படும்படி செய்வதாகும். நமக்குள் கட்டியமைக்கப்படும் திடமான சத்தியம், நம்மில் ஒரு நிலையான, நீண்டகால போஷாக்காக ஆகிறது.
நாம் ஆவியானவராலும் ஜீவனாலும் வாழும்போது, அகம்சார்ந்த சத்தியங்களின் அனுபவத்தைப் பெறுகிறோம். சபை வாழ்க்கை, அகம்சார்ந்த சத்தியங்களை நாம் அனுபவமாக்குவதின் விளைவாகும்; நாம் அகம்சார்ந்த சத்தியங்களை அனுபவமாக்கும்போது, சபை புறத்தூண்டுதலின்றி உற்பத்தி செய்யப்படுகிறது.
பயிற்சி மற்றும் பிரயோகம்
சத்தியத்தைக் கற்க நாம் விலைசெலுத்த வேண்டும். சத்தியம் தன்னில்தானே முற்றுமுழுமையானது, நாம் சத்தியத்திற்காக முற்றுமுழுமையாக இருக்க வேண்டும்.
எல்லா விசுவாசிகளும் சத்தியத்தை அறிகிற பூரண அறிவை வந்தடையவும் அதிலே இருக்கவும் வேண்டும்.
எல்லா விசுவாசிகளும் அகம்சார்ந்த சத்தியங்களை அறியவும், அனுபவமாக்கவும், அதற்கு முற்றும்முழுதாக இருக்கவும் வேண்டும். நாம் அதிஉயர்ந்த சத்தியத்தைப் பூரணமாக அறியவும் அவற்றுக்காக முற்றும்முழுமையாக இருக்கவும் வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 [சத்தியத்தின்படியான], நிஜத்தின்படியான இயேசுவின் இந்த வாழ்க்கை ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. (யோவான் 8:32; 1 யோவான் 1:5)
(இயேசு கிறிஸ்துவின் ஜீவனின்படி நாம் கிறிஸ்துவைக் கற்றிருக்கிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 புதிய ஏற்பாட்டு வெளிப்பாட்டின்படி சத்தியம் ஒளியின் விளைவாகும். (யோவான் 8:12, 32)
(ஜீவ-ஆய்வுகள் உங்களுக்கு வெறும் உபதேசமாக இருக்கக்கூடும். அல்லது அவை சத்தியமாக இருக்கக்கூடும். வித்தியாசம் என்னவென்றால், உங்களிடம் ஒளியுடன்கூடிய அறிவு இருக்கும்போது, அது சத்தியம் என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 உங்களிடம் சத்தியத்தின் ஒரு சேகரிப்பு இருக்கிறது. மேலும் நீங்கள் நிலையான போஷாக்கின்கீழ் தொடர்ச்சியாக உள்ள ஒரு நபராக இருக்கிறீர்கள் (1 தீமோ. 4:6; 2 தீமோ. 2:15)
(சத்தியம் உங்களுக்குள் நுழைவதற்கான ஒரே வழி உங்கள் மனத்திறன் மூலம் நடைபெறுகிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 பூரண அறிவு என்ற பதம் வெறும் புரிந்துகொள்ளுதலை மட்டும் குறிக்காது; இது புரிந்துகொள்ளுதலையும் அனுபவத்தையும் உள்ளடக்குகிறது (1 தீமோ. 2:4)
(அனைவரும் சத்தியத்தைப் பற்றிய பூரண அறிவை வந்தடையும்வரை, ஒவ்வொரு காரியமாக, ஒவ்வொரு குறிப்பாக சத்தியத்தை அறிந்து, அதை அனுபவரீதியாகவும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 பவுல் விசுவாசத்தின்படி மட்டுமல்லாமல், சத்தியத்தை அறிகிற பூரண அறிவின்படியும் அப்போஸ்தலனாக இருந்தான் (1 தீமோ. 2:4; தீத்து 1:1-3)
(விசுவாசம் மற்றும் சத்தியத்தை அறிகிற அறிவு ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசத்தை எடுத்துரையுங்கள்)
த2
இன்று கர்த்தருடைய மீட்டுத்திருப்புதல் என்பது பரிசுத்த வார்த்தையிலுள்ள தெய்வீக சத்தியங்களின் முழுமையான மீட்டுத்திருப்புதலாகும். (1 தீமோ. 2:4)
(கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் நாம் ஒரு செமினரியில் கலந்துகொள்வதன் மூலம் அல்ல, மாறாக தினமும் வேதவாக்கியங்களை வாசிப்பதன்மூலம் சத்தியத்தைக் கற்றுக்கொள்கிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு அடிப்படை வெளிப்பாட்டிற்கும் இரண்டு அம்சங்கள் உள்ளன. புறம்சார்ந்த அம்சம் மற்றும் அகம்சார்ந்த அம்சம் (1 தீமோ. 2:3; எபே. 4:6)
(சத்தியத்தின் புறம்சார்ந்த, அகம்சார்ந்த அம்சங்கள் இரண்டும் தேவனுடைய குறிக்கோளின் நிறைவேற்றத்திற்காகத் தேவைப்படுகின்றன என்பதை எடுத்துரையுங்கள்)
த2 அகம்சார்ந்த சத்தியங்கள் சபையைக் கட்டியெழுப்புவதற்குத் தேவைப்படுகின்றன
(எபே. 1:22-23; கொலோ. 1:18)
(நாம் ஆவியானவராலும் ஜீவனிலும் வாழ்வதால், நம்மிடம் அகம்சார்ந்த சத்தியங்களின் அனுபவம் இருக்கின்றன. எனவே சபை வாழ்க்கை இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 கிறிஸ்துவின் அகம்சார்ந்த அனுபவம்
(யோவான் 1:12-13; எபே. 3:16-19)
(நாம் தேவனுடைய சகல நிறைவுக்கென்று நிரப்பப்படுமாறு கிறிஸ்து நம் இருதயத்தில் வீட்டை அமைக்குமாறு அப்போஸ்தலனாகிய பவுல் நமக்காக ஜெபித்தான் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 பரிசுத்த வேத வாக்கியங்களில் உள்ள அகம்சார்ந்த சத்தியங்கள் மற்றும் அனுபவங்கள்
(யோவான் 4:14; ரோ. 8:2, 4, 14)
(அகம்சார்ந்த கண்ணோட்டம் மெய்யாகவே வேதவாக்கியங்களில் இருக்கிறது. தேவன் மேலே உன்னதத்தில் இருக்கும் தேவன் மட்டுமல்ல என்று இந்த அகம்சார்ந்த கண்ணோட்டம் மீண்டும் மீண்டும் நமக்குக் கூறுகிறது. மாறாக, நம் ஜீவ சுவாசமாகவும், நம் ஜீவிக்கும் தண்ணீராகவும், நம் ஊட்டச்சத்துமிக்க உணவாகவும் இருக்கும்படி அவர் இன்று நம்மில் இருக்கிறார் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 நாம் மக்களைத் தொடர்புகொள்ள வெளியே செல்லும்போது, நாம் சத்தியத்தை அறிகிற பூரண அறிவோடு செல்ல வேண்டும் (1 தீமோ. 2:4)
(இந்த விலையேறப்பெற்ற சத்தியங்கள் நம்மில் பாய்ந்து ஓட கூடுமாறு, வேதாகமத்தில் உள்ள தெய்வீக சத்தியத்தோடு எவ்வாறு நாம் பூரிதமாக்க முடியும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 நாம் உயர்ந்த சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும் (ஆதி. 1:26; ரோ. 9:21, 23)
(நாம் மற்றவர்களுக்கு வழங்கிய உயர்வான சத்தியங்கள் அவர்களில் பலரை ஆச்சரியப்படுத்தி, கைப்பற்றின என்பதை எடுத்துரையுங்கள்)