கிறிஸ்துவின் சரீரமாக சபையின் ஜீவாதாரக் கட்டியெழுப்புதலுக்காக கர்த்தரிடம் அன்புகூருதலும் ஒருவரிலொருவர் அன்புகூருதலும்
செய்தி 8
யுகத்தைத் திருப்ப நம்மை ஒரு புதிய எழுப்புதலுக்குள் கொண்டுவருவதற்கான கர்த்தருடைய தற்போதைய, உச்சநிலையான மீட்டுத்திருப்புதலின்படி சபைக்காக தேவன் நியமித்த பாதையை-பிலதெல்பியாவின் வழியை- எடுத்துக்கொள்ளுதல்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
ஒவ்வொரு நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதியை வாசித்தல்
வெளி. 3:8… ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
வெளி. 3:12 ஜெயங்கொள்கிறவன் எவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்தில் ஒரு தூணாக்குவேன், நான் என் தேவனுடைய நாமத்தையும், என் தேவனிடமிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும் என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
பசிதூண்டும் வார்த்தை
கர்த்தருடைய தற்போதைய மற்றும் உச்சநிலையான மீட்டுத்திருப்புதலின் “தற்போதைய சத்தியம்” என்ன?
கர்த்தருடைய இன்றுவரையிலான, உச்சநிலையான மீட்டுத்திருப்புதலின் தற்போதைய சத்தியமானது, பிலதெல்பியாவின் வழியை எடுப்பதை நாம் தெரிந்துகொள்வதன் மூலம் யுகத்தைத் திருப்ப நம்மை ஒரு புதிய எழுப்புதலுக்குள் கொண்டுவருவதற்காக இருக்கிறது; பிலதெல்பியாவிலுள்ள சபையால் அடையாளப்படுத்தப்படும் சகோதர அன்பின் சபையாகிய மீட்டுத்திருப்பப்பட்ட சபை மட்டுமே தேவனுடைய நித்தியக் குறிக்கோளை நிறைவேற்றவும் அவருடைய இருதய வாஞ்சையைத் திருப்தியாக்கவும் முடியும்
ஆவிக்குரிய பாரம்
பிலதெல்பியாவிலுள்ள ஜெயங்கொள்பவர்களின் குணாதிசயம், தேவனுடைய பொருளாட்சியினுடைய தெய்வீக வெளிப்பாட்டின் உன்னத சிகரத்தை வந்தடைவதற்கான அவர்களுடைய ஆவலாகும்-கிறிஸ்துவின் சரீரம் உற்பத்தி-செய்யப்படுமாறும், மணவாட்டி ஆயத்தமாக்கப்படுமாறும், புதிய எருசலேம் முழுநிறைவேற்றமடையுமாறும் தேவத்துவத்திலன்று மாறாக ஜீவனிலும் சுபாவத்திலும் மனிதனை தேவனாக்க தேவன் மனிதனானார் என்பதே இந்த உன்னத சிகரமாகும்.
பிலதெல்பியாவின் ஜெயங்கொள்பவர்களின் குணாதிசயம், தங்கள் உள்வசிக்கும் பொக்கிஷமாகக் கிறிஸ்துவின் ஐசுவரியங்களை அனுபவித்துமகிழ்வதன் மூலம், அவர்கள் தேவ-மனித வாழ்க்கைக்குள் பிரவேசிக்கப் பிரயாசப்படுவதாகும்.
பிலதெல்பியாவின் ஜெயங்கொள்பவர்களின் குணாதிசயம் அவர்களுடைய சகோதர அன்பாகும்; அவர்கள் மத்தியில் அன்பு மேலோங்குகிறது, இதனால் மகிழ்விக்கின்ற தேவனுடைய பிரசன்னத்தைக் கொண்டு மக்களைச் சீராட்டி, தேவனுடைய பொருளாட்சியின் ஆரோக்கியமான போதனையைக் கொண்டு அவர்களைப் போஷித்து, தேவனுக்கேற்றபடி அவர்கள் மக்களை மேய்த்துப்பேணுகின்றனர்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
யுகத்தை மாற்றவும் கிறிஸ்துவைத் திரும்பக் கொண்டுவரவும் “தற்போதைய சத்தியமாகிய” “இன்றுவரையிலான” சத்தியத்தைப் பார்க்கவும், வாழவும், நடைமுறைப்படுத்தவும் வேண்டும்; ஆவியானவர் சபைகளுக்குப் பேசுகிறதை, தற்போதைய மணிநேரத்திலுள்ள தேவனுடைய குரலை நாம் கேட்க வேண்டும்.
பிலதெல்பியாவிலுள்ள ஜெயங்கொள்பவர்களின் குணாதிசயம், தேவனுடைய பொருளாட்சியினுடைய தெய்வீக வெளிப்பாட்டின் உன்னத சிகரத்தை வந்தடைவதற்கான அவர்களுடைய ஆவலாகும்-கிறிஸ்துவின் சரீரம் உற்பத்தி-செய்யப்படுமாறும், மணவாட்டி ஆயத்தமாக்கப்படுமாறும், புதிய எருசலேம் முழுநிறைவேற்றமடையுமாறும் தேவத்துவத்திலன்று மாறாக ஜீவனிலும் சுபாவத்திலும் மனிதனை தேவனாக்க தேவன் மனிதனானார் என்பதே இந்த உன்னத சிகரமாகும்.
பிலதெல்பியாவின் வழியில் தொடருவதற்கு, சீரழிந்த, உருக்குலைந்த பிலதெல்பியாவாகிய லவோதிக்கேயாவின் வழியிலிருந்து நாம் இரட்சிக்கப்பட்டாக வேண்டும்
ஜீவனின் அனுபவம்
பிலதெல்பியாவின் ஜெயங்கொள்பவர்களின் குணாதிசயம், தங்கள் உள்வசிக்கும் பொக்கிஷமாகக் கிறிஸ்துவின் ஐசுவரியங்களை அனுபவித்துபகிழ்வதன் மூலம், அவர்கள் தேவ-மனித வாழ்க்கைக்குள் பிரவேசிக்கப் பிரயாசப்படுவதாகும்
புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து நம்மை இடமாற்றுவது, முற்றிலும் ஒட்டிணைக்கப்படும் ஜீவனைப் பற்றிய ஒரு காரியமாகும்; காட்டு ஒலிவக் கிளைகளாக, நாம் பண்படுத்தப்பட்ட ஒலிவமரமாகிய கிறிஸ்துவுக்குள் ஒட்டிணைக்கப்பட்டிருக்கிறோம்; இவ்வாறு, நாம் கிறிஸ்துவுடன் சேர்ந்திணைக்கப்படுகிறோம், இந்தச் சேர்க்கையில் கிறிஸ்து நம்மை இடமாற்றுகிறார். அவர் சிலுவையில் மரித்தபோது, நாம் அவருடன் மரித்து, நாம் தீர்த்துக்கட்டப்பட்டோம்; இப்போது கிறிஸ்துவுடனான நம் ஜீவாதார சேர்க்கையில், அவர் நம்மிலும் நம்முடனும் நம்மாலும் நம்மூலமும் வாழ்ந்து, நம்மை இடமாற்றுகிறார்.
நடைமுறை மற்றும் பிரயோகம்
பிலதெல்பியாவின் ஜெயங்கொள்பவர்களின் குணாதிசயம் அவர்களுடைய சகோதர அன்பாகும்; அவர்கள் மத்தியில் அன்பு மேலோங்குகிறது, இதனால் மகிழ்விக்கின்ற தேவனுடைய பிரசன்னத்தைக் கொண்டு மக்களைச் சீராட்டி, தேவனுடைய பொருளாட்சியின் ஆரோக்கியமான போதனையைக் கொண்டு அவர்களைப் போஷித்து, தேவனுக்கேற்றபடி அவர்கள் மக்களை மேய்த்துப்பேணுகின்றனர்
சபையைக் கட்டியெழுப்புவதற்காக மற்றவர்களுக்கு ஜீவனை ஊழியஞ்செய்வதற்கும் நம் வெற்றியைப் பராமரிப்பதற்கும், கர்த்தருக்கான நம் அன்பையும் மற்றவர்களுக்கான நம் அன்பையும் பாய்தோடச்செய்கிற புத்துயிரூட்டப்பட்ட வாழ்க்கையும், மேய்த்துப்பேணுதலில் உழைப்பும் நம்மிடம் இருந்தாக வேண்டும்.
நாம் பிலதெல்பியாவின் வழியில் தொடர விரும்பினால், நாம் தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தவும், பொன்னாகவும், வெள்ளை ஆடைகளாகவும் கண்கலிக்கமாகவும் மூவொரு தேவனை அதிகமாக ஆதாயப்படுத்த ஒரு விலையைச் செலுத்தவும் வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதற்கான தலைப்புகள்-ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 “தற்போதைய சத்தியம்” என்பது “இன்று வரையிலான சத்தியம்” என்றும் மொழிபெயர்க்கப்படலாம் (2 பேது. 1:12)
(தற்போதைய சத்தியம் என்ன?)
த2 தேவனுடைய சத்தியங்கள் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டவை; பிந்தைய சத்தியங்கள் முந்தைய சத்தியங்களுக்கு முரண்படுவதில்லை (2 பேது. 1:12)
(அந்த யுகத்தின் “தற்போதைய சத்தியம்” என்ன என்பதை எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 தம் இருதய வாஞ்சையின்படி, தேவன் தம் நித்தியப் பொருளாட்சியை உருவாக்கினார் (1 தீமோ. 1:3; எபே. 1:10; 3:9)
(தேவன் தம் நித்தியப் பொருளாட்சியை பல படிகள் மூலமாக நிறைவேற்றுகிறார் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்வது என்பது, அப்போஸ்தலர்களுடைய போதனைகளில் நிலைத்திருப்பது, ஆரோக்கியமான வசனங்களில் நிலைத்திருப்பது, நேர்த்தியான தலைமைத்துவத்துடன் கர்த்தருடன் வரும் ஒப்பற்ற வெளிப்பாட்டில் நிலைத்திருப்பதாகும். (வெளி. 3:8; 1 தீமோ. 1:3-4)
(வெளிப்படுத்தல் 2, 3இல் ஏழு நிருபங்களில் முக்கிய குறிப்பு சபைகளின் சீரழிவுக்கான மூன்று விதமான போதனைகளை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 கிறிஸ்துவே, எலியாக்கீமினால் மாதிரியாகக்காட்டப்பட்ட, தேவனுடைய வீட்டிலுள்ள உக்கிராணக்காரர் (ஏசா. 22:20-24)
(தேவன் எவ்வாறு நம்மை நீக்குகிறார்? மற்றும் தேவன் நம்மை நீக்குவதன் விளைவு என்ன என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கிறிஸ்து, தேவனின் பழைய ஏற்பாட்டுப் பொருளாட்சியிலுள்ள எல்லாக் காரியங்களுக்கும் பதிலீடாக இருக்கிறார் (கலா. 2:20)
(புதிய ஏற்பாட்டில், கிறிஸ்து நம்மை இடமாற்றுவது, முற்றிலும் ஒட்டிணைக்கப்படும் ஜீவனைப் பற்றிய ஒரு காரியமாகும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 தேவனுடைய வீடாக, சபை போதுமான அளவில் கட்டியெழுப்பப்படும்போது, சபை தேவனுடைய இராஜ்ஜியமாக வெளியரங்கமாக்கப்படுகிறது (1 தீமோ. 3:15; ரோம. 14:17)
கிறிஸ்து தேவனுடைய வீடு மற்றும் சபை தேவனுடைய இராஜ்ஜியமாக இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கிறிஸ்துவே, தம்மில் ஊனுருகொண்டுள்ள தேவனுடைய ஐசுவரியங்கள் அனைத்தையும் நமக்குத் திறக்கக்கூடியவர் (ஏசா. 22:22; எபே. 3:8)
(இன்று தேவனின் வீட்டில் இருக்கும் பொக்கிஷங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் ஐசுவரியங்களாகும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 கர்த்தரின் அன்பான தேடுபவர் தேவனின் நாமத்தையும், புதிய எருசலேமின் நாமத்தையும், கிறிஸ்துவின் புதிய பெயரையும் ஏந்துகிறவனாக ஆகமுடியும் (வெளி. 3:12)
(நாம், தேவனுடைய வீட்டிற்குள் கட்டப்பட்ட வெள்ளைக்கல்லாகவும், தூணாகவும் ஆவதற்கான வழி என்ன?)
த2 நம்மை அகம்சார்ந்த விதத்தில் வெண்மையான கற்களாக ஆக்குவதற்கு மட்டுமல்ல, அதோடுகூட தேவனின் வீட்டிற்குள் கட்டப்பட்ட தூண்களாக ஆக்குவதற்கும் கர்த்தரிடம் திறவுகோல் உள்ளது (வெளி. 3:12)
இன்று கிறிஸ்துவே நிஜமான தாவீது, இவரிடம் தேவன் அதிகாரத்தின் திறவுகோலைக் கொடுத்திருக்கிறார். தம் மீட்டுத்திருப்புதலுக்கான கதவை ஒருவராலும் பூட்ட முடியாதபடி திறக்கும் ஒப்பற்ற திறவுகோல் அவரிடம் மட்டுமே உள்ளதென்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 கர்த்தர், பிலதெல்பியா சபைக்கு “கொஞ்சமே வல்லமை” இருந்தது என்று கூறுகிறார் (வெளி. 3:8)
(கர்த்தரைப் பிரியப்படுத்துவது, நாம் பலமாக இருக்கிறோம் என்பதல்ல, மாறாக நம்மால் முடிந்ததை செய்ய கொஞ்ச வல்லமையைப் பயன்படுத்துகிறோம் என்பதாகும், என்பதை எடுத்துரையுங்கள்)
த2 பிலதெல்பியா தோல்வியடைந்தவுடன், அது லவோதிக்கேயாவாக ஆகிறது (வெளி. 3:18)
(லவோதிக்கேயா என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை எடுத்துரையுங்கள்)