கிறிஸ்துவின் சரீரமாக சபையின் ஜீவாதாரக் கட்டியெழுப்புதலுக்காக கர்த்தரிடம் அன்புகூருதலும் ஒருவரிலொருவர் அன்புகூருதலும்
செய்தி ஏழு
பரலோகப் பிதாவின் அன்பில் பூரணப்படுத்தப்படுவதன்மூலம் பரலோகப் பிதா பூரணமாய் இருக்கிறதுபோல் பூரணமாய் இருத்தல்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
ஒவ்வொரு நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதியை வாசித்தல்
மத். 5:44-45, 48 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் எதிரிகளிடம் அன்புகூர்ந்து, உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள். இதனால் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவின் குமாரர்களாவீர்கள். ஆகையால், உங்கள் பரலோகப் பிதா பூரணமாய் இருக்கிறதுபோல நீங்களும் பூரணமாய் இருப்பீர்களாக
1 யோவான் 2:5 ஆனால், அவருடைய வார்த்தையைக் கைக்கொள்ளுகிறவன் எவனே, மெய்யாகவே இவனில் தேவனுடைய அன்பு பூரணப்பட்டிருக்கிறது.
4:12 நாம் ஒருவரிலொருவர் அன்புகூர்கிறோம் என்றால், தேவன் நம்மில் வசிக்கிறார், அவருடைய அன்பும் நம்மில் பூரணப்படுத்தப்படுகிறது.
பசிதூண்டும் வார்த்தை
“ஆகையால், உங்கள் பரலோகப் பிதா பூரணமாய் இருக்கிறதுபோல நீங்களும் பூரணமாய் இருப்பீர்களாக” என்று மத்தேயு 5:48 கூறுகிறது. இங்குள்ள “பூரணம்” என்பதன் அர்த்தம் என்ன?
இராஜ்ஜியத்தின் மக்கள் தங்கள் பரலோகப் பிதா பூரணமாய் இருப்பதுபோல் பூரணமாய் இருப்பதென்றால், அவர்கள் அவருடைய அன்பில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்(மத்தேயு. 5: 44-45); அன்பு தேவனுடைய சாராம்சத்தின் சுபாவமாகும். நாம் விசுவாசிப்பதன் மூலம் தெய்வீக ஜீவனைப் பெறுகிறோம்; அதோடு, அந்தத் தெய்வீக ஜீவனின் சாரமாகிய தெய்வீக சுபாவத்தை நாம் தொடர்ச்சியாக அனுபவித்துமகிழ்கிறோம்; நாம் எவ்வளவாய்த் தெய்வீக சுபாவத்தை அனுபவித்துமகிழ்றோமோ அவ்வளவாய் அவருடைய நற்பண்பைப் பெறுகிறோம், அவ்வளவாய் நாம் அவருடைய மகிமைக்குள் கொண்டு வரப்படுகிறோம். பூரணமாய் இருப்பதென்றால், பூரணத்தின் மூலக்கூறும் காரணியுமாக தேவன் நம்மோடு கூட்டிச்சேர்க்கப்படுவதைப் பெறுவதாகும்; நாம் மாம்சத்தின் பலத்தின்மீது சார்ந்துகொள்ளாமல், நம் வேலைக்காகவும் சகலத்திற்கும் போதுமான வல்லவராகிய தேவனில் நம்பிக்கை வைக்கிறோம் என்பதே நடைமுறை ரீதியில் இதன் அர்த்தமாகும்
ஆவிக்குரிய பாரம்
நாம் பிதாவின் அன்பில் பூரணமாக்கப்படுவதன்மூலம், பரலோகப் பிதா பூரணமாய் இருப்பதுபோல் பூரணமாய் இருக்க வேண்டும். “அவருடைய வார்த்தையைக் கைக்கொள்கிறவன் எவனோ மெய்யாகவே இவனில் தேவனுடைய அன்பு பூரணப்பட்டிருக்கிறது”. நாம் தெய்வீக வார்த்தையைக் கைக்கொள்ளும்போது, தேவனாக இருக்கிற ஜீவனின்மூலம், நாம் எதைக்கொண்டு வாழ்கிறோமோ அந்தத் தெய்வீக ஜீவனின்மூலம் தெய்வீக அன்பு பூரணப்படுகிறது.
புதிய ஏற்பாட்டில் போதிக்கப்படும் மெய்யான கிறிஸ்தவப் பூரணம் என்பது, தேவனுடைய உச்சநிலை இலக்காகிய புதிய எருசலேமை முழுநிறைவாக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தை உற்பத்தி செய்வதற்காக பல மனிதர்கள் தேவ-மனிதர்களாகும்படி தேவன் ஒரு மனிதனாக விரும்பினார் என்ற தேவனுடைய புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியின்படியானது.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
மத்தேயு 5இன் முடிவில் கர்த்தராகிய இயேச், பரலோக இராஜ்ஜியத்தின் அரசமைப்புச்சட்டத்தைப் பற்றிய மிகவும் உயர்வான பகுதியை முடிக்கையில், “ஆகையால் உங்கள் பரலோகப் பிதா பூரணமாய் இருக்கிறதுபோல் நீங்களும் பூரணமாய் இருப்பீர்களாக” என்று கூறினார்
நாம் பிதாவின் அன்பில் பூரணமாக்கப்படுவதன்மூலம், பரலோகப் பிதா பூரணமாய் இருப்பதுபோல் பூரணமாய் இருக்க வேண்டும்.
புதிய ஏற்பாட்டில் போதிக்கப்படும் மெய்யான கிறிஸ்தவப் பூரணம் என்பது, தேவனுடைய உச்சநிலை இலக்காகிய புதிய எருசலேமை முழுநிறைவாக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தை உற்பத்தி செய்வதற்காக பல மனிதர்கள் தேவ-மனிதர்களாகும்படி தேவன் ஒரு மனிதனாக விரும்பினார் என்ற தேவனுடைய புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியின்படியானது.
ஜீவனின் அனுபவம்
“ஆகையால் உங்கள் பரலோகப் பிதா பூரணமாய் இருக்கிறதுபோல், நீங்களும் பூரணமாய் இருப்பீர்களாக” (மத்தேயு. 5:48). நம்மை மறுபடிஜெநிப்பிக்கவும் நம் ஆவியை தேவனுடைய குடியிருப்பாக்கவும், தேவனுடைய ஆவி நம் ஆவிக்குள் வருவதன்மூலம் நாம் தேவனுடைய மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட பிள்ளைகளாகிறோம்; தெய்வீக ஆவியால் உள்வசிக்கப்பட்டு, கலந்திணைக்கப்பட்டுள்ள நம் மறுபடி ஜெநிப்பிக்கப்பட்ட மனித ஆவியின்படி நாம் நடந்தால், நியாயப்பிரமாணத்தின் நீதியான கோரிக்கையை நிறைவேற்றும்படி நாம் தேவனுடைய ஜீவனால் வாழ்கிறோம்.
விசுவாசிகளாகிய நாம் தெய்வீக ஜீவனை தெய்வீக சுபாவத்துடன் பெற்றிருக்கிறோம், இது நாம் அனுபவித்துமகிழ்வதற்கான சாட்சாத்து தேவனே; நாம் இந்தத் தெய்வீக சுபாவத்தை முற்றுமுடிய அனுபவித்துமகிழும்போது, அதன் முழுநிறைவு அன்பு; அப்போது நம் ஆள்தத்துவம் அன்பாகவே ஆகிவிடுகிறது.
முழுவதும் பரிசுத்தமான, முற்றிலும் பொன்மயமான ஒரு மக்களாக நம்மை ஆக்கும்படி தெய்வீக அன்பு நம்மை பரிசுத்தமாக்குகிறது, பிரித்தெடுக்கிறது, பூரிதமாக்குகிறது; “பொன்மயமான” இயேசுவின் சாட்சியை ஏந்துகிறதும், பொன் விளக்குத்தண்டாக இருக்கும்படி, நாம் ஒன்றாய் இணைக்கப்படுகிற “பொன்” துண்டுகளாகிறோம்.
நடைமுறை மற்றும் பிரயோகம்
நாம் பிதாவின் அன்பில் பூரணமாக்கப்படுவதன்மூலம், பரலோகப் பிதா பூரணமாய் இருப்பதுபோல் பூரணமாய் இருக்க வேண்டும். “அவருடைய வார்த்தையைக் கைக்கொள்கிறவன் எவனோ மெய்யாகவே இவனில் தேவனுடைய அன்பு பூரணப்பட்டிருக்கிறது”. நாம் தெய்வீக வார்த்தையைக் கைக்கொள்ளும்போது, தேவனாக இருக்கிற ஜீவனின்மூலம், நாம் எதைக்கொண்டு வாழ்கிறோமோ அந்தத் தெய்வீக ஜீவனின்மூலம் தெய்வீக அன்பு பூரணப்படுகிறது.
“நாம் ஒருவரிலொருவர் அன்புகூர்கிறோம் என்றால், தேவன் நம்மில் வசிக்கிறார், அவருடைய அன்பும் நம்மில் பூரணப்படுத்தப்படுகிறது.” நாம் இந்த அன்பைக்கொண்டு ஒருவரிலொருவர் வழக்கமாக அன்புகூருவதன்மூலம் நம் வாழ்க்கையில் நாம் இதை வெளிக்காட்டும்போது, இந்த அன்பு அதன் வெளியரங்கத்தில் பூரணப்படுத்தப்படுகிறது, முழுமையாக்கப்படுகிறது.
தீர்க்கதரிசனம் உரைப்பதற்கான தலைப்புகள்-ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 நம் பரலோகப் பிதா பூரணமாய் இருக்கிறதுபோல நாமும் பூரணமாய் இருக்க வேண்டும் (மத். 5:48)
(நம் பரலோகப் பிதா பூரணமாய் இருப்பதுபோல் நாம் எவ்வாறு பூரணமாய் இருக்க முடியும்?)
த2 நாம் தேவனை பாவனைசெய்ய முயற்சிக்கிறவர்கள் அல்ல, அதற்கு பதிலாக பிதாவின் ஜீவனில் வளரும் பிதாவின் பிள்ளைகளாயிருக்கிறோம் (மத். 5:44-45)
(நம் பரலோகப் பிதா பூரணமாய் இருக்கிறதுபோல நாமும் பூரணமாயிருக்க வேண்டும் என்பதின் காரணத்தை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 கிறிஸ்துவிலுள்ள விசுவாசிகளாகிய நாம், அவருடைய தெய்வீக சுபாவத்தில் பங்கெடுக்கிறவர்களாகியிருக்கிறோம் (2 பேது. 1:3-4)
(எவ்வளவு அதிகமாக நாம் தெய்வீக சுபாவத்தை அனுபவித்துமகிழ்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நம்மிடம் அவரது நற்பண்பு இருக்கிறது, மேலும் அவ்வளவு அதிகமாக நாம் அவரது மகிமைக்குள் கொண்டுவரப்படுகிறோம்)
த2 நம் மறுபடிஜெநிப்பித்தலின்போது தெய்வீக ஜீவனைப் பெற்றுக்கொண்ட நாம், தேவன் தம் சுபாவத்தில் என்னவாக இருக்கிறாரோ அதை அனுபவித்துமகிழத் தொடர்ந்து முன் சென்றாக வேண்டும் (2 பேது. 1:4)
(தேவன் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ, அது அவரது சுபாவத்தில் உள்ளது. நாம் தெய்வீக சுபாவத்தில் பங்குபெறும்போது, நாம் தெய்வீக ஐசுவரியங்களில் பங்குபெறுகிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 ஏல்-ஷடாய் என்பதற்கு “சகலத்திற்கும்- போதுமான வல்லவர்” என்று பொருள் ( ஆதி. 17: 1)
(சகலத்திற்கும்- போதுமான நிரப்பீட்டின் ஊற்றாகிய தேவன், நம் வாழ்க்கைக்கு தேவையான எல்லாவற்றிற்கும் நிரப்பீடளிக்க முடியும் என்பதை அனுபவத்துடன் எடுத்துரையுங்கள்)
த2 பூரணமாக்கப்படுவது, தேவன் நம்மிடம் சேர்க்கப்படுவது என்று பொருள் ( ஆதி. 17:1; 2 கொரி. 12:9)
(நம்மில் ஒருவரும் தேவனின்றி பூரணப்படுத்தப்பட முடியாது என்பதை அனுபவங்களுடன் எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 தேவனுடைய அன்பு நம்மில் பூரணப்படுத்தப்பட்டுள்ளது (1 யோவான் 2:5; 4:12)
(தேவனின் அன்பு ஏற்கனவே தேவனில் பூரணப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் இப்போது இந்த அன்பு நம்மில் பூரணப்படுத்தப்பட வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல (லூக்கா 12: 46-47; 1 யோவான் 4:18)
(பூரணமாக்கப்பட்டிருக்கிற அன்பு பயத்தை விரட்டுகிறது; கர்த்தருடைய திரும்பிவருதலில் அவரால் தண்டிக்கப்படுவது பற்றிய எந்த பயமும் நமக்கு இல்லாதபடி செய்கிறது)
நாள் 5
த1 கிறிஸ்தவப் பூரணம், ஊற்றாகிய தேவனால், மூலக்கூறாகிய குமாரனாகிய தேவனால்,மற்றும் ஆவியாகிய தேவனின் பகிர்ந்தளிக்கும் ஐக்கியத்தால் நடைபெறுகிறது
( எந்த ஆறு படிகள் மூலம், ஆவியானவர், நம்மை முழுமையடைந்த முத்துக்களாக ஆக்குவதற்கான தம் மறுசாயலாக்கும் வேலையை நிறைசெய்வார் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 உண்மையான கிறிஸ்தவ பூரணம் கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்காக இருக்கிறது (எபே. 4:12)
(ஆத்துமா ஆதாயத்திற்காக அல்ல, மாறாக கிறிஸ்துவினுடைய அவயவத்தின் ஆதாயத்திற்காக நாம் சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 தெய்வீக சுபாவத்தின் மூன்று முக்கிய ஆக்கக்கூறுகள் ( 2 பேது. 1:4, 7)
(நாம் தெய்வீக சுபாவத்தை அனுபவித்து மகிழும்போது, குறிப்பாக நாம் தேவனை ஆவியாக, அன்பாக, ஒளியாக அனுபவிக்கிறோம்.)
த2 தேவன், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்ரீதியான காரியங்களிலிருந்தும் வேறுபட்டவர் (2 பேது. 3:11)
(நீங்கள் பரிசுத்தமானவர், இதற்கு நீங்கள் மற்ற அனைவரிடமிருந்தும் வித்தியாசமானவர் என்று அர்த்தம்)