Tamil – Prophesying Outline ITEROF Week 6

செய்தி 6

 

நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள கர்த்தரின் புதிய கட்டளை-

     நாம் ஒருவரையொருவர் அன்புகூர்வது

 

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை

 

ஒவ்வொரு நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

 

செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதியை வாசித்தல்

 

யோவான்  13:34-35 ஒரு புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்; நீங்கள் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூருங்கள், நான் உங்களிடம் அன்புகூர்ந்திருப்பதுபோல, நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூ . ஒருவருக்கொருவர் நீங்கள் அன்புள்ளவர்களாயிருந்தால், நீங்கள் என் சீஷர்கள் என்று இதனால் எல்லாரும் அறிந்துக்கொள்வார்கள் என்றார்

 

1 யோவான் 2:7-8 பிரியமானவர்களே, நான் உங்களுக்குப் புதிய கட்டளையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருந்த பழைய கட்டளையையே எழுதுகிறேன்; நீங்கள் கேள்விப்பட்ட வார்த்தையே அந்தப் பழைய கட்டளை.

ஆயினும் மீண்டும் நான் ஒரு புதிய கட்டளையை உங்களுக்கு எழுதுகிறேன், இது அவரிலும் உங்களிலும் சத்தியமாயிருக்கிறது, ஏனெனில் இருள் நீங்கிப்போகிறது, சத்திய ஒளி இப்பொழுதே பிரகாசிக்கிறது.

 

பசிதூண்டும் வார்த்தை

நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள கர்த்தருடைய புதிய கட்டளை என்ன? மற்றும் “புதிய கட்டளையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருந்த பழைய கட்டளையையே எழுதுகிறேன்” என்று இது ஏன் கூறுகிறது?

யோவான் 13 வசனம் 34ல் “ ஒரு புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்: நீங்கள் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூருங்கள், நான் உங்களிடம் அன்புகூர்ந்திருப்பதுபோல, நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூருங்கள்

சகோதர அன்பைக் குறித்த கட்டளை பழையதாகவும் புதியதாகவும் இருக்கிறது; அது பழையது, ஏனெனில் விசுவாசிகள் அதைத் தங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே பெற்றிருக்கிறார்கள், அது புதியது, ஏனெனில் அது அவர்களுடைய கிறிஸ்தவ நடையில் மீண்டும் மீண்டும் புதிய ஒளியுடன் உதித்து, புதிய பிரகாசிப்பித்தலுடனும் பசுமையான வல்லமையுடனும் பிரகாசிக்கிறது

 

ஆவிக்குரிய பாரம்

நாம் கிறிஸ்துவின் சீஷர்கள் என்பதை எல்லா மக்களும் அறிந்துகொள்ளும்படி  அவருடைய அன்பை வெளிக்காட்டுவதற்காக ஒருவரையொருவர் அன்புகூர வேண்டுமென்ற அவருடைய புதிய கட்டளையைக் கைக்கொள்வது கிறிஸ்துவைப் பெற்று, அனுபவமாக்கி, அனுபவித்துமகிழ்வதற்கான ஒரு வழியாகும்

கிறிஸ்துவினுடைய சரீரம் ஜீவாதாரமாய்க் கட்டியெழுப்பப்படுவதற்கான சபை வாழ்க்கை, சகோதர அன்பின் வாழ்க்கையாகும். சகோதர அன்பின் வாழ்க்கையில், நாம் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்கிறோம், ஒருவரிடத்தில் ஒருவர் ஏகசிந்தையாய் இருக்கிறோம், ஒருவரையொருவர் கட்டியெழுப்புவதற்கான காரியங்களை ஆவலாய்ப் பின்தொடர்கிறோம், ஒருவரையொருவர் தாங்குகிறோம், ஒருவரையொருவர் தேற்றுகிறோம், கட்டியெழுப்புகிறோம்,

ஒருவருக்கொருவர் நம் பாவங்களை அறிக்கைசெய்து, ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கிறோம், ஒருவரையொருவர் மன்னிக்கிறோம், ஒருவரையொருவர் பணிந்தடங்குகிறோம்.

 

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

 

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

ஒரு புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்; நீங்கள் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூருங்கள், நான் உங்களிடம் அன்புகூர்ந்திருப்பதுபோல, நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூ . ஒருவருக்கொருவர் நீங்கள் அன்புள்ளவர்களாயிருந்தால், நீங்கள் என் சீஷர்கள் என்று இதனால் எல்லாரும் அறிந்துக்கொள்வார்கள் என்றார்.

தேவனுடைய அன்பு தேவனே; அன்பே தேவனுடைய உள்ளான சாராம்சமும் தேவனுடைய இருதயமுமாகும்.

தெய்வீக அன்பை நடைமுறைப்படுத்துவது, மூவொரு தேவன் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ அதைக்கொண்டும், அவர் என்னவெல்லாம் செய்திருக்கிறாரோ அதைக்கொண்டும், அவர் என்னவெல்லாம் அடைந்தும் பெற்றும் இருக்கிறாரோ அதைக்கொண்டும் நம்மைப் பூரிதமாக்கும்படி தெய்வீக ஜீவனின் ஐக்கியத்தில் அபிஷேகமாக நமக்குள் நகர்ந்து வேலைசெய்கிறவரான சகலத்தையும் உள்ளடக்கிய ஆவியானவராலே மூவொரு தேவனை அனுபவித்துமகிழ்ந்த  நம் அ  பலன் என்று 1- யோவானில் நாம் பார்க்கிறோம்.

கிறிஸ்துவினுடைய சரீரம் ஜீவாதாரமாய்க் கட்டியெழுப்பப்படுவதற்கான சபை வாழ்க்கை, சகோதர அன்பின் வாழ்க்கையாகும்

 

ஜீவனின் அனுபவம்

தேவனுடைய அன்பு நமக்காக இரட்சிப்பை நிறைவேற்றியது; தேவனுடைய ஒரேபேறான குமாரனின் மரணத்தின் மூலமாக சட்டரீதியாய் நாம் அழிவிலிருந்து இரட்சிக்கப்பட்டு, அவருடைய உயிர்த்தெழுதலில் ஜீவாதாரமாய் நாம் நித்திய ஜீவனைப் பெறும்படி தேவன் அவரை நமக்குக் கொடுத்து, தெய்வீக அன்பால் உந்தப்பட்டது. அன்பாகிய தேவன், சாந்தப்படுத்தும், மீட்கும், பிரகாசிக்கும் கிறிஸ்துவில் நம்மைச் சந்தித்து, நம்மிடம் பேசுகிறார்; இதனால் அவருடைய சுடர்விடும், பிரகாசமுள்ள மகிமைக்காக அன்பு, இரக்கம் மற்றும் கிருபையாக அவரைக்கொண்டு நாம் உட்செலுத்தப்பட முடியும். தேவன் நம் இருதயங்களில் தம் அன்பை , நாம் நம் எல்லா உபத்திரவத்திலும் முற்றிலும் வெற்றிசிறக்கும்படி நமக்குள்ளே உந்தித்தள்ளுகிற வல்லமையாக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பரிசுத்த ஆவியோடுகூட ஊற்றியிருக்கிறார்

 

நடைமுறை மற்றும் பிரயோகம்

நாம் தேவனையும் அவருடைய பிள்ளைகளையும், சிலுவையில் வைக்கப்பட வேண்டிய நம் இயற்கை அன்பைக்கொண்டு அல்ல தெய்வீக அன்பைக் கொண்டு அன்புகூர வேண்டும்; நம் இயற்கை அன்பு காயப்படுவது மிகவும் எளிது என்பதே தேவனின் அன்புக்கும் நம் இயற்கை அன்புக்கும் இடையே உள்ள ஒரு வேறுபாடு.

கிறிஸ்துவினுடைய சரீரம் ஜீவாதாரமாய்க் கட்டியெழுப்பப்படுவதற்கான சபை வாழ்க்கை, சகோதர அன்பின் வாழ்க்கையாகும். சரீர வாழ்க்கை  பயிற்சி செய்வதில் நாம் சகோதரர்களை அன்புகூர்ந்து, அவர்களுக்கு ஜீவனை ஊழியஞ்செய்ய நம் ஆத்தும ஜீவனை இழக்கவும், சுயத்தை மறுதலிக்கவும் வேண்டும். நாம் கனி கொடுப்பதற்கான அதிசிறந்த வழி, கிறிஸ்துவை நம் நபராகவும் ஜீவனாகவும் எடுத்துக்கொண்டு ஒருவரையொருவர் அன்புகூர்வதாகும். கூடுகைகளில் நேர்த்தியான பரஸ்பர அக்கறைசெலுத்துவதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

தீர்க்கதரிசனம் உரைப்பதற்கான தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1

த1 கர்த்தருடைய கட்டளை வெறும் தடைஉத்தரவு அல்ல; மாறாக இது ஜீவ நிரப்பீட்டை வழங்கும் வார்த்தையாகும் (யோவா 13:34-35, 1 யோவா 3:11)

(நாம் ஒருவரையொருவர் நேர்த்தியாக அன்புகூருவதற்கு எவ்வாறு பயிற்சிச் செய்ய வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2  புதிய ஏற்பாட்டிலுள்ள அன்பைக் குறித்த வெளிப்பாடு, அன்பைக் குறித்த நம் இயற்கை கருத்திலிருந்து வேறுப்பட்டது (1 யோவா 3:24; 5:1)

(விசுவாசிகள் எவ்வாறு தேவன் மற்றும் ஒருவரையொருவர் அன்புகூர முடியும்?)

 

நாள் 2

த1  தேவனுடைய அன்பே இரட்சிப்பின் ஊற்று (யோவா 3:16; தீத்து 3: 4-5)

(தேவனுடைய அன்பு தேவனுடைய இருதயத்திலிருந்து உண்டாகிறது, ஆனால் அது தோன்றியபோது அது நம் இரட்சிப்பாக மாறியது என்பதை எடுத்துரையுங்கள்)

த2  தேவனுடைய அன்பு நம் இரட்சிப்பை நிறைவேற்றியது மற்றும் இரட்சிப்பை பெறுவதற்கான வழியை நமக்குக் கொடுத்தது ( 1 யோவா 4:9)

(தேவன் நமக்காக ஆயத்தம் செய்த இரட்சிப்பு, நாம் இரட்சிக்கப்படுவதற்கு மட்டுமல்ல, அவருடைய ஜீவனைப் பெறுவதற்காகவும் இருக்கிறது)

 

நாள் 3

த1  கிருபையின் மண்டலத்தில் நாம் அனுபவித்துமகிழ்கிற முதல் காரியம் தேவனின் அன்பாகும் (ரோம. 5:5)

(ஏன் கிறிஸ்தவ வாழ்க்கையில் இவ்வளவு பல தொந்தரவுகள் இருக்கின்றன?)

த 2 சகோதர அன்பைக்குறித்த கட்டளை பழையதும் புதியதுமாகும் ( 1 யோவா 2:8)

(சகோதர அன்பைக் குறித்த கட்டளை இரண்டும் புதியது மற்றும் பழையதுமாகும் என்று ஏன் சொல்லப்படுகிறது?)

 

நாள் 4

 த1  தேவனையும் அவருடைய பிள்ளகளையும் நாம் தெய்வீக அன்பைக்கொண்டு அன்புகூர வேண்டும் ( 1யோவா 4:11-12)

(தேவனிடம் நாம் வைக்கும் அன்பு எவ்வாறு தேவனுடைய அன்பு என்றழைக்கப்பட முடியும்?)

த 2  தேவனுடைய அன்பு மற்றும் நம் இயற்கை அன்புக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது ( 1 யோவா 4:11-12)

(நம் இயற்கையான அன்பு காயப்படுவது மிகவும் எளிது என்பது தேவனின் அன்புக்கும் நம் இயற்கை அன்புக்கும் இடையே உள்ள ஒரு வேறுபாட்டை அனுபவத்துடன் எடுத்துரையுங்கள்)

 

நாள்  5

த 1 சபை வாழ்க்கையே சகோதர அன்பின் வாழ்க்கையாகும் ( 1 யோவா 3:14)

(கர்த்தரிலுள்ள விசுவாசமே, மரணத்திலிருந்து ஜீவனுக்குள் நாம் கடந்துசெல்வதற்கான வழி; சகோதரர்களுக்கான அன்பே, நாம் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் கடந்துசென்றிருக்கிறோம் என்பதன் நிருபணமாகும் என்பதை எடுத்துரையுங்கள்)

த 2 நீங்கள் எவ்வளவாய் கர்த்தரைப் பின்பற்றுகிறீர்களோ, அவ்வளவாய் மற்ற பரிசுத்தவான்களுடன்  ஐக்கியங்கொள்ள ஆசைப்படுவீர்கள் (மத். 16:24-25)

(நாம்  கர்த்தரை அன்புகூர்ந்தால், மற்ற பரிசுத்தவான்களையும் அன்புகூருவோம் என்பதை அனுபவத்துடன் எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

த 1  நாம் எவ்வளவாய் சரீர ஜீவனில் வாழ்ந்து, சரீர ஜீவனின் நிஜத்தைப் பெற்றிருக்கிறோமோ, அவ்வளவாய் நாம் கனியுள்ளவர்களாக இருப்போம் ( யோவா 15:5)

(கனிதருபவர்களாயிருப்பதற்கு, நாம் ஒருவரையொருவர் அன்புகூர வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)

த 2 உயிர்நாடிக் குழுக்களின் நிபந்தனை என்னவென்றால், ஒருமையிலும் ஒருமனதிலும் ஒருவரையொருவர் நேசிப்பதாகும் (யோவா 13: 34-35)

(நாம் ஒருவரையொருவர் அன்புகூர்வது மட்டுமல்ல, நாம் ஒருவரையொருவர் ஒருமையிலும், ஒருமனதுடனும் அன்புகூர்கிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)