கர்த்தருடைய வருகைக்காக நம்மை
ஆயத்தமாக்கிக்கொள்ளுதல்
செய்தி 4
நம்பகமான, விவேகமுள்ள அடிமையாக இருப்பதன் மூலம் கர்த்தருடைய வருகைக்கு நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ளுதல்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
மத்.24:45-47. அப்படியானால், ஏற்ற நேரத்தில் தன் வீட்டாருக்கு உணவு வழங்கும்படி அவர்களுக்கு மேலாக எஜமான் ஏற்படுத்தியிருக்கும் நம்பகமான விவேகமுள்ள அடிமை யார்? அவனுடைய எஜமான் வரும்போது, அவ்வாறு செய்கிறவனாக அவன் காண்கிற அந்த அடிமை பாக்கியவான். மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவன் அவனைத் தன் உடைமைகள் யாவற்றுக்கும் மேலாக ஏற்படுத்துவான்
மத். 24:48-51. ஆனால் அந்தப் பொல்லாத அடிமை, என் எஜமான் தாமதிக்கிறார் என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொண்டு, தன் சக அடிமைகளை அடிக்கத் தொடங்கி, குடிகாரர்களுடன் புசித்துக் குடித்தால், அந்த அடிமையின் எஜமான், அவன் எதிர்பாராத நாளிலும், அவன் அறியாத மணிவேளையிலும் வந்து, அவனைத் துண்டித்து, மாயக்காரர்களோடு அவனுடைய பங்கை நியமிப்பான்
பசிதூண்டும் வார்த்தை
கர்த்தருடைய வருகைக்காக எவ்வாறு நாம் நம்பகமான விவேகமுள்ள அடிமைகளாக இருக்க முடியும்?
இந்த நம்பகமான விவேகமுள்ள அடிமை, கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கு அவரை “உணவாகப்” பகிர்ந்தளிக்கிற, அவரது வீட்டிலுள்ள ஓர் உக்கிராணக்காரனாக, வீட்டு நிர்வாகியாக இருக்கிறான். நம்பகத்தன்மை கர்த்தரிடம் காட்டப்படுகிறது, அப்படியிருக்க, விவேகம் விசுவாசிகளிடம் கடைப்பிடிக்கப்படுகிறது. பரலோக இராஜ்ஜியத்தின் வெளியரங்கத்தில், கர்த்தர் நம்பகமான அடிமையை தம் உடைமைகள் எல்லாவற்றின்மேல் ஏற்டுத்துவார்; இது அவரது அடிமைக்கு கிடைக்கும் ஒரு வெகுமதியாக இருக்கும்
வீட்டாருக்கு உணவு வழங்குதல் என்பது சபையில் விசுவாசிகளுக்கு ஜீவ நிரப்பீடாக தேவனின் வார்த்தையையும் கிறிஸ்துவையும் ஊழியஞ்செய்வதைக் குறிக்கிறது; ஜீவ வார்த்தையில் ஊனுருக்கொண்டு, உணர்ந்தறியப்படுகிற ஜீவன் -தரும் ஆவியாகிய கிறிஸ்துவே நம் உணவாக இருக்கிறார்.
ஆவிக்குரிய பாரம்
நாம் மற்றவர்களுக்கு உணவு அளிக்குமாறு, கர்த்தருடைய வருகைக்கு நம்மை ஆயத்தமாக்கிக்கொள்வதற்கு, ஆவிக்குரிய உணவாக அவரை நாம் அனுபவித்து மகிழவேண்டும். நாம் எல்லாவித ஜெபத்தின் மூலமும், அவருடைய வார்த்தையை மிகுந்த மறுபரிசீலனையுடன் வாய்விட்டுப் பேசி அவருடைய வார்த்தையை ருசித்து அசைபோடுவதன் மூலமும் நாம் அவரை அனுபவித்து மகிழ முடியும்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
அப்படியானால், ஏற்ற நேரத்தில் தன் வீட்டாருக்கு உணவு வழங்கும்படி அவர்களுக்கு மேலாக எஜமான் ஏற்படுத்தியிருக்கும் நம்பகமான, விவேகமுள்ள அடிமை யார்? அவனுடைய எஜமான் வரும்போது, அவ்வாறு செய்கிறவனாக அவன் காண்கிற அந்த அடிமை பாக்கியவான். மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவன் அவனைத் தன் உடைமைகள் யாவற்றுக்கும் மேலாக ஏற்படுத்துவான் “
“ஆனால் அந்தப் பொல்லாத அடிமை, என் எஜமான் தாமதிக்கிறார் என்று தன் இருதயத்தில் கூறிக்கொண்டு, தன் சக அடிமைகளை அடிக்கத் தொடங்கி, குடிகாரர்களுடன் புசித்துக் குடித்தால், அந்த அடிமையின் எஜமான், அவன் எதிர்பாராத நாளிலும், அவன் அறியாத மணிவேளையிலும் வந்து, அவனைத் துண்டித்து, மாயக்காரர்களோடு அவனுடைய பங்கை நியமிப்பான்; அங்கு அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் “
ஜீவனின் அனுபவம்
நமக்கும் நம் பராமரிப்பின்கீழ் இருப்பவர்களுக்கும் உணவூட்ட, ஜீவன்-தரும் ஆவியை நம் நிரப்பீடாக, நம் ஆவிக்குரிய உணவாகப் பெற்றுக்கொள்ள நாம் நம்மையே தேவனுக்குள்ளாக ஜெபிக்க வேண்டும்.
இயேசுவின் சாட்சியாகிய விளக்குத்தண்டின் பிரகாசிக்கும் சாட்சிக்காக ஆவியானவரை விளக்குத்தண்டிற்குள் பாய்ந்தோடச்செய்ய, நாம் “பசுமையான எண்ணெயின் குமாரர்களாக,” அதாவது, ஆனந்த எண்ணெயாக, பசுமையான, தற்போதைய, முழுநிறைவடைந்த ஆவியானவரால் தொடர்ந்து நிரப்பப்படுபவர்களாக இருக்க வேண்டும்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
நாம் மற்றவர்களுக்கு உணவூட்டுமாறு கர்த்தரை நம் ஆவிக்குரிய உணவாக அனுபவித்துமகிழ்வதற்கு, நாம் எல்லாவித ஜெபத்தின் மூலமும், அவருடைய வார்த்தையை மிகுந்த மறுபரிசீலனையுடன் வாய்விட்டுப் பேசி அவருடைய வார்த்தையை அசைபோடுவதன் மூலமும் நாம் அவருடைய வார்த்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
சபையைக் கட்டியெழுப்ப நாம் தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டும். நாம் காண்பதை நம் ஆவியைப் பயிற்சிசெய்வதன் மூலம் பரிசுத்த ஆவியின் உடனடி மற்றும் பசுமையான அகத்தூண்டுதல், அபிஷேகம், மற்றும் பிரகாசிப்பித்தலின்கீழ் இந்த ஜீவனின் ஜீவிக்கும் வார்த்தைகளைக்கொண்டு பேச வேண்டும்.
நாம் நம் சக விசுவாசிகளை நியாயந்தீர்த்து, ஆக்கினைத் தீர்க்காமல், தேவன் கிறிஸ்துவில் நம்மை மன்னித்ததுபோல, அவர்களையும் மன்னித்து அவர்களிடம் கனிவாகவும், இளகிய நெஞ்சமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 நம்பகத்தன்மை கர்த்தரிடமாய் காட்டப்படுகிறது, இப்படியிருக்க விவேகமோ விசுவாசிகளிடமாய் காட்டப்படுகிறது (மத். 24:45)
(அவர்களுக்கு உணவு கொடுப்பது என்றால், கிறிஸ்துவுடன் கூடிய தேவனுடைய வார்த்தையை ஜீவ நிரப்பீடாக சபையிலுள்ள விசுவாசிகளுக்கு ஊழியஞ்செய்வதாகும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கூடுகை நேரம் நியமிக்கப்பட்ட நேரமாக இருக்கிறது (மத். 24:45)
(நாம் கூடுகைக்கு வரும்போது, நல்ல உணவைச் சேவிக்க நாம் ஆயத்தமாகக் கூடுமாறு, வார்த்தையை நாடுவதில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்.)
நாள் 2
த1 நம்பகமான, விவேகமுள்ள அடிமை, அனைத்துவித நபர்களாய் உள்ள கர்த்தரின் ஆஸ்திகளுக்கு ஏற்ற வேளையில் நேர்த்தியான உணவை ஊழியஞ்செய்கிறார்.(மத்.24:45)
(நாம் எவருக்கேனும் நேர்த்தியான உணவை ஊழியஞ்செய்வதற்கு ஒவ்வொரு நாளும் ஒரு நேர்த்தியான நேரமாகும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 சரீர வாழ்க்கையில், சில குறிப்பிட்ட நபர்கள் நிரப்பீட்டின் வாய்க்கால்களாக செயல்படுவதற்கான ஓர் அவசரத் தேவை உள்ளது
(பிலி. 1:24-25; 1 யோவா. 5:16)
(பவுல் கிறிஸ்துவால் நிறைந்த ஒரு நபராக இருந்தான். அவன் வாழ்ந்தபோது அவன் கிறிஸ்துவோடு வாழ்ந்தான் மற்றும் கிறிஸ்துவை சபைகளுக்கு ஊழியஞ்செய்தான் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 இரண்டு ஒலிவ மரங்கள் மற்றும் இரண்டு சாட்சியாளர்கள் (சக. 4:3; வெளி. 11:3)
(சகரியா 4:3 இல் உள்ள இரண்டு ஒலிவ மரங்கள் தற்போதைய யுகத்தின் கடைசி மூன்றரை ஆண்டுகளில் உள்ள இரண்டு சாட்சியாளர்களை அடையாளப்படுத்துகின்றன என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கிண்ணத்தை நிரப்பும் பொன் ஆவியானவரே; இந்த ஆவியானவர் தேவனாக இருக்கிறார் (சக. 4:12, 14)
(நாம் அனைவரும் ஒலிவ மரங்களாக, நம்மில் இருந்து தேவனை மற்றவர்களுக்குள் இறங்கப்பண்ண வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 பொல்லாத அடிமை கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்தும், கர்த்தர் இருக்கப்போகும் மகிமையான மண்டலத்திலிருந்தும் துண்டிக்கப்படுவான் (மத். 24:48-51)
(துண்டிக்கப்படுவது நித்தியமாக அழிந்துபோவது அல்ல, மாறாக, காலகட்டரீதியில் சிட்சிக்கப்படுவதாகும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கர்த்தரின் ஆவலுக்காக ஓர் நேர்மறையான சேவையை செய்ய, நாம் நம் நேரம் நம் ஆற்றல் ஆகியவற்றை செலவழிக்க வேண்டும் மத்.24:49)
(“நம்முடைய சக அடிமைகளை அடிப்பவர்களாக நாம் இருக்கக்கூடாது” என்பதின் அர்த்தத்தை எடுத்துக்காட்டுகளோடு எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 கர்த்தரின் இரண்டாம் வருகை மிக விலையேறப்பெற்றது என்று நமக்குத் தெரியும் என்பதால், நாம் கர்த்தரின் பிரசன்னமாகுதலை அன்புகூர வேண்டும் (2 தீமோ. 4:8; பிலி. 3:20)
(நமக்கு இன்றைய தினம் என்பது இருக்கும்வரை, நாம் கர்த்தரையும் அவரது பிரசன்னமாகுதலையும் அன்புகூர்ந்து, கர்த்தரின் வருகைக்கு காத்திருக்க வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கர்த்தர் வரும்போது, கர்த்தரை அன்புகூருகிறர்களுக்கு அவர் ஒரு திருடனைப்போல் இரகசியமாக வருவார், அவர்களை அவரது பொக்கிஷங்களாக எடுத்துக்கொண்டுபோவார் (மத். 24:42).
(நாம் எடுத்துக்கொள்ளப்பட விரும்பினால், நாம் முதலில் பரலோக சுவாசத்தைக்கொண்டு நிரப்பப்படவும் நம் பாத்திரங்களில் எண்ணெயைக் கொண்டிருக்கவும் வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 நாம் ‘குடிகாரர்களுடன் புசித்துக் குடிக்கிற” ஒருவனாக இருக்கக்கூடாது (மத். 24:49)
(“குடிகாரர்களுடன் புசித்து குடிக்கிறவர்கள்” கூடுதலாக விலகிச் செல்கிறார்கள், சக அடிமைகளை அடிப்பதில் இருந்து கூடுதலான ஒரு வீழ்ச்சியடைகிறார்கள் என்பதின் காரணத்தை எடுத்துரையுங்கள்)
த2 மிக நம்பகமாக இல்லாத சோம்பலான அடிமைகள், கர்த்தர் உடனடியாக திரும்ப வரவில்லை என்ற சாக்குப்போக்கு வைத்திருக்கிறார்கள் (மத். 24:48)
(அவிசுவாசிகளின் பங்கு நித்திய அழிவு, ஆனால் சோம்பலான அடிமைகளின் பங்கு தற்காலிகமான, காலகட்டரீதியான தண்டனை என்பதை எடுத்துரையுங்கள்)