Tamil – Prophesying Outline ICSC Week 03

கர்த்தருடைய வருகைக்காக நம்மை
ஆயத்தமாக்கிக்கொள்ளுதல்

செய்தி 3

பொழுது விடிந்து விடிவெள்ளி நம் இருதயங்களில் உதிக்கும்வரை இருண்ட இடத்தில் பிரகாசிக்கிற விளக்காக தீர்க்கதரிசன வார்த்தைக்குக் கவனஞ்செலுத்துவதன்மூலம் கர்த்தரின் வருகைக்காக நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ளுதல்

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை


அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்

2 பேது. 1:19. மேலும் இன்னும் அதிக உறுதியாக்கப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தையைப் பெற்றிருக்கிறோம், பொழுதுவிடிந்து, விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்கும்வரை, இருண்ட இடத்தில் பிரகாசிக்கிற விளக்காக அந்த வார்த்தைக்கு நீங்கள் கவனஞ்செலுத்துவது நலம்.


பசிதூண்டும் வார்த்தை

பொழுது விடிந்து விடிவெள்ளி நம் இருதயங்களில் உதிக்கும்வரை, இருண்ட இடத்தில் பிரகாசிக்கிற விளக்கிற்கு நாம் ஏன் கவனஞ்செலுத்த வேண்டும்?

பொழுது என்பது உதயமாகும் ஒரு பிரகாசமான நாளாக வரப்போகிற ஓர் ஒளி நிறைந்த நேரத்தை விளக்கும் ஓர் உருவகம். அதன் உதயத்துக்கு முன்னர், வேதவாக்கியத்திலுள்ள பிரகாசிக்கும் தீர்க்கதரிசன வார்த்தைக்குக் கவனஞ்செலுத்துவதன்மூலம் ஒளியூட்டப்பட்டு பிரகாசிப்பிக்கப்படும் விசுவாசிகளின் இருதயங்களில் விடிவெள்ளி உதிக்கிறது. இது, கர்த்தர் ஒரு திருடனைப் போல வரும்போது, அவரது வருகையின் (பரூசியாவின்) இரகசியப் பகுதியில் விசுவாசிகள் அவரைத் தவறவிட்டுவிடாதபடி, அவர்கள் கர்த்தரின் பிரசன்னத்தை ஊக்கமாகத் தேடி விழிப்புடன் இருக்கச்செய்யும். அவ்வாறு இருக்க அவர்களை ஊக்குவிக்கும். பொழுது விடிவதற்கு முன்பான பிரகாசமான விடிவெள்ளியாக, அவர் தமக்காக விழித்திருக்கும், ஆயத்தமாகியிருக்கும், காத்திருக்கும் ஜெயங்கொள்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தோன்றுவார். தம்மை அன்புகூருபவர்களுக்கும், தமக்காக விழித்திருந்து காத்திருப்பவர்களுக்கும், ஒரு நீண்ட பிரிவுக்குப் பிறகு தம் திரும்ப வருதலில் தம் பிரசன்னத்தின் பசுமையை ருசிக்க முன்னுரிமை இருக்குமாறு, அவர்களுக்கு அவர் இரகசியமாய்த் தம்மை விடிவெள்ளியாகத் தருவார்.


ஆவிக்குரிய பாரம்

கர்த்தருடைய வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக, பொழுது விடிந்து விடிவெள்ளி நம் இருதயங்களில் உதிக்கும்வரை இருண்ட இடத்தில் பிரகாசிக்கிற விளக்காக தீர்க்கதரிசன வார்த்தைக்குக் நாம் கவனஞ்செலுத்த வேண்டும்.

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

விசுவாசிகள் தீர்க்கதரிசன வார்த்தைக்குக் கவனஞ்செலுத்துவது மிகவும் முக்கியம்.

பேதுரு வேதவாக்கியத்தில் உள்ள தீர்க்கதரிசன வார்த்தையை இருண்ட இடத்தில் பிரகாசிக்கும் விளக்குக்கு ஒப்பிடுகிறான்.

 

ஜீவனின் அனுபவம்
வேதவாக்கியங்களின் தீர்க்கதரிசன வார்த்தை, விசுவாசிகளுக்குப் பிரகாசிக்கும் விளக்காக, (அவர்களின் மனப்புரிந்துகொள்ளுதலுக்காக வெறும் எழுத்துக்களிலுள்ள அறிவை மட்டுமல்லாமல்) அவர்களின் இருளில் பிரகாசிக்கும் ஆவிக்குரிய ஒளியை வழங்கி, அவர்களை ஒரு பிரகாசமான பகலுக்குள், கர்த்தரின் பிரசன்னமாகுதல் உதயமாகும் நாள்வரை இருண்ட இரவினூடாய்க் கடந்துசெல்வதற்குக்கூட, வழிநடத்திச்செல்கிறது. இருண்ட இடத்திலுள்ள ஒரு விளக்காகப் பிரகாசிக்கும் வேதத்திலுள்ள தீர்க்கதரிசன வார்த்தைக்கு நாம் செவிசாய்த்தால், இருளில் பிரகாசிக்க கிறிஸ்து நம் இருதயங்களில் உதிப்பார்.

 

பயிற்சி மற்றும் பிரயோகம்

இருண்ட இடத்தில் பிரகாசிக்கும் விளக்குக்குக் கவனஞ்செலுத்துவது போல வேதவாக்கியங்களின் வார்த்தைக்கு நாம் கவனஞ்செலுத்தும்போது, நமக்குள் இருக்கும் நிலைமை பொழுது விடிவதுபோலவும், நம் இருதயங்களில் விடிவெள்ளி உதிப்பது போலவும் இருக்கும்.

வேதவாக்கியங்களின் பிரகாசிக்கும் வார்த்தைக்கு நாம் தொடர்ச்சியாக கவனஞ்செலுத்தினால், நம்மில் உதயமாகும் பகலாக இராஜ்ஜியமும் இருக்கும், அவரது வெளிப்படையான பிரசன்னமாகுதலுக்கு முன்பு நம் இருதயங்களில் உதிக்கும் பிரகாசமான விடிவெள்ளியாகக் கிறிஸ்துவும் இருப்பார். விடிவெள்ளியாகக் கிறிஸ்து ஜெயங்கொள்பவர்களின் முதல் வெகுமதியாக அவர்களுக்குக் கொடுக்கப்படுவார்; விடிவெள்ளியாகக் கர்த்தரின் இரகசிய பிரசன்னமாகுதலுக்காக நாம் நம்மை ஆயத்தப்படுத்த வேண்டும்.

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1
த1 தீர்க்கதரிசனங்கள் என்பது மனிதன் அறிய வேண்டும் என்று தேவன் கோரும் காரியங்களாகும். மேலும் விசுவாசிகள் அவற்றிற்குக் கவனம் செலுத்த வேண்டும் (2 பேது. 1:16-20)

(பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகளின் வார்த்தை, துர் உபதேசங்கள் மற்றும் விசுவாசதுரோகத்திற்கு எதிராக விசுவாசிகளுக்கான ஒரு தடுப்பூசியாகிய இயேசு கிறிஸ்துவை பற்றிய தன் சாட்சியை உறுதிப்படுத்துகிறது மற்றும் பலப்படுத்துகிறது என்று பேதுருவின் வார்த்தை சுட்டிக்காட்டுகிறது இதனை எடுத்துரைங்கள்)

த2 வேதாகமம் மிகவும் துல்லியமான புத்தகம்; அதின் ஒற்றை வார்த்தைக்கூட தவறாகப் படிக்கப்படவோ மாற்றப்படவோ கூடாது (யோவா. 7:40-42)

(ஒரு நபர் கவனக்குறைவாக இருந்தால், அவன் தேவனுடைய வார்த்தையை இழப்பான் என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்)

 

நாள் 2

த1 தேவனின் ஊனுருவாக, தேவனின் வார்த்தை ஒரு பிரகாசிக்கும் ஒளியாகும் (சங். 119:105, 130)

(இந்த ஒளி உண்மையில் வார்த்தையிலுள்ள தேவனே என்பதை எடுத்துரையுங்கள்)

த2 அப்போஸ்தலர்களின் சாட்சியும் வேத வாக்கியங்களில் உள்ள தீர்க்கதரிசன வார்த்தையும் சத்தியத்தின் பிரகாசித்தலாக இருக்கின்றன (2 பேது . 1:19)

(பேதுரு, வேதவாக்கியத்தில் உள்ள தீர்க்கதரிசன வார்த்தையை இருண்ட இடத்தில் பிரகாசிக்கும் விளக்குக்கு ஒப்பிடுகிறான் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 3

த1 பொழுது விடிந்து விடிவெள்ளி நம் இருதயங்களில் உதிக்கும்வரை, தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு கவனம் செலுத்துதல் (2 பேது. 1:19)

(இந்த யுகம் இருண்ட, அடர் இருளான, அழுக்கடைந்த இடமாக இருக்கிறது. ஆனால் தீர்க்கதரிசன வார்த்தை இருளில் பிரகாசிக்கும் விளக்காக இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 2 பேதுரு 1:19 ல், பேதுரு ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களை பற்றி பேசுகிறான்: ஆவிக்குரிய நாள் மற்றும் கர்த்தருடைய வருகையின் நாள் (2 பேது.1:19)

(1:19இல் பேதுரு, ஓர் ஆவிக்குரிய நாள் மற்றும் கர்த்தருடைய வருகையின் நாள் ஆகிய இரண்டையும் பற்றிப் பேசுகிறான் என்பதை நம் அனுபவங்களுடன் எடுத்துரையுங்கள்)


நாள் 4

த1 தீர்க்கதரிசன வார்த்தையின் பிரகாசித்தல் நமக்குள் ஒரு பொழுதுவிடிதலாக மாறுகிறது (2 பேது. 1:19)

(புறம்பாக, நாம் ஓர் இருளின் யுகத்தில் வாழ்கிறோம், ஆனால் உள்ளாக, நாம் ஒளியால் நிறைந்திருக்கிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 விடிவெள்ளி விடியலுக்குமுன் நிகழ்கிறது பிந்தையது பொழுது விடிந்த பிறகு நிகழ்கிறது
(வெளி. 2:28; மல். 4:2)

(விடிவெள்ளியாக அவருடைய பிரசன்னமாகுதலும், நீதியின் சூரியனாக அவருடைய பிரசன்னமாகுதலும் ஒரே நேரத்தில் இருக்காது என்பதை எடுத்துரையுங்கள்)


நாள் 5

த1 தீர்க்கதரிசனங்களின் புரிந்துகொள்ளுதலை ஆவலாய்ப் பின்தொடரும் ஒரு நபர் தேவனுடன் ஒரு நெருக்கமான உறவைக் கொண்டிருக்க வேண்டும் (சங். 25:14)

(தீர்க்கதரிசனங்களின் புரிந்துகொள்ளுதலை ஆவலாய்ப் பின்தொடரும் ஒரு நபர் தேவனுடன் ஒரு நெருக்கமான உறவைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை எடுத்துரைப்பதற்கு ஏனோக்கு, தாவீது, அப்போஸ்தலனாகிய யோவான் ஆகியவர்களை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளுங்கள்)

த2 நம்மிடம் உறுதியான வார்த்தையாகிய வேதாகமம் இருக்கிறது (2 பேது.1:19)

(நாம் வார்த்தையுடன் ஜீவிக்கிற விதத்திலும் நேர்த்தியான விதத்திலும் இடைப்பட்டால், எழுதப்பட்ட வார்த்தை ஜீவிக்கும் கிறிஸ்துவாக மாற வேண்டும் என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

த1 நாம் வார்த்தையை அன்பு கூருகிறோம், ஆனால் மரித்த எழுத்துக்களின் வழியில் அல்ல
(மத். 2:2; வெளி. 22:16)

(உள்ளாக இருக்கும் ஏதோவொன்று விடிந்து நம் இருதயத்தில் உதிக்கும் வரை, வார்த்தைக்கு கவனம் செலுத்துவதின் மூலம் நாம் வார்த்தையிடம் அன்புகூருகிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 வார்த்தை நம்மில் பிரகாசிக்கிறது, இந்தப் பிரகாசித்தல் நம்மை அம்பலமாக்குகிறது, இந்த அம்பலமாக்குதல் நம்மைக் கீழ்ப்படுத்துகிறது
(2 பேது. 1:19)

(திருத்துதல், சரிசெய்தல் ஆகியவை அதிகம் தேவையில்லை; தேவனுடைய வார்த்தையின் மூலம் பிரகாசிக்கும் உள்ளான பிரகாசித்தல் வித்தியாசமான எல்லா பிரச்சனைகளையும் தேவைகளையும் பொறுப்பெடுத்துக் கொள்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)