Tamil – Prophesying Outline DST23 Week 05

கிறிஸ்துவின் சரீரமாக சபையின் கட்டியெழுப்புதலுக்காகவும், இராஜ்ஜியத்தின் நிஜம் மற்றும் வெளியரங்கத்திற்காகவும், கர்த்தருடைய வருகைக்காக மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்துவதற்காகவும், நல்ல தேசத்தால் மாதிரியாகக் காட்டப்படும் சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவின்மீது உழைத்தல். 

செய்தி 5

திராட்சை செடிகளின் தேசம்

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை

அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பிலுள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்

வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்

நியா. 9:13 அதற்குத் திராட்சச்செடி: தேவனையும் மனுஷரையும் மகிழப்பண்ணும் என் புதிய ரசத்தை நான் விட்டுவிடுவேனா…?

பிலி. 2:17 ஆனால்…நான் பானபலியாக ஊற்றப்பட்டுப்போனாலும்…

ஆதி. 35:14 யாக்கோபு தன்னோடே அவர் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான்.

பசிதூண்டும் வார்த்தை

திராட்சை செடியின் மாதிரி என்ன? பானபலி என்றால் என்ன?

திராட்சை செடி தம்மைப் பலியாக்கும் கிறிஸ்துவை, அதாவது, தமக்குரிய எல்லாவற்றையும் பலியாக்குகிற கிறிஸ்துவை அடையாளப்படுத்துகிறது, அவரது பலியாக்குதலிலிருந்து தேவனையும் மனிதனையும் மகிழ்விக்க அவர் புதிய திராட்சைரசத்தை உற்பத்திசெய்தார்.

பானபலி, தேவனுடைய திருப்திக்காக அவருக்கு முன்பாக நிஜமான திராட்சைரசமாக ஊற்றப்பட்டவராகிய கிறிஸ்துவை மாதிரியாகக் காட்டுகிறது. பானபலியின் திராட்சைரசம் தேவனின் திருப்திக்காக ஊற்றப்பட்டது; அது தேவன் பருகுவதற்காக ஊற்றப்பட்டது.

கிறிஸ்து தேவனின் இன்பத்திற்காக தேவனுக்கு ஊற்றப்பட்ட பரலோக, ஆவிக்குரிய திராட்சைரசமாக இருக்கிறார்; அவர் தேவனைச் சந்தோஷமாக்கும்படி தம்மையே திராட்சைரசமாக ஊற்றினார்.

ஆவிக்குரிய பாரம்

திராட்சைச் செடியால் மாதிரியாகக் காட்டப்படும் கிறிஸ்துவை நாம் தொடர்புகொண்டு, அவரது பலியாக்கும் ஜீவனை அனுபவமாக்கினால், மற்றவர்களையும் தேவனையும் சந்தோஷப்படுத்த திராட்சைரசத்தை நாம் உற்பத்திசெய்து, பலியின் வாழ்க்கை வாழ அவர் நம்மை ஆற்றலூட்டுவார்.

கிறிஸ்துவைத் திராட்சை ரசம் உற்பத்திசெய்யும் திராட்சைச் செடியாக அனுபவமாக்குவதன் மூலமும், புதிய திராட்சைரசமாக அவரைக் கொண்டு நிரப்பப்படுவதன் மூலமும், நாம் அவரிலும் அவருடனும் ஒரு பான பலியாக ஆகலாம்.

பானபலி கிறிஸ்துவை மட்டுமல்லாமல், அவரும் நாமும் தேவனுடைய அனுபவமகிழ்ச்சிக்காகவும் திருப்திக்காகவும், தேவனுடைய கட்டிடத்திற்காகவும் ஊற்றப்படும்படி ஒன்றாக ஆகும்வரை பரலோக திராட்சைரசமாகிய தம்மைக் கொண்டு நம்மைப் பூரிதமாக்குகிற கிறிஸ்துவையும் மாதிரியாகக் காட்டுகிறது.

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

திராட்சை செடி தம்மைப் பலியாக்கும் கிறிஸ்துவை, அதாவது, தமக்குரிய எல்லாவற்றையும் பலியாக்குகிற கிறிஸ்துவை அடையாளப்படுத்துகிறது, அவரது பலியாக்குதலிலிருந்து தேவனையும் மனிதனையும் மகிழ்விக்க அவர் புதிய திராட்சைரசத்தை உற்பத்திசெய்தார்.

கிறிஸ்துவைத் திராட்சை ரசம் உற்பத்திசெய்யும் திராட்சைச் செடியாக அனுபவமாக்குவதன் மூலமும், புதிய திராட்சை ரசமாக அவரைக்கொண்டு நிரப்பப்படுவதன் மூலமும், நாம் அவரிலும் அவருடனும் ஒரு பானபலியாக ஆகலாம்.

அப்போஸ்தலனாகிய பவுல், பரிசுத்தவான்களின் விசுவாசமாகிய பலியின்மேலும் சேவையின்மேலும் ஊற்றப்பட்ட ஒரு பான பலியாக ஆனான்.

ஜீவனின் அனுபவம்

திராட்சைச் செடியால் மாதிரியாகக் காட்டப்படும் கிறிஸ்துவை நாம் தொடர்புகொண்டு, அவரது பலியாக்கும் ஜீவனை அனுபவமாக்கினால், மற்றவர்களையும் தேவனையும் சந்தோஷப்படுத்த திராட்சைரசத்தை நாம் உற்பத்திசெய்து, பலியின் வாழ்க்கை வாழ அவர் நம்மை ஆற்றலூட்டுவார்.

கிறிஸ்துவை நாம் அவரது சகலத்தையும்-உள்ளடக்கியதன்மையின் இந்த அம்சத்தில் அனுபவமாக்கினால், பருகுவதற்கு நம்மிடம் அதிக திராட்சைரசம் இருக்கும், நாம் கர்த்தரில் மகிழ்ச்சியால் நிரப்பப்பட்டு, கிறிஸ்துவை “குடித்துவெறித்தவர்களாகவும்,” அவரால் “பைத்தியமாகவும்” இருப்போம்.

பயிற்சி மற்றும் பிரயோகம்

முற்றிலும் சுயநலமற்ற ஒருவனே, அதிசந்தோஷமான நபர் என்பதை உணர்ந்தறிந்து, நாம் சந்தோஷத்தால் “குடித்து-வெறித்தவர்களாக” இருப்போம். நம்மைத் தொடர்புகொள்பவர்களுக்கு நாம் சந்தோஷத்தைக் கொண்டுவருவோம், மேலும் தேவனுக்கு நாம் மகிழ்ச்சியைக் கொண்டுவருவோம்.

பானபலி கிறிஸ்துவை மட்டுமல்லாமல், அவரும் நாமும் தேவனுடைய அனுபவமகிழ்ச்சிக்காகவும் திருப்திக்காகவும், தேவனுடைய கட்டிடத்திற்காகவும் ஊற்றப்படும்படி ஒன்றாக ஆகும்வரை பரலோக திராட்சைரசமாகிய தம்மைக் கொண்டு நம்மைப் பூரிதமாக்குகிற கிறிஸ்துவையும் மாதிரியாகக் காட்டுகிறது.

கிறிஸ்துவை அனுபவிக்கும் அனுபவமகிழ்ச்சியின்மூலம் நாம் கிறிஸ்துவை அனுபவமாக்குகிறோம், கிறிஸ்துவை ஆதாயப்படுத்துகிறோம், கிறிஸ்துவை உடைமையாக்குகிறோம். மேலும் நம் ஆள்தத்துவம் கிறிஸ்துவால் கட்டியமைக்கப்படுகிறது; இவ்விதத்தில் நம் விசுவாசம் ஒரு பலியாகிறது. இது தேவனுக்கு ஏறெடுக்கப்படவும், இந்த விசுவாசத்தின்மீது பானபலி ஊற்றப்படவும் முடியும்.

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்—ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1
த1 திராட்சைச் செடி, தம்மையே பலியாக்கினவரான கிறிஸ்துவை அடையாளப்படுத்துகிறது (உபா. 8:8; நியா. 9:13)

(திராட்சைச் செடி, தேவனையும் மனிதனையும் மகிழ்விக்கும் புதிய திராட்சைரசத்தை உற்பத்தி செய்ய தம்மையே பலியாக்கியவரான கிறிஸ்துவை அடையாளப்படுத்துகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 திராட்சைரச உற்பத்தியாளராக கிறிஸ்துவை அனுபவித்தல் (நியா. 9:13; சங். 104:14-15)

(எல்லாச் சூழ்நிலையிலும், எல்லாத் தேவையையும் சந்திப்பதற்குக் கிறிஸ்துவின் வெவ்வேறு அம்சங்கள் இருக்கின்றன என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்)

நாள் 2

த1 கிறிஸ்துவின் ஜீவன் மட்டுமே பலியின் ஜீவன் (ரோ. 12:1; எபே. 5:2)

(திராட்சைப் பழங்களை திராட்சை ரசமாக்குவதற்கு, அவைகள் பிழியப்பட வேண்டும். தேவனையும் பிறரையும் சந்தோஷிப்பிக்க நீங்கள் பிழியப்பட வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 கிறிஸ்து மற்றும் அவரது விசுவாசிகள் ஒரே செடியாக இருக்கிறார்கள் (யோவான்.15:1)

(யோவான் 15இல் உள்ள திராட்சைச் செடி, கிறிஸ்துவையும் கிளைகளாகிய அவருடைய விசுவாசங்களையும் உள்ளடக்கிய ஒரு பிரபஞ்சமளாவிய திராட்சைச் செடியாகும் என்பதை எடுத்துரையுங்கள் )

நாள் 3

த1 திராட்சைச் செடியின் கிளைகளாகிய நாம், திராட்சைச் செடியில் வசிக்க வேண்டும் (யோவான். 15:4-5)

(கிளைகள், திராட்சைச் செடியில் வசிக்கும்போது மட்டுமே, திராட்சைச்செடி கிளைகளுக்கு எல்லாமாக இருக்க முடியும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 திராட்சைச் செடி, குலைகளைக் கொடுக்கும்போது, தெய்வீக ஜீவனின் ஐசுவரியங்கள் வெளிக்காட்டப்படுகின்றன (யோவான்.15:4-5)

(திராட்சைச் செடியிலுள்ள கிளைகள், தெய்வீகப் பகிர்ந்தளிப்பில் பிதாவினுடைய ஜீவனின் ஐசுவரியங்களை வெளிக்காட்ட கனி கொடுப்பதற்காக இருக்கின்றன என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 4

த1 பான பலி ஆசாரியர்களுக்கானது அல்ல; மாறாக அது முற்றிலும் தேவனுக்கானது (யாத். 29:40-41)

(பான பலி என்றால் என்ன?)

த2 பான பலியானது பலியிடுகிறவனால் அனுபவிக்கப்படுகிற, கிறிஸ்துவின் ஒரு மாதிரியாகும் (பிலி. 2:17; 2 தீமோ. 4:6)

(அப்போஸ்தலனாகிய பவுல் இந்த வழியினால் கிறிஸ்துவை அனுபவித்ததினால் இப்படிப்பட்டதொரு பானபலியாக ஆனான் என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 5

த1 யாக்கோபு இரண்டு முறை பெத்தேலில் ஒரு துணை நிறுத்தினான் (ஆதி. 28:18; 35:14)

(ஏன் யாக்கோபு முதல் முறை தூணின்மீது ஒரு பானபலியை ஊற்றவில்லை; ஆனால், அதன்மீது வெறும் எண்ணெயை மட்டும் ஊற்றினான் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 பான பலியானது கிறிஸ்து நம்மோடு ஒன்றாகும் வரை நம்மைப் பூரிதமாக்குகிற கிறிஸ்துவாக இருக்கிறது (மத். 9:17)

(நாம் நாள்தோறும் கிறிஸ்துவை அனுபவமாக்கினால், இறுதியில் நாம் அனுபவமாக்கும் கிறிஸ்து நம்மில் திராட்சைரசமாக மாறுவார் என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 6

த1 பான பலி தேவனை ஆராதிப்பதற்காக அல்ல, பிரதானமாக தேவனுடைய கட்டிடத்திற்காக இருக்கிறது (ஆதி. 35:14)

(தோற்றத்திற்கு, பானபலி ஆராதனைக்காக இருக்கிறது; உண்மையில், இது தேவனுடைய வீட்டிற்காக, தூணைக் கட்டியெழுப்புதலுக்காக இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 பரலோக திராட்சை ரசமாகிய கிறிஸ்து பவுலை உள்ளாக கட்டியமைத்தார் (பிலி. 2:17; 2 தீமோ. 4:6)

(விசுவாசிகளின் விசுவாசத்தின் பலி மற்றும் சேவையின்மீது ஊற்றப்பட்ட ஒரு பான பலியாக பவுல் தன்னைக் கருதினான் என்பதை எடுத்துரையுங்கள்)