Tamil – Prophesying Outline DST23 Week 04

கிறிஸ்துவின் சரீரமாக சபையின் கட்டியெழுப்புதலுக்காகவும், இராஜ்ஜியத்தின் நிஜம் மற்றும் வெளியரங்கத்திற்காகவும், கர்த்தருடைய வருகைக்காக மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்துவதற்காகவும், நல்ல தேசத்தால் மாதிரியாகக் காட்டப்படும் சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவின்மீது உழைத்தல். 

செய்தி 3

நல்ல தேசமாகிய சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்து-பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்ந்தோடுகிற நீரோடைகளும், சுனைகளும் நீரூற்றுகளும் நிறைந்ததொரு தேசம்

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை

அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்

கலா. 3:14 ஆவியானவரைக்குறித்த வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தின்மூலம் பெற்றுக்கொள்ளும்படி, ஆபிரகாமுக்கான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவில் புறவினத்தாருக்குவரும்படி அப்படி ஆயிற்று.

உபா. 8:7 உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்.

யோவா. 4:14 நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர், அவனில் நித்திய ஜீவனுக்குள்ளாகப் பொங்கியெழுகிற நீரூற்றாக மாறும்…

 

பசிதூண்டும் வார்த்தை

தேவனால் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆசீர்வாதம் எந்த வகையான ஆவியாக இருக்க முடியும்? வித்து மற்றும் நல்ல தேசமாகிய கிறிஸ்துவும்கூட சகலத்தையும் உள்ளடக்கிய ஆசீர்வாதம் என்ன?

தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம்பண்ணிய ஆசீர்வாதத்தின் பௌதிக அம்சம், நல்ல தேசம். இந்த நல்ல தேசம் சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவுக்கு மாதிரியாக இருக்கிறது. இறுதியில் கிறிஸ்து சகலத்தையும் உள்ளடக்கிய ஜீவன்-தரும் ஆவியாக உணர்ந்தறியப்படுவதால், வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட ஆவியானவரைக் குறித்த ஆசீர்வாதம், ஆபிரகாமுக்கு வாக்குத்தம்பண்ணப்பட்ட தேசத்தைக் குறித்த ஆசீர்வாதத்திற்கு ஒத்திருக்கிறது. உண்மையில், நம் அனுபவத்தில் கிறிஸ்துவின் உணர்ந்தறிதலாக ஆவியானவர், நாம் அனுபவித்துமகிழ்வதற்காக தேவனுடைய உதாரத்துவமான நிரப்பீட்டின் ஊற்றாகிய நல்ல தேசமாக இருக்கிறார்; இது கிறிஸ்துவின் சரீரத்தின் நிரப்பீடாக “இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் உதாரத்துவமான நிரப்பீடாக” இருக்கிறது.

ஆவிக்குரிய பாரம்

சகலத்தையும் உள்ளடக்கிய ஆவியாக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்து,”பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்ந்தோடுகிற நீரோடைகளும் சுனைகளும் நீரூற்றுகளும் நிறைந்ததொரு தேசமாக” இருக்கிறார். தேவனுடைய பொருளாட்சியின்படி, தேவனில் திடநம்பிக்கை வைக்கிறவன், ஜீவத் தண்ணீரின் ஊற்றாகிய தேவனை அடையாளப்படுத்துகிற தண்ணீரண்டையில் நாட்டப்பட்ட மரத்தைப்போல் இருக்கிறான்; மரம் தண்ணீரின் எல்லா ஐசுவரியங்களையும் உறிஞ்சிக்கொண்டு நதியோரம் வளர்கிறது; இது தேவனுடைய தெய்வீகப் பகிர்ந்தளிப்பின்மூலம் நிறைவேற்றப்படுகிற தேவனுடைய பொருளாட்சியின் சித்திரமாகும். ஜீவத் தண்ணீரைப் பருகவும் அதைப் பாய்ந்தோடச் செய்யவும் இரட்சிப்பின் சுனைகளிலிருந்து தண்ணீர் மொண்டுகொள்ளும் பழக்கத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

கலாத்தியர் 3:14, “ஆவியானவரைக்குறித்த வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தின்மூலம் பெற்றுக்கொள்ளும்படி, ஆபிரகாமுக்கான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவில் புறவினத்தாருக்கு வரும்படி அப்படி ஆயிற்று” என்று கூறுகிறது.

சகலத்தையும் உள்ளடக்கிய ஆவியாக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்து, “பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்ந்தோடுகிற நீரோடைகளும் சுனைகளும் நீரூற்றுகளும் நிறைந்ததொரு தேசமாக” இருக்கிறார்.

எரேமியா 2:13, “என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்;/ ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய / என்னை விட்டுவிட்டார்கள்; / தண்ணீர் நிற்காத / தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை / தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்” என்று கூறுகிறது. தேவனுடைய பொருளாட்சியின்படி, தேவனில் திடநம்பிக்கை வைக்கிறவன், ஜீவத் தண்ணீரின் ஊற்றாகிய தேவனை அடையாளப்படுத்துகிற தண்ணீரண்டையில் நாட்டப்பட்ட மரத்தைப்போல் இருக்கிறான், மரம் தண்ணீரின் எல்லா ஐசுவரியங்களையும் உறிஞ்சிக்கொண்டு நதியோரம் வளர்கிறது; இது தேவனுடைய தெய்வீகப் பகிர்ந்தளிப்பின்மூலம் நிறைவேற்றப்படுகிற தேவனுடைய பொருளாட்சியின் சித்திரமாகும்.

ஜீவனின் அனுபவம்

“பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்ந்தோடுகிற” தண்ணீர் (உபா. 8:7), கிறிஸ்து ஜீவிக்கும் தண்ணீராக பல்வேறு சுற்றுச்சூழல்களில் பாய்ந்தோடுகிறார் என்று குறித்துக்காட்டுகிறது.

பள்ளத்தாக்குகள் சிலுவையின் அனுபவங்களாகும், கிறிஸ்துவின் மரணத்தின் அனுபவங்களாகும், மலைகள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் அனுபவங்களாகும். மண்பாத்திரங்களான நமக்குள் உள்ள பொக்கிஷமாகிய உள்வசிக்கும் கிறிஸ்து கிறிஸ்தவ வாழ்க்கைக்கான நிரப்பீட்டின் தெய்வீகத் தோற்றுவாயாகவும், உயிர்த்தெழும் ஜீவனின் வெளியரங்கத்திற்காக சிலுவையிலறையப்பட்டதொரு வாழ்க்கை நாம் வாழ்வதற்கான மேன்மையான வல்லமையாகவும் இருக்கிறார்.

உண்மையில், உயிர்த்தெழுதல் வெளியரங்கமாக்கப்பட, மரணம், ஊக்கமிழத்தல், ஏமாற்றம் ஆகியவை தேவை. சிலுவையின் வேலைசெய்தல் நாம் உயிர்த்தெழுதலின் தேவனை அனுபவித்துமகிழுமாறு நம் சுயத்தை முடிவுகட்டுகிறது. தேவனை நமக்குள் பெற்றுக்கொள்ள காலையில் நம்மையே நிராகரிக்கும்போது, அந்த நாளில் ஒரு கொல்லும் செயல்முறை நமக்குள் நடந்துகொண்டிருக்கிறது என்ற உணர்வு நமக்கு இருக்கிறது.

பயிற்சி மற்றும் பிரயோகம்

ஜீவத் தண்ணீரைப் பருகவும் அதைப் பாய்ந்தோடச் செய்யவும் இரட்சிப்பின் சுனைகளிலிருந்து தண்ணீர் மொண்டுகொள்ளும் பழக்கத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

நாம் கர்த்தரிடமும், கர்த்தராலும், கர்த்தருக்காகவும், கர்த்தரிலும், கர்த்தரோடும் பேசுவதன் மூலம், இரட்சிப்பின் சுனைகளிலிருந்து களிப்போடு தண்ணீர் மொண்டுகொள்ள வேண்டும். நாம் கர்த்தரைத் துதிக்கவும், அவரில் களிகூரவும், எப்போதும் நன்றிசெலுத்தவும், கர்த்தருக்குப் பாடவும் வேண்டும். நாம் கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிட வேண்டும்.

கிறிஸ்து நிறைவேற்றியிருப்பதை நாம் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தி, சுவிசேஷம் பிரசங்கிக்க வேண்டும். நம் ஆள்தத்துவத்தில் கர்த்தருக்கு முதன்மையைக் கொடுக்கவும், ஒவ்வொன்றையும் தெய்வீக சுபாவத்தின்படி செய்யவும் வேண்டும்.

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1
த1 தேவனுடைய சுவிசேஷத்தின் மையம் (கலா. 3:14)
(ஆவியானவரே, எல்லாத் தேசங்களுக்காக தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணினதும், கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலம் விசுவாசிகளால் பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதுமான ஆசீர்வாதம் என்பதை எடுத்துரையுங்கள் )

த2 ஆவியானவர், அதாவது சகலத்தையும் உள்ளடக்கிய ஜீவன் தரும் ஆவியானவர் ஆபிரகாமின் ஆசீர்வாதமாக இருக்கிறார் (கலா. 3:14; 1 கொரி. 15:45)
(இந்த ஆபிரகாமின் ஆசீர்வாதம், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆசீர்வாதத்தின் மையமாக இருக்கிற கிறிஸ்துவோடு முற்றும்முடிய தொடர்புடையது என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 2
த1 கானான் தேசமாகிய நல்ல தேசம், முழு நிறைவடைந்த, நிறைவான, முழுமையான கிறிஸ்துவின் விரிவான மாதிரியாகும் (எபே. 3:8; பிலி. 1:19)
(நல்ல தேசத்தின் ஐசுவரியங்கள் தம் ஆவியானவரில் தம் விசுவாசிகளுக்கு சகலத்தையும் உள்ளடக்கிய நிரப்பீடாக, வெவ்வேறு அம்சங்களில் உள்ள கிறிஸ்துவின் ஆராய்ந்தறியமுடியாத ஐசுவரியங்களை மாதிரியாகக் காட்டுகின்றன என்பதை எடுத்துரையுங்கள்.)

த2 ஜீவத்தண்ணீராகிய நதி, தன் பாய்ந்தோடுதலில் ஜீவனின் அபரிமிதத்தை அடையாளப்படுத்துகிறது (யோவான் 7:38; வெளி. 22:1)
( இந்த நதி, அதன் ஐசுவரியங்களுடன் நம் வெவ்வேறு அனுபவத்தில் பல நதிகளாகின்றன என்பதை எடுத்துரையுங்கள் )

நாள் 3
த1 இயேசுவின் இந்த மரணத்திற்குள்ளாக்குதல், நம் உள்ளார்ந்த மனிதன் அபிவிருத்தியடைந்து, புதுப்பிக்கப்பட வாய்ப்பு ஏற்படுத்துகிறது (2 கொரி. 4:10, 16)
(மற்றவர்களுக்குள் ஜீவன் உட்பகிரப்படுதல், எப்போதுமே, நாம் சிலுவையின் கொல்லுதலை அனுபவிப்பதின் விளைவாகவே இருக்கிறது என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்)

த2 சகல பள்ளத்தாக்குகளும் கிறிஸ்துவினுடைய மரணத்தின் அனுபவங்களாக, சகல மலைகளும் கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் அனுபவங்களாக இருக்கின்றன (உபா. 8:7; 2 கொரி. 6:8-10)
(தண்ணீர் பள்ளத்தாக்குகளில் மற்றும் மலைகளில் ஆகியவற்றில் இரண்டிலும் இருந்து பாய்ந்தோடுகிறது என்று உபாகமம் 8:7 கூறுகிறது. “முதலில் பள்ளத்தாக்கு அதன் பிறகு மலை” இதற்கான காரணம் என்ன?)

நாள் 4
த1 தேவனுடைய பார்வையில், அவரிடமிருந்து குடிக்கவராதவர்கள் பொல்லாதவர்களாகும். (எரே. 2:13)
(அவருடைய பொருளாட்சியில் தேவனுடைய இருதய வாஞ்சை என்ன என்பதை எடுத்துரையுங்கள்)

த2 தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களின் அனுபவமகிழ்ச்சிக்காக அவர்களைத் திருப்திப்படுத்த ஜீவிக்கும் தண்ணீர்களின் தோற்றுவாயாக, ஊற்றாக இருக்க தேவன் விரும்புகிறார் (யோவா 4:13-14; 1 கொரி. 12:13)
(இந்தக் கருத்து, எவ்வாறு யோவானின் எழுத்துக்களால் மேம்படுத்தப்பட்டது மற்றும் பவுலின் எழுத்துக்களால் பலப்படுத்தப்பட்டது என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 5
த1 “பிறப்பிடம்” மற்றும் “சுனைகள்” என்ற வார்த்தைகளுக்கிடையே உள்ள வித்தியாசம் (உபா. 8:7; ஏசா. 12:3)
(பிறப்பிடம் என்பது தொடக்கம், சுனை என்பது பிறப்பிடத்திலிருந்து பாய்தல், நதி என்பது ஓட்டம் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 நடைமுறை இரட்சிப்பு என்பது வழிமுறையின் ஊடாய் கடந்து வருகின்ற மூவொரு தேவனே. (வெளி. 21:6)
(ஜீவிக்கும் தண்ணீரே தேவனுடைய நடைமுறை இரட்சிப்பு என்பதை பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு நமக்கு காட்டுகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 6
த1 தேவனுடைய பகிர்ந்தளிப்பின் மூலம், அவருடைய பொருளாட்சியை தேவன் நிறைவேற்றுகிறார் (எரே. 2:13; 17:7-8)
(தேவனுடைய பொருளாட்சியின்படி, தேவனில் நம்பிக்கை வைக்கிறவன் தண்ணீரருகே நடப்பட்ட மரம் போன்றவன், இது ஜீவிக்கும் தண்ணீர்களின் ஊற்று தேவனே என்பதை அடையாளப்படுத்துகிறது என்று எடுத்துரையுங்கள்)

த2 ஜெபம் என்பது நம் உண்மையான நிலையின்படி இருக்கிறது, எவ்வளவு உண்மையோ அவ்வளவு சிறந்தது (பாடல் #1048) (நாம் பலவீனமாக, துக்கமாக, நம்மிடம் கூறுவதற்கு எதுவும் இல்லாமல் இருக்கும்போதுகூட, எதையும் மாற்றாமல் நாம் தேவனிடம் வரலாம் என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்)