Tamil – Prophesying Outline DST23 Week 02

கிறிஸ்துவின் சரீரமாக சபையின் கட்டியெழுப்புதலுக்காகவும், இராஜ்ஜியத்தின் நிஜம் மற்றும் வெளியரங்கத்திற்காகவும், கர்த்தருடைய வருகைக்காக மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்துவதற்காகவும், நல்ல தேசத்தால் மாதிரியாகக் காட்டப்படும் சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவின்மீது உழைத்தல். 

செய்தி 2

அவருடைய ஆலோசனை மற்றும் எச்சரிப்புகளின் வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பதன் மூலமும் நம் உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதுப்பிக்கப்படும்படி அவருடைய புதுப்பிக்கப்பட்ட பயிற்சியைப் பெறுவதன் மூலமும் நல்ல தேசமாகிய சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவைச் சுதந்தரித்தல்

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை

அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்

வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்

எபி. 3:12 சகோதரர்களே, ஜீவிக்கும் தேவனைவிட்டு விலகிப்போகும் அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களுள் ஒருவனிலும் இராதபடி எச்சரிக்கையாயிருங்கள்.

1 கொரி. 10:14 ஆகையால், எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரக ஆராதனையை விட்டுத் தப்பியோடுங்கள்.

ரோ. 12:2 நீங்கள் இந்த யுகத்திற்கேற்றபடி வேஷந்தரிக்காதீர்கள், மாறாக, மனம் புதிதாகிறதினால் மறுசாயலாகுங்கள்.

 

பசிதூண்டும் வார்த்தை

எந்த ஒன்பது விஷயங்களில் தேவனின் மறுபயிற்சி அவரது மக்களுக்கு இருந்தது?

உபாகமம் 10:12-22இல் மோசே இஸ்ரயேல் புத்திரருக்கு ஒன்பது காரியங்களைக் குறித்துக் கட்டளையிட்டான்: தங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்படுதல், அவருடைய எல்லா வழிகளிலும் நடத்தல், தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் அவரிடம் அன்புகூருதல், அவரைச் சேவித்தல், தங்கள் நன்மைக்காக அவருடைய கட்டளைகளையும் நியமங்களையும் கைக்கொள்ளுதல், தங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுதல், இனியும் வணங்கா கழுத்துள்ளவர்களாக இல்லாதிருத்தல், அவரை இறுகப்பற்றிக்கொள்ளுதல், தங்கள் துதியும் தங்கள் தேவனுமாகிய அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுதல்.

ஆவிக்குரிய பாரம்

கிறிஸ்துவை நமது நல்ல தேசமாக முழுமையாக உடைமையாக்க, நம்பிக்கையற்ற ஒரு தீய இருதயம் நம்மில் இருக்காதபடிக்கு நாம் கவனமாக இருக்க வேண்டும். நாம் நம்முடைய விசுவாச ஆவியைப் பிரயோகித்து, அவருடைய வாக்குத்தத்தங்கள், அவருடைய ஜனங்களோடு அவர் பிரசன்னம், மற்றும் ஜெயங்கொள்ளும் திறன் ஆகியவற்றை முழுமையாக நாம் அவரை விசுவாசித்து, நம் இருதயங்களைத் தொடர்ந்து கர்த்தரிடம் திரும்பவைக்க வேண்டும்.

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

இஸ்ரயேல் மக்கள் பூமியில் தேவனுடைய இராஜ்ஜியத்தை ஸ்தாபித்து, தேவனுடைய வெளியாக்கமாக இருக்குமாறு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் அவர்கள் பிரவேசிக்க வேண்டும் என்பதே இஸ்ரயேல் மக்களை தேவன் அழைத்த அழைப்பின் இலக்கு.

நாம் கிறிஸ்துவை நல்ல தேசமாக முழுவதும் உடைமையாக்கப் போகிறோம் என்றால், நாம் “விக்கிரக ஆராதனையைவிட்டுத் தப்பியோட வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான்.

தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நல்ல தேசத்திற்குள் பிரவேசிக்கவும், அதைத் தங்கள் உடைமையாகச் சுதந்தரிக்கவும் இஸ்ரயேல் மக்களின் புதிய தலைமுறையை ஆயத்தப்படுத்த அவர்களுடைய நீண்டகால அலைந்துதிரிதலுக்குப் பிறகு, தேவனால் மோசேமூலம் அவர்களுக்கு ஒரு புதுப்பிக்கப்பட்ட பயிற்சி கொடுக்கப்பட்டது. காலேப் மற்றும் யோசுவாவைத் தவிர, முதல் தலைமுறை மரித்துவிட்ட பிறகு, இரண்டாம் தலைமுறை நல்ல தேசத்திற்குள் பிரவேசிக்கவும், அதை உடைமையாக்கவும் ஆயத்தமாக இருந்தது.

ஜீவனின் அனுபவம்

முதல் தலைமுறை நம் பழைய மனிதனை மாதிரியாகக்காட்டுகிறது; இரண்டாவது தலைமுறை நம் புதிய மனிதனை மாதிரியாகக்காட்டுகிறது. நாம் ஜீவனில் வளர்வதன்மூலம், சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவின் முழு உடைமை மற்றும் அனுபவமகிழ்ச்சிக்குள்ளாகப் பிரவேசிக்கச் செய்கிறவர்களாக நாம் இருக்க வேண்டும் (இது தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நிலமாக இருக்கிறது); மறுசாயலாகுதல் என்பது, பழைய மனிதன் மரித்தலும் புதிய மனிதன் வளர்தலுமாகும்; தேவனுடைய பொருளாட்சி, நம் பழைய மனிதன் (புறம்பான மனிதன்) அழிக்கப்படுவதும், நம் புதிய மனிதன் (உள்ளான மனிதன்) நாளுக்கு நாள் புதிதாக்கப்படுவதுமாகும்.

கர்த்தருடைய இரக்கம் மற்றும் கிருபையால், நாம் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலுக்குள் வந்ததிலிருந்து, தேவனுடைய கட்டிடம் மற்றும் இராஜ்ஜியத்திற்காக நம் நல்ல தேசமாகக் கிறிஸ்துவை அனுபவிக்கும் அனுபவமகிழ்ச்சிக்குள் நம்மை வரவழைக்க ஜீவனில் நம் வளர்ச்சிக்காகவும், ஜீவனில் மறுசாயலாகுதலுக்காகவும் நாம் புதிதாக்கப்பட்டுவருகிறோம்.

பயிற்சி மற்றும் பிரயோகம்

நல்ல தேசமாகக் கிறிஸ்துவை முழுவதும் உடைமையாக்குவதற்கு, தினந்தோறும் நமக்கான கர்த்தருடைய புதிய பேசுதலைப் பெறுவதன்மூலம் கர்த்தருடன் நம் பசுமையையும் புதுத்தன்மையையும் நாம் பராமரித்தாக வேண்டும். தேசத்தில் நலிவுறுவதைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

தேவனுடைய காக்கும் வல்லமையைப் பெறுவதற்கு, நாம் கர்த்தருடைய வாக்குத்தத்தங்களில் முழு இருதயத்துடன் விசுவாசிக்கும்படியும் அவர் தம் மக்களுடன் இருக்கிறார் என்று விசுவாசிக்கும்படியும், அவர்கள் ஜெயங்கொள்ள முற்றுமுடிய வல்லவர்கள் என்று விசுவாசிக்கும்படியும், நாம் நம் விசுவாசத்தின் ஆவியைப் பயிற்சிசெய்து, நம் இருதயத்தைக் கர்த்தரிடம் திரும்பியதாய் வைத்துக் கொள்ள வேண்டும்.

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்—ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1
த1 தேவனுடைய பொருளாட்சியின் வெளிப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறோம் என்றாலும், இன்னும் நாம் தேவனுடைய அழைப்பின் இலக்கை அடைய தவறக்கூடும் (யாத். 3:8; பிலி. 3:12-14)

(இஸ்ரவேலர்களுக்கு கடவுள் அழைத்த இலக்கு என்ன என்பதை எடுத்துரையுங்கள்)

த2 அவிசுவாசத்தின் தீமையை நம் ஜெபத்தோடு நாம் தவிர்க்க வேண்டும் (எபி. 3:12; எண். 13:30)

(யோசுவா மற்றும் காலேபின் எடுத்துக்காட்டை நாம் பின்பற்ற வேண்டும்—அவர்கள் விசுவாசத்தில் நிறைந்திருந்தனர் என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 2

த1 முறியடிக்கப்பட்ட எதிரி தான் மிகச் சிறப்பான உணவு (எண். 14:9; 2 கொரி. 4:13)

(நம் வாழ்கின்ற விசுவாசத்தைக்கொண்டிருக்கவும் மற்றும் எதிரியை நாம் அதிசிறந்த உணவாக கருதவும் வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 தேவனுடைய வார்த்தை மாத்திரம் நம்முடைய உணவு அல்ல, நாம் எதிர்கொள்கிற சிரமங்களும் நம் உணவாக இருக்கிறது (எண்ணா. 14:9; 2 கொரி. 4:13)

(சாத்தான் நம் வழியில் வைக்கிற ஒவ்வொரு சிரமமும், ஒவ்வொரு சோதனையும் நமக்கான உணவாக இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 3

த1 சுய அழகுப்படுத்துதல் விக்கிர ஆராதனைக்கு வழி நடத்துகிறது (யாத். 3103:5-6; 1 கொரி. 1:14)

(சுய அழகுப்படுத்துதலின் கோட்பாடு விக்கிரகாராதனையாக இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 விக்கிரகாராதனை என்பது, தேவன் நமக்குக் கொடுத்திருப்பதை வீணாக்கும்படி அதை சாத்தான் அபகரிக்கிறான் என்பதே ஆகும் (1 கொரி 1:14; 1 யோவான் 5:21)

(தேவன் நமக்கு அநேக காரியங்களை கொடுத்திருக்கிறார், சுய அழகுபடுத்துவதற்காக அல்ல, மாறாக அவரை துதிப்பதற்கும் மகிமைப்படுத்துவதற்கும் என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 4

த1 ஒவ்வொரு விக்கிரகாராதனையாளரும் மெய்யான தேவனை ஆராதிப்பதுபோல் பாசாங்குசெய்கிறார்கள் (யோவா. 4:24)

(விக்கிரகாராதனை என்பது பாசாங்கு என்று ஏன் கூறப்படுகிறது?)

த2 மோசேயும் கர்த்தரும் அந்நியோன்யமான நண்பர்கள் மட்டுமல்ல அவர்கள் தேவனுடைய பங்காளிகளாக, கூட்டாளிகளாக இருந்தனர்
(யாத். 33:7, 11)

(மோசே பாளயத்துக்கு வெளியே கூடாரத்தை ஏன் வைத்தான்?)

நாள் 5

த1 பழைய தலைமுறை வனாந்தரத்தில் மரித்துவிட்டனர், இது நமக்கு ஒரு எச்சரிக்கை. ஆனால் ஒரு புதிய தலைமுறை பிறந்திருக்கிறது. இதுவே மாற்றம். (ரோ. 12:2; 2 தீமோ. 3:16)

(பஸ்காவிலிருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நிலத்திற்கு நுழைவதுவரை, இஸ்ரயேலர்களில் இரண்டு தலைமுறைகள் இருந்தனர், இது விசுவாசிகளிலும் இரண்டு தலைமுறையினர்கள் இருக்கின்றனர் என்பதை குறிப்பிடுகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும் கிறிஸ்துவாக இருக்கிறார் என்பதை பார்த்தல் (உபா. 8:3; 2 தீமோ. 3:16)

(நாம் உள்சுவாசிக்கும் வார்த்தையாகிய கிறிஸ்துவால்தான் நாம் தேவனின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 6

த1 தேவன் மீது நம் அனைவருக்கும் ஒரு நேர்த்தியான பயம் இருக்க வேண்டும் (உபா. 1:12, 20)

(எதற்கும் பயப்படாத அல்லது தேவன் உட்பட எவருக்கும் பயப்படாததிருத்தல். இந்த பயமின்மை பயங்கரமானது. இது எல்லாவிதமான அக்கிரமத்தின் ஊற்றாகும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 நாம் தேவனுக்கு பயப்படும்போது நாம் அவர் வழியில் நடப்போம் (உபா. 1:12; யோவா. 14:6)

(தேவனுடைய வழியில் நடப்பது என்பது அவரை வாழ்வதாகும், அவரை வெளிகாட்டுவதாகும், அவரை வெளியரங்கமாக்குவதாகும், அவரை பெரிதாக்கிக்காட்டுவதாகும் என்பதை எடுத்துரையுங்கள்)