கிறிஸ்துவின் சரீரமாக சபையின் கட்டியெழுப்புதலுக்காகவும், இராஜ்ஜியத்தின் நிஜம் மற்றும் வெளியரங்கத்திற்காகவும், கர்த்தருடைய வருகைக்காக மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்துவதற்காகவும், நல்ல தேசத்தால் மாதிரியாகக் காட்டப்படும் சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவின்மீது உழைத்தல்.
செய்தி 1
நல்ல தேசத்திற்காக யுத்தஞ்செய்தல்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்
கொலோ. 1:12 ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கில் பங்கடைய உங்களைத் தகுதிப்படுத்திய பிதாவுக்கு நன்றிசெலுத்தி,
எபே. 6:12 ஏனெனில் நம்முடைய மல்யுத்தம் இரத்தத்திற்கும் மாம்சத்திற்கும் எதிரானது அல்ல, மாறாக, அதிபதிகளுக்கு எதிரானது, அதிகாரங்களுக்கு எதிரானது, இந்த அந்தகாரத்தின் லோகாதிபதிகளுக்கு எதிரானது, பரமண்டலங்களில் உள்ள பொல்லாத ஆவிக்குரிய சேனைகளுக்கு எதிரானது.
யாத். 23:30 நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன்.
பசிதூண்டும் வார்த்தை
கிறிஸ்துவே நம் நல்ல நிலமாக இருக்கிறார். எவ்வாறு இந்த சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை நாம் பெற முடியும்? தேவனுடைய மக்கள் கிறிஸ்துவை தங்கள் நல்ல நிலமாக எடுத்துக்கொண்டு அனுபவித்துமகிழ்வதிலிருந்து அவர்களை தடுப்பதற்கு சாத்தான் தன்னால் முடிந்தவற்றைச் செய்தான். எதிர்மறையானப் பக்கத்தில் கானான், சாத்தானின் அந்தகார இராஜ்ஜியத்தின் ஆகாயப் பகுதியை, பரலோகப் பகுதியை, சாத்தானின் சேனைகளால் நிறைந்த பரமண்டலங்களை அடையாளப்படுத்துகிறது. இன்றுவரை பொல்லாத சேனைகள் கிறிஸ்துவின் சகலத்தையும் உள்ளடக்கியதன்மையை தேவனுடைய மக்களிடமிருந்து திரையிட்டு மறைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. இஸ்ரயேல் மக்கள் நல்ல தேசத்தை உடைமையாக்கி அனுபவித்துமகிழும்படி கானானியருக்கு எதிராக யுத்தம்செய்வது, பரிசுத்தவான்கள் கிறிஸ்துவைச் சகலத்தையும் உள்ளடக்கிய தேசமாக அனுபவித்துமகிழக்கூடுமாறு “பரமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிக்குரிய சேனைகளுக்கு விரோதமாக, எல்லா அவயவங்களையும் உள்ளடக்கிய, முழுச் சபையின் ஆவிக்குரிய யுத்தத்தை மாதிரியாகக்காட்டுகிறது. நல்ல தேசத்தை நம் அனுபவமகிழ்ச்சியாக ஆக்கிரமித்துக்கொள்வதற்கு நாம் சாத்தானிய சக்தியை தோற்கடித்தாக வேண்டும்.
ஆவிக்குரிய பாரம்
இஸ்ரவேலர்கள் கானானில் நுழைந்து சண்டையிட்டதன் முக்கியத்துவத்தைப் பாராட்ட, பொதுவாக, கானானுக்கு இருமடங்கு உட்கருத்து உண்டு என்பதை நாம் உணர வேண்டும். நேர்மறையானப் பக்கத்தில், ஐசுவரியங்கள் நிறைந்த தேசமாகிய கானான், தம் ஆராய்ந்தறியமுடியாத ஐசுவரியங்களைக்கொண்ட சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை மாதிரியாகக்காட்டுகிறது. எதிர்மறையானப் பக்கத்தில் கானான், சாத்தானின் அந்தகார இராஜ்ஜியத்தின் ஆகாயப் பகுதியை, பரலோகப் பகுதியை, சாத்தானின் சேனைகளால் நிறைந்த பரமண்டலங்களை அடையாளப்படுத்துகிறது.
கிறிஸ்து நம் நல்ல தேசமாக இருக்கிறார், நாம் கிறிஸ்துவை ஆதாயமாக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் நமக்கும் நல்ல தேசத்திற்கும் இடையில் பிசாசுத்தனமான, பேய்த்தனமான சேனை இருக்கிறது; நம் அனுபவமகிழ்ச்சிக்காக நல்ல தேசத்தை நம் அனுபவ மகிழ்ச்சியாக நாம் கைப்பற்ற வேண்டுமானால், இந்தச் சாத்தானிய சேனைகளை நாம் தோற்கடித்தாக வேண்டும்
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
நாம் வேதவாக்கியங்களைக் கவனமாக வாசித்தால், நல்ல தேசத்திற்காக ஒரு யுத்தம் இருக்கிறது என்பதை நாம் பார்ப்போம்.
கானானுக்குள் இஸ்ரயேலர்கள் நுழைவது மற்றும் கானானிலுள்ள யுத்தம் ஆகியவற்றின் உட்கருத்தைப் பாராட்ட, மாதிரியியலில் கானானுக்கு இருமடங்கு உட்கருத்து உள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
தேசத்தை ஆக்கிரமித்திருந்த பல்வேறு புறவினக் கோத்திரங்கள் நம் இயற்கை ஜீவனின் வெவ்வேறு அம்சங்களை அடையாளப்படுத்துகின்றன.
ஜீவனின் அனுபவம்
நம் இயற்கை ஜீவனுக்குப் பின்னால் பொல்லாத சேனைகள் உள்ளன (ஒப். மத். 16:23, அடிக்குறிப்பு 1), இவை, நாம் சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை உடைமையாக்குவதிலிருந்தும், அவரது ஐசுவரியங்களை அனுபவித்துமகிழ்வதிலிருந்தும் நம்மைத் தடுக்க நம் இயற்கை ஜீவனின் அம்சங்களைப் பயன்படுத்துகின்றன, கையாளுகின்றன, இயக்குகின்றன. நாம் கிறிஸ்துவை உடைமையாக்குவதிலிருந்தும், அவரை அனுபவித்துமகிழ்வதிலிருந்தும் இயற்கை ஜீவன் நம்மைத் தடைசெய்வதால், நாம் அதை வெறுக்க வேண்டும் (லூக். 14:26), நாம் கிறிஸ்துவில் வளர்கையில், அதை மரணத்தில் வைக்க சித்தமாயிருக்க வேண்டும்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
ஆவிக்குரிய யுத்தம்—சாத்தானின் இராஜ்யத்திற்கும் கடவுளுடைய இராஜ்யத்திற்கும் இடையிலான யுத்தம்—அவசியம் என்பதை நாம் உணர வேண்டும். நல்ல தேசத்தை நம் அனுபவமகிழ்ச்சியாக நாம் கைப்பற்ற வேண்டுமானால், இந்தச் சாத்தானிய சேனைகளை நாம் தோற்கடித்தாக வேண்டும்.
கிறிஸ்துவை நம் அனுபவமகிழ்ச்சிக்காக உடைமையாக நாம் கைப்பற்ற வேண்டுமானால், கிறிஸ்து திரும்பிவந்து பூமியை சுதந்தரிக்குமாறு, நாம் தேவனுடைய இராஜ்ஜியத்தை ஸ்தாபித்து, பரப்பி, கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்காக, கிறிஸ்துவை அதிகமாக ஆதாயப்படுத்தக்கூடுமாறு சாத்தானிய சேனைகளுக்கு எதிராக யுத்தஞ்செய்து, அவற்றைத் தோற்கடிக்கும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையாக, ஒரு கூட்டுப் போர்வீரனாக நாம் இருந்தாக வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்—ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 கிறிஸ்துவை நிலமாக அனுபவித்துமகிழ்வதை நாசமாக்க சாத்தான் தன்னால் இயன்றதையெல்லாம் செய்வான்
(ஆதி. 7:17; எபே. 2:2)
(தேவன் வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்து சிறிது நேரம்கூட ஆகவில்லை, அவரை முறியடிக்க சாத்தான் ஒரு காரியத்தை செய்தான் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 பழைய ஏற்பாட்டிலுள்ள எல்லா யுத்தங்களும் இந்தத் துண்டு தேசத்துடன் சம்பந்தப்பட்டவைகளே (எபே. 2:2; 6:12)
(எப்போதும் தேசத்தை மீட்டுத்திருப்புவதே தேவனுடைய வேலை. எப்போதும் முறியடித்து, நாசமாக்கி, தடுத்து, ஏதாகிலும் ஒன்றைச் செய்து தேசத்தைத் தாறுமாறாக்க வேண்டும் என்பதே எதிரியின் வேலை என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 இந்த நிலத்தை அறிதல் கிறிஸ்துவின் ஒரு சித்திரமாகும் (உபா. 8:7; கொலோ. 1:12)
(தேவனால் தம் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நல்ல தேசம் கிறிஸ்துவின் ஒரு மாதிரி என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தேசம், பழைய ஏற்பாட்டின் மிக முக்கிய குவிமயமாக இருக்கிறது (உபா. 8:7; கொலோ. 1:12)
(இந்தத் தேசம், நமக்கு எல்லாமுமாக உள்ள கிறிஸ்துவின் மாதிரியாகிய, சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவின் உருவோவியம் ஆகும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 ஆகாயத்து அதிகாரத்தின் அதிபதியாகிய சாத்தான். பூமியிலுள்ள மக்கள் தேவனைத் தொடர்புகொள்வதிலிருந்தும் கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்வதிலிருந்தும் அவர்களைத் தடைசெய்கிறவனாக இருக்கிறான் (எபே. 2:2; 2 கொரி. 4:4)
(நாம் தீவிரமாய் பங்குகொள்ளவேண்டிய மிக நிஜமான ஆவிக்குரிய யுத்தம் இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 ஆவிக்குரிய யுத்தத்தில் எவ்வாறு சண்டையிட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள் (உபா. 7:2)
(இஸ்ரயேல் மக்கள் நல்ல தேசத்திற்குள் நுழைந்த பின்பு, தேசத்தை ஆக்கிரமித்திருந்த எதிரிகளாகிய கானானியரை அவர்கள் தோற்கடிக்க வேண்டியிருந்தது. இது எதை மாதிரியாகக்காட்டுகிறது?)
நாள் 4
த1 தேசத்தை ஆக்கிரமித்திருக்கிற பல்வேறு புறவின கோத்திரங்களாகிய இந்தத் தடுப்பாளர்கள் நம் இயற்கை ஜீவனின் வெவ்வேறு அம்சங்களை அடையாளப்படுத்துகின்றனர் (யாத். 23:24; கொலோ. 3:5)
(நம் இயற்கை ஜீவனுக்கு பின்னால் ஆவிக்குரிய சேனைகள் உள்ளன என்பதை எடுத்துரையுங்கள்)
த2 ஜீவனில் நம் வளர்ச்சியின் அளவிற்கு ஏற்ப நம் இயற்கை ஜீவன் படிப்படியாக துண்டிக்கப்பட வேண்டும் (யாத். 23:29-30)
(தேவன் தேசத்தை ஒரே வருடத்திற்குள்ளே முன்னின்று துரத்திவிடுவதில்லை என்பதின் உள்ளார்ந்த உட்கருத்தை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 மாதிரியியலில் கானான், சாத்தானின் அந்தகார இராஜ்ஜியத்தின் ஆகாயப் பகுதியை, பரலோகப் பகுதியை அடையாளப்படுத்துகிறது (எபே. 2:2; கொலோ. 1:13)
(எதிர்மறையானப் பக்கத்தில் கானான், பிரதான பகுதியை, சாத்தானுடைய இராஜ்ஜியத்தில் முன்னணி வகிக்கும் பகுதியை மாதிரியாக காட்டுகிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கானானின் இரண்டு குணாதிசயங்களை குறிப்பிடுங்கள் (எபே. 3:8; 6:12)
(நாம் கிறிஸ்துவை சகலத்தையும் உள்ளடக்கிய தேசமாக அனுபவித்துமகிழ முடியும் என்பது கானானியர்களால் மாதிரியாகக்காட்டப்படும் எதிரிகளை நாம் தோற்கடிப்பதோடு சார்ந்து இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 ஆவிக்குரிய யுத்தத்தின் உயர்வான பகுதி, ஆவிக்குரிய மண்டலத்தில் பொல்லாத ஆவிகளுக்கும், பேய்களுக்கும் விரோதமாய் யுத்தஞ்செய்வதாகும் (எபே. 6:10-11)
(சாத்தானுடைய இராஜ்ஜியம் பொல்லாத தூதர்களையும், பேய்களையும், விழுந்துபோன மனிதர்களையும் உள்ளடக்கியுள்ளன என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கானான் தேசத்தின் மூன்று வாயில் காவலர்களை தோற்கடித்தல் (எபே. 6:10-11)
(கானானியருக்கு எதிராக இஸ்ரயேலர் செய்த யுத்தத்தைப் பற்றிய வரலாறு நமக்கும். விழுந்துபோன தூதர்கள் மற்றும் பேய்களுக்கும் இடையே இன்று மூண்டுகொண்டிருக்கும் யுத்தத்தைப் பற்றிய ஒரு மாதிரியாக, ஒரு சித்திரமாக உள்ளது என்பதை எடுத்துரையுங்கள்)