Tamil – Prophesying Outline DST22 Week 9

1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு

செய்தி 9

கட்டியெழுப்புதலும் யுத்தம்செய்தலும் சபையின் கட்டியெழுப்புதலுக்காக ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபடுவதற்கான தேவை

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை


அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்.

நெகே. 4:17 அலங்கத்திலே கட்டுகிறவர்களும், சுமைசுமக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் ஒரு கையினாலே வேலைசெய்து, மறுகையினாலே ஆயுதம் தரித்திருந்தார்கள்.


எபே. 6:10-12 கடைசியாக, கர்த்தரிலும் அவருடைய பலத்தின் சத்துவத்திலும் வல்லமையூட்டப்படுங்கள். நீங்கள் பிசாசின் சூழ்ச்சிகளுக்கு எதிராக நிற்கத் திராணியுள்ளவர்களாய் இருக்கும்படி தேவனுடைய முழு ஆயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நம்முடைய மல்யுத்தம் இரத்தத்திற்கும் மாம்சத்திற்கும் எதிரானது அல்ல, மாறாக, அதிபதிகளுக்கு எதிரானது, அதிகாரங்களுக்கு எதிரானது, இந்த அந்தகாரத்தின் லோகாதிபதிகளுக்கு எதிரானது, பரமண்டலங்களில் உள்ள பொல்லாத ஆவிக்குரிய சேனைகளுக்கு எதிரானது.


பசிதூண்டும் வார்த்தை
ஏன் கட்டுமானம் சுத்தம் செய்வதன் மூலம் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும்?

தேவனுடைய நகரமாக சபையைக் கட்டியெழுப்புதல் எளிதான செயல் அல்ல; கட்டுமானம் யுத்தம்செய்வதன்மூலம் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும். இஸ்ரயேல் மக்கள் தங்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தபோது, எஸ்றா, நெகேமியா, மற்றும் மற்றவர்கள் கடும் யுத்தத்தின்மூலம் ஆலயத்தையும் பரிசுத்த நகரத்தையும் மறுபடிகட்ட எழும்பினார்கள். நெகேமியாவோடு கட்டுதலில் வேலைசெய்த இஸ்ரயேலர்கள் கட்டுவதற்கு ஒரு கையில் உழைத்தார்கள், யுத்தம்செய்ய மறுகையில் ஆயுதம் ஏந்தினார்கள். நாம் தேவனுடைய கட்டிடத்தில் உழைக்கும்போதெல்லாம், நாம் நிச்சயமாக யுத்தத்தில் ஈடுபடுவோம் என்பதை இது வெளிப்படுத்துகிறது. தேவனுடைய குடியிருப்பின் கட்டியெழுப்புதலைப் பொருத்தவரை, தேவனுக்கும் அவரது எதிரிக்கும் இடையே ஒரு நிஜமான மோதல், ஒரு தீவிர யுத்தம் நிலவுகிறது. தேவனுடைய குடியிருப்பின் கட்டுமானம், ஒரு நல்ல முறையில் தொடர்ந்து நடைபெறுவதைப் பார்க்க எதிரி வெறுக்கிறான். இடையூறுசெய்து, குறுக்கிட்டு, தாக்கி, அழிக்கும்படி, தன்னால் செய்ய முடிந்ததையெல்லாம் சாத்தான் செய்வான். யுத்தம் இல்லாமல், யுத்தத்தின் ஆவி இல்லாமல், கட்டிடம் இல்லை; கட்டுதல் கடும் யுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது.

 

ஆவிக்குரிய பாரம்

கிறிஸ்துவின் சரீரமாக தேவாலயத்தைக் கட்டியெழுப்புவதற்கு, நான்கு கோட்பாடுகளின்படி நிறைவேற்றப்படும் ஆவிக்குரிய யுத்தத்தின் தேவை உள்ளது – மாம்ச ஆயுதங்களைப் பயன்படுத்தாமல், பரமேறும் நிலையை வைத்து, எதிரியின் கோட்டையைத் தூக்கி எறியக் கூடிய வல்லமையுடைய ஆவிக்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்துதல், ஜெபம் ஒரு யுத்தம் என்று புரிந்துக் கொள்ளுதல், தேவனுடைய சிங்காசனம் மற்றும் பரலோக மண்டலத்திலிருந்து யுத்தத்தின் ஜெபத்தைச் செய்தல்.

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

நெகேமியா 4ஆம் அதிகாரம், நகரத்தை மறுபடிகட்டுவதில் எதிரி செய்யும் இடையூறை விளக்குகிறது.

தேவனுடைய நகரமாக சபையைக் கட்டியெழுப்புதல் எளிதான செயல் அல்ல. கட்டுமானம் யுத்தம்செய்வதன்மூலம் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும்.

கிறிஸ்துவின் சரீரமாக சபையின் கட்டியெழுப்புதலுக்கு, ஆவிக்குரிய யுத்தத்திற்கான தேவை இருக்கிறது. ஆவிக்குரிய யுத்தத்திற்கு, கிறிஸ்துவின் வெற்றி அடிப்படையாக இருக்கிறது. ஆவிக்குரிய யுத்தம், கிறிஸ்துவின் சரீரத்திற்குட்பட்ட காரியமாக இருக்கிறது; நாம் சரீரத்தில் யுத்தஞ்செய்ய வேண்டும்.

 

ஜீவனின் அனுபவம்

நாம் பரலோக மண்டலத்தில் இருந்தால், நாம் பரமேறுதலில் உள்ள ஜெபங்களை, யுத்தத்தின் ஜெபங்களைச் செய்ய முடியும். நாம் பலப்படுத்தப்படும்போது, புதிதாக்கப்படுகிறோம்; நாம் புதிதாக்கப்படும்போது, நிரப்பப்படுகிறோம்; நாம் நிரப்பப்படும்போது, யுத்தஞ்செய்ய தரிப்பிக்கப்படுகிறோம்; யுத்தஞ்செய்யும் ஆவியில்தான், நாம் ஆவிக்குரிய யுத்தத்திற்குரிய யுத்தம்செய்யும் ஜெபங்களைச் செய்கிறோம்.

ஆவிக்குரிய யுத்தம், கிறிஸ்துவின் சரீரத்திற்குட்பட்ட காரியமாக இருக்கிறது: நாம் சரீரத்தில் யுத்தஞ்செய்ய வேண்டும். யுத்தஞ்செய்ய, நாம் சரீரத்தின் நிஜத்தில் இருக்க வேண்டும்.

தேவனுடைய பொருளாட்சியின் முழுமையான நிறைவேற்றுவதற்காக கிறிஸ்துவின் சரீரத்தை தேவனுடைய மகிமைக்கென்று தேவனுடைய வீடாகவும் தேவனுடைய ஆளுகைக்கென்று தேவனுடைய இராஜ்ஜியமாகவும் கட்டியெழுப்புவதற்கு தேவனுடைய முழு ஆயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்ள எந்தச் சமயத்திலும் ஆவியில் ஜெபித்து, யுத்தஞ்செய்கிற ஜெபங்களால் சரீரத்தில் யுத்தம் செய்வதன்மூலம், நாம் பிசாசின் சூழ்ச்சிகளுக்கு எதிர்த்து நிற்க வேண்டும்.

 

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1

த1 கர்த்தர் அவர்களுக்காக போராடுவார் என்று நம்பும்படி நெகேமியா மக்களை ஊக்குவித்தார்
(நெகே. 4:14, 16)

(ஒரு கையால் வேலை செய்துக்கொண்டு மறு கையால் ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டு சிலர் மதில்களை கட்டியதற்கு சிலர் சுமைகளை ஏற்றிக்கொண்டு சென்றதற்கு நெகேமியா தலைமை வகுத்தான் என்பதை எடுத்துரையுங்கள்.)

த2 நமது அன்றாட வாழ்க்கையின் மிகச்சிறிய காரியங்களில்கூட யுத்தம் இருக்கிறது (நெகே. 4:17; எபே. 6:10-11)

(நமக்குப் போராடுகின்ற மனப்பாங்கு இருக்க வேண்டும். நாம் ஒரு வேலையை செய்தாலும் நாம் கர்த்தருக்காக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 2

த1 யுத்தம் இல்லாமல் யுத்தத்தின் ஆவி இல்லாமல் கட்டிடம் இல்லை (நெகே. 4:16-17; மத். 16:18)

(நாம் கட்டிடத்தைத் தொட்டவுடன் எதிரி தாக்குவதற்கும் தடை செய்வதற்கும் வருவான் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 யுத்தம் செய்கின்ற ஜெபம் நம்மிடம் இருக்க வேண்டும் (நெகே. 4:2-3; 6:2; 4:10-12; எபே.6:10-11)

(நெகேமியா புத்தகத்திலிருந்து எதிரியின் தாக்குதலுக்கு மூன்று அம்சங்கள் இருப்பதை நம்மால் பார்க்க முடியும் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 3

த1 ஆவிக்குரிய யுத்தத்தின் ஆரம்பப் புள்ளி சாத்தானோடு இடைபடுவதல்ல மாறாக கர்த்தர் வென்றுவிட்டார் என்று அவரில் நம்புவதாகும் (எபி. 2:14; கொலோ. 2:15)

(ஏன் ஆவிக்குரிய யுத்தம் தற்காப்புக்கானது தாக்குவதற்கல்ல என்பதை எடுத்துரையுங்கள்)

த2 சபையின் கட்டுமானம் யுத்தத்தைப் பற்றிய காரியமாகும் (மத். 16:18-19)

(பெந்தெகொஸ்தே நாளில் கர்த்தர் சபையை கட்டத் தொடங்கியவுடன் யுத்தம் ஆரம்பித்தது என்பதை எடுத்துரையுங்கள்.)

 

நாள் 4

த1 சாத்தானிடம் அவனுடைய இருளின் இராஜ்ஜியம் இருக்கிறது. சாத்தான் உச்சியில் இருக்கிறான். அவனுக்கு கீழே கலகத்தனமான தூதர்கள் இருக்கிறார்கள் (எபே. 6:12-13)

(நம் யுத்தம் மனிதர்களுக்கு எதிரானது அல்ல, மாறாக வானமண்டலங்களிலுள்ள பொல்லாத சக்திகளான பொல்லாத ஆவிகளுக்கு எதிரானது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 ஆவிக்குரிய யுத்தம் சரீரத்தைப் பற்றிய காரியமாகும் (எபே. 1:22-23)

(நாம் தனிப்பட்ட விதத்தில் அல்ல மாறாக சரீரத்திலேயே ஆவிக்குரிய யுத்தம்செய்ய வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 5

த1 நாம் மாம்சத்துக்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாது (2 கொரி. 1:3-5)

(நடைமுறை வழியில் ஆவிக்குரிய யுத்தத்தை நாம் அனுபவிக்கும்போது, முதல் அடிப்படைக் கோட்பாட்டை எடுத்துரைங்கள்)

த2 பரமேறுதலின் நிலையை காத்துக் கொள்ளுதல் (எபே. 2:6)

(நடைமுறை வழியில் ஆவிக்குரிய யுத்தத்தை நாம் அனுபவிக்கும்போது இரண்டாம் அடிப்படைக் கோட்பாட்டை எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

த1 யுத்தஞ்செய்யும் ஜெபங்களை செய்வது (மத். 6:9-10, 13)

(நடைமுறை வழியில் ஆவிக்குரிய யுத்தத்தை நாம் அனுபவிக்கும்போது, நான்காம் அடிப்படைக் கோட்பாட்டை எடுத்துரைங்கள்)

த2 மாபெரும் மதிப்புவாய்ந்த ஜெபங்கள் பரமேறுதலிலுள்ள ஜெபங்கள் ஆகும் (எபே. 2:6; 6:18)

(நாம் சுவிசேஷத்தை பிரசங்கிப்பது மட்டுமே போதுமானதல்ல, தேவனுடைய பரலோக அதிகாரம் கீழே பூமிக்கு கொண்டுவரப்படக் கூடுமாறு நாம் தேவனிடம் ஜெபித்தாக வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)