1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு
செய்தி 7
நெகேமியா-தேவனுக்கு காலகட்ட மதிப்புள்ளவனின் ஒரு முன்மாதிரி
தீர்க்கதரிசன கூடுகை ஆரம்ப வார்த்தை
அனுதின நாளில் உள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பிலுள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
வெளி. 12:5 சகல தேசங்களையும் இரும்புக்கோலால் மேய்த்துப்பேணப் போகும் ஒரு குமாரனை, ஓர் ஆண்- பிள்ளையை அவள் பெற்றெடுத்தாள். அவளுடைய பிள்ளை தேவனிடமும் அவருடைய சிங்காசனத்திடமும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
நெகே. 13:14 என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்.
நெகே. 2:17 எருசலேம் பாழடைந்திருக்கிறது, அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கின்றன….எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள்.
பசிதூண்டும் வார்த்தை
நெகேமியா தேவனுக்குக் காலகட்ட மதிப்புள்ளவனின் ஒரு முன்மாதிரியாக இருப்பதன் உதாரணம் என்ன என்பதை எடுத்துரையுங்கள்?
நெகேமியா தன் இயற்கையான மனிதனில் வாழவில்லை, மாறாக உயிர்த்தெழுதலில் வாழ்ந்தான். அவன் ஆக்ரோஷமாக இருந்தான், ஆனால் அவனது ஆக்ரோஷம் மற்ற குணாம்சங்களுடன் இணைந்து சென்றது. முதலாவது, அவன் தேவனை நேசித்தான். அவன் (கிறிஸ்துவை அடையாளப்படுத்துகிற) பரிசுத்த தேசம், (சபையை அடையாளப்படுத்துகிற) பரிசுத்த ஆலயம், மற்றும் (தேவனுடைய இராஜ்ஜியத்தை அடையாளப்படுத்துகிற) பரிசுத்த நகரத்தையும் நேசித்தான். தேவனை நேசித்த ஒரு நபராக நெகேமியா தேவனைத் தொடர்புகொண்டவனாக இருந்தான். நெகேமியா தேவனிடம் ஜெபித்தான் என்று நமக்குப் பலமுறை கூறப்படுகிறது, மேலும், நெகேமியா தேவனில் நம்பிக்கை வைத்து, அவருடன் ஒன்றானான்.
நெகேமியா, ஓர் இராஜாவின் ஸ்தானத்திலுள்ள, ஆளுநராக, தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்றுவதில் எருசலேமின் மதிலை மறுபடிகட்டுவதற்காக ஒரு தூய்மையான இருதயமுள்ள மனிதனாக இருந்தான்; தேவனுடைய மக்களிடையே ஒரு வழிநடத்துபவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவன் ஒரு முன்மாதிரியாக இருந்தான்.
நெகேமியா ஓர் ஆளுநராக இருந்தபோதிலும், அவன் முற்றிலும் இலட்சியப் பேராவலற்றவனாக இருந்தான்; இது, தேசத்தை மறுகட்டமைப்பு செய்வதில், தேவனுடைய மக்களை தேவனின் வார்த்தையால் மறுகட்டமைப்பு செய்ய தனக்கு எஸ்றா தேவை என்பதை அவன் உணர்ந்திருந்தான் என்ற உண்மையின்மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆவிக்குரிய பாரம்
ஆண்-பிள்ளை என்பது சபையின் சார்பாக நின்று, முழுச் சபையும் எடுக்க வேண்டிய நிலைப்பாட்டை எடுத்து, சபைக்காக வேலைசெய்கிற ஜெயங்கொள்பவர்களை உள்ளடக்குகிறது. கர்த்தருடைய மீட்டுத்திருப்புதல் இன்று தேவனுடைய பொருளாட்சியின் நடைமுறையாக்கம் ஆகும், அவருடைய பொருளாட்சி ஆண்- பிள்ளையால் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும்.
இன்று கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் நேர்த்தியான ஆக்ரோஷம் கொண்டிருக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. இந்த எதிர்ப்பாளர்களின் ஏளனஞ்செய்தல், இழிவாகக் கருதுதல், மற்றும் நிந்தித்தலைப் பொருத்தவரை, நெகேமியா மிகத் தூய்மையாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்தான், கோழையாக இல்லை. நெகேமியா தன் இயற்கை மனிதனில் வாழவில்லை, மாறாக உயிர்த்தெழுதலில் வாழ்ந்தான். தேவனை நேசித்த ஒரு நபராக, நெகேமியா ஐக்கியத்தில் தேவனைத் தொடர்புகொள்ள தேவனிடம் ஜெபித்தான். நெகேமியா தேவனில் நம்பிக்கைவைத்தான், அவன் தேவனுடன் ஒன்றாகவேகூட ஆனான். இதன் விளைவாக, அவன் தேவனின் பிரதிநிதியானான்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
தேவனுடைய வாஞ்சை, இந்த யுகத்தை முடித்து இராஜ்ஜியத்தின் யுகத்தைக் கொண்டுவருவது ஆகும்; தேவன் இதை நிறைவேற்றுவதற்கு, அவரிடம் அவரது காலகட்ட கருவி இருந்தாக வேண்டும்.
சபை தேவனுடைய குறிக்கோளை அடையவில்லை என்பதால், தம் குறிக்கோளை அடைந்து, தம் கோரிக்கையை நிறைவேற்றும் ஒரு கூட்ட ஜெயங்கொள்பவர்களைத் தேவன் தேர்ந்தெடுப்பார்; இதுவே ஆண்-பிள்ளையின் கோட்பாடு.
எழுபது ஆண்டுகளாக இஸ்ரயேல் சிறைபிடிக்கப்பட்டிருந்தபோது, மெய்யான ஜெயங்கொள்பவனாக இருந்த நெகேமியாவின் காரணமாக தேவனுக்கு இன்னும் ஒரு காலகட்ட நகர்வு இருந்தது; தேவனுக்குக் காலகட்ட மதிப்புள்ள ஒருவனுக்கு அவன் ஒரு முன்மாதிரி.
ஜீவனின் அனுபவம்
ஆண்-பிள்ளையின் முழு ஆள்தத்துவமும் கிறிஸ்துவின் மூலக்கூறினால் பூரிதமாக்கப்பட்டு, ஊடுருவி, வியாபிக்கப்பட்டு இருக்கிறது, ஏனென்றால் கிறிஸ்து தம்மையே அவர்களுடைய இருதயங்களுக்குள் கட்டியெழுப்பக்கூடுமாறு அவர்கள் தினமும் தங்கள் உள்ளான மனிதனுக்குள்ளாகப் பலப்படுத்தப்படுகிறார்கள், கிறிஸ்துவின் ஆராய்ந்தறிய முடியாத ஐசுவரியங்களால் போஷிக்கப்படுகிறார்கள், அதோடு, கிறிஸ்துவைத் தேவனுடைய முழு ஆயுதவர்க்கமாகத் தரித்திருக்கிறார்கள்.
நம் ஜீவனாகிய கிறிஸ்துவை நாம் உணர்ந்தறிந்து அனுபவித்து-மகிழும்போது, தேவனுடைய வீடாகிய சபை நம்மிடம் இருக்கிறது; நாம் கூடுதலாகச் சென்று, அவரது தலைமைத்துவத்தை உணர்ந்தறிந்தால், அந்த வீடு தேவனுடைய இராஜ்ஜியமாகிய நகரமாக இருக்கும்படி பெரிதாக்கப்படும்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
நாம் தேவனுக்குக் காலகட்ட மதிப்புள்ளவர்களாக இருக்குமாறு நாமனைவரும் கர்த்தரை நோக்கிப் பார்த்து ஜெபிக்க வேண்டும். நாம் மூன்று காரியங்களிடமாய் முன்னோக்கி வரவேண்டும்: மகா பரிசுத்த ஸ்தலத்திடம், கிருபாசனத்திடம், மற்றும் தேவனிடம்; பின்வாங்காதீர்கள் – முன்நோக்கி வாருங்கள்.
நமது இயற்கையான திறமை, ஆற்றல் மற்றும் நற்பண்புகள் கிறிஸ்துவின் சிலுவையின் வழியாகக் கடந்து, மூவொரு தேவனின் முழுநிறைவாக ஆவியானவருக்குள், அவரது பொருளாட்சியை நிறைவேற்றுவதில் அவருக்குப் பயனுள்ளதாக இருக்க உயிர்த்தெழுதலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
இந்த யுகத்தை மாற்றுவதற்காக, தேவனை ஆதாயப்படுத்துவதற்கும் தேவனை மற்றவர்களிடம் பாய்ந்தோடச்செய்வதற்கும் நாம் ஒரு முன்மாதிரியாக இருக்கும்படி, நாம், குறிப்பாக சபைகளில் முன்னின்று வழிநடத்துபவர்கள், அவனுடைய முன்மாதிரியைப் பரிசீலிப்பது நிச்சயமாகப் பயனுள்ளது.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 ஆண்-பிள்ளை எடுத்துக் கொள்ளப்படுதல், சபையின் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து இராஜ்யத்தின் யுகத்தைக் கொண்டுவருகிறது (வெளி. 12:10-11)
(தேவனின் மிக முக்கியமான காலகட்ட நகர்வு வெளிப்படுத்துதல் 21இல் இருக்கிறது என்று ஏன் கூறப்பட்டுள்ளது?)
த2 ஜெயங்கொள்பவனாக இருப்பது பிரதானமாக உபத்திரவத்திற்குத் தப்பித்துக்கொள்வதற்காக இல்லை. (வெளி. 12:5)
(எடுத்துக்கொள்ளப்படுதல் நமக்கல்ல, கர்த்தருக்கு எவ்வளவு மதிப்புடையது என்பதை நாம் பார்க்க வேண்டுமென்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 பெண்ணின் வித்து முக்கியமாக மரியாளிடத்தில் பிறந்த கர்த்தராகிய இயேசுவே (ஆதி.3:15)
(ஆதியாகமம் 3:15 இலுள்ள பெண் யாரைக் குறிப்பிடுகிறாள் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கர்த்தராகிய இயேசுவும் அவரது ஜெயங்கொள்பவர்களும் ஆண் பிள்ளையைத் தொகுக்கிறார்கள் (வெளி 20:4)
(இந்த ஆண் பிள்ளை ஒரு தனி நபர் அல்ல; அவன் கூட்டானவன் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1
சிலுவையில் சாத்தான் நியாயம் தீர்க்கப்படுகிறான்.ஆனால் இந்த நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும் (வெளி. 12:10)
(தேவனுடைய தண்டனைத் தீர்ப்பைச் சாத்தான் மேல் நிறைவேற்றும்படி சபையின் நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ள ஜெயங்கொள்பவர்கள் எழும்பியாக வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 வெளிப்படுத்தல் 12இலுள்ள ஆண்- பிள்ளை, சபையின் நிமித்தம் நிற்கிற ஜெயங்கொள்பவர்களால் தொகுக்கப்பட்டிருக்கிறது (வெளி. 12:10-11)
(ஜெயங்கொள்பவர்கள் முழுச் சபையும் எடுக்க வேண்டிய நிலையை எடுத்து சபைக்காக வேலை செய்ய வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 பூமியிலுள்ள தேவனுடைய வீட்டிற்கு, அந்த வீட்டைப் பாதுகாப்பதற்கும் அவருடைய பொருளாட்சியை நிறைவேற்றுவதற்கும் அவருடைய இராஜ்ஜியம் தேவை (மத் . 16:18-19)
( நெகேமியா புத்தகத்தின் அதிமுக்கியமான குறிப்பு என்ன )
த2 வரலாற்றினூடாக, தேவனால் பயன்படுத்தப்பட்ட அனைவரும் ஆக்ரோஷமான நபர்களாக இருந்துள்ளனர் (நெகே. 2:17; மத். 16:18-19)
(நெகேமியா மிகவும் ஆக்ரோஷமானவர். அவர் நிச்சயமாக கோழையாக இல்லை என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 நெகேமியா, இராஜாவுக்கு ஒரு வேலைkkafகாக காரணமாக இருந்தபோதிலும், தேவனுக்கு தன்னையே மனமுவந்து அர்ப்பணிப்பதற்கு ஆக்ரோஷமுள்ளவனாக இருந்தான் (நெகே. Cc2:17; 1 தெச. 2:2)
(பலர் தங்கள் இயற்கையான திறன் மற்றும் இயற்கையான நற்பண்புகளுக்கு ஏற்ப தேவனால் தற்காலிகமாக பயன்படுத்தப்பட்டனர் என்பதை மாதிரியியலில் ஆவிக்குரிய உட்கருத்தை எடுத்துரையுங்கள்)
த2 நம் ஆற்றல் கிறுக்கித்தள்ளப்பட்டு, அதன்பின் உயிர்த்தெழுதலுக்குள் கொண்டுவரப்படவேண்டும்
(யாத். 3:2-6; 1 தெச. 2:2)
(உயிர்த்தெழுதலில் உள்ள நம் திறமையும், ஆற்றலும், நற்பண்புகளும் இயற்கையான ஜீவனில் இருந்ததை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 நெகேமியா தன் இயற்கையான மனிதனில் வாழவில்லை, மாறாக உயிர்த்தெழுதலில் வாழ்ந்தான்.(நெகே.1:4b; 13:14)
(நெகேமியாவின் ஆக்ரோஷத்தோடு இணைந்து சென்ற குணம்சங்களை எடுத்துரையுங்கள்)
த2 நெகேமியா, மனித வரலாற்றிலேயே அதிநேர்த்தியான வழிநடத்துபவனாக, அதிசிறந்த வழிநடத்துபவனாக இருந்தான், அதோடு அவன், ஒரு மூப்பன் என்னவாக இருக்க வேண்டும் என்பதன் அதிசிறந்த எடுத்துக்காட்டாகவும் இருந்தான்.(நெகே.5:19; 1 பேது.5:3)
(நெகேமியா ஒரு நல்ல முன்மாதிரி என்பதை உதாரணங்களோடு எடுத்துரையுங்கள்)