Tamil – Prophesying Outline DST22 Week 4

1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு

செய்தி 4

தேவனுடைய தீர்க்கதரிசிகளின் தெய்வீக ஊக்கப்படுத்துதல்மூலம் தேவனுடைய வீட்டின் கட்டுமானத்தின் மீட்டுத்திருப்புதல்

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை


அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்

ஆகாய் 1:8 நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதன் பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதில் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சகரியா 3:9 இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி இந்தத் தேசத்தில் அக்கிரமத்தை ஒரேநாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

சகரியா 4:10 … பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.

 

பசி தூண்டும் வார்த்தை

மீட்டுத்திருப்பப்பட்ட ஆலயத்தை தேவனின் வீடாக மறுபடிகட்டுவதில் (ஆசாரியத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்) யோசுவா, (அரசத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்) செருபாபேல் ஆகிய இருவரும் சற்று பலவீனமடைந்து ஊக்கமிழந்தனர்; எந்த இரண்டு தீர்க்கதரிசிகளை தேவன் பயன்படுத்தினார் மற்றும் இந்த இரண்டு புத்தகங்களின் மைய வெளிப்பாடு என்ன?

தேவனுக்காக பேச, யோசுவா மற்றும் செருபாபேலை ஊக்கப்படுத்த, பலப்படுத்த தேவன் ஆகாய் மற்றும் சகரியா தீர்க்கதரிசிகளை பயன்படுத்தினார்.

ஆகாயின் தீர்க்கதரிசனத்தின் மைய எண்ணம், தேவனின் ஆலயத்தை, அதாவது, தேவனின் வீட்டை கட்டியெழுப்புவது இன்று தேவனுடைய மக்களின் நலனோடும், மறுசீரமைப்பின யுகத்தில் அதின் மேசியாவுடனான ஆயிரவருட இராஜ்ஜியத்தின் வருகையோடும் தொடர்புடையது என்பதாகும்

சகரியா புத்தகமானது, விளக்குத்தண்டின் ஏழு விளக்குகள் மூவொரு தேவனின் முழு வெளியாக்கத்திற்காகவும் தேவனுடைய வீட்டின் மறுகட்டுமானத்திற்காகவும் யெகோவாவின் ஏழு கண்களாக, மீட்கும் செம்மறிக்குட்டியானவரின் ஏழு கண்களாக, கட்டுமானக் கல்லின்ஏழு கண்களாக ஏழுமடங்கு அதிதீவிரப்படுத்தப்பட்ட ஆவியாகிய தேவனின் ஏழு ஆவிகள் என்று வெளிப்படுத்துகிறது.

 

ஆவிக்குரிய பாரம்

தேவனுடைய வீட்டைக் கட்டியெழுப்புவதின் மீட்டுத்திருப்புதலைப் பொருத்தவரை, நாம் நடுநிலையாக இருக்க முடியாது; நாம் முழுமனதாக இருக்க வேண்டும். தேவனுடைய வீட்டைக் கட்டியெழுப்புவதின் மீட்டுத்திருப்புதலுக்காக தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தங்கள் ஆவியில் கிளர்ந்தெழுப்பப்பட்டு, புறப்பட்டுவந்து யெகோவாவின் வீட்டில் வேலைசெய்தார்கள்; கர்த்தருடைய கட்டளைக்கு நாம் மாறுத்தரமளிப்பதில், நாம் அனைவரும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையாகிய கர்த்தரின் வீட்டைக் கட்டியெழுப்புவதற்காக சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல், புதிய விசுவாசிகளுக்கு உணவூட்டுதல், மற்றவர்களுக்கு அக்கறைப்படுதல் என்ற வேலையில் கர்த்தராகிய இயேசுவால் ஆக்கிரமிக்கப்பட வேண்டும்.

தேவனுடைய கட்டிடம் முழுமையாக்கப்பட, நம்மை உற்றுக்கவனிக்கவும், ஆராயவும், தேவனுடைய கட்டிடத்திற்கான கிறிஸ்துவின் சாராம்சம், ஐசுவரியங்கள், பாரம் ஆகியவற்றை நமக்குள் உட்செலுத்தவும், உட்கடத்தவும் ஏழுமடங்கு அதிதீவிரப்படுத்தப்பட்ட ஆவியானவர், மீட்கும் செம்மறிக்குட்டியானவராகவும், கட்டுமானக் கல்லாகவும் கிறிஸ்துவின் கண்களாக இருக்கிறார்.

 

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

மீட்டுத்திருப்பப்பட்ட ஆலயத்தை தேவனின் வீடாக மறுபடிகட்டுவதில் (ஆசாரியத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்) யோசுவா, (அரசத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்) செருபாபேல் ஆகிய இருவரும் சற்று பலவீனமடைந்து ஊக்கமிழந்தனர்; ஆகவே, யோசுவாவையும் செருபாபேலையும் பலப்படுத்தவும் அவர்களுக்கு உதவவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் தேவன் தமக்காகப் பேசுவதற்குத் தீர்க்கதரிசிகளான ஆகாயையும் சகரியாவையும் பயன்படுத்தினார்.

ஆகாய் தீர்க்கதரிசனத்தின் மைய எண்ணம், தேவனின் ஆலயத்தை, அதாவது, தேவனின் வீட்டை கட்டியெழுப்புவது இன்று தேவனுடைய மக்களின் நலனோடும், மறுசீரமைப்பின யுகத்தில் அதின் மேசியாவுடனான ஆயிரவருட இராஜ்ஜியத்தின் வருகையோடும் தொடர்புடையது என்பதாகும்.

சகரியா புத்தகமானது, விளக்குத்தண்டின் ஏழு விளக்குகள் மூவொரு தேவனின் முழு வெளியாக்கத்திற்காகவும் தேவனுடைய வீட்டின் மறுகட்டுமானத்திற்காகவும் யெகோவாவின் ஏழு கண்களாக, மீட்கும் செம்மறிக்குட்டியானவரின் ஏழு கண்களாக, கட்டுமானக் கல்லின் ஏழு கண்களாக ஏழுமடங்கு அதிதீவிரப்படுத்தப்பட்ட ஆவியாகிய தேவனின் ஏழு ஆவிகள் என்று வெளிப்படுத்துகிறது.

 

ஜீவனின் அனுபவம்

தேவனுடைய கட்டிடம் முழுமையாக்கப்பட, நம்மை உற்றுக்- கவனிக்கவும், ஆராயவும், தேவனுடைய கட்டிடத்திற்கான கிறிஸ்துவின் சாராம்சம், ஐசுவரியங்கள், பாரம் ஆகியவற்றை நமக்குள் உட்செலுத்தவும், உட்கடத்தவும் ஏழுமடங்கு அதிதீவிரப்படுத்தப்பட்ட ஆவியானவர், மீட்கும் செம்மறிக்குட்டியானவராகவும், கட்டுமானக் கல்லாகவும் கிறிஸ்துவின் கண்களாக இருக்கிறார்.

அதிபெரிய அளவில் மறுசாயலாகுதலை அனுபவமாக்குபவன் கர்த்தருக்கு முழுமையாகத் திறந்திருக்கிறவனே; கிறிஸ்துவின் தேடும் விசுவாசிகளுக்குள் ஏழுமடங்கு அதிதீவிரமாக்கப்பட்ட ஆவியின் செயல்பாட்டின்மூலம், அவர்கள் புதிய எருசலேமை முழுநிறைவாக்கும் கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்ப ஜெயங்கொள்பவர்களாக ஆகும்படி அதிதீவிரமாக்கப்படுகிறார்கள்.


பயிற்சி மற்றும் பிரயோகம்

தேவனுடைய வீட்டைக் கட்டியெழுப்புவதின் மீட்டுத்திருப்புதலுக்காக, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தங்கள் ஆவியில் கிளர்ந்தெழுப்பப்பட்டு, புறப்பட்டுவந்து யெகோவாவின் வீட்டில் வேலைசெய்தார்கள்; கர்த்தருடைய கட்டளைக்கு நாம் மாறுத்தரமளிப்பதில், நாம் அனைவரும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையாகிய கர்த்தரின் வீட்டைக் கட்டியெழுப்புவதற்காக சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல், புதிய விசுவாசிகளுக்கு உணவூட்டுதல், மற்றவர்களுக்கு அக்கறைப்படுதல் என்ற வேலையில் கர்த்தராகிய இயேசுவால் ஆக்கிரமிக்கப்பட வேண்டும்.

நாமெல்லோரும் தேவனை நம்மிலிருந்து மற்றவர்களுக்குள் ஊற்றிவிடுகிற ஒலிவ மரங்களாக இருக்க வேண்டும்.பொன்னான புதிய எருசலேமின் கட்டுமானத்திற்கான ஒரு தூய பொன் விளக்குத்தண்டாக நாம் ஆவதற்கு, நாம் அதிக பொன்னை, அதாவது, தேவனின் தெய்வீக சுபாவத்தில் இன்னும் அதிகளவு தேவனை ஆதாயப்படுத்துவதற்கு நாளுக்கு நாள் நாம் விலைசெலுத்த வேண்டும்.

 

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள் — ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1

த1 பழைய ஏற்பாட்டில் தேவனுடைய வீடு அல்லது ஆலயம் கிறிஸ்துவின் ஒரு மாதிரியாகவும் பின்னர் சபையின் மாதிரியாகவும் இருந்தது (யோவா.2:19-21; 1 தீமோ. 3:15)

(ஆகாய் புத்தகத்தின் மைய கருத்து என்ன?)

த2 தேவனின் விருப்பத்திற்காக சில மணி நேரங்களை சேமித்து வைக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும் (ஆகாய். 1:4, 8)

( நாம் சபையை புறக்கணித்தால் நாம் எவ்வளவு புசித்தாலும் அல்லது பருகினாலும்சரி அல்லது நமக்கு நாமே எவ்வளவு நன்றாக ஆடை அணிந்தாலும்சரி, திருப்தியே இருக்காது என்பதை எடுத்துரையுங்கள்)


நாள் 2

த1 தேவனுடைய மக்கள் அவர்களுடைய ஆவியில் கிளர்ந்தெழுப்பப்பட்டார்கள் மற்றும் அவர்கள் வந்து யெகோவாவின் வீட்டில் வேலை செய்தார்கள் (ஆகாய். 1:13-14; யோவா. 21:15-17)

( கிறிஸ்துவின் சரீரமாகிய சபையாகிய கர்த்தருடைய வீட்டை கட்டியெழுப்புவதற்கு நம்மால் இயன்ற அம்சங்களை எடுத்துரையுங்கள்)

த2 கிறிஸ்து மெய்யாகவே அனைத்து மனுக்குலத்தின் வாஞ்சையாக இருக்கிறார்

(அவிசுவாசிகள் உட்பட எல்லா மக்களும் அறியாமலேயே கிறிஸ்துவை வாஞ்சிக்கிறார்கள் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 3
த1 ஆலயத்தின் கட்டுமானம் நிறைவடைந்த பிறகு கர்த்தரின் மகிமை திரும்பி வந்தது (ஆகாய். 2:7, 9)

(சபையில் கட்டியெழுப்பப்படுவதற்கான கிருபை நம்மிடம் இருந்தால் மகிமையின் தேவன் நம் மத்தியில் வாழ்வார் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 சபை வாழ்க்கையில் தீர்மானங்கள் வெறுமனே மக்களின் வசதிக்கு அல்ல, முதன்மையாக கர்த்தருடைய மகிமைக்கு அக்கறை செலுத்த வேண்டும் (எசே. 43:4; 47:1)

( “கர்த்தருடைய மகிமை கீழ்த்திசைக்கு எதிரான வாசல் வழியாய் ஆலயத்திற்குள் பிரவேசித்தது” (எசேக். 43:4) மற்றும் நதி வீட்டிலிருந்து புறப்பட்டு கிழக்கு நோக்கி பாய்ந்தோடுகிறது (எசேக். 47:1இலுள்ள ஆவிக்குரிய உட்கருத்தின் ஒற்றுமைகளை எடுத்துரையுங்கள்)

 

நாள் 4

த1 கிறிஸ்துவினுடைய ஏழு கண்கள் தேவனுடைய ஏழு ஆவிகளாக இருக்கிறது (சக. 3:9; 4:10; வெளி. 5:6)

(தேவனுடைய நித்திய வாசஸ்தலமாகிய, புதிய எருசலேமின் கட்டியெழுப்புதலுக்காக தேவனுடைய மக்களுக்குள் தெய்வீக ஜீவனை உட்பகிர்வதே ஏழு ஆவிகளின் செயல்பாடாகும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 நாம் இரண்டு ஆவிகளை கொண்டிருக்கிறோம், தேவனுடைய ஆவி மற்றும் நம் மனித ஆவி (யோவா. 4:24; நீதி. 20:27)

(கர்த்தருடைய ஆவி உள்ளான அறைகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் என்பதை அனுபவங்களோடு எடுத்துரைங்கள்)

 

நாள் 5
த1 களிமண் மனிதன் கிறிஸ்துவின் சாயலாக மறுசாயலாக்கப்படுவான் (2 கொரி. 3:18)

(அதிபெரிய அளவில் மறுசாயலாகுதலை அனுபவமாக்குபவன் கர்த்தருக்கு முழுமையாக திறந்திருக்கிறவனே என்பதை எடுத்துரைங்கள்)

த2 தேவனுடைய நிர்வாகத்தை செயல்படுத்துவதற்காக இன்று ஏழு ஆவிகள் இந்த பூமியில் எரிந்துக் கொண்டிருக்கின்றன (நீதி. 20:27; வெளி.4:5)

(தேவனுடைய பொருளாட்சியைச் செயல்படுத்துவதில் எரிந்துகொண்டிருக்கும் அக்கினி ஜூவாலையின் குறிக்கோள் பொன் விளக்குத்தண்டுகளாகிய, சபைகளை வெளிக்கொணர்வதாகும் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

த1 இரண்டு எண்ணெயின் குமாரர்கள் மற்றும் இரண்டு சாட்சியாளர்கள் (சக. 4:3, 12, 14; வெளி. 11:3-4)

(பிரதான ஆசாரியனாகிய யோசுவாவும் ஆளுநரான செருபாபேலும் எப்படி மோசே மற்றும் எலியாவைபோல் இருந்தார்கள் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 விளக்குத்தண்டாக சபையானது, எண்ணெயாக ஏழு மடங்கு அதிதீவிரப்படுத்தப்பட்ட ஆவியை கொண்ட மூவொரு தேவனின் திடமான ஊனுருவாகும் (சக. 4:3,12)

(விளக்குத்தண்டில் இரண்டு அடிப்படை மூலக்கூறுகள் உள்ளன -பொன் மற்றும் எண்ணெய் என்பதை எடுத்துரையுங்கள்)