Tamil – Prophesying Outline DST22 Week 3

1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு

செய்தி 3

தேவனின் பலிபீடத்தை மறுபடிகட்டுதல்-தகன பலிபீடம்

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை


அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்

எஸ்றா 3:2 தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்க தகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரயேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்.

ரோ. 12:1 ஆகையால், சகோதரர்களே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்கு மிகவும் பிரியமுமான ஜீவிக்கிற பலியாக ஒப்புக்கொடுக்க நான் தேவனுடைய மனதுருக்கங்களின்மூலம் உங்களுக்குப் புத்திசொல்கிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள சேவை.

 

பசிதூண்டும் வார்த்தை

ஏன் லேவியராகமத்தில் குறிப்பிடப்படும் முதல் பலி பாவ நிவாரண பலியோ குற்ற நிவாரண பலியாக அல்லாமல் மாறாக தகன பலியாக இருக்கிறது?

நமக்குக் கிறிஸ்து முதலில் நம் தகன பலியாக தேவை, ஏனெனில் தேவனுக்கு முன்பாக நம் முதல் சூழ்நிலை, தேவனுடனான தொடர்பில் நம் முதல் பிரச்சனை, குற்றங்களைப் பற்றிய காரியம் அல்ல, மாறாக, அது நாம் தேவனுக்காக இல்லாதிருப்பதைப் பற்றிய காரியமாகும்; நாம் அவருக்காக இருக்கும்படி தேவன் நம்மைச் சிருஷ்டித்தார்; அவர் நம்மை நமக்காக சிருஷ்டிக்கவில்லை, விழுந்துபோன மனிதர்களாகிய நாம் அவருக்காக அல்ல, நமக்காகவே வாழ்கிறோம்.

தேவனை வெளிக்காட்டி அவரைப் பிரதிநிதிப்படுத்தும் குறிக்கோளுக்காக தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்களாக நாம், தேவனைத் தவிர வேறு எதற்காகவும் இருக்கக்கூடாது என்பதே தகனபலியின் அர்த்தம். நாம் தேவனுக்காக முற்றுமுடிய இல்லை என்பதையும், நம்மால் அவ்வாறு முற்றுமுடிய இருக்க முடியாது என்பதையும் நாம் உணர்ந்தறிய வேண்டும்; எனவே, தாம் கிறிஸ்துவை நம் தகனபலியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

ஆவிக்குரிய பாரம்

வீட்டின் மீட்டுத்திருப்புதலுக்கு, பலிபீடத்தின் மீட்டுத்திருப்புதல் நமக்குத் தேவை. சபை வாழ்க்கைக்காக மீட்டுத்திருப்பப்பட வேண்டிய முதல் காரியம் பலிபீடம். நமக்கு சபை வாழ்க்கை இருப்பதற்குமுன், நாம் எல்லாவற்றையும் பலிபீடத்தின்மீது வைக்க வேண்டும். நம்மிடம் உள்ள எல்லாவற்றையும், நாம் என்னவாக இருக்கிறோமோ அவை எல்லாவற்றையும், நாம் செய்யக்கூடிய எல்லாவற்றையும் தேவனின் திருப்திக்காக நாம் பலிபீடத்தின்மீது வைக்க வேண்டும்; இதுவே சபை வாழ்க்கையின் ஆரம்பம்.

தொடர்ச்சியான தகனபலி வாழ்க்கை வாழ்வது என்றால் ஒரு ஜீவிக்கும் பலியாக இருப்பதாகும். தகனபலி, நம் அர்ப்பணத்தின் மாதிரி, அதாவது, ஜீவிக்கும் பலியாக நம்மையே தேவனுக்கு ஏறெடுப்பதின் மாதிரி; அர்ப்பணம் என்பதற்கு ஜீவிக்கும் பலியாக நம்மையே தேவனுக்கு ஏறெடுப்பது என்று அர்த்தம். இன்று, நம் கிறிஸ்தவ வாழ்க்கையிலும் சபை வாழ்க்கையிலும்,தொடர்ச்சியான தகனபலி செலுத்துவதற்கான தேவை உள்ளது.


தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

“அப்பொழுது அவர்கள்… தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்க தகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரயேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்”.

“(அவர்கள்) யெகோவாவுக்கு சர்வாங்க தகனபலிகளைக் செலுத்தத் தொடங்கினார்கள்.” தகனபலி, கிறிஸ்து முற்றுமுடிய தேவனுடைய திருப்திக்காக இருப்பதை அடையாளப்படுத்துகிறது. தகனபலியானது, தேவன் அதை அனுபவித்துமகிழ்ந்து திருப்தியடைவதற்கான தேவனுடைய உணவுக்காக இருக்கிறது. “தகனபலி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தையின் எழுத்துப்பிரகாரமான அர்த்தம் “மேலேறிச் செல்கின்ற ஒன்று” என்பதாகும், இது தேவனிடமாய் மேலேறிச் செல்லும் ஏதோவொன்றைச் சுட்டிக்காட்டுகிறது; இந்த மேலேறுதல் கிறிஸ்துவைக் குறிக்கிறது.

லேவியராகமத்தில் குறிப்பிடப்படும் முதல் பலி பாவநிவாரண பலியோ குற்றநிவாரண பலியோ அல்ல, மாறாக, தகனபலி.

 

ஜீவனின் அனுபவம்

ஆவிக்குரியரீதியில் முன்னேற, நாம் தினமும் சிலுவையினுடாகக் கடந்துசெல்ல வேண்டும். நாம் ஒரு நேர்த்தியான சபை வாழ்க்கையைப் பெற விரும்பினால், நாம் சிலுவையை அனுபவமாக்க வேண்டும். சிலுவையின் மூலம் நாம் ஒன்றுமல்லாதவர்களாக, ஒன்றுமில்லாதவர்களாக, ஒன்றும் செய்ய இயலாதவர்களாக ஆக வேண்டும்; இல்லையெனில், நாம் என்னவாக இருக்கிறோம், நம்மிடம் என்ன இருக்கிறது, நம்மால் என்ன செய்ய முடியும் என்பது கிறிஸ்துவுக்கு ஒரு பதிலீடாக ஆகவிடும்.

நம் தகனபலியாகக் கிறிஸ்து முழுவதும் தேவனுக்காகவே, முற்றுமுடிய தேவனுக்காகவே இருக்கிறார். தகன பலியாகிய கிறிஸ்துவின்மீது நம் கைகளை வைப்பதன்மூலம், நாம் அவருடன் இணைக்கப்படுகிறோம். கிறிஸ்து நம்மில் வாழ்கையில், அவர் தாம் பூமியில் வாழ்ந்த வாழ்க்கையை, தகன பலியின் வாழ்க்கையை, நம்மில் மீண்டும் வாழ்கிறார்.


பயிற்சி மற்றும் பிரயோகம்

நாம் தேவனுக்காக முற்றுமுடிய இல்லை என்பதையும், நம்மால் அவ்வாறு முற்றுமுடிய இருக்க முடியாது என்பதையும் நாம் உணர்ந்தறிய வேண்டும்; எனவே, நாம் கிறிஸ்துவை நம் தகனபலியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ச்சியான தகனபலி வாழ்க்கை வாழ்வது என்றால் ஒரு ஜீவிக்கும் பலியாக இருப்பதாகும்; தேவனுக்கு சொந்தமான நாம் நம்மையே தேவனுக்கு அன்றாடம் ஏறெடுக்க வேண்டும். இன்று நம் கிறிஸ்தவ வாழ்க்கையிலும் சபை வாழ்க்கையிலும் தொடர்ச்சியான தகனபலி செலுத்துவதற்கான தேவை உள்ளது.

நாம் தேவனின் வாஞ்சையை நிறைவேற்ற அவரது திருப்திக்காக தகன பலியாகிய கிறிஸ்துவைக் கொண்டு பிதாவாகிய தேவனைத் தொழுதுகொள்ள வேண்டும். நாம் எல்லாவித பலிகளின் நிஜமாகக் கிறிஸ்துவைக் கொண்டு தேவனைத் தொழுதுகொள்ள தேவன் விரும்புகிறார்; பலிகள் தேவனைப் பிரியப்படுத்துவதற்காகவும், அவரை மகிழ்விப்பதற்காகவும் இருக்கின்றன. நேர்த்தியான தொழுதுகொள்ளுதல், தகன பலியாகக் கிறிஸ்துவைக் கொண்டு தேவனைத் திருப்திப்படுத்துவதைப் பற்றிய காரியமாகும்.

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்

ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 வீட்டின் மீட்டுத்திருப்புதலுக்கு பலிபீடத்தின் மீட்டுத்திருப்புதல் நமக்குத் தேவை (எஸ்றா 3:2, ரோ. 12:1)

( எஸ்றா 3இன்படி அவர்கள் பலிபீடத்தின் மேல் தகனபலியைத் தவிர வேறு எதையும் ஏறெடுக்கவில்லை என்பதன் ஆவிக்குரிய உட்கருத்தை எடுத்துரையுங்கள் )

த2 இந்த வகையான அர்ப்பணம் மட்டுமே சபைகளின் கட்டியெழுப்புதலைக் கொண்டு வர முடியும் (எஸ்றா 3:4)

( எஸ்றா 3இல் உள்ள அர்ப்பணம் கட்டியெழுப்புதலுக்காகவே என்பதை எடுத்துரையுங்கள் )

 

நாள் 2

த1 தம் பொருளாட்சியில் தேவன் நமக்கு ஒரு நபரையும் ஒரு வழியையும் தருகிறார் (1 கொரி. 2:2)

(இந்த ஒரு நபர் முன்னிலை வகிக்கிற, சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்துவே, இந்த ஒரு வழி சிலுவையே என்பதை எடுத்துரையுங்கள்)

த2 நம் வழி கர்மயோகமோ அல்லது சுயத்தின் எந்த ஒரு கடுமையான சிகிச்சையோ அல்ல மாறாக சிலுவையாக இருக்கிறது (லூக். 9:23)
( நம் அனுதின வாழ்க்கையில் கிறிஸ்துவின் சிலுவையை எவ்வாறு நம்மால் பிரயோகிக்க முடியும் என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்)

 

நாள் 3

த1 தேவனின் உணவு என்பது நாம் அவருக்கு அளிக்கும் பலிகளே (எண்.28.2)

( தேவனுடைய உணவாகிய எண்ணாகமம் 28இல் உள்ள வழிகள் அனைத்தும் கிறிஸ்துவை சுட்டிக்காட்டுகின்றன என்பதை எடுத்துரையுங்கள் )

த2 நாம் தேவனோடு அதிசிறந்த ஐக்கியத்தை அனுபவித்துமகிழ விரும்பினால் நாம் அவருக்குக் கிறிஸ்துவை அவரது உணவாக பரிமாற வேண்டும் (லேவி. 2:8)

( இறுதியில், தேவனின் உணவு நம் உணவாகவும் ஆகிவிடுகிறது என்பதை எடுத்துரையுங்கள் )

 

நாள் 4
த1 “தகனபலி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரேய வார்த்தைக்கு எழுத்தின்படி “மேலே செல்லும் ஒன்று’ என்று பொருள், இவ்வாறு இது தேவனிடம் ஏறிக் செல்லும் ஒன்றைக் குறிக்கிறது
(லேவி. 1:9)

( தகனபலி தேவனுக்காக முற்றும்முடிய இருக்கும் ஒரு வாழ்க்கையை சுட்டிக்காட்டுகிறது, என்பதை எடுத்துரையுங்கள் )

த2 தேவனுடனான நம் முதல் பிரச்சனை குற்றங்களைப் பற்றிய காரியம் அல்ல, மாறாக நாம் தேவனுக்காக இல்லாதிருப்பதை பற்றிய காரியமாகும்.(எபி. 10:5,7)
( நாம் ஏன் முதலில் கிறிஸ்துவை நம் தகனபலியாக எடுத்துக்கொள்ள வேண்டும்?)

 

நாள் 5

த1 நம் தகன பலியாகிய கிறிஸ்துவின் மீது நம் கைகளை வைப்பதன்மூலம் நாம் அவருடன் இணைக்கப்படுகிறோம் (லேவி. 1:4)

(பலிசெலுத்துபவன் பலியைக் கொண்டுவருவதற்கு மட்டுமல்லாமல், அந்தப் பலியின்மீது தன் கையை வைப்பதற்காகவும் இருந்தான் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 கிறிஸ்துவை தகனபலியாக எடுத்துக்கொள்ளுதல் மற்றும் அனுபவித்தல் (லேவி. 1:5-6)

(பலியை துண்டாக வெட்டுவதைப் பற்றிய அடையாள அர்த்தத்தை எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

த1 இந்த பலிகளை ஏறெடுத்தல் நம் அர்ப்பணத்தின் ஒரு மாதிரியாகும் (ரோ.12:1)

(அர்ப்பணத்தின் அர்த்தம் தேவனின் திருப்திக்காக ஒரு ஜீவிக்கிற பலியாக, நம்மையே தேவனுக்கு ஏறெடுப்பதாகும் என்பதை எடுத்துரையுங்கள் )

த2 பழைய ஏற்பாட்டு மக்கள் மரித்துப்போன பலிகளை ஏறெடுத்தனர், நாமோ ஜீவிக்கும் பலிகளை ஏறெடுக்கிறோம் ( ரோ. 12:1; 2 கொரி. 5:15)

(கர்த்தருக்கு வாழ்வதே கர்த்தருக்கான நம் அர்ப்பணத்தின் குறிக்கோள் என்பதை எடுத்துரையுங்கள்)