Tamil – Prophesying Outline DST22 Week 2

1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு

செய்தி 2

பாபிலோனில் சிறையிருப்பிலிருந்து திரும்பியபிறகு நல்ல தேசத்தில் வாழ்வதின் மிகமுக்கிய அம்சங்கள்

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை


அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்

1 நாளா. 16:15-18 ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும், அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும்…அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரயேலுக்கு நித்திய உடன்- படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: உங்கள் சுதந்தரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

2 நாளா. 20:22 அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப் – பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.

 

பசிதூண்டும் வார்த்தை

பாபிலோனில் சிறையிருப்பிலிருந்து திரும்பிய பிறகு நல்ல தேசத்தில் வாழ்வதின் மிகமுக்கிய அம்சங்கள் என்ன?

நம்பகத்தன்மையின்மையின் காரணமாக யூதா பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டது; இவ்வாறு, சிறையிருப்பிலிருந்து திரும்பியவர்கள் தேவனுக்கு நம்பகமானவர்களாக இருக்க வேண்டியிருந்தது.

பாபிலோனில் சிறையிருப்பிலிருந்து நல்ல தேசத்திற்குத் திரும்பிய அனைவரும் யெகோவாவை அறிந்து, அவருக்குக் கீழ்ப்படிந்து, அவரைத் தொழுதுகொள்ள கட்டளையிடப்பட்டனர்.

இஸ்ரயேல் மக்கள் நல்ல தேசத்திற்குத் திரும்புவது, கிறிஸ்தவர்கள் பிரிவினையிலிருந்து சபையின் தளத்திற்கு, தளத்திற்குத் திரும்புவதை அடையாளப்படுத்துகிறது.

நல்ல தேசத்திற்குத் திரும்பிய இஸ்ரயேல் புத்திரரிடம், ஆபிரகாwமுடன் தேவன் செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்படி கூறப்பட்டது


ஆவிக்குரிய பாரம்

கிறிஸ்துவில் விசுவாசிகளாக, நாம் தேவனுடைய சித்தத்தையும், நம் தனிநபர் ஆவிக்குரிய எல்லை பெரிதாக்கப்படுவதற்கான நம் வாஞ்சையையும் வெளியாக்கும் ஜெபங்களை ஏறெடுக்க வேண்டும் தேவனின் நல்லின்பத்திற்காக மனிதன் ஜெபத்தில் அவருடைய சித்தத்தை வெளிக்காட்டி, அதை அவரிடம் எதிரொலிக்கக் கூடுமாறு மனிதனின் சித்தம் தம்முடன் இணைக்கப்பட வேண்டும் என்றும், மனிதன் தம்முடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார்.

2 நாளாகமம் 20:15-22இலிருந்து நாம், கர்த்தரைத் துதிப்பதன்மூலம் ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபடக் கற்றுக்கொள்ள முடியும். துதியே தேவனுடைய பிள்ளைகளால் செயல்படுத்தப்படும் அதிஉயர்ந்த வேலை. சபை வாழ்க்கையிலும் நம் தனிநபர் வாழ்க்கையிலும், நாம் தேவனுக்கு முழுநிறைவான துதியைச் செலுத்த வேண்டும்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை.

 

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

இஸ்ரயேல் மக்களின் வரலாறு, புதிய ஏற்பாட்டு விசுவாசிகளை மாதிரியாகக் காட்டுகின்ற, எனவே சபையை மாதிரியாகக் காட்டுகின்ற ஓர் மாதிரி.

நம்பகத்தன்மையின்மையின் காரணமாக யூதா பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டது; இவ்வாறு, சிறையிருப்பிலிருந்து திரும்பியவர்கள் தேவனுக்கு நம்பகமானவர்களாக இருக்க வேண்டியிருந்தது

பாபிலோனில் சிறையிருப்பிலிருந்து நல்ல தேசத்திற்குத் திரும்பிய அனைவரும் யெகோவாவை அறிந்து, அவருக்குக் கீழ்ப்படிந்து, அவரைத் தொழுதுகொள்ள கட்டளையிடப்பட்டனர்.

இஸ்ரயேல் மக்கள் நல்ல தேசத்திற்குத் திரும்புவது, கிறிஸ்தவர்கள் பிரிவினையிலிருந்து சபையின் தளத்திற்கு, தளத்திற்குத் திரும்புவதை அடையாளப்படுத்துகிறது.

நல்ல தேசத்திற்குத் திரும்பிய இஸ்ரயேல் புத்திரரிடம், ஆபிரகாமுடன் தேவன் செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்படி கூறப்பட்டது.

 

ஜீவனின் அனுபவம்

நம்பகத்தன்மை என்ற தம் குணாதிசயத்துடன் அவர் நமக்குள் அடித்துருவாக்கப்படும்போது அவர் நாமாகிறார், நம்பகத்தன்மை என்ற அவரது குணாதிசயத்தில் நாம் அவராகிறோம். நம்பகமான தேவனைக்கொண்டு நாம் கட்டியமைக்கப்பட்டிருப்பதால், நாம் அவருக்கு நம்பகமானவர்களாக இருந்தாக வேண்டும்; நம் ஆள்தத்துவம், நம் கட்டமைப்பு, வேறுவிதமாக இருக்க நம்மை அனுமதிக்காது.

தேவனின் அழைக்கப்பட்டவர்களாக நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும்சரி, நாம் இன்னும் பாவகரமானவர்கள். ஆகவே, சமாதானப் பலியைத் தொடர்ந்து ஃபிராங்கண்ஸ்டைன் கிறிஸ்துவால் நீக்கப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து தகன பலி, அதாவது எல்லாம் தேவனுக்காக இருக்க வேண்டும் என்பதை அடையாளப்படுத்துகிற பலி தேவைப்பட்டது (லேவி. 1:10). தம் அழைக்கப்பட்டவனுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்துவதில், தேவன் கடந்துசென்ற எல்லாப் பலிகளாகவும் கிறிஸ்து இருந்தார்.

 

பயிற்சி மற்றும் பிரயோகம்

கிறிஸ்துவில் விசுவாசிகளாக, நாம் தேவனுடைய சித்தத்தையும், நம் தனிநபர் ஆவிக்குரிய எல்லை பெரிதாக்கப்படுவதற்கான நம் வாஞ்சையையும் வெளியாக்கும் ஜெபங்களை ஏறெடுக்க வேண்டும் தேவனின் நல்லின்பத்திற்காக மனிதன் ஜெபத்தில் அவருடைய சித்தத்தை வெளிக்காட்டி, அதை அவரிடம் எதிரொலிக்கக் கூடுமாறு மனிதனின் சித்தம் தம்முடன் இணைக்கப்பட வேண்டும் என்றும், மனிதன் தம்முடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார்.

துதியே தேவனுடைய பிள்ளைகளால் செயல்படுத்தப்படும் அதிஉயர்ந்த வேலை. ஆவிக்குரிய வெற்றி யுத்தத்தைச் சார்ந்தது அல்ல–அது துதியைச் சார்ந்தது. சபை வாழ்க்கையிலும் நம் தனிநபர் வாழ்க்கையிலும், நாம் தேவனுக்கு முழுநிறைவான துதியைச் செலுத்த வேண்டும். நாம் அனுபவமாக்கி அனுபவித்துமகிழ்ந்துள்ள கிறிஸ்துவின்மூலம், நாம் தொடர்ச்சியாக தேவனுக்குத் துதிப் பலியை ஏறெடுக்க வேண்டும். “என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்”

 

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்

ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1

த1 பழைய ஏற்பாட்டில் உள்ள இஸ்ரயேலின் வரலாறு, வரவிருக்கும் காரியங்களை அடையாளப்படுத்தும் ஒரு பெரிய மாதிரியாகும்.
(1 கொரி. 10:11)

( இஸ்ரவேல் மக்களின் வரலாறு, இன்று பூமியிலுள்ள தேவனுடைய மக்களை மாதிரியாக காட்டுகிறது என்பதை எடுத்துரையுங்கள் )

த2 தேவனுடைய நம்பகத்தன்மை நம் இயற்கையான புரிந்துகொள்ளுதலின்படியானதல்ல. (2 தீமோ. 2:13)
(நமக்குத் தொல்லைகள் ஏற்பட அனுமதிப்பதில் தேவன் தம் குறிக்கோளில் நம்பகமானவர் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 2

த1 யெகோவா தேவன் என்றால் வல்லமையுள்ளவர் மட்டுமல்ல, அவர் மனிதனைக் கிட்டிச் சேர்பவரும்கூட (1 நாளா.16.18, யாத். 3:14)

(தேவன் மற்றும் யெகோவா என்ற பெயரின் அர்த்தத்தை எடுத்துரையுங்கள்)

த2 யெகோவாவாக, தேவன் இருக்கிற தேவனும், நிறைவேற்றுகிற தேவனுமாக இருக்கிறார் (யாத். 3:14, யாத். 6:6-8)

( எல்-ஷடாய் மற்றும் யெகோவா என்ற பெயரின் அர்த்தத்தை எடுத்துரையுங்கள்)

 

நாள் 3
த1 சபையின் உள்ளூர் தளம், அடிப்படையில், உள்ளூர் சபைகளில் நடைமுறைப்படுத்தப்படுகிற கிறிஸ்துவின் சரீரத்தின் ஒப்பற்ற ஒருமையாகும்
(உபா. 12:5, 1 கொரி. 1:17)

( சபையின் உள்ளூர் தளம் என்ன என்பதை எடுத்துரையுங்கள் )

த2 கிறிஸ்துவின் பிரபஞ்சமளாவிய சரீரத்தின் ஒப்பற்ற ஒருமை, இது “ஆவியின் ஒருமை” என்று அழைக்கப்படுகிறது (எபே. 4:3)

( சபையின் தளத்தினுடைய கட்டமைப்பின் முதல் மூலக்கூறு என்ன என்பதை எடுத்துரையுங்கள் )

 

நாள் 4

த1 ஆபிரகாம் வித்தை குறித்த அந்த வாக்குத்தத்தற்காக கர்த்தரில் விசுவாசித்தான் ஆனால் தேசத்தை குறித்த வாக்குத்தத்தற்காக அவன் தேவனில் விசுவாசிக்கும் விசுவாசத்தில் குறைவுப்பட்டான் (ஆதி. 15:7,9)

( கிறிஸ்துவின் மூலம் ஆபிரகாமுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் தேவன் தம் வாக்குத்தத்தை உறுதி செய்தபோது வெட்டப்பட்டு கொல்லப்பட்டு மாதிரியாகப்பட்ட மூன்று கால்நடை என்ன என்பதை எடுத்துரையுங்கள்)

த2 இரண்டு ஜீவிக்கும் பறவைகள், உயிர்த்தெழுந்தவரான கிறிஸ்து நம்மிலும் நமக்காகவும் வாழ்பவர் என்று சாட்சியளிக்கின்றன
(யோவா. 14:19-20; கலா. 2:20)

( கொல்லப்படாத அந்த இரண்டு பறவைகள் எதை அடையாளப்படுத்துகின்றன என்பதை எடுத்துரையுங்கள் )


நாள் 5

த1 எல்லையை பெரிதாக்குவதற்கான தேவனை நோக்கிய யாபேசின் ஜெபம் (1 நாளா. 4:10; மத். 6:10)

( அனைத்து ஆவிக்குரிய வேலைகளில் உள்ள நான்கு படிகள் என்ன என்பதை எடுத்துரையுங்கள் )

த2 தேவன் தனியாக செயல்பட விரும்புவதில்லை. மனிதன் தம்முடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் (மத். 6:10, யோவா.15:7)

( தேவன் ஏன் சாத்தானை சீக்கிரமாக அழிக்க மாட்டார் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

த1 துதியே தேவனுடைய பிள்ளைகளால் செயல்படுத்தப்படும் அதி உயர்ந்த வேலை (சங். 22:3)

( தேவனை நோக்கிய, ஒரு பரிசுத்தவானுடைய துதியே, அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் அதி உயர்ந்த வெளியாக்கம் என்பதை எடுத்துரையுங்கள் )

த2 ஆவிக்குரிய வெற்றி யுத்தத்தை சார்ந்தது அல்ல மாறாக துதித்தலை சார்ந்தது (2 நாளா. 20:22)

(2 நாளாகமம் 20 இல் யோசபாத் இராஜா எவ்வாறு வெற்றியை அனுபவித்தான் என்பதை எடுத்துரையுங்கள் )