1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு
செய்தி 12
தம்மை மறைத்துக்கொள்ளும் தேவன் மறைத்திருக்கும் தேவன்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்.
ஏசா. 45:15 இஸ்ரயேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்
லூக். 18:7-8 அப்படியே இரவும் பகலும் தம்மிடம் கதறுகிற தம் தெரிந்துகொள்ளப்பட்டவர்களிடம் தேவன் நீடிய பொறுமையாய் இருந்தாலும், அவர் எவ்விதத்திலும் அவர்களுக்குப் பழிதீர்ப்புசெய்யமாட்டாரோ? நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர் சீக்கிரமாய் அவர்களுக்குப் பழிதீர்ப்பு செய்வார். எனினும் மனுஷகுமாரன் வரும்போது, அவர் பூமியில் விசுவாசத்தைக் காண்பாரோ ? என்றார்
பசிதூண்டும் வார்த்தை
எங்கு தேவன் தம்மை மறைத்துக் கொள்ளும் தேவன் என்று பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு நமக்கு கூறுகிறது
ஏசா. 45:15 இஸ்ரயேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்
எஸ்தர் புத்தகம், எவ்வாறு இஸ்ரயேலின் மறைந்துகொள்ளும் தேவன், தம் ஒடுக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சிதறியிருக்கையில் இரகசியமாக அவர்களுக்கு அக்கறைசெலுத்தி, தம் துன்புறுத்தப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சிறையிருப்பில் வெளிப்படையாக அவர்களை இரட்சித்தார் என்பதற்கான ஒரு தெளிவான பதிவை வழங்குகிறது.
லூக்கா 18:1-8இலுள்ள உவமையின் உட்கருத்து கருத்தாழமிக்கது; நாம் தேவனை அவர் வெளிப்படுத்தப்படுகிற விதத்தில், அதாவது, மறைந்திருக்கும் தேவனாக, அறிந்துகொள்ள வேண்டும்.
ஆவிக்குரிய பாரம்
நாம் சேவிக்கும் சர்வ வல்ல தேவன் இன்னும் தம்மை மறைத்துக் கொண்டிருக்கிறார், விசேஷமாக அவர் நமக்கு உதவிசெய்யும்போது தம்மை மறைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். தம்மை மறைத்துக்கொள்ளும் தேவன் நமக்குள் அமைதியான விதத்தில், ஆயினும், வல்லமையான விதத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.நமக்குள் ஆழத்திலிருக்கும் உள்ளான உணர்வுக்கு மாறுத்தரமளித்து அவருடன் ஒத்துழைப்பதே நம் பொறுப்பு.
நம் எதிராளி நம்மைத் துன்புறுத்துகையில், தம் பிள்ளைகள் அநீதியான விதத்தில் துன்புறுத்தப்பட தேவன் அனுமதிப்பதால் நம் தேவன் நீதியானவர் அல்ல என்பதுபோலத் தோன்றுகிறது. நாமும் இந்த பழிவாங்கலுக்காக இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும், மனம் தளரக்கூடாது
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
இஸ்ரயேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்
எஸ்தர் புத்தகம், எவ்வாறு இஸ்ரயேலின் மறைந்துகொள்ளும் தேவன், தம் ஒடுக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சிதறியிருக்கையில் இரகசியமாக அவர்களுக்கு அக்கறைசெலுத்தி, தம் துன்புறுத்தப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சிறையிருப்பில் வெளிப்படையாக அவர்களை இரட்சித்தார் என்பதற்கான ஒரு தெளிவான பதிவை வழங்குகிறது.
லூக்கா 18:1-8இலுள்ள உவமையின் உட்கருத்து கருத்தாழமிக்கது; நாம் தேவனை அவர் வெளிப்படுத்தப்படுகிற விதத்தில், அதாவது, மறைந்திருக்கும் தேவனாக, அறிந்துகொள்ள வேண்டும்.
ஜீவனின் அனுபவம்
நாம் சேவிக்கும் சர்வ வல்ல தேவன் இன்னும் தம்மை மறைத்துக் கொண்டிருக்கிறார், விசேஷமாக அவர் நமக்கு உதவிசெய்யும்போது தம்மை மறைத்துக் கொண்டிருக்கிறார். கிறிஸ்து நம் இருதயங்களில் தம் வீட்டை அமைக்குமாறு, நம்மைத் தம் ஆவியானவர் மூலம் வல்லமையினால் உள்ளான மனிதனுக்குள்ளாகப் பலப்படுத்துகையில், உண்மையில், ஒரு மறைவான வழியில் அவர் நமக்காகப் பல காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறார்.
தம்மை மறைத்துக்கொள்ளும் தேவன் நமக்குள் அமைதியான விதத்தில், ஆயினும், வல்லமையான விதத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார். தேவன் நமக்குள் வாழ்வதையும், செயல்படுவதையும் நாம் உணரும் போதெல்லாம், நாம் ஆமென் சொல்ல வேண்டும், ஏனெனில், தம்மை மறைத்துக்கொள்ளும் தேவன் நம் ஆள்தத்துவத்தின் ஆழங்களில், மறைவான விதத்திலும் இடைவிடாமலும் வேலை செய்துகொண்டிருக்கிறார்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
இந்த உவமையிலுள்ள விதவை அநீதியான நீதிபதியிடம் வந்து, தன் எதிராளியைத் தனக்காகப் பழிவாங்கும்படி அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்; நாமும் இந்தப் பழிவாங்கலுக்காக இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும், மனம் தளரக்கூடாது. அவர் அநீதியுள்ளவர் போலத் தோன்றினாலும், நாம் இன்னும் அவரிடம் முறையிடவும், விடாமுயற்சியுடன் ஜெபிக்கவும், மீண்டும் மீண்டும் அவரைத் தொந்தரவு செய்யவும் வேண்டும், ஏனென்றால் “இரவும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்’ தம் தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் நிமித்தம் பழிவாங்கலை அவர் விரைவாகச் செய்துமுடிப்பார். நாம் விடாப்பிடியாக ஜெபிப்பதன் மூலம் கர்த்தரைத் தொந்தரவு செய்யவேண்டும். நாம் அவரிடம், “கர்த்தாவே, ஜெபிப்பது உம்மைப் பொறுத்தது அல்ல, என்னைப் பொறுத்தது. நான் ஜெபிக்கக் கூடாது என்று நீர் ஒருபோதும் என்னிடம் சொல்லவில்லை. மாறாக, ஜெபிக்கும்படி நீர் எனக்குக் கட்டளையிட்டீர். ஆகையால், கர்த்தாவே, நான் இப்போது உம்முடைய நியாயப்படுத்தலுக்காக ஜெபிக்கிறேன்” என்று சொல்ல வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 பல்வேறு பட்டப்பெயர்கள் மூலம் தேவன் தம்மையே நமக்கு வெளிப்படுத்துகிறார். (ஏசா. 45:15)
(“நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்” என்று ஏசாயா கூறினான். காரணம் என்ன?)
த2 தேவன் தம்மை மறைத்துக்கொள்ளுகிற தேவன் (ஏசா.45:15; யோவா. 1:18)
(தேவன் மனிதனிலிருந்து மறைந்திருந்தார் என்பதைப் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டிலிருந்து எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 நம் தேவன் ஒருபோதும் காட்சியை ஏற்படுத்துவதில்லை (மத். 6:1, 3-4)
(தேவன் பிரபஞ்சத்தில் இருக்கிறார், ஆனால் அவர் மறைந்திருக்கிறார். இது, அவர் தம்மை ஒரு கணம் வெளியரங்கமாக்குவது, மீண்டும் தம்மை மறைத்துகொள்வதற்காகவே என்பதுபோல் தோன்றுகிறது என்பதை எடுத்துரையுங்கள் )
த2 தேவனுடைய குணம் அவர் தம்மை மறைக்கப்பட்டவராக வைத்துக்கொள்ள விரும்புவதே ஆகும் (ஏசா. 53:2a; மத். 6:1)
(தேவன் மறைந்திருக்க விரும்புகிறார்; நாம் காட்சியாக்கப்பட விரும்புகிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 தேவன் ஜீவிக்கிறவர், நிஜமானவர், ஆனால் அவர் மறைவாக இருக்கிறார் (எஸ். 4:14, 16)
(இஸ்யேல் மக்கள் சிதறடிக்கப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டிருந்தபோது, தேவன் ஒரு மறைவான வழியில் அவர்களை கவனித்துக்கொண்டார் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 இன்று நாம் சேவித்துக் கொண்டிருக்கும் நம் தேவன் விசேஷமாக அவர் உதவுகிறபோது, இன்னும் தம்மை மறைத்துக்கொண்டிருக்கிறார் (எஸ். 4:3; ஏசா. 45:15)
(எஸ்தர் புத்தகத்தின் முக்கியமான குறிப்பு என்ன என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 கிறிஸ்துவிலுள்ள விசுவாசிகளுக்கு ஓர் எதிராளி இருக்கிறான். இந்த எதிராளி பிசாசாகிய சாத்தானே (லூக். 18:1, 3)
(நம் எதிரியை தேவன் பழிதீர்ப்பது இரட்சகரின் திரும்பிவருதலில் நடைபெறும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 இன்றைய பொல்லாத தலைமுறை கிறிஸ்து அனுபவிக்கும் அனுபவ மகிழ்ச்சியிலிருந்து நம்மை திசைதிருப்ப முடியும் (லூக். 17:27-28)
(மூவொரு தேவன் மனிதனின் அனுபவமகிழ்ச்சிக்காக இருக்கிறார். இருப்பினும், விழுந்துபோன மனித இனத்திற்கு எது நிகழ்ந்தாலும் இதைப் பற்றிய எந்த எண்ணமும் இல்லை என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 நாம் தொந்தரவு செய்யும் விதவையாக இருக்கக் கற்றுக்கொள்கிறோம் (லூக். 18:7-8)
(லூக்கா 18:1-8ன் படி, ஏன் தம் பிள்ளைகள் அநீதியான விதத்தில் துன்புறுத்தப்பட தேவன் அனுமதிக்கிறார் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தற்காலிகமாக நம் தேவன் ஓர் அநீதியான நீதிபதியைப்போல இருப்பதாக தோன்றுகிறது (லூக். 18:6-8)
(அவர் அநீதியுள்ளவர் போலத் தோன்றினாலும், நாம் இன்னும் அவரிடம் முறையிட வேண்டும், விடாப்பிடியாக ஜெபிக்க வேண்டும், அவரை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்ய வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 விதவையின் விசுவாசம், புறம்சார்ந்த விசுவாசம் அல்ல அகம்சார்ந்த விசுவாசம் (லூக். 18:8)
((லூக்கா 18:8-ல்) எழுத்துப்பிரகாரமாக, “விசுவாசம்” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தைகளுக்கு “ஒப்பற்ற விசுவாசம்” என்று பொருள். இது, [வசனம் 3-ல் உள்ள) நம் விடாப்பிடியான ஜெபத்திற்கான விடாப்பிடியான விசுவாசத்தைக் குறிக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 இணைக்கும் விசுவாசம், ஜெயங்கொள்பவர்கள் கிறிஸ்துவின் வெற்றிகரமான திரும்பவருதலில் அவரைச் சந்திப்பதற்கான தெய்வீகக் கோரிக்கையாகும் (லூக். 18:8)
(இணைக்கும் விசுவாசம், ஜெயங்கொள்பவர்களை தகுதிப்படுத்துகிறது, இது தெய்வீக கோரிக்கையாக இருக்கிறது என்பதை எடுத்துரைங்கள்)