1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு
செய்தி 11
எஸ்றாவின் ஊழியம் மற்றும் நெகேமியாவின் முன்னணித்துவத்தின் உள்ளார்ந்த உட்கருத்து- புதிய எருசலேமை வாழ்ந்துகாட்டுவதன் மூலமும், வேலை செய்து உருவாக்குவதன் மூலமும் தேவனுடைய வீடும் தேவனுடைய இராஜ்ஜியமுமாக சபையைக் கட்டியெழுப்புதல்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்.
வெளி. 21:11-12 அவளுடைய ஒளி மிகவும் விலையேறப்பெற்றக் கல்லுக்கு ஒப்பாக, வச்சிரக் கல்லைப்போன்று, பளிங்குபோல் தெளிவாக இருந்தது. அதற்கு மகா பெரியதும் உயரமுமான மதில் இருந்தது…
18 அதனுடைய மதிலின் கட்டிட வேலைப்பாடு வச்சிரக்கல்லாயிருந்தது, நகரம் சுத்தமான கண்ணாடிக்கு ஒப்பான சுத்தப் பொன்னாயிருந்தது.
பசிதூண்டும் வார்த்தை
எஸ்றாவின் ஊழியம் மற்றும் நெகேமியாவின் முன்னணித்துவத்தின் உள்ளார்ந்த உட்கருத்து என்ன?
எஸ்றாவின் ஊழியத்தின் உள்ளார்ந்த உட்கருத்து சுத்திகரிப்பு, கல்வி, மற்றும் மறுகட்டமைப்பு என்ற வார்த்தைகளில் ஊனுருகொண்டுள்ளது; நெகேமியாவின் முன்னணித்துவத்தின் உள்ளார்ந்த உட்கருத்து பிரித்தல், பாதுகாப்பு, மற்றும் வெளியாக்கம் என்ற வார்த்தைகளில் ஊனுருகொண்டுள்ளது; இந்த உள்ளார்ந்த உட்கருத்தின்படி புதிய எருசலேமை வாழ்ந்து காட்டுவதன் மூலமும், வேலைசெய்து உருவாக்குவதன்மூலமும் தேவனுடைய வீடும் தேவனுடைய இராஜ்ஜியமுமாக சபையைக் கட்டியெழுப்ப கர்த்தரின் பரலோக ஊழியத்தில் நாம் அவருடன் ஒத்துழைக்க வேண்டும்.
ஆவிக்குரிய பாரம்
நாம் தேவனின் வெளியாக்கமாக சபையைக் கட்டியெழுப்புமாறு, நாம் கிறிஸ்துவினால் வாழ வேண்டும், கிறிஸ்துவை வாழ்ந்துகாட்ட வேண்டும், இதன்மூலம் கிறிஸ்துவைப் பெரிதாக்கிக் காட்ட வேண்டும். தேவனை வெளிக்காட்டுவதற்கு, நம் மணவாளனாகிய கிறிஸ்துவின் தூய, மகிமையுள்ள, தேவனை வெளிக்காட்டும் மணவாட்டியாக அவருக்கு வழங்கப்பட வார்த்தையிலுள்ள தண்ணீரின் கழுவுதலினால் நாம் அனுதினமும் பரிசுத்தமாக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட வேண்டும்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
எஸ்றாவின் ஊழியத்தின் உள்ளார்ந்த உட்கருத்து சுத்திகரிப்பு, கல்வி, மற்றும் மறுகட்டமைப்பு என்ற வார்த்தைகளில் ஊனுருகொண்டுள்ளது; நெகேமியாவின் முன்னணித்துவத்தின் உள்ளார்ந்த உட்கருத்து பிரித்தல், பாதுகாப்பு, மற்றும் வெளியாக்கம் என்ற வார்த்தைகளில் ஊனுருகொண்டுள்ளது; இந்த உள்ளார்ந்த உட்கருத்தின்படி புதிய எருசலேமை வாழ்ந்து காட்டுவதன் மூலமும், வேலைசெய்து உருவாக்குவதன் மூலமும் தேவனுடைய வீடும் தேவனுடைய இராஜ்ஜியமுமாக சபையைக் கட்டியெழுப்ப கர்த்தரின் பரலோக ஊழியத்தில் நாம் அவருடன் ஒத்துழைக்க வேண்டும்.
யுகத்தின் ஊழியத்தில் யுகத்தின் தரிசனத்தின்படி வாழ்ந்து, தேவனைச் சேவிப்பது என்பது புதிய எருசலேமை வாழ்ந்துகாட்டுவதும், வேலைசெய்து உருவாக்குவதுமாகும்: அதனுடைய மதிலின் கட்டிட வேலைப்பாடு வச்சிரக்கல்லாயிருந்தது; நகரம் சுத்தமான கண்ணாடிக்கு ஒப்பான சுத்தப் பொன்னாயிருந்தது”.
புதிய எருசலேமை வாழ்ந்துகாட்டுவதும் வேலைசெய்து உருவாக்குவதுமே எஸ்றாவின் ஊழியத்தின் மற்றும் நெகேமியாவின் முன்னணித்துவத்தின் உள்ளார்ந்த உட்கருத்தில் வாழ்வதும் சேவிப்பதுமாகும்.
ஜீவனின் அனுபவம்
நாம் தேவனின் பிரகாசிப்பித்தல், அம்பலமாக்குதல், நியாயத்தீர்ப்பு ஆகிய வழிமுறையின் மூலமும், சிலுவையின் முடிவுகட்டுதல் மற்றும் நீக்கிப்போடுதலின் மூலமும், இரத்தத்தின் சுத்திகரித்தல் மற்றும் கழுவுதலின் மூலமும், ஆவியானவரின் பாய்ந்தோடுதல் மற்றும் பூரிதமாக்குதல் மூலமும் சுத்திகரிக்கப்பட முடியும்.
தேவனின் தூய வார்த்தையிலுள்ள ஜீவத் தண்ணீரின் கழுவுதலின் வழிமுறையின் மூலம் நாம் சுத்திகரிக்கப்பட முடியும்; எவ்வளவாய் ஒரு நபர் தேவனுடைய வார்த்தையில் இருக்கிறாரோ, அவ்வளவாய் அவர் தூய்மையானவராகிறார்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
நாம் கர்த்தரையும் அவருடைய நித்தியப் பொருளாட்சியின் ஆவல்களையும் நம் ஒப்பற்ற இலக்காக எடுத்துக்கொண்டு, எல்லாக் கலப்படத்திலிருந்தும் சுத்திகரிக்கப்படும் வழிமுறையில் தங்கியிருக்க வேண்டும்.
தேவனுடைய சாட்சிக்காக, அதாவது, அவருடைய கூட்டு வெளியாக்கத்திற்காக சத்தியத்தைக் கொண்டு மற்றவர்களுக்குக் கற்பிக்க நாம் கற்பிக்கப்பட வேண்டும்.
நாம் தேவனுடைய வீடாக சபையைப் பாதுகாக்க மதிலைக் கட்டியெழுப்ப வேண்டும்; நாம் ஒப்பற்ற புதிய ஏற்பாட்டு ஊழியமாகிய ஒரே எக்காளத்தை தொனித்து, தேவனுடைய மந்தை கிறிஸ்துவில் முழுவளர்ச்சி அடையும்படி, தேவனுடைய வார்த்தையை முழுமையாக்க அவர்களுக்குக் கர்த்தரின் பாதுகாக்கும் எச்சரிப்புடனும் ஆரோக்கியமான போதனையுடனும் தேவனுடைய எல்லா ஆலோசனையையும் அறிவித்து அவர்களை மேய்த்துப்பேண வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 முழு நகரமும் அதன் மையத்திலிருந்து அதன் சுற்றளவு வரை தம்முடைய ஐசுவரியத்தன்மையில் ஜீவனின் தேவனின் வெளியாக்கமாக உள்ளது. (வெளி. 21:11-12, 18; 4:3)
(வச்சிரக்கல் தேவனின் தோற்றமாக இருக்கிறது, இதன் உள்ளார்ந்த உட்கருத்து என்ன என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்படுவதற்காகவும், தேவனுடைய ஆவலைப் பாதுகாப்பதற்காகவும் இந்த மதில் மகா பெரியதும் உயரமுமாக இருக்கிறது. (வெளி. 21:12)
(புதிய எருசலேமின் மதிலின் ஏழு உட்குறிப்புகள் என்ன என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 இன்று தேவன் தம் வார்த்தையில் இருக்கிறார். இந்த வார்த்தையில் தேவனின் நிஜம் அடங்கியுள்ளது, இநத நிஜம் தேவனே (வெளி. 5:26)
(இந்த நிஜமாகிய தேவனுக்கு ஒரு விசேஷித்த செயல்பாடு இருக்கிறது, அது நம்மைப் பரிசுத்தமாக்குவதே என்பதை எடுத்துரையுங்கள்)
த2 சத்தியத்திற்கு கீழ்ப்படிவதன் மூலம் உங்கள் ஆத்துமாக்களைச் சுத்திகரித்துக் கொண்டீர்கள்
(அப்.15:9; 1 பேது. 1:21-22)
(நம் ஆத்துமா சுத்திகரிக்கப்படுவதின் அர்த்தம் என்ன என்பதை எடுத்துரைங்கள்)
நாள் 3
த1 மாதிரியியலில் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள் என்பதற்கு தேவனை வெளிக்காட்டு என்று பொருள் (யாத். 16:34; 34:28)
(பழைய ஏற்பாட்டிலுள்ள வரலாற்றுப் புத்தகங்களை ஆய்வுசெய்வதில், நாம் இந்தப் புத்தகங்களைத் தேவனுடைய பொருளாட்சியுடன் இணைக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைங்கள்)
த2 கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் புதிய மொழியினுள் நுழைதல் (நெகே. 13:23-24)
(மாம்சமாகுதல், மறுபடி ஜெநிப்பிக்கப்படுதல் மற்றும் புதுப்பிக்கப்படுவதின் உள்ளான உட்கருத்தை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 கிருபை என்பது கிறிஸ்துவின் ஊனுருவாகிய கிறிஸ்துவே (யோவா.1:16; வெளி. 21:14)
(வெளிப்படுத்தல் 21:14-இல்) அப்போஸ்தலர்கள், புதிய ஏற்பாட்டின் கிருபையைப் பிரதிநிதிப்படுத்துகின்றனர்; இது புதிய எருசலேம் தேவனுடைய கிருபைமீது கட்டப்படுகிறது என்பதை அடையாளப்படுத்துகிறது, இதனை எடுத்துரையுங்கள்)
த2 புதிய எருசலேமின் ஒரே ஒரு வேலையை மட்டுமே நாம் செய்ய வேண்டும் (வெளி. 21:14)
(“புதிய எருசலேமின் வேலையாகிய ஒரே ஒரு வேலையை மட்டுமே நாம் செய்ய வேண்டும்” என்பதன் அர்த்தம் என்ன என்பதை எடுத்து உரையுங்கள்.)
நாள் 5
த1 மன்னா என்பது தேவனுடைய மக்கள் அவரது வழியில் செல்வதற்குத் திறனளிக்கிற பரலோக உணவாகிய கிறிஸ்துவின் மாதிரியாகும். (வெளி. 2:17)
(திறந்தவெளி மன்னா மற்றும் மறைவான மன்னா ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாட்டை எடுத்துரையுங்கள்)
த2 தேவனின் பார்வையில் வர்த்தகத்தில் அடங்கியுள்ள அக்கிரமம் ஒரு வகையான விக்கிரகாராதனையாகவும், விபச்சாரமாகவும் இருக்கிறது (சகரி. 5:7-8; வெளி. 18:3)
(சகரியா 5இல் உள்ள தரிசனம், வெளிப்படுத்தல் 18இல் உள்ள மகா பாபிலோனின் தரிசனத்திற்கு ஒத்திருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 நாம் பிசாசை சரீரம் என்ற தளத்தின்மீது சந்திக்க வேண்டும் (ரோ. 16:20; எபே. 6:11)
(சபை என்பது கிறிஸ்துவின் சரீரம். இந்த சரீரம் நிரப்பீடு வழங்குகிறது. மேலும் ஒவ்வோர் அவயவத்துக்கும் பாதுகாப்பையும் வழங்குகிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 முழு ஆயுதவர்க்கமும் தனிநபர்களுக்காக அல்ல, முழுச் சபைக்காக இருக்கிறது (ரோ. 16:20; எபே.6:11)
(அனைத்து அவயவங்களின் விசேஷித்த தன்மைகள் யாவும் ஒன்றாக சேர்ந்து தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை உருவாக்குகின்றன என்பதை எடுத்துரையுங்கள்)