Tamil – Prophesying Outline DST22 Week 10

1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு

செய்தி 10

எஸ்றா, நெகேமியா ஆகிய மீட்டுத்திருப்புதல்
புத்தகங்களின் மையமும் அதிமுக்கியமுமான குறிப்பு கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் நேர்த்தியான மற்றும் போதுமான முன்னணித்துவம்

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை


அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்.

மத். 20:25-28. புறவினத்தாரின் அதிபதிகள் அவர்கள்மேல் ஆதிக்கஞ்செலுத்துகிறார்கள். பெரியவர்கள் அவர்மேல் அதிகாரஞ்செய்கிறார்கள். உங்கள் மத்தியில் அவ்வாறு இருக்க வேண்டாம், ஆனால் உங்களில் பெரியவனாக விரும்புகிற எவனும், உங்கள் வேலைக்காரனாக இருப்பானாக உங்களில் முதலானவனாயிருக்க விரும்புகிற எவனும், உங்கள் அடிமையாக இருப்பானாக; இவ்வாறே மனுஷகுமாரனும் சேவிக்கப்படும்படி வராமல், சேவிக்கவும், அநேகருக்கான பணயப் பொருளாய்த் தம் பிராணணைக் கொடுக்கவும் வந்தார்.

அப். 26:19 ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரலோக தரிசனத்திற்குக் கீழ்ப்படியாதவனாக இருக்கவில்லை.


பசிதூண்டும் வார்த்தை

தேவனுடைய நித்திய பொருளாட்சியிலும் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலிலும் முன்னணித்துவம் எதனைச் சார்ந்து இருக்கிறது?

தேவனுடைய நித்தியப் பொருளாட்சியிலும் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலிலும் முன்னணித்துவம் ஆவிக்குரிய திறனைச் சார்ந்திருக்கிறது; முன்னணித்துவம் அதிகாரப்பூர்வமானதோ, நிரந்தரமானதோ, நிறுவனஞ்சார்ந்ததோ, அல்லது படிநிலை சார்ந்ததோ அல்ல. முன்னணித்துவத்தைப் பற்றிய கர்த்தரின் கருத்து, இயற்கைக் கருத்துக்கு நேரெதிரானது; உண்மையில், தேவனுடைய மக்கள் மத்தியிலே இயற்கையான அர்த்தத்தில் முன்னணித்துவமே கிடையாது. புதிய ஏற்பாட்டின்படி, அப்போஸ்தலர்களின் அதிகாரம் ஆவிக்குரியது, அது அவர்களது வார்த்தையின் ஊழியத்தில் இருக்கிறது. புதிய ஏற்பாட்டு ஊழியத்திலுள்ள முன்னணித்துவம், புதிய ஏற்பாட்டு ஊழியத்தின் வழிநடத்துபவர்களில் இருப்பதைவிட புதிய ஏற்பாட்டுப் போதனையில்தான் இருக்கிறது.

 

ஆவிக்குரிய பாரம்.

புதிய ஏற்பாட்டு ஊழியத்திலுள்ள முன்னணித்துவம், கட்டுப்படுத்தும் நபரின் முன்னணித்துவமாக அல்லாமல், தேவனுடைய நித்தியப் பொருளாட்சியின் கட்டுப்படுத்தும் தரிசனத்தின் முன்னணித்துவமாக இருக்கிறது; அப்போஸ்தலனாகிய பவுல், “நான் பரலோகத் தரிசனத்திற்குக் கீழ்ப்படியாதவனாக இருக்கவில்லை” என்று பறைசாற்றினான்.இந்தத் தரிசனம் நம் வாழ்க்கை, வேலை, செயல்பாடு எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் தரிசனமாக இருக்க நாள்தோறும் நம்மில் புதுப்பிக்கப்பட வேண்டும். கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலிலுள்ள முன்னணித்துவம், குழப்பமும் பிரிவினையும் தடுக்கப்படுமாறு, நம்மை மட்டுப்படுத்துகிற, நம்மை வழிநடத்துகிற, நம்மைக் கட்டுப்படுத்துகிற தேவனுடைய நித்தியப் பொருளாட்சியைப் பற்றிய தேவன்-கொடுத்த தரிசனத்தின் முன்னணித்துவமாகும்.

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

தேவனுடைய நித்தியப் பொருளாட்சியிலும் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலிலும் முன்னணித்துவம் ஆவிக்குரிய திறனைச் சார்ந்திருக்கிறது; முன்னணித்துவம் அதிகாரப்பூர்வமானதோ, நிரந்தரமானதோ, நிறுவனஞ்சார்ந்ததோ, அல்லது படிநிலை சார்ந்ததோ அல்ல.

புதிய ஏற்பாட்டு ஊழியத்திலுள்ள முன்னணித்துவம், கட்டுப்படுத்தும் நபரின் முன்னணித்துவமாக அல்லாமல், தேவனுடைய நித்தியப் பொருளாட்சியின் கட்டுப்படுத்தும் தரிசனத்தின் முன்னணித்துவமாக இருக்கிறது: அப்போஸ்தலனாகிய பவுல் “நான் பரலோகத் தரிசனத்திற்குக் கீழ்ப்படியாதவனாக இருக்கவில்லை” என்று பறைசாற்றினான்.

நேர்த்தியான, போதுமான முன்னணித்துவமே எஸ்றா, நெகேமியா ஆகிய மீட்டுத்திருப்புதல் புத்தகங்களின் மையமும் அதிமுக்கியமுமான குறிப்பு.


ஜீவனின் அனுபவம்

ஒரு நபர் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலை விட்டு வெளியேறுகிறார் என்றால், கர்த்தருடைய மீட்டுத்திருப்புதல் என்னவாக இருக்கிறது என்பதை அவர் ஒருபோதும் பார்த்திருக்கவில்லை என்று அர்த்தம்; நாம் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் தரிசனத்தைப் பார்த்திருக்கவில்லை என்றால், நாம் உண்மையில் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் இல்லை.

சரீரத்தின் நேர்த்தியான பிரதிநிதித்துவம், எப்போதுமே மற்றவர்களோடு பொருந்துபவர்களில் இருக்கிறது. தனியாக இருப்பதென்றால், தனித்துவமாக இருப்பதாகும், ஆனால் மற்றவரோடு அனுப்பப்படுவதென்றால், சரீரத்தின் கோட்பாட்டின்படி அனுப்பப்படுவதாகும். தனித்துவமாகச் செயல்படுவதென்றால், சரீரத்தின் கோட்பாட்டை மீறுவதாகும்.

 

பயிற்சி மற்றும் பிரயோகம்

கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலிலுள்ள நாம், தேவனுடைய நித்தியப் பொருளாட்சியைக் குறித்த ஒரு தெளிவான தரிசனத்தைப் பெற்று, இந்தத் தரிசனத்தால் ஆளுகைசெய்யப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு, வழிகாட்டப்பட வேண்டும், ஏனெனில் நாம் இங்கு தேவனுடைய மீட்டுத்திருப்புதலில் தேவனுடைய நித்தியப் பொருளாட்சியை நிறைவேற்றுவதற்காக இருக்கிறோம். இந்தத் தரிசனம் நம் வாழ்க்கை, வேலை, செயல்பாடு எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் தரிசனமாக இருக்க நாள்தோறும் நம்மில் புதுப்பிக்கப்பட வேண்டும்.

பவுலைப்போல், நாம் “நம்பகமாயிருப்பதற்கு கர்த்தரால் இரக்கங்காட்டப்பட வேண்டும் (7:25; 1 தீமோ. 1:12), இதன்மூலம் நாம் சபையில் விசுவாசிகளுக்கு ஜீவ நிரப்பீடாக தேவனுடைய வார்த்தையையும் கிறிஸ்துவையும் ஊழியஞ்செய்து, ஆவிக்குரிய உணவை தேவனுடைய வீட்டாருக்கு வழக்கமாகக் கொடுக்கிற நம்பகமான அடிமைகளாக இருக்கக்கூடும்.

 

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1

த1 முன்னணித்துவத்தைப்பற்றிய கர்த்தரின் கருத்து, இயற்கைக் கருத்துக்கு நேரெதிரானது; (மத் . 20:25-27)

(தேவனுடைய புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியில், முன்னணித்துவம் என்றால் அடிமைத்துவமாகும் என்று எடுத்துரையுங்கள்)

த2 முன்னணித்துவம் ஆவிக்குரிய திறனைச் சார்ந்திருக்கிறது. மாபெரும் திறனைக் கொண்டவனே தலைவன்.(அப். 13:2; 14:12; கலா. 2:14)

(தேவனுடைய பிள்ளைகள் மத்தியில் உள்ள முன்னணித்துவம் அதிகாரப்பூர்வமானதோ, நிரந்தரமானதோ, நிறுவனம் சார்ந்ததோ அல்ல என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 2

த1 அப்போஸ்தலர்களின் அதிகாரம் ஆவிக்குரியது, அது அவர்களது வார்த்தையின் ஊழியத்தில் இருக்கிறது (அப். 2:42; 2 கொரி. 13:5-6)

(சபை அலுவல்களில் குறுக்கிட அப்போஸ்தலர்களுக்கு நிலைரீதியாக எந்த அதிகாரமும் கிடையாது; அவர்களால் ஊழியஞ்செய்யப்படும் வார்த்தைக்கே அதிகாரம் உண்டு என்பதை எடுத்துரையுங்கள்)

த2 முன்னணித்துவம் ஜீவனிலுள்ள வளர்ச்சியால் வடிவம்பெறுகிறது, அது தேவையின் விளைவாக இருக்கிறது.

(புதிய ஏற்பாட்டில், ஒரே ஒரு ஊழியமும் மற்றும் ஊழியத்தில் ஒரே ஒரு முன்னணித்துவமுமே உண்டு என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 3

த1 அதிகாரம் எப்போதும் நேர்த்தியான பேசுதலைத் தொடர்ந்துவருகிறது (1 கொரி. 4:17b; 2 தெச. 6, 9, 14)

(தேவனுடைய நியமன அதிகாரம், வழிநடத்துபவர்களின் போதனையில் இருந்தது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 முதல் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் கர்த்தராகிய இயேசுவால் நியமிக்கப்பட்டனர், ஆனால் அவர்கள் அமைப்புமுறைப்படுத்தப்படவில்லை (2 கொரி. 13:10; 1 கொரி. 4:17)

(புதிய ஏற்பாட்டில் காட்டப்பட்ட முன்னணித்துவம் முக்கியமாக ஊழியர்களின் போதனைகளில் உள்ளது, உடன்-வேலையாட்களின் செயல்களில் இல்லை என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 4

த1 நம் பிரசங்கமும் நம் போதனையும் புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியின் வெளிப்பாட்டினால் முன்னணித்துவத்தின்கீழ் மட்டுப்படுத்தப்பட வேண்டும். (அப் 26:19; எபே . 3:3-4)

(நாம் எவ்வளவேனும் ஒரு மனிதனைப் பின்தொடரவில்லை; மாறாக, நாம் ஒரு தரிசனத்தை, தேவனுடைய உச்சநிலை தரிசனத்தைப் பின்தொடர்கிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 தேவனுடைய மீட்டுத்திருப்புதலிலுள்ள வெளிப்பாடு நம்மைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் மட்டுப்படுத்துகிறது (1 தீமோ . 1:3; அப் 26:19)

(இந்த முன்னணித்துவம் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் உள்ள மக்களைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு தனி நபரின் முன்னணித்துவமும் அல்ல என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 5

த1 கர்த்தருடைய மீட்டுத்திருப்புதல் என்பது கிறிஸ்துவின் சரீரத்தின ஒருமையை மீட்டுத்திருப்பும் ஒரு மீட்டுத்திருப்புதல் ஆகும் (எபே . 4:3-4; கொலோ. 3:11; எபே. 4:16)

( கர்த்தருடைய மீட்டுத்திருப்புதல் மீட்டுத்திருப்பிக் கொண்டிருக்கின்ற மூன்று முக்கிய காரியங்கள் என்ன என்பதை எடுத்துரையுங்கள்)

த2 நெகேமியா புத்தகத்தின் மையமும் அதிமுக்கியமுமான குறிப்பு, நேர்த்தியான போதிய அளவிலான முன்னணித்துவத்தைப் பற்றிய காரியமாகும் (நெகே. 8:8-10; 1 தீமோ. 3:15)

( நெகேமியா மனித வரலாற்றின் நேர்த்தியான தலைவனாக அது சிறந்த தலைவனாக மற்றும் ஒரு பெரியவர் எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இருந்தான்)

 

நாள் 6

த1 கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களை அனுப்பியபோது, அவர்களை அவர் இரண்டிரண்டு பேராக ஒரு சாட்சியாக, இரண்டு என்ற கோட்பாட்டில் அனுப்பினார்.(லூக் 10:1, 1 கொரி 1:1)

(பொருத்தத்தின் இந்த கோட்பாடு இன்றும் பிரயோகிக்கப்படுகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 கர்த்தரின் சேவையில் தனித்துவமாகச் செயல்படுவது தெய்வீகக் கோட்பாட்டின் படியானதல்ல. (ரோமர் . 12:5)

(கர்த்தர் அடிக்கடி நமக்காக ஒரு கடினமான பொருத்தத்தை ஏற்படுத்துவார். ஆனால் இப்படிப்பட்ட ஒரு பொருத்தம் உண்மையில் ஒரு மாபெரும் உதவி என்பதை எடுத்துரையுங்கள்)