கிறிஸ்துவின் சரீரமாக சபையின் ஜீவாதாரக் கட்டியெழுப்புதலுக்காக கர்த்தரிடம் அன்புகூருதலும் ஒருவரிலொருவர் அன்புகூருதலும்
செய்தி நான்கு
கிறிஸ்துவின் ஜீவாதார சரீரம் அன்பில் தன்னைத்தானே கட்டியெழுப்புதல்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
ஒவ்வொரு நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதியை வாசித்தல் வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல் எபே. 4:12-13 கிறிஸ்துவினுடைய சரீரம் கட்டியெழுப்பப்படுவதற்கென்று, ஊழியத்தின் வேலைக்கென்று பரிசுத்தவான்கள் சீர்பொருத்தப்படுவதற்காக, அவரே சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரை சுவிசேஷகர்களாகவும், சிலரை மேய்ப்பர்கள் மற்றும் போதகர்களாகவும் கொடுத்தார். 15-16 அதற்கு மாறாக, அன்பில் சத்தியத்தைப் பற்றிக்கொண்டு, எல்லாவற்றிலும் நாம் அவருக்குள்ளாக, அதாவது, தலையாகிய கிறிஸ்துவுக்குள்ளாக வளரும்படிக்கே அவ்வாறு செய்தார். இவரிலிருந்தே சரீரம் முழுவதும், ஐசுவரியமான நிரப்பீடளிக்கும் சகல மூட்டுகளின் மூலமாகவும் ஒவ்வொரு பகுதியும் தன் தன் அளவில் செய்யும் கிரியையின்மூலமாகவும் ஒன்றாக இணைக்கப்பட்டு, ஒன்றாகப் பின்னிப்பிணைக்கப்பட்டு, அன்பில் அது தன்னைத்தானே கட்டியெழுப்புவதற்கேதுவாகச் சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது. பசிதூண்டும் வார்த்தை எவ்வாறு கிறிஸ்துவின் ஜீவாதார சரீரத்தின் உள்ளார்ந்த கட்டியெழுப்புதல் எல்லா அவயவங்களாலும் நேரடியாகக் கட்டப்படுவதன் மூலம்—தலைக்குள்ளும், தலையிலிருந்தும் நடைபெறுகிறது கட்டியெழுப்பப்படுவதற்கு, நாம் அன்பில் சத்தியத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும், எல்லாவற்றிலும் தலையாகிய கிறிஸ்துவுக்குள் வளர வேண்டும். தலையிலிருந்து, தெய்வீகப் பகிர்ந்தளிப்பில், சரீரம் முழுவதும் ஐசுவரியமான நிரப்பீட்டின் ஒவ்வொரு மூட்டின் மூலம் நெருக்கமாய் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் தன்தன் அளவில் செய்யும் கிரியைகளின் மூலம் பின்னிப்பிணைக்கப்பட்டிருக்கிறது. மூட்டுகளின் நிரப்பீடு அளிப்பதும், பாகங்கள் செயல்படுவதும் தெய்வீக அன்பின் சரீரம் தன்னில்தானே கட்டியெழுப்பப்படுவதற்கேதுவாக சரீர வளர்ச்சியை உண்டாக்குகின்றன. அந்த அன்பு தேவனின் மூலக்கூறேயான, அவரின் உள்ளான சாரப்பொருளாகும். இது கிறிஸ்துவிலுள்ள தேவனின் அன்பு; இது நம்மில் கிறிஸ்துவின் அன்பாக ஆகிறது, அதைக்கொண்டு நாம் கிறிஸ்துவையும், அவரது சரீரத்தின் சக அவயவங்களையும் அன்புகூருகிறோம். ஆவிக்குரிய பாரம் கிறிஸ்துவின் ஜீவாதார சரீரத்தின் நேரடியான கட்டியெழுப்புதல் சரீரத்தாலேயே நடைபெறுகிறது. சரீரமானது கிறிஸ்துவின் எல்லா அவயவங்களும், குறிப்பாக ஒவ்வொருவனும் தன்தன் அளவில், பிரதானமாக தீர்க்கதரிசனமுரைப்பதில், அதாவது கர்த்தருக்காகப் பேசுவதில் செயல்படுவதின்மூலம் நேரடியாகக் கட்டப்படுகிறது. கிறிஸ்துவின் எல்லா அவயவங்களாலான இந்த நேரடிக் கட்டியெழுப்புதல், கிறிஸ்துவின் பரமேறுதலில், பரமேறிய கிறிஸ்துவின் தெய்வீக மூலக்கூறின் உதாரத்துவமான நிரப்பீட்டின்கீழ் எல்லா கொடைபெற்ற நபர்களின் சீர்பொருத்தும் வேலையின்மூலம் நடைபெறுகிறது. இந்தப் பூமியில் இத்தகைய ஓர் ஜீவாதார கட்டிடத்தின் நிஜத்தை நாம் காணக் கூடுமாறு நாம் [இதை] நடைமுறைப் படுத்த வேண்டும். தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை சத்தியத்தினுடைய வெளிப்பாடு கிறிஸ்துவின் ஜீவாதார சரீரத்தின் உள்ளார்ந்த கட்டியெழுப்புதலானது(தம் உயிர்த்தெழுதல் உட்பட) தம் பரமேறுதலில் தலையாகிய கிறிஸ்துவால் அவரது சரீரத்திற்குத் தெய்வீகத் திரியேகத்துவத்தைப் பகிர்ந்தளிப்பதில் கட்டியமைக்கப்பட்ட (அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மற்றும் மேய்ப்பர்கள் மற்றும் போதகர்கள் போன்ற) கொடைபெற்ற நபர்களைக் கொடுப்பதன்மூலம் நடைபெறுகிறது. கிறிஸ்துவின் ஜீவாதார சரீரத்தின் உள்ளார்ந்த கட்டியெழுப்புதலானது எல்லாப் பரிசுத்தவான்களும் புதிய ஏற்பாட்டு ஊழியத்தின் வேலையைச் செய்ய, அதாவது கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்ப, திறனுள்ளவர்களாக இருக்குமாறு, கொடைபெற்ற நபர்கள் பரிசுத்தவான்களைத் தெய்வீகப் பகிர்ந்தளிப்பில் சீர்பொருத்துவதின்மூலம் நடைபெறுகிறது. கிறிஸ்துவின் ஜீவாதார சரீரத்தின் உள்ளார்ந்த கட்டியெழுப்புதல் எல்லா அவயவங்களாலும் நேரடியாகக் கட்டப்படுவதன் மூலம் தலைக்குள்ளும், தலையிலிருந்தும் நடைபெறுகிறது. ஜீவனின் அனுபவம் எவ்வளவாய் கிறிஸ்து நமக்குள் ஏறி இறங்குகிறாரோ, நம்மைக் கைப்பற்றித் தோற்கடிக்கிறரோ, அவ்வளவாய் அவர் நம்மைத் தம் சரீரத்திற்குக் கொடைகளாகக் கட்டியமைக்க நம்மைத் தம்மையே கொண்டு நிரப்புகிறார். சரீரம் தன்னைத்தானே எதனில் கட்டியெழுப்புகிறதோ அந்த அன்பே அன்பு; இது கிறிஸ்துவிலுள்ள தேவனின் அன்பு, இது நம்மில் கிறிஸ்துவின் அன்பாக ஆகிறது. இப்படிப்பட்ட தெய்வீக அன்பின் நிலைமையிலும், சூழலிலும்தான் நாம் அவருக்கு முன்பாக பரிசுத்தமாகவும், மாசற்றும் இருக்க தேவனைக் கொண்டு பூரிதமாக்கப்படுகிறோம். நடைமுறை வழியில் நம்மால் உணர்ந்தறியப்பட்டு, அனுபவமாக்கப்படும் இப்படிப்பட்ட தெய்வீக அன்பில்தான், நாம் வளர்ச்சிக்காக வேரூன்றி, கட்டிடத்திற்காக நிலையூன்றுகிறோம். நடைமுறை மற்றும் பிரயோகம் கட்டியெழுப்பப்படுவதற்கு, நாம் அன்பில் சத்தியத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும், எல்லாவற்றிலும் தலையாகிய கிறிஸ்துவுக்குள் வளர வேண்டும். தேவனுடைய நித்தியப் பொருளாட்சி, சகலத்தையும்- உள்ளடக்கிய கிறிஸ்து, கிறிஸ்துவின் சரீரமாகிய சபை இவற்றைப்பற்றிய தெய்வீக சத்தியத்தை நாம் பற்றிக்கொள்ள வேண்டும். நாம் தலையாகிய கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிய வேண்டும். மேலும், அவரது தெய்வீக ஜீவன் நம் உள்ளான பகுதிகள் அனைத்திலும் விரிவடையவும், அதிகரிக்கவும் நாம் அனுமதிக்க வேண்டும். சரீரம் தன்னைத்தானே எதனில் கட்டியெழுப்புகிறதோ அந்த அன்பைக்கொண்டு நாம் கிறிஸ்துவையும், அவரது சரீரத்தின் சக அவயவங்களையும் அன்புகூருகிறோம். இப்படிப்பட்ட தெய்வீக அன்பில்தான், தேவனை பாவனை செய்பவர்களாக இருப்பதற்கு நாம், தேவனால் பிறந்தவர்களும், தேவனுடைய ஜீவனையும், சுபாவத்தையும் உடையவர்களும் தேவ இனத்தை சார்ந்தவர்களுமான தேவ மனிதர்களாகிய தேவனுடைய பிரியமான பிள்ளைகளாக நடத்துகொள்ள வேண்டும், அதாவது வாழவும், செயல்படவும், நம் ஆள்த்தத்துவத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.தீர்க்கதரிசனம் உரைப்பதற்கான தலைப்புகள்—ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1 த1 கிறிஸ்துவின் ஒரு மாதிரியாகிய பெட்டகம் சென்ற இடமெல்லாம் வெற்றி பெறப்பட்டது (சங். 68:18; எண். 1:35) (பெட்டகம், சீயோன் மலையின் உச்சிக்கு வெற்றிகரமாகப் பரமேறியபோது, எதைச் சித்தரித்தது என்பதை எடுத்துரையுங்கள்) த2 இந்த பிரபஞ்சமளாவிய போக்குவரத்தின்மூலமாகவே, கிறிஸ்துவினால் சரீரத்திற்குக் கொடைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. (கிறிஸ்து மனிதர்களுக்குக் கொடைகளை அளித்த வழியை எடுத்துரையுங்கள்) நாள் 2 த1 நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு சாத்தானால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தோம் (எபே. 4:8) (கிறிஸ்து நம்மை எப்போது சாத்தானுடைய சிறையிலிருந்து தப்புவித்து, தம்மிடமாய் எடுத்துக்கொண்டார் என்பதை எடுத்துரையுங்கள்) த 2 அவர் எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, இறங்கினார் ஏறினார் (எபே. 4:9-10) (கிறிஸ்து தம் இறங்குதலினாலும் ஏறுதலினாலும், தம்மைக்கொண்டே நம்மை நிரப்புவார் என்பதை எடுத்துக்காட்டோடு எடுத்துரையுங்கள்) நாள் 3 த1 சரீரத்தின் கட்டியெழுப்புதலே சுவிசேஷத்தின் வேலையாகும் (எபே. 4:12-13) ( கட்டியெழுப்புதல், நேரடியாக கொடைபெற்றவர்களால் அல்ல, மாறாக சீர்பொருந்தப்பட்டிருக்கிற பரிசுத்தவான்களால் என்பதை எடுத்துரையுங்கள்) த2 கொடைபெற்ற நபர்கள் பரிசுத்தவான்களைச் சீர்பொருத்துகிறார்கள் (எபே. 4:12-13) (கொடைபெற்ற நபர்கள் எவ்வாறு பரிசுத்தவான்களைச் சீர்பொருத்துகிறார்கள் என்பதை எடுத்துரையுங்கள்) நாள் 4 த1 கிறிஸ்துவின் சரீரத்தின் ஒவ்வொரு அவயவத்திற்கும் செயல்படக்கூடிய மற்றும் அதனதன் அளவு இருக்கிறது. (எபே. 4:16) ( “ஐசுவரியமான நிரப்பீட்டின் சகல மூட்டுகள்” மற்றும் “ஒவ்வொரு பகுதி” என்ன என்பதை எடுத்துரையுங்கள்) த2 மேய்த்துப்பேணுதல் இல்லாமல், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் சுவிசேஷகர்கள் செயல்பட முடியாது (யோவா. 21:15-17) (மேய்த்துப்பேணுதலும் போதித்தலுமே, பரமேறின தலையாகிய கிறிஸ்துவினால் சபைகளுக்கு வழங்கப்பட்ட கொடைகளிலுள்ள இன்றியமையாத ஒன்றாகும்) நாள் 5 த1 அன்பில் சத்தியத்தைப் பற்றிக்கொள்ளுதல் (எபே. 4:15) (இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மெய்யான காரியங்கள் என்ன என்பதை எடுத்துரையுங்கள்) த2 தலையாகிய கிறிஸ்துவுக்குள், எல்லாவற்றிலும் வளர்தல் (எபே. 4:15) (நாம் உடை அணியும் விதம், நம் தலைமுடியை சீவும் விதம், நாம் பொருட்கள் வாங்கும் விதம், மற்றும் நாம் பேசும் விதம் போன்ற பெரிய சிறிய அனைத்திலும், நாம் கிறிஸ்துவின் தலைமைத்துவத்தின் கீழ் பணிந்தடங்குதலின்மூலம் நாம் அவரைத் தலையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டோடு எடுத்துரையுங்கள்) நாள் 6 த1 விசுவாசமோ அன்போ நம்முடையவை அல்ல; அவை அவருடையவை (எபே. 3:17) (அவரது விசுவாசம் நம் விசுவாசமாகிறது, இதன்மூலம் நாம் அவரில் விசுவாசிக்கிறோம்; அவரது அன்பு நம் அன்பாகிறது, இதன்மூலம் நாம் அவரை அன்புகூருகிறோம்) த2 நாம் நிரப்பீட்டின் மூட்டுகளாக அல்லது செயல்படும் பகுதிகளாக செயல்பட வேண்டும் (எபே. 4:15-16) (மூட்டுகள் மட்டுமே பிரயோஜனமானது என்று நாம் நினைக்கக்கூடாது. கிறிஸ்துவின் சரீரத்தின் எந்தவொரு அவயவமும் தன்னை இழிவாகக் கருதக்கூடாது.)