Tamil Prophesying Outline – 12 DEC 2022

[av_button label=’Read in English’ link=’manually,https://www.churchinchennai.orgprophesying-outline-12-dec-2022/’ link_target=” size=’medium’ position=’center’ icon_select=’no’ icon=’ue800′ font=’entypo-fontello’ color=’theme-color’ custom_bg=’#444444′ custom_font=’#ffffff’ admin_preview_bg=” av_uid=’av-1ynx9m’]

கிறிஸ்துவின் சரீரமாக சபையின் ஜீவாதாரக் கட்டியெழுப்புதலுக்காக கர்த்தரிடம் அன்புகூருதலும் ஒருவரிலொருவர் அன்புகூருதலும்

 

செய்தி மூன்று

 

சிதைக்கமுடியா தன்மையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அன்புகூருதல்

 

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை

ஒவ்வொரு நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதியை வாசித்தல்

 

வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்.

எபே. 6:24 சிதைக்கமுடியா தன்மையில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, அன்புகூருகிற எல்லாரோடும் கிருபை இருப்பதாக.

 

4:15-16 அதற்கு மாறாக, அன்பில் சத்தியத்தைப் பற்றிக்கொண்டு, எல்லாவற்றிலும் நாம் அவருக்குள்ளாக, அதாவது, தலையாகிய கிறிஸ்துவுக்குள்ளாக வளரும்படிக்கே அவ்வாறு செய்தார். இவரிலிருந்தே சரீரம் முழுவதும், ஐசுவரியமான நிரப்பீடளிக்கும் சகல மூட்டுகளின் மூலமாகவும் ஒவ்வொரு பகுதியும் தன் தன் அளவில் செய்யும் கிரியைகளின்மூலமாகவும் ஒன்றாக இணைக்கப்பட்டு, ஒன்றாகப் பின்னிப்பிணைக்கப்பட்டு, அன்பில் அது தன்னைத்தானே கட்டியெழுப்புவதற்கேதுவாகச் சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது.

 

பசிதூண்டும் வார்த்தை

“நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சிதைவின்மையோடு அன்புகூர்கிற எல்லாரோடுங்கூட கிருபை இருப்பதாக” என்று எபேசியர் 6:24 கூறுகிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சிதைவின்மையோடு அன்புகூருவதின் அர்த்தம் என்ன?

 

  1. சிதைக்கமுடியா தன்மையில் கர்த்தரை அன்புகூருவது என்றால், அவரைப் பழைய சிருஷ்டிப்பில் அல்ல, புதிய சிருஷ்டிப்பில் அன்புகூருவதாகும்.
  2. சிதைக்கமுடியா தன்மையில் கர்த்தரை அன்புகூருவது என்றால், பரிசுத்த ஆவியானவர் குடியிருக்கும் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட ஆவியில் அவரை அன்புகூருவதாகும்.
  3. சிதைக்கமுடியா தன்மையில் கர்த்தரை அன்புகூருவதென்றால் எபேசியரில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சிதைக்கப்பட முடியாத எல்லாவற்றின்படி அவரை அன்புகூருவதாகும். கிறிஸ்து நமக்கு என்னவாக இருக்கிறார், அவர் என்ன செய்திருக்கிறார், சபை ஆகியவை குறித்து எபேசியரில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தெய்வீக, ஆவிக்குரிய, பரலோக, சிதைக்கப்படமுடியாத காரியங்கள் எல்லாவற்றிலும் நாம் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அன்புகூர வேண்டும்.

 

ஆவிக்குரிய பாரம்

கிறிஸ்து நமக்கு என்னவாக இருக்கிறார், அவர் என்ன செய்திருக்கிறார், சபை ஆகியவை குறித்து எபேசியரில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தெய்வீக, ஆவிக்குரிய, பரலோக, சிதைக்கப்படமுடியாத காரியங்கள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் நாம் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அன்புகூர வேண்டும்.

 

கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்ப ஊழியத்தின் வேலையைச் செய்வதன்மூலம் நாம் சிதைக்கப்படமுடியா தன்மையில் கர்த்தரை அன்புகூர வேண்டும். எபேசியர் புத்தகத்தின் ஒவ்வோர் அதிகாரத்திலும் திரைநீக்கப்பட்டுள்ள சபை வாழ்க்கையுடன் பொருந்தக்கூடிய ஆவிக்குரிய அனுபவங்களில் நாம் கர்த்தரை, சிதைக்கமுடியா தன்மையில் அன்புகூர வேண்டும்

 

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

 

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

“சிதைக்கமுடியா தன்மையில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அன்புகூருகிற எல்லாரோடும் கிருபை இருப்பதாக”; நேர்த்தியான சபை வாழ்க்கைக்காக நாம் கர்த்தரை சிதைக்கமுடியா தன்மையில் அன்புகூர வேண்டும்

 

பவுல் எபேசியர்களுக்கு எழுதிய தன் நிருபத்தின் முடிவில் அவனது ஆசீர்வாதம், பின்னர் எழப்போகும் ஒரு பிரச்சனையை அதாவது வெளிப்படுத்தல் 2:2-5இல் கர்த்தருடைய கடிந்துகொள்ளுதலால் சுட்டிக்காட்டப்படுகிறபடி, எபேசுவிலுள்ள சபையில் அன்பு மங்கிவிடும் என்ற சிக்கலை முன்ன்றிவிக்கிறது.

எபேசியர்களுக்கு எழுதப்பட்ட நிரூபத்திலுள்ள சபையின் வெளிப்பாட்டில் இரண்டு முக்கிய அம்சங்கள் இருக்கின்றன: முதல் அம்சம் கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஊழியத்தின் வேலை, இரண்டாவது அம்சம் சபை வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடிய ஒரு வாழ்க்கையை வாழ நமக்குத் திறனளிக்கும் பல ஆவிக்குரிய அனுபவங்களை உள்ளடக்கிய நம் ஆவிக்குரிய வாழ்க்கை.

 

ஜீவனின் அனுபவம்

“சிதைக்கமுடியா தன்மையில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, அன்புகூருகிற எல்லாரோடும் கிருபை இருப்பதாக”; கர்த்தரைக் கிருபையாக அனுபவிக்கும் அனுபவமகிழ்ச்சி அவரை அன்புகூருபவர்களிடம் உள்ளது.

 

தேவன் முதலில் நம்மை அன்புகூர்ந்தார்; அதன்பின் பதிலுக்கு அவரை அன்புகூரும்படி இந்தத் தெய்வீக அன்பு நம்மை தூண்டுகிறது. இத்தகைய அன்பின் நிலைமையிலும், சூழலிலும் தேவன் இருக்கும் வண்ணமாக பரிசுத்தமாகவும் மாசற்றவர்களாகவும் இருக்க நாம் தேவனைக் கொண்டு பூரிதமாக்கப்படுகிறோம். எபேசியர் புத்தகத்தின் இலக்கு, நாம் தேவனை அன்பாக அனுபவித்து மகிழவும், தெய்வீக அன்பின் இனிமையில் அவரது பிரசன்னத்தை அனுபவித்துமகிழவும், இதன்மூலம் மற்றவர்களை, கிறிஸ்து அன்புகூர்ந்தது போலவே அன்புகூரவும், நம்மை தேவனின் உள்ளார்ந்த சாரப்பொருளுக்குள் கொண்டு வருவதே ஆகும்.

 

நடைமுறை மற்றும் பிரயோகம்

நேர்த்தியான சபை வாழ்க்கைக்காக நாம் கர்த்தரை சிதைக்கமுடியா தன்மையில் அன்புகூர வேண்டும்.

கிறிஸ்து நமக்கு என்னவாக இருக்கிறார், அவர் என்ன செய்திருக்கிறார், சபை ஆகியவை குறித்து எபேசியரில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தெய்வீக, ஆவிக்குரிய, பரலோக, சிதைக்கப்படமுடியாத காரியங்கள் எல்லாவற்றிலும் நாம் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அன்புகூர வேண்டும்.

 

மற்றவர்களை மூவொரு தேவனுக்குள் கொண்டுவர நாம் அவர்களைச் சுவிசேஷத்துடன் சந்திக்க வேண்டும். புதிய விசுவாசிகளை நாம் வீட்டுக் கூடுகைகளில் மேய்த்துப்பேண வேண்டும், அவர்களைப் போஷித்து, அவர்கள் வளர உதவ வேண்டும். பரிசுத்தவான்கள் ஊழியத்தின் வேலையைச் செய்யுமாறு குழுக் கூடுகைகளில் நாம் அவர்களைச் சீர்பொருத்த வேண்டும். பரிசுத்தவான்கள் சபையில் ஜீவாதார கட்டியெழுப்புதலுக்காக சபைக் கூடுகைகளில் ஒவ்வொருவராக தீர்க்கதரிசனமுரைக்க, தேவனுக்காகப் பேச, நாம் அவர்களை வழிநடத்த வேண்டும்.

 

தீர்க்கதரிசனம் உரைப்பதற்கான தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்.

நாள் 1

 

த1 நேர்த்தியான சபை வாழ்க்கைக்காக, நாம் கர்த்தரை சிதைக்கமுடியா தன்மையில் அன்புகூர வேண்டும் (எபே. 6:24)

(தேவன் முதலில் நம்மை அன்புகூர்ந்தார். அதன்பின் பதிலுக்கு அவரை அன்புகூரும்படி இந்தத் தெய்வீக அன்பு நம்மைத் தூண்டுகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

 

த2 பரிசுத்தமாக்கப்பட்டு சீர்பொருத்தப்படுவதற்கு, நாம் தேவனுடைய தெய்வீக அன்பில் தொடர்ந்து அவரை அன்புகூருகிறவர்களாக இருக்க வேண்டும் (எபே. 1:4)

 

(நாம் கர்த்தருக்கேற்றபடி- அவருடைய திட்டம், நல்லின்பம், வாஞ்சை மற்றும் பொருளாட்சியின்படி – நாம் அவரை அன்புகூர வேண்டும்)

 

நாள் 2

 

த1 அன்பில் ஒருவரையொருவர் தாங்குவது, சரீரத்தின் ஒருமைக்காக இருக்கிறது (எபே. 4:2)

 

(அன்பில் இருப்பதே ஒருவரையொருவர் தாங்குவதற்கான வழி என்பதை எடுத்துரையுங்கள்)

 

த2 சபைக்காக கட்டியெழுப்பப்படுவதற்கு, நாம் அனைவரும் அன்பில் செயல்பட வேண்டும் (எபே. 4:15)

 

(நாம் கிறிஸ்துவையும் சபையையும் தெய்வீக அன்பைக் கொண்டு அன்புகூரும்போது, நம் அன்பு சிதைக்கமுடியாத தன்மையில் இருக்கும் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 3

 

த1 கர்த்தரை சிதைக்கமுடியா தன்மையில் அன்புகூருவது என்றால் புதிய சிருஷ்டிப்பில் அவரை அன்புகூருவதாகும் (2 கொரி. 5:17; கலா. 6:15)

 

(கர்த்தரை சிதைக்கமுடியா தன்மையில் அன்புகூருவதின் அர்த்தம் என்ன என்பதை எடுத்துரையுங்கள்)

 

த2 மற்றவர்களுக்கு முன் ஒரு காட்சியாக்காத அல்லது ஒருவன் தன்னையே மேன்மைப்படுத்திக் காட்டாத ஒரு வழியில் விஷயங்களைச் செய்வது என்பது புதிய சிருஷ்டிப்பில் உள்ளது (2 கொரி. 5:17; கலா. 6:15)

 

(கர்த்தரை சிதைக்கமுடியாத தன்மையில் எவ்வாறு அன்புகூர முடியும் என்பதை எடுத்துக்காட்டுகளோடு எடுத்துரையுங்கள்)

 

நாள் 4

 

த1 அவரிடமான எபேசிய பரிசுத்தவான்களின் அன்பைக்குறித்து கர்த்தர் அக்கறையாக இருந்தார் என்பதை எபேசியர் 6:24லிருந்து வெளிப்படுத்தின விசேஷம் 2:4-5ல் நாம் பார்க்கிறோம் (எபே. 6:24; வெளி. 2:4-5)

 

([எபேசியர் 6:24]இலுள்ள பவுலின் வார்த்தைகள், எழப்போகும் ஒரு பிரச்சனையை முன்னறிவிக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்.)

 

த2 கொரிந்தியர்களை, கிறிஸ்துவுக்கான ஒரு தூய கன்னிகையாக வழங்க ஒரே கணவருக்கு நிச்சயம் செய்திருப்பதாகவும் தொடர்ந்து கூறினான் (2கொரி. 11:2)

 

(உண்மையான ஊழியம் நம் மணவாளனாகிய கர்த்தராகிய இயேசுவின் மேலுள்ள நம் அன்பைத் தூண்டுகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 5

 

த1 ஒவ்வொரு விசுவாசியும் சரீரத்தின் ஓர் அவயவமாக முக்கியமானவர் மற்றும் தேவைப்படுகின்றனர் (எபே. 4:12-13)

(எபேசியரில் சபையின் வெளிப்பாட்டில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன என்பதை எடுத்துரையுங்கள்)

 

த2 நாம் கர்த்தரை சிதைக்கமுடியா தன்மையில் அன்புகூருகிறோமா என்பது நாம் அவரை அன்புகூரும் காரியங்களைப் பொருத்தது (எபே. 6:24)

(சரீரத்தில், என்றென்றும் நிலைத்திருக்கும் மற்றும் ஒருபோதும் சிதைக்கபடாத மூன்று வகையான உழைப்பின் விளைவுகள் என்ன என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

 

த1 நாம் நம் ஆவிக்குத் திரும்புவதன்மூலம் கர்த்தரை அன்புகூர வேண்டும். இதுவே அவரை சிதைக்கமுடியா தன்மையில் அன்புகூருவதாகும் (எபே. 3:16-17)

 

(கர்த்தரை சிதைக்கமுடியா தன்மையில் அன்புகூருவது என்பது சபை வாழ்க்கைக்குப் பொருத்தமான காரியங்களில் அவரை அன்புகூருவதாகும் என்பதை எடுத்துரையுங்கள்)

 

த2 எபேசியரில் வெளிப்படுத்தப்பட்ட எல்லா ஆவிக்குரிய அனுபவங்களின் இரகசியமும் கடைசி வசனத்தில் உள்ளது (எபே. 6:24)

 

(கிருபையே [சிதைக்கமுடியா தன்மையில் கர்த்தரை அன்புகூருவதன்] ஊற்று என்பதை எடுத்துரையுங்கள்