[av_button label=’Read in English’ link=’manually,https://www.churchinchennai.orgprophesying-outline-05-dec-2022/’ link_target=” size=’medium’ position=’center’ icon_select=’no’ icon=’ue800′ font=’entypo-fontello’ color=’theme-color’ custom_bg=’#444444′ custom_font=’#ffffff’ admin_preview_bg=” av_uid=’av-1ynx9m’]
கிறிஸ்துவின் சரீரமாக சபையின் ஜீவாதாரக் கட்டியெழுப்புதலுக்காக, கர்த்தரிடம் அன்புக்கூருதலும் ஒருவரிலொருவர் அன்புகூருதலும்
செய்தி-2
உன்னதப்பாட்டு-கிறிஸ்துவின் மணவாட்டியின் ஆயத்தத்திற்காக ஒரு தனிப்பட்ட விசுவாசி கிறிஸ்துவோடும்கொள்ளும் அன்பான ஐக்கியத்தின் முன்னேறுகிற அனுபவம்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
ஒவ்வொரு நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்
உன்னதப்பாட்டு 1:2 அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சைரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது.
4 என்னை இழுத்துக்கொள்ளும் உமக்குப் பின்னே ஓடிவருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக் கொண்டுவந்தார்.
8:13-14 தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கட்டும். என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.
பசிதூண்டும் வார்த்தை
உன்னதப்பாட்டு, ஒரு தனிப்பட்ட விசுவாசி கிறிஸ்துவோடுகொள்ளும் அன்பான ஐக்கியத்தின் முன்னேறுகிற அனுபவத்தை திரைநீக்கிக் காண்பிக்கிறது. அவருடைய மணவாட்டியின் ஆயத்தத்திற்காக ஆறு முக்கிய நிலைகள் என்ன?
- கிறிஸ்துவின் காதலி திருப்திக்காக அவரை ஆவலாய் பின்தொடரும்படி ஈர்த்திழுக்கப்படுகிறாள்.
- கிறிஸ்துவின் காதலி கிறிஸ்துவின் சிலுவையுடான தன் ஒருமையின்மூலம் சுயத்திலிருந்து விடுவிக்கும்படி அழைக்கப்படுகிறாள்.
- கிறிஸ்துவின் காதலி உயிர்தெழுதலில் உள்ள புது சிருஷ்டியாக, பரமேறுதலில் வாழும்படி அழைக்கப்படுகிறாள்.
- கிறிஸ்துவின் காதலி உயிர்தெழுதலுக்குப் பிறகு சிலுவையின் வழியாகத் திரைக்குள் வாழும்படி இன்னும் பலமாக அழைக்கப்படுகிறாள்.
- கிறிஸ்துவின் காதலி கர்த்தருடைய வேலையில் பங்குபெறுகிறாள்.
- கிறிஸ்துவின் காதலி எடுத்துக்கொள்ளப்பட எதிர்நோக்குகிறாள்.
ஆவிக்குரிய பாரம்
உன்னதப்பாட்டின் முதல் நிலையில், கிறிஸ்துவின் காதலி திருப்திக்காக அவரை ஆவலாய் பின்தொடரும்படி கவர்ந்திழுக்கப்படுகிறாள். தம்மைத் தேடுபவள் தம்முடன் தனிநபர்ரீதியான, பாசம்நிறைந்த, அந்தரங்கமான, ஆவிக்குரிய உறவை உடையவளாயிருக்க வேண்டும். எல்லா ஆவிக்குரிய கோட்பாடுகளும் உன்னப்பாட்டில் உள்ள தேடுபவளின் ஜெயங்கொள்ளும் வாழ்க்கையின் இந்த முதல் நிலையில் அடங்கியுள்ளன; தொடர்ந்துவரும் பாடங்கள் புதியவை அல்ல, ஆனால் அவை ஓர் ஆழமான விதத்தில் திரும்பக் கூறப்படும் பழைய பாடங்கள்; மறுபடிஜெநிப்பிக்கப்படுதல் தேவனுடைய மரபணுவை நமக்குள் கொண்டுவருகிறது, நம் முழு கிறிஸ்தவ வாழ்க்கையின் அனுபவங்கள் அனைத்தும் இந்த மரபணுவில் இருக்கின்றன.
நம் வாழ்க்கை கர்த்தருடைய வார்த்தைகளைச் சார்ந்திருக்கிறது; நம் வேலை அவருடையக் கட்டளைகளைச் சார்ந்திருக்கிறது; நம்முடைய ஜெபங்களின் மையக்குறிப்பு கர்த்தருடைய பேசுதலுக்கான ஏக்கமாக இருக்க வேண்டும். விசுவாசிகளின் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக கர்த்தரின் பேசுதலையே சார்ந்துள்ளது.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
ஒரு கவிதையாகிய உன்னதப்பாட்டின் கருப்பொருள், ஓர் உன்னதமான திருமணத்தில் காணப்படும் காதலின் சரித்திரம் என்பதாகும், இது, கிறிஸ்துவின் மணவாட்டியின் ஆயத்தத்திற்காக ஆறு பிரதானமான நிலைகளில் ஒரு தனிப்பட்ட விசுவாசி கிறிஸ்துவோடுக்கொள்ளும் அன்பான ஐக்கியத்தின் முன்னேறுகிற அனுபவத்தே வெளிப்படுத்துகிறது.
இந்த கவிதைப் புத்தகத்தின் முடிவுரையாக, கிறிஸ்துவின் காதலி, தன் நேசர் பூமி முழுவதையும் நிரப்பப்போகும் (கந்தவர்க்கங்களின் மலைகளாகிய)தம் இனிமையான, அழகான இராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க (வெளிமானும் கலைமானின் குட்டியும் காட்டுகிற) தம் உயிர்த்தெழுதலின் வல்லமையில் திரும்பிவரத் தீவிரப்படும்படி ஜெபிக்கிறாள்
ஜீவனின் அனுபவம்
நம் இயற்கை ஜீவனால் அல்ல, மாறாக உயிர்த்தெழுந்த வல்லமையால்தான், கிறிஸ்துவின் நேசர்களாகிய நாம், அவருடைய சிலுவையுடன் ஒன்றாயிருப்பதன்மூலம் அவருடைய மரணத்திற்கு ஒத்தசாயலாக்கப்படும்படி திறனளிக்கப்படுகிறோம்.நம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட ஆவியில் உள்வசித்து, அதனுடன் கலந்திணைந்த முழுநிறைவடைந்த ஆவியாகிய, ஆவிக்கிறிஸ்துவே இந்த உயிர்த்தெழுதலின் நிஜம்; இத்தகைய கலந்திணைந்த ஆவியில்தான், நாம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் பங்குப்பெற்று, அதனை அனுபவமாக்குகிறோம், இது சுயத்திலிருந்து விடுவிக்கப்படும்படி சிலுவையுடன் ஒன்றாயிருக்கவும், கிறிஸ்துவின் ஜீவாதார சரீரத்தைக் கட்டியெழுப்புவதில் தேவனுடையபொருளாட்சியை நிறைவேற்றுவதற்காக தேவனுடைய புதிய சிருஷ்டிப்பில் புதிய மனிதனாக மறுசாயலாக்கப்படவும் நமக்குத் திறனளிக்கிறது.
நடைமுறை மற்றும் பிரயோகம்
கிறிஸ்துவின் காதலி இடம்விட்டு இடம்சென்று சஞ்சரிப்பதன்மூலம் (கிராமங்களில் தங்குதல்) முழு உலகத்திற்கும் (வயல்வெளிகள்) செய்ய வேண்டிய வேலையைத் தன் நேசருடன் சேர்ந்து செய்ய விரும்புகிறாள்; கர்த்தருடைய வேலையில் பங்குகொள்வதென்றால் அவருடன் சேர்ந்து வேலை செய்வதாகும்; அவருடன் வேலை செய்ய, நமக்கு ஜீவனின் முதிர்ச்சி வேண்டும், நாம் கர்த்தருடன் ஒன்றாக இருக்க வேண்டும், நம் வேலை அவருக்காக சரீரத்திற்காக இருக்க வேண்டும். நம்மிடம் முழு உலகத்திற்குமான ஒரு வேலை இருக்க வேண்டும், அவற்றை கிறிஸ்துவினுடைய சரீரத்தின் நிறைவான உணர்தறிதலுக்குள் கொண்டுவர வேலை செய்வதன் மூலம் பவுல் இதைத்தான் செய்தான்.
நம்முடைய பிரியமானவரான கர்த்தருக்காக நாம் செய்யும் வேலையில், நாம் எப்போதும் அவருக்குச் செவிசாய்த்து, அவருடனான நம் ஐக்கியத்தைப் பராமரிக்க வேண்டும். நம் வாழ்க்கை கர்த்தருடைய வார்த்தைகளைச் சார்ந்திருக்கிறது. நம் வேலை அவருடைய கட்டளைகளைச் சார்ந்திருக்கிறது; நம்முடைய ஜெபங்களின் மையக் குறிப்பு கர்த்தருடைய பேசுதலுக்கான நம் ஏக்கமாக இருக்க வேண்டும்.
தலைப்புகளை தீர்க்கதரிசனம் உரைத்தல்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்.
நாள் 1
த1 நீங்கள் கிறிஸ்துவை உங்கள் ஜீவனாக பெற்றுக்கொண்ட பிறகு, நீங்கள் அவரை மிகவும் தனிநபர்ரீதியாக தேட வேண்டும்(உன்னதப்பாட்டு. 1:2,4)
(கிறிஸ்துவோடுள்ள அனைத்து விசுவாசிகளுடைய உறவு தனிநபர்ரீதியாகவும் பாசம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதை அனுபவத்தோடு எடுத்துரையுங்கள்)
த2 திருப்திக்காகக் கிறிஸ்துவை ஆவலாய் பின்தொடர்வது, உன்னதப்பாட்டிலுள்ள முதல் ‘படிகம்’ ஆகும்.(யோவான். 13:23; வெளி. 3:20)
(அப்போஸ்தலனாகிய யோவானால் கர்த்தருடைய மார்பில் சாய்ந்துக்கொள்ள முடிந்தது என்பதை எடுத்துரையுங்கள். அது எவ்வளவு தனிநபர்ரீதியாகவும் பாசம்நிறைந்ததாகவும் இருந்தது)
நாள் 2
த1 வேதாகமத்தில், மலைகள், குன்றுகள் ஆகிய இரண்டும் சிரமத்தையும் தடைகளையும் குறிக்கின்றன(உன்னதப்பாட்டு 2:8-10)
(உயிர்தெழுப்பட்ட கிறிஸ்துவை தடுக்கும் அளவிற்கு எதுவும் உயர்ந்ததோ அல்லது மிகப்பெரியதோ இல்லை என்பதை எடுத்துரையுங்கள்)
த2 சுயபரிசோதனை எப்போதும், நம் சுயத்தைப் பார்ப்பதையும் மற்றும் கிறிஸ்துவின் பிரசன்னத்திலிருந்து தனிப்படுத்துதலையும் விளைவிக்கிறது.(உன்னதப்பாட்டு 2:8-9)
[கர்த்தரை தேடுபவர்] தன்னைப் பார்க்கும்போது, அது செயலற்ற நிலையில் இருக்கும் குளிர்காலம். ஆனால் அவள் உயிர்தெழுந்த கிறிஸ்துவை எல்லாவற்றினின்றும் நோக்கிப் பார்க்கும்போது, அவள் உயிர்த்தெழுதலின் நிலையை அடையாளப்படுத்தும் வசந்தகால நிலைக்குள் நுழைகிறாள்)
நாள் 3
த1 ஆத்துமாவிலிருந்து ஆவியைப் பகுத்துணரும் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்(எபி. 4:12)
(ஆவி ஆத்துமாவிலிருந்து வேறுப்பட்டது என்பதை நாம் உணரவில்லை என்றால், உயிர்த்தெழுதலில் உள்ள புது சிருஷ்டியாக, பரமேறுதலில் வாழும்படி அழைக்கப்படும் நிலையை நம்மால் அடைய முடியாது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 (காதலி) இரவில் சாலமோன் ஓய்வெடுப்பதற்கான படுக்கையாக மட்டுமல்ல,அவள் பகலில் அவர் நகர்வதற்கான பல்லக்காகவும் இருக்கிறாள்.(உன்னதப்பாட்டு. 3:9-10)
(கிறிஸ்துவின் பல்லக்கின் உள்ளான அர்த்தத்தை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 கிறிஸ்துவின் சிலுவையை அனுபவிப்பதின்மூலம், கிறிஸ்துவின் காதலி விண்கோள்களாக மறுசாயலாக்கப்படுகிறாள்(உன்னதப்பாட்டு. 6:10; மத். 13:43)
(ஜெயம்கொள்ளும் விசுவாசிகள் இராஜ்ஜிய யுகத்தில் சூரியனைப் போல் ஒளிவீசுவார்கள்)
த2 ஜெயங்கொள்பவர்களாக இருக்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுபவர்கள் பலவீனமானவர்களாக இருப்பார்கள்.(உன்னதப்பாட்டு. 6:13)
(தேவனுடைய இரண்டு படைகளின் ஆவிக்குரிய உட்கருத்தை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 அவனுடைய சூலமித்தியாக ஆகிவிட்ட, நாட்டுப்புற பெண் சாலமோனுடைய உடன்-வேலையாளாக இருக்க வேண்டும்(உன்னதப்பாட்டு. 7:11-12)
(இறுதியில் கிறிஸ்துவின் அன்பர்கள் கர்த்தருடைய வேலையில் பங்கு கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 பாடுகள் மூலமான ஆவியானவரின் மறுசாயலாக்குதலால் அடித்துருவாக்கப்பட்ட அவளுடைய பணிந்தடங்கும் சித்தமே,(காதலி) அழகு.(உன்னதப்பாட்டு. 7:4)
([காதலி] இடம் விட்டு இடம்சென்று சஞ்சரிப்பதை விரும்புகிறாள் என்பது, எதை சுட்டிக்காட்டுகிறது என்பதை எடுத்துரையுங்கள்
நாள் 6
த1 தன் நேசர்மேல் சாய்ந்துக்கொண்டு வனாந்திரத்திலிருந்து வருகிற இவள் யார்(உன்னதப்பாட்டு. 8:5-6; 2கொரி. 1:8-9)
(நம்பிக்கை வைக்கும் வாழ்க்கை என்றால் என்ன என்பதை அனுபவத்தோடு எடுத்துரையுங்கள்)
த2 அவளால் இறுதிவரை சகித்துக்கொள்ள முடியுமா என்பது அவளுடைய சொந்த சகிப்புதன்மையை சார்ந்ததல்ல, மாறாக கர்த்தருடைய பாதுகாப்பையே சார்ந்திருக்கிறது என்பதை(காதலி) உணர்கிறாள்(உன்னதப்பாட்டு. 8:6)
(கர்த்தர் திரும்பிவரும்வரை எந்த ஆவிக்குரிய பூரணமும் ஒரு நபரை தாங்கமுடியாது, எல்லாம் தேவனையும் அவருடைய பாதுகாக்கும் வல்லமையையும் சார்ந்துள்ளது)