Tamil – Prophesying Outline DST22 Week 8

1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு

செய்தி 8

தேவனுடைய வீடாக சபையின் பாதுகாப்பிற்காக நகரத்தின் மதிலைக் கட்டியெழுப்புதல்

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை


அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்.

நெகே. 2:17 – நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள்.

மத். 16:19 – பரலோக இராஜ்ஜியத்தின் திறவுகோல்களை நான் உனக்குக் தருவேன். பூமியில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்தில் ஏற்கெனவே கட்டுண்டிருக்கும், பூமியில் நீ கட்டவிழ்க்கிறது எதுவோ அது பரலோகத்தில் ஏற்கெனவே கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.)

 

பசிதூண்டும் வார்த்தை

ஆலயத்தின் கட்டிடத்தை மீட்ட பிறகு, நகரத்தைக் கட்ட வேண்டிய அவசியம் ஏன் அங்கு இருந்தது?

தேவனுடைய வீடு மறுபடிகட்டப்படுவது, சீரழிந்துபோன சபையைத் தேவன் மீட்டுத்திருப்புவதை மாதிரியாகக் காட்டுகிறது, எருசலேம் நகரத்தின் மதில் மறுபடிகட்டுவது, தேவன் தம் இராஜ்ஜியத்தை மீட்டுத்திருப்புவதை மாதிரியாகக் காட்டுகிறது. தேவன் தம் வீட்டைக் கட்டுவதும், தம் இராஜ்ஜியத்தைக் கட்டுவதும் சேர்ந்தே செல்கின்றன. நகரம் இல்லை என்றால் அங்கு ஆலயத்திற்கு பாதுகாப்பு இல்லை. ஆலயம் முழுமையாக இருக்கிறது. ஆலயம் என்பது கர்த்தருடைய பிரசன்னம் இருக்கும் இடம், அங்கு நாம் கர்த்தரைச் சந்தித்து, அவரைச் சேவிக்கிறோம், ஆனால் அதற்குப் பாதுகாப்பு தேவை. நகரத்தின் மதில் ஆலயத்திற்கு ஒரு பாதுகாப்பாகும்; நகரத்தின் மதில் இல்லாமல், எந்தப் பாதுகாப்பும் இல்லை.

 

ஆவிக்குரிய பாரம்

தேவனுடைய வீடாக, அவருடைய குடியிருப்பாக இருக்கும் சபையின் பாதுகாப்பிற்காக, “மதிலைக் கட்டியெழுப்ப,” அதாவது நெகேமியாவின் முன்மாதிரியை நாம் உள்ளார்ந்தரீதியில் பின்பற்ற வேண்டும். நாம் அனைவரும் மதிலின் நம்முடைய பகுதியைக் கட்டியெழுப்ப வேண்டும். ஒவ்வொருவனும் தன் சொந்த பகுதியைக் கட்டியெழுப்ப வேண்டும்.

அப்போஸ்தலர்களின் போதனைக்கு முரண்பாடாக இருக்கும் வேறுபடும் போதனைகளிலிருந்து சபையைப் பாதுகாக்க நாம் மதிலைக் கட்ட வேண்டும். நாம் வேறுபட்ட போதனைகளைத் தவிர்த்து, கிறிஸ்துவையும் சபையையும் பற்றிய தேவனுடைய பொருளாட்சியில் கவனம்செலுத்த வேண்டும்.

 

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

எஸ்றாவின் புத்தகம், இஸ்ரயேலர் சிறையிருப்பிலிருந்து திரும்பிவருவதும், ஆலயத்தைத் திரும்பக்கட்டுவதும் பற்றிய ஒரு வரலாறாகும்; நெகேமியாவின் புத்தகம், எருசலேம் நகரத்தின் மதிலைத் திரும்பக்கட்டுவதைப் பற்றிய ஒரு வரலாறாகும்.

அதிகாரங்கள் 1 முதல் 7 வரையுள்ள, நெகேமியா புத்தகத்தின் முதல் பகுதி, நெகேமியாவின்கீழ் எருசலேம் நகரத்தின் மதில் மறுபடிகட்டப்படுவதைப் பற்றியது.

கிறிஸ்துவின் தலைமைத்துவத்தின்கீழ் நம் அனைவரையும் ஜீவனில் ஒரு நேர்த்தியான ஒழுங்கிற்குள் கொண்டுவருவதே மதிலைக் கட்டுவதன் குறிக்கோளாகும். அப்போஸ்தலர்களின் போதனைக்கு முரண்பாடாக இருக்கும் வேறுபடும் போதனைகளிலிருந்து சபையைப் பாதுகாக்க நாம் மதிலைக் கட்ட வேண்டும்.

சபையில் மதில் கட்டியெழுப்பப்பட்டால், தேவனுடைய கட்டுமான வேலையை அழிக்க எதிரியால் பயன்படுத்தப்படுபவர்களிடமிருந்து நாம் பாதுகாக்கப்படுவோம்.

 

ஜீவனின் அனுபவம்

கிறிஸ்துவின் ஒப்பற்ற தலைமைத்துவத்தை நாம் கனம்பண்ணினால், கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் சபை ஒரு வீடாக மட்டுமல்லாமல், நகரமாகவும் இருக்கும். நாம் கிறிஸ்துவை ஜீவனாக அனுபவமாக்கி, அனுபவித்து மகிழும்போது, சபை நமக்கு வீடாக இருக்கிறது; கிறிஸ்துவின் ஒப்பற்ற தலைமைத்துவத்தை நாம் உணரும்போது, சபை தேவனுடைய இராஜ்ஜியத்தை அடையாளப்படுத்தும் நகரமாக விரிவடையும்.

நாம் இயற்கை ஜீவனால் வாழாமல், நமக்குள் இருக்கும் தெய்வீக ஜீவனால் வாழும்போது, நாம் உயிர்த்தெழுதலில் இருக்கிறோம்; அத்தகைய வாழ்க்கையின் விளைவே கிறிஸ்துவின் சரீரமாக சபையின் வளர்ச்சியும் கட்டியெழுப்புதலும் ஆகும்.

 

பயிற்சி மற்றும் பிரயோகம்

நாம் அனைவரும் மதிலின் நம்முடைய பகுதியைக் கட்டியெழுப்ப வேண்டும்; ஒவ்வொருவனும் தன் சொந்த பகுதியைக் கட்டியெழுப்ப வேண்டும்.

அப்போஸ்தலர்களின் போதனைக்கு முரண்பாடாக இருக்கும் வேறுபடும் போதனைகளிலிருந்து சபையைப் பாதுகாக்க நாம் மதிலைக் கட்ட வேண்டும். சபையில் மதில் கட்டியெழுப்பப்பட்டால், தேவனுடைய கட்டுமான வேலையை அழிக்க எதிரியால் பயன்படுத்தப்படுபவர்களிடமிருந்து நாம் பாதுகாக்கப்படுவோம்.

கிறிஸ்துவின் கருத்தரிப்பையும் தெய்வத்துவத்தையும் மறுதலிப்பவர்களை நாம் நிராகரிக்க வேண்டும், அவர்களை நம் வீட்டிற்குள் சேர்த்துக்கொள்ளவோ வாழ்த்தவோ கூடாது.

நாம் கிறிஸ்துவை முதலானவரும் கடைசியானவருமாக என்றென்றும் இருக்கிறவராக, மாறாதவராக மரித்து, மீண்டும் ஜீவித்தவராக-உயிர்த்தெழுதலாக இருப்பவராக-அறிய வேண்டும் . கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த ஜீவனில் மட்டுமே, நாம் கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்ப முடியும்.

 

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்

ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1
த1 வீட்டையும் நகரத்தையும் கட்டுவதே தேவனுடைய நித்தியக் குறிக்கோளின் மையம் (நெகே. 2:17; மத். 16:18)

(நகரம் மற்றும் வீடு ஆகியவற்றிற்கிடையேயான உறவினை எடுத்துரையுங்கள்)

த2 நகரம் இல்லாமல், ஆலயத்திற்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை (நெகே. 2:17)

(நகரத்தின் மதில் ஆலயத்திற்கு ஒரு பாதுகாப்பாகுமென்பதின் உள்ளார்ந்த உட்கருத்தை எடுத்துரையுங்கள்)

 

நாள் 2

த1 கர்த்தரின் தலைமைத்துவத்தை உணர்தல் (நெகே. 4:6; கொலோ. 2:19)

(சபை வாழ்க்கையில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நாம் எவ்வாறு கிறிஸ்துவை நம் தலையாக பிரயோகிக்க முடியும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 நாம் அனைவரும் கிறிஸ்துவின் அதிகாரத்தின்கீழ் இருக்க வேண்டும். அப்போது மதில் கட்டப்படும் (நெகே. 4:6, 19)

(ஒவ்வொருவனும் மதிலில் அவனவனுடைய பகுதியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று நெகேமியா புத்தகம் சொல்கிறதென்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 3

த1 சிங்காசனமே, கிறிஸ்துவின் தலைமைத்துவம், அதிகாரம், அரசத்துவம் மற்றும் கர்த்தத்துவம் ஆகும் (கொலோ. 3:4; 1:18)

(கிறிஸ்து நமக்கு இந்த இரண்டு முக்கிய காரியங்களாக இருக்கிறார் என்பதை எடுத்துரையுங்கள்: நம் வாழ்க்கை மற்றும் நம் தலை)

த2 ஒரு நகரத்தின் மதில் பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல், பிரித்தெடுப்பதற்காகவும் உள்ளது(வெளி. 21:2)

(மதிலின் பிரித்தெடுப்பு ஒழுங்குமுறைகளைக் கொண்டு கட்டியெழுப்பப்படவில்லை, மாறாக மறுசாயலாக்கப்பட்ட விலையேறப்பெற்ற கற்களைக் கொண்டு கட்டியெழுப்பப்படுகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 4

த1 தேவனுடைய பொருளாட்சி என்பது தேவனுடைய புதிய ஏற்பாட்டு வெளிப்பாட்டிற்கான ஒரு பொதுவான சொல் என்று நாம் சொல்லலாம்
(அப். 2:42; 1 தீமோ. 1:3)

(தேவனுடைய பொருளாட்சி, அப்போஸ்தலர்களின் போதனையாகிய புதிய ஏற்பாட்டு வெளிப்பாடாகும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 வேற்றுமையான காரியங்களை போதிப்பதற்கு அல்ல (1 தீமோ . 1:3-4)

(காரியங்களை போதிக்கும் தீவிரத்தன்மை தேவனுடைய பொருளாட்சியிலிருந்து வேறுபட்டது என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 5

த1 பிரிவினைகளை உண்டாக்குகிறவர்களைவிட்டுத் திரும்புவது அழிவு உண்டாக்கும் பெருங்குழப்பத்தை வெல்வதாகும்
(ரோ. 16:17; தீத்து. 3:10)

(புதிய ஏற்பாட்டின்படி, ஏழு வகையான அழிப்பாளர்களை எடுத்துரையுங்கள்)

த2 தந்திரமான பேரார்வம் மற்றும் தூய்மையான இருதயம் (3 யோவா. 9)

(பேரார்வம் இல்லாமல் தாழ்மையாக இருப்பவர்களே கர்த்தரால் பயன்படுத்தப்பட முடியும்)

 

நாள் 6

த1 தேவனுடைய பார்வையில் மரணம் மிகவும் அசிங்கமான காரியம், அதேசமயம் ஜீவன் மிகவும் விலையேறப்பெற்ற காரியம் (மத் . 16:18; வெளி. 1:18)

(இன்று நம் கூடுகை எண்ணிக்கையைச் சார்ந்திருப்பதில்லை. நம் கூடுகைகளில் நாம் மரணத்தை ஜெயங்கொள்ள வேண்டும் என்பதே முக்கியமான காரியமென்பதை எடுத்துரையுங்கள்)

த2 கிறிஸ்துவின் குணாதிசயங்கள், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன்” என்பதாகும் (யோவா.11:25)

(சபை தேவனுடைய ஐசுவரியங்களின் சாட்சியாக இருப்பதால், அதன் குணாதிசயங்கள் கிறிஸ்துவின் குணாதிசயங்களாக இருக்க வேண்டுமென்பதை எடுத்துரையுங்கள்.)